Showing posts with label கூட்டம். Show all posts
Showing posts with label கூட்டம். Show all posts

Tuesday, June 10, 2025

“புதிய ஆசிரியன்” ஆலோசனைக்கூட்டம் 01

 



09.06.2025
மதுரை
“புதிய ஆசிரியன்” ஆலோசனைக்கூட்டம்
ஏதோ ரொம்ப சீரியசா பேசுவதாவெல்லாம் நினைக்க வேண்டாம்

Monday, May 26, 2025

தமிழ்மாறன் பணிநிறைவு விழா


 25.05.2025
அஸ்வின் ஹால்
பெரம்பலூர்

தமிழ்மாறன் பணிநிறைவு விழா

முத்தம் மாறன்

Thursday, May 22, 2025

பெண் ஏன் படிக்க வேண்டும்


 19.05.2025

பெண் ஏன் படிக்க வேண்டும்?

பெரம்பலூர்

Sunday, May 18, 2025

எத்தனையோ முறை அங்கு நின்றிருக்கிறேன்

 



நேற்று (16.05.2025) அன்று தஞ்சை பெசண்ட் ஹாலில் நடந்த அன்புத் தோழர் அறிவுறுவோன் அவர்களின் முத்து விழா
நான் உரையாற்றும் இடம் குறித்தான வரலாற்றுத் தகவல் ஒன்றை Thanjavur Harani தோழரும் கரந்தை ஜெயக்குமார் தோழரும் கூறினார்கள்
அந்த இடத்தில் நின்றுதான் பாட்டன் வ.உ.சி தமது கப்பலுக்கான பங்கு விற்பனை குறித்து உரையாற்றினாராம்
எத்தனையோ முறை அங்கு நின்றிருக்கிறேன்
நேற்று கொஞ்சம் சிலிர்த்தது

Wednesday, March 6, 2024

இந்தப் பொதுப் புத்தியை வெகு சீக்கிரம் உடைத்து விடுவோம்



கட்சித் தோழர்களிடம் உரையாடுவதெனில் ஒருவகையையான கூடுதல் உற்சாகம்தான்

வலுவில்லாத இடம் பெரம்பலூர் என்றுகூட ஒரு பார்வை கட்சியில் பொதுவாக உண்டு
தோழர்களிடமிருந்து வருகிற கேள்விகள் நம்பிக்கைத் தருகின்றன
இந்தப் பொதுப் புத்தியை வெகு சீக்கிரம் உடைத்து விடுவோம்

Monday, January 29, 2024

“மாப்ள பேச்சைக் கேட்க வந்தீங்களா சார்”

 


தோழர் முத்துமாறன் ஒரு பேராசிரியர். ஆர்வத்தோடு இயங்கக்கூடியவர். எந்த நேரமும் புன்னகைத்தபடியே இருப்பவர்

27.01.2024 அன்று நடந்த புத்தகத் அறிமுகக் கூட்டத்தில் அவரும் உரையாற்றினார்

கூட்டம் முடிந்து வெளியே வந்ததும் ”இவர் என் மாமனார்” என்று அவரை அறிமுகப் படுத்துகிறார்

வணங்கிவிட்டு, “மாப்ள பேச்சைக் கேட்க வந்தீங்களா சார்” என்று கிண்டலாக கேட்கிறேன்

“தான் எங்குப் பேசப் போனாலும் கேட்கத் தனது மாமனார் வந்துவிடுவார் என்ற செய்தியை அப்படி ஒரு மலர்ச்சியோடு முத்துமாறன் சொல்ல

அவர் பேசறது கேட்கப் பிடிக்கும் என்று சொல்லும்போது தோழர் முத்துமாறன் மாமனார் முகத்திலும் மலர்ச்சி

இது அபூர்வமாக வாய்ப்பது

இப்படியே மகிழ்ந்திருங்க

Monday, June 12, 2017

குறைந்தபட்சம் குடிநீரையேனும்

நேற்று நெய்வேலியில் நடைபெற்ற கடலூர் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாமில் உரையாற்றிவிட்டு வந்தேன். அது குறித்து பிறகு பேசலாம். CITU வின் இரண்டாவது சுரங்கக் கிளை வெளியிட்டிருந்த துண்டறிக்கை ஒன்று கிடைத்தது. அதில் பத்துப் பதினைந்து கோரிக்கைகள் இருந்தன.
ஏறத்தாழ இத்துப்போன நிலையிலிருக்கும் லாரியில் சுரங்க ஊழியர்களுக்கு குடிநீர் வழங்கப் படுகிறது. இதனால் நீரோடு இரும்புத்துருவும் கலந்து வந்து விடுகிறது. அதனால் ஊழியர்களின் உடல்நலம் ம்கவும் பாதிக்கப் படுகிறது. எனவே சில்வர் கண்டெய்னர்களி குடிநீர் கொண்டுவந்து வழங்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும் நிறைவேற்றாத நிர்வாகம் இப்போதேனும் அதை நிறைவேற்றித் தர வேண்டும் என்றும் ஒரு கோரிக்கை இருந்தது.
சுரங்கத்திற்குள் கரியோடு கரியாய் வெந்து சாகும் ஊழியர்களை பலமுறை இதற்காக கோரிக்கை வைக்க வைத்ததே பாவம்.
குறைந்தபட்சம் நல்ல குடிநீருக்காவது நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்

Sunday, October 30, 2016

புதியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு கருத்தரங்கு


22.10.2016 அன்று பெரம்பலூரில் நடைபெற்ற புதியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு கருத்தரங்கில். மனசுக்கு பெரிதும் மகிழ்ச்சியாயிருந்தது.

மத்திய அரசின் ‘ஒற்றைக் கலாச்சர’ கட்டமைப்பிற்கு எதிராக அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து நிற்பதன் ஒரு துளியாகவே இந்தக் கூட்டம் இருந்தது. இந்த ஒற்ருமையை ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தெருவிலும் கட்டமைக்க வேண்டிய கடப்பாடு நமக்கு இருக்கிறது.

போகவும் கூட்டம் முடியும் வரைக்கும் யாரும் எழுந்து போகாதது பெரிதான மகிழ்ச்சியைத் தந்தது.

இந்த சரியான கூட்டத்தை ஏற்பாடு செய்தDhahir Batcha, Dhayalan Dhayalan, அசன் தோழர், சின்னச்சாமி தோழர், Mahathma Selvapandiyan உள்ளிட்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்களும் நன்றியும்.

எங்கள் மண்ணிற்கு வந்து எங்களோடு உரையாடிய Marx Anthonisamy சாருக்கு என் வணக்கமும் நன்றியும் . மாத்திரைகளைப் போடவேண்டிய கட்டாயத்தினால் உங்களை வழியனுப்ப வர இயலாதது என் இழப்புகளுள் ஆகப் பெரியது.

Monday, August 15, 2016

புதிய கல்விக் கொள்கை கருத்தரங்கம் --- ஆலோசனைக் கூட்டம்



செப்டம்பர் 11 அன்று திருச்சியில் நடைபெற உள்ள புதிய கல்வித் திட்டம் குறித்த கருத்தரங்கத்திற்கான ஆலோசனைக்கூட்டம் இன்று இன்று சிங்கர் அகாடமியில் நடந்தது

Sunday, February 21, 2016

உலகத் தாய்மொழி நாள்



'உலகத் தாய்மொழி நாள்' நிகழ்ச்சியில் உரையாற்ற மன்னார்குடி வரவேண்டும் என்று கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச் செயலாளர் தோழர் காமராசு அழைத்தபோது அப்படி ஒரு மகிழ்வோடு ஒத்துக் கொண்டேன். ஏறத்தாழ பத்து ஆண்டுகள் இருக்கும் மன்னார்குடியில் உரையாற்றி.

'காட்' எப்படி மொழியைக் காவு வாங்கும் என்பது குறித்தும்,

பிசா ஆய்வில் இந்தியா அதள பாதாளத்தில் விழுந்து கிடப்பதற்கு தாய்மொழிவழி கல்வியிலிருந்து நாம் விலகி நிற்பதன் காரணம் குறித்தும் உரையாற்றினேன்

இதுமாதிரி சிறிய அளவிலான கூட்டங்களே பேரதிகமாய் நம்பிக்கையளிக்கின்றன.

Monday, February 8, 2016

தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரிகள்




04.02.2015 அன்று தனலட்சுமி கல்வியியல் கல்லூரி மாணாவர்களிடையே உரையாற்ரியபோது.








Wednesday, January 27, 2016

தமிழ் மக்கள் பண்பாட்டுக் கழகம் வீர வணக்கநாள்






24.01.2016 அன்று மதுரையில் தோழர் மார்க்ஸ் பாண்டியன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் நிகழ்ச்சியில் ‘கல்வியை அழிக்கும் ஆங்கில மாயை’ என்ற குறுந்தகடை வெளியிட்டு உரையாற்றி வந்தேன்.


ஆங்கில வழிக் கல்வியைப் பற்றியே எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறோம். காட் வருமானால் அமெரிக்க ஆங்கிலமே போதனா மொழியாகும் என்பதையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் பற்றியும்,
காட் அமலுக்கு வந்தால் சுயநிதிக் கல்வி நிலையங்களும் ஆசிரியர்களுக்கான ஊதியத்தை அரசிடம் கோர வாய்ப்பிருக்கிறது என்ன்பது பற்றியும் மிகச் சன்னமாக உரையாற்றிவிட்டு வந்தேன்.
தோழர் செயப்பிரகாசம் என் உரையிலிருந்து தன் உரையைத் துவக்கியது மகிழ்ச்சியாய் இருந்தது

இந்தக் குட்டியின் பறையாட்டம் என்னை என்னவோ செய்துகொண்டே இருக்கிறது. அவளுக்கென் முத்தங்கள்.



Tuesday, January 26, 2016

இது ஒரு மகனின் நூல்




” அண்ணே கொஞ்சம் ஓய்வா இருக்கீங்களா? உங்களோடு  ஒரு விஷயம் பேசனும்” என்று சொன்னவர் மிகுந்த தயக்கத்தோடு ‘எப்பங்கண்ணே வீட்டுக்கு வருவீங்க” என்றார்.

பள்ளியில் கொஞ்சம் ஓய்வாகத்தான் இருந்தேன். மிகவும் உரிமையோடு எதையும் என்னிடம் கேட்பவர். ‘அண்ணே வர ஞாயிறு ஒரு கூட்டம், எதுவும் சொல்லாமல் வந்துடுங்க’ என்று கேட்பவர்.  முடியாது போனால் அடுத்த தேதியை சொல்லி கேட்பார். அதுவும் இயலாதநிலை என்றால் ‘எனக்குத் தெரியாது, அவசியம் வறீங்க’ என்று குழந்தை போல சொல்லிவிட்டு கிளம்பி விடுவார்.

அப்படிப் பட்டவர் ஏன் இப்படி குரல் நடுங்கி பேச வேண்டும்? கொஞ்சம் பயம் தொற்றிக் கொள்ளவே ’என்ன ஆச்சு தாஹீர், ஏதும் பிரச்சினையா? சொல்லுங்கள்’ என்கிறேன்.

“ இல்லண்ணே, செல்வகுமார் நூல் வெளியீடு, நீங்கள்தான் சிறப்புரை. அதற்குத்தான்”

இப்போது புரிந்தது. சில மாதங்களுக்கு முன்னால் பெரம்பலூரில்  நான் கட்டமைத்த ஒரு அமைப்பின் சார்பாக என்னால் அந்த அமைப்பிற்கு கொண்டு வரப் பட்ட தோழர்கள் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்து அதில் நான் கலந்து கொள்ளாமல் அவமானப் படவேண்டும்  என்று என்னவெல்லாம் செய்ய இயலுமோ அத்தனையும் செய்திருந்தார்கள். அவர்களோடே இருந்து அந்த நிகழ்விற்காக பணியாற்றியவர்களுள் தோழர் செல்வகுமார் அவர்களும் ஒருவர்.

அதுமட்டும் அல்ல அதன் பிறகு அந்தத் தோழர்களில் ஒருவரே ‘எல்லா ஏற்பாடுகளையும் செல்வகுமார்தான் தோழர் செய்தார்’ என்று என்னிடம் ஒரு பெரும் பொய்யை சொல்லியிருந்ததும் செல்வகுமாருக்கும் தெரியும், தாஹீருக்கும் தெரியும்.

அதுதான் அந்தத் தயக்கத்திற்கு காரணம்.

”அடடே, நூல் வந்தாச்சா . அவசியம் வரேன். தேதி சொல்லுங்க “ என்கிறேன்

“வருகிற 24”

நொந்தே போனேன். காரணம் 24 ஆம் தேதியன்று மதுரையில் ஒரு கூட்டத்திற்கு தோழர் மார்க்ஸ் பாண்டியனுக்கு தேதி கொடுத்திருந்தேன். விவரத்தை சொன்னாலும் விடுவதாயில்லை தாஹீர்.

”எப்ப வீடு வருவீங்க?”

“இரவு வகுப்பு முடிந்து வர 11 ஆகும்”

“வரேன்”

இரவு வந்தார்கள். பாண்டியனோடு பேசினேன். 24 மாலைதான் என்றார். இவர்களுக்கு மகிழ்ச்சி. காலையில் வைத்துக் கொள்வதாக சொன்னார்கள்.

நெசத்துக்குமே நல்ல நூல். நேட்டிவிட்டி என்றால் அப்படி ஒரு நேட்டிவிட்டி.




நானும் ஒரு பிரதியைப் பெற்றுக் கொண்டு ஏறத்தாழ ஒரு மணி நேரம் பேசிவிட்டு புறப்பட்டேன். பேசும் போது சொன்னேன்,

”நீங்களோ, ராமரோ என்னை எங்கு அடித்தாலும் வலிக்காது எனக்கு. ஆனால் கொஞ்சம் வருத்தமாய்த்தான் இருக்கும். காரணம் வயதில் சின்னவனாய் இருந்தாலும் இறக்கி வைத்தால் யாராவது தூக்கிக் கொண்டு போய் விடுவார்களோ என்று எங்கும் இறக்கி வைக்காமலே பெரம்பலூர் தெருக்களில் உங்களை சுமந்து திரிந்த தகப்பன் நான். பிள்ளைகள் அடித்து அப்பனுக்கு வலிக்காது.”

ஆமாம்,’ ஒரு மழை வந்து போக வேண்டும் ‘ நூல் ஒரு வகையில் என் மகன் போட்ட நூல். வாசியுங்கள் என்று உங்களை அன்போடு கேட்கிறேன்.


 

செல்வகுமார் காக்கைக்கு ஐந்து ஆண்டு சந்தா கொடுத்தார்.

மகிழ்ச்சி.

Sunday, January 24, 2016

வாத்து ராஜா வெளியீட்டு விழா



22.01.2014 அன்று தம்பி சரவணனின் ( Vishnupuram Saravanan ) ”வாத்துராஜா” என்ற குழந்தைகளுக்கான கதை நூலினை தோழர் யூமா வாசுகி வெளியிட நான் பெற்றுக் கொண்ட அந்த இனிய தருணம் தந்த மகிழ்வினை ஒரு நிலைத் தகவலுக்குள் கொண்டு வந்துவிட முடியாது.
இதை சிலர் குறு நாவல் என்கிறார்கள். சிலர் இதை நீண்ட சிறு கதை என்றும் சொல்லக் கூடும் . எனக்கென்னவோ இது அந்த இரண்டு வகையிலும் சேராது என்றே தோன்றுகிறது.
இது ஒரு புது வடிவம். அழகான சோதனை முயற்சி. இந்த வடிவம் எதிர் காலத்தில் ஒரு புதிய பெயரை சூடிக்கொள்ளும்.


ஒரு சின்ன கதை. ஒரு கதையின் முடிவைத் தெரிந்துகொள்ள கீர்த்தனா, அமுதா பிறகு இன்னுமொரு குழந்தை ஆகியா மூவரும் ஒரு வித பரபரப்போடும் அவஸ்தையோடும் மேற்கொள்ளும் நீண்ட பயணமே இந்தக் கதை.
குழந்தைகளோடு நம்மையும் அதே அவஸ்தையோடு பயணிக்க வைக்கிறார் . அதுதான் இந்த நூலின் வெற்றி.
கதையின் முடிவு மிக அழகானது.
பிசிரின்றி நகரும் நடை.
கதை சொல்லியான சரவணன் இந்தக் கதையை நெய்திருக்கிறார். சமீபத்தில் வந்துள்ள ஆக நல்ல குழந்தை நூல்களுள் என்னளவில் முதன்மையானது.
இந்த மாத காக்கையில் விரிவாய் எழுதுகிறேன்.

Saturday, January 23, 2016

இவனுக்கு அப்போது மனு என்று பேர் வெளியீட்டு விழா

" இவனுக்கு அப்போது மனு என்று பேர்" வெளியீட்டு விழாவின்போது எடுக்கப்பட்ட படங்கள். 



மனதுக்குப் பிடித்த மரியாதைக்குரிய தோழர் மருது அவர்களோடு




நூலை வெளியிட்ட தமிழச்சி, பெற்றுக் கொண்ட மருது, விழாவை ஏற்பாடு செய்த கம்பீரன், வாழ்த்திப் பேசிய பரமேஸ்வரி

Wednesday, January 20, 2016

திருவாரூர் கலை இலக்கியப் பெருமன்றம்




18.01.2014 அன்று திருவாரூரில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் நடந்த விழா.

வெகு நாளைக்குப் பிறகு மனசுக்கு நிறைவான கூட்டம். வெறுமனே ஜீவாவின் வாழ்க்கைச் சம்பவங்களை சொல்லாமல்,
உடுத்திக் கொள்ள கதர் கிடைக்கவில்லை என்பதற்காக தனது தாய்க்கு கொள்ளியே வைக்க மறுத்தவர் ஜீவா. கதர் மீதும் காந்தியின் மீதும் காங்கிரசின் மீதும் அவ்வளவு பிடிப்போடு இருந்தவர் பெரியாரை நோக்கியும், பொதுவுடைமை இயக்கம் நோக்கியும் அதற்கிடையே சொந்தமாய் ஒரு இயக்கம் கட்டவும் ஏன் நேர்ந்தது என்பது பற்றி முக்கால் மணி நேரம் பேச முடிந்தது.
செறிவான கூட்டம். நன்றி காமராஜ்

Wednesday, January 13, 2016

பூவத்தூர் ஆசிரியர் வாசிப்பு பயிற்சி முகாம்






ஒரத்தநாடு அருகேயுள்ள பூவத்தூரில் தம்பி மணிமாறn ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர்களுக்கான வாசிப்பு முகாம் சென்று (30.12.2015) கலந்துகொண்ட ஆசிரியர்களோடு வாசிப்பின் அவசியம் குறித்து உரையாடிவிட்டு வந்தேன்.

மகிழ்ச்சியாயிருந்தது

Monday, January 11, 2016

பெரம்பலூர் பதியம்




நாம் செய்ய நினைத்த ஒன்றை நம்மால் செய்யாமல் போய் அதை நம் பிரியத்திற்குரிய தோழன் ஒருவன் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தால் எத்தகைய மகிழ்ச்சி ஏற்படும் என்பதை நேற்று (10.01.2016) அன்று உணர முடிந்தது.

தோழர் தமிழ் மாறனை இப்போதெல்லாம் அடிக்கடி சந்திக்க முடிவதில்லை. தினந்தோறும் சந்திந்துக் கொண்டிருந்த பொழுதுகளில் பெரம்பலூரில் தொடர்ந்து மாதா மாதம் இலக்கியக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்ற எனது கனவை அவரோடு பகிர்ந்து கொண்டே இருப்பேன். என்னால் அதை செய்ய இயலாமலே போனது.

ஆனால் மாறன்’பதியம்’ என்ற ஒரு இலக்கிய அமைப்பை ஏற்படுத்தி மாதா மாதம் கூட்டங்களை நடத்திக் கொண்டு வருகிறார்.

தற்போது தோழர் சாரங்கபாணி அவர்கள் மிகுதியாய் இதில் மாறனுக்கு  உதவி செய்கிறார் என்கிற வகையில் நான் சாரங்கபாணி அவர்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டவனாகிறேன்.

நேற்றைய அமர்வில் வந்திருந்த நாற்பதிற்கும் சற்று அதிகமான எண்ணிக்கையிலான தோழர்களோடு உரையாற்றி வந்தேன்.

அவர்களது காதுகள் தாகத்தோடு இருப்பதை பார்க்க முடிந்தது.

நீர் மேலாண்மை குறித்தும் நன்னூல் குறித்தும், கல்வி குறித்தும், தொண்மை குறித்தும் இவர்களோடு பேச முடிகிறது.

விரைவில் ‘பதியம்’ குறித்து விரிவாய் எழுத வேண்டும்.

Sunday, December 27, 2015

காரைக்குடி போதி கூட்டம்



திடீரென்று போன மாதத்தில் ஒருநாள் அரசமுருகபாண்டியன் அழைத்து டிசம்பர் 26 அன்று போதி கூட்டம் வந்து பேசிவிட்டு போ என்றான்.

வழக்கம் போலவே கம்யூனிஸ்டுகளைத் தாக்கும் வேலையை அங்கும் சில தோழர்கள் செய்தார்கள். கம்யூனிஸ்டுகள் மீதான அவர்களது தாக்குதல் என்பது அவர்களது எதிர்பார்ப்பை கம்யூனிஸ்டுகள் செய்ய வில்லை என்பதாகவும் ஜாதிப் பிரச்சினையில் அவர்கள் அதிகமாக அக்கறை காட்டவில்லை என்பதாகவும் இருந்தது. தோழர் சிம்சன் பேசும் போது இன்னேரம் சேரிகள் எல்லாம் கம்யூனிஸ்டுகளால் நிறம்பி வழிந்திருக்க வேண்டாமா? என்றார்.

ஆக, கம்யூனிஸ்டுகள் தங்களோடு இன்னமும் அணுக்கமாக வர வேண்டும், தங்களோடு நிற்க வேண்டும்  என்பதே அவர்களது ஆசை.

பொறுமையாகப் பேசினேன். பாப்பாபட்டி, கீறிப் பட்டி போன்ற இடங்களில் இடதுசாரிகளின், குறிப்பாக சிபிஎம் மின் போராட்டம் குறித்தும் பேரளியில் அவர்களது போராட்டம் பற்றியும் பேசினேன்.  அவர்கள் கைதாங்கும் கருவிவியைதானே அவர்கள் சுமக்க இயலும் என்று நான் சொன்னதை ஏற்றார்கள்.

இடதுசாரிகள் செய்வதை பொது மக்களிடம், குறிப்பாக தலித்துகளிடம் கொண்டு சேர்க்கிற தேவை அவர்களுக்கு இருக்கிறது.

கருப்பும் சிவப்பும் நீலமும் கைகோர்க்க வேண்டிய அவசியத்தை பேசப் பேச மிகுந்த கவனத்தோடு காது கொடுத்துக் கேட்டார்கள்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...