22.01.2014 அன்று தம்பி சரவணனின் ( Vishnupuram Saravanan ) ”வாத்துராஜா” என்ற குழந்தைகளுக்கான கதை நூலினை தோழர் யூமா வாசுகி வெளியிட நான் பெற்றுக் கொண்ட அந்த இனிய தருணம் தந்த மகிழ்வினை ஒரு நிலைத் தகவலுக்குள் கொண்டு வந்துவிட முடியாது.
இதை சிலர் குறு நாவல் என்கிறார்கள். சிலர் இதை நீண்ட சிறு கதை என்றும் சொல்லக் கூடும் . எனக்கென்னவோ இது அந்த இரண்டு வகையிலும் சேராது என்றே தோன்றுகிறது.
இது ஒரு புது வடிவம். அழகான சோதனை முயற்சி. இந்த வடிவம் எதிர் காலத்தில் ஒரு புதிய பெயரை சூடிக்கொள்ளும்.
ஒரு சின்ன கதை. ஒரு கதையின் முடிவைத் தெரிந்துகொள்ள கீர்த்தனா, அமுதா பிறகு இன்னுமொரு குழந்தை ஆகியா மூவரும் ஒரு வித பரபரப்போடும் அவஸ்தையோடும் மேற்கொள்ளும் நீண்ட பயணமே இந்தக் கதை.
குழந்தைகளோடு நம்மையும் அதே அவஸ்தையோடு பயணிக்க வைக்கிறார் . அதுதான் இந்த நூலின் வெற்றி.
கதையின் முடிவு மிக அழகானது.
பிசிரின்றி நகரும் நடை.
கதை சொல்லியான சரவணன் இந்தக் கதையை நெய்திருக்கிறார். சமீபத்தில் வந்துள்ள ஆக நல்ல குழந்தை நூல்களுள் என்னளவில் முதன்மையானது.
இந்த மாத காக்கையில் விரிவாய் எழுதுகிறேன்.
சிறுவர்களுக்கான நூல்கள் குறைந்துவரும் இக்காலகட்டத்தில்
ReplyDeleteதிரு சரவணன் அவர்களின் இம்முயற்சி போற்றுதலுக்கு உரியது
நன்றி தோழர்
நன்கு பேசப்பட்ட நூல் தோழர்
Delete