Friday, May 15, 2015

தோழர் இன்குலாப்

15.05.2012 பதிவு
**********************

வேறு வேறு இயங்கு தளங்கள்

பல சமயங்களில் கடுமையான முரண்பாடுகளோடு கூடிய, இன்னும் சொல்லப் போனால் முற்றாய் எதிர் நிலை செயல் திட்டங்கள்

இன்னும் கொஞ்சம் கூடுதலாக நுணுகினால் பரஸ்பரம் ஒருவரை எதிர்த்து மற்றவர் செயல்பட வேண்டிய சூழல்

ஆனாலும்

எந்த கட்டத்திலும்

நமக்கு நேர் எதிராக கருத்துக் களத்தில் அவர் இயங்கிய வேளையிலும்

அவரை “ மக்கள் கவிஞர்” என்று கொண்டாடவே செய்திருக்கிறோம்

கருத்துக் களத்தில் அவரது பாதிப்போடும், அவரது கருத்தாளுமையை, அர்ப்பணிப்பை, தியாகத்தை மதித்துக் கொண்டாடியதோடு மட்டுமில்லாமல் அதற்காக பெருமையேப் பட்டிருக்கிறோம்

இது எப்படி சாத்தியம்

வெகு காலமாக புரியாத புதிராகவே இருந்த இந்தக் கேள்விக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் நாங்கள் “காக்கைச் சிறகினிலே” சார்பாக எடுத்த விழாவில் விடை கிடைத்தது

அதில் பேசும் போது நமது மக்கள் கவிஞர் இன்குலாப் சொன்னார்

“இப்பொழுது ஈழத் தமிழர்களுக்காக எழுதும் நான்,

ஒரு வேளை அங்கே தமிழர்கள் பெரும்பான்மையாகவும், சிங்களவர்கள் சிறுபான்மையினராகவும் இருந்து பெரும்பான்மைத் தமிழர்கள் சிறுபான்மை சிங்கள இனத்தை அழிக்க முயன்றிருப்பின் என் பேனா சத்தியமாக சிங்களவர்களுக்காகவே இயங்கியிருக்கும்”

அது...அது...

அதுதான் எங்கள் மக்கள் கவிஞர் இன்குலாப்

10 comments:

  1. மக்கள் கவிஞருக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. நல்லதகவல்
    தம +

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete
  3. ஒரு உண்மையான மார்க்சிய வாதி

    ReplyDelete
  4. எல்லா ஆதிக்கக்கங்களுக்கும் எதிராக முழங்குவதாலும் முழங்கியதற்கேற்ப வாழ்வதாலுமே இன்குலாப்பை கொண்டாடுகிறோம் என்பதனை அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள் தோழர் :-)

    ReplyDelete
    Replies
    1. எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் கொஞ்சமும் வித்தியாசமில்லாமல் வாழ்பவர் தோழர்

      Delete
  5. கவிஞர் இன்குலாப் அவர்களுக்கு “காக்கைச் சிறகினிலே” சார்பாக எடுத்த விழா பற்றிய செய்தி அறிந்தேன். ஆசிரியருக்கு நன்றி.

    கவிஞர் இன்குலாப் எழுதிய

    // மனுசங்கடா!!!
    நாங்க மனுசங்கடா!!!
    உன்னப் போல அவனப் போல
    எட்டு சானு ஓசரமுள்ள
    மனுசங்கடா!!! //

    என்ற பாடல் இன்று பல இடங்களில் உத் வேகத்துடன் ஒலித்துக் கொண்டு இருப்பதை கேட்க முடிகிறது.

    த.ம.4

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...