Tuesday, January 4, 2022

ஆன்லைன் சூதாட்டக் காவுகள்

 ஆன்லைன் சூதாட்டத்திற்கு கல்லூரிக் குழந்தைகள் தொடங்கி பள்ளிக்கூடத்து சிறு குழந்தைகள் வரைக்கும் அடிமையாகிப் போயிருக்கிறார்கள்

சமயபுரத்து கோயில் வாசலில் கண்ணடக்கம் விற்றுப் பிழைக்கும் ஏழைத்தாய்மார்களின் பிள்ளைகள்கூட இதில் சரிந்துபோனதைக் கண்டு உடைந்துபோனவன் நான்
இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி ஒரு வெளிநாட்டு வங்கியில் வேலைபார்க்கும் ஒரு அதிகாரியின் குடும்பத்தையே காவு வாங்கியதை ஒட்டிய ஒரு விவாதத்தை சன் தொலைக்காட்சியின் இன்றைய
( 03.01.2022) ”கேள்விக் களம்” கொடுத்தது
ஆன்லைன் ரம்மி விளையாட்டு எவ்வளவு மோசமானது என்பது நாம் எல்லோரும் அறிந்ததுதான்.
மணிகண்டன் என்பவர் ஒரு அயல்நாட்டு தனியார் வங்கியில் கை நிறைய சம்பாதித்துக் கொண்டிருந்தவர்
மனவி இரண்டு குழந்தைகள் என்று அழகான குடும்பம்
ஏதோ ஒரு புள்ளியில் ஆன்லைன் ரம்மியில் கரைகிறார் மணிகண்டன்
ஆன்லைன் ரம்மியை நடத்தும் நிறுவனங்கள் நம்மை விளையாடிக்கொண்டே இருக்குமாறு பார்த்துக் கொள்வார்கள் என்கிறார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரு சிவபாலன்
நாம் விளையாடிக் கொண்டே இருப்பதற்கு அவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதையும் அவர் புரிகிற மொழியில் விளக்கினார்
இருவர் விளையாட ஆரம்பிப்பதாகக் கொள்வோம்
தொடர்ந்து நாம் தோற்றுக் கொண்டே இருக்கிறோம் எனில் காசு தீர்ந்ததும் நாம் நகர்ந்து விடுவோம்
கமிஷன் நிறுவனதிற்குப் போகும் ஜெயித்த தொகை ஜெயித்தவனுக்குப் போகும்
நானும் நீங்களும் ஆளுக்கு 10000 ரூபாய் எடுத்துக் கொண்டு வந்து உட்காருகிறோம்
500 ரூபாய் பந்தயம்
எனில்,
நான் ஐநூறு ரூபாயை கட்டுவேன்
நீங்கள் ஐநூறு ரூபாயைக் கட்டுவீர்கள்
நீங்கள் வெற்றி பெறுகிறீர்கள்
அநாம் கட்டிய ஆயிரத்தில் 800 உங்களுக்கு வந்துவிடும்
மிச்சம் 200 ரூபாய் நிறுவனத்திற்கு கமிஷனாகப் போகும்
ஆக,
ஆளுக்கு 10000 ரூபாயோடு அதாவது 20,000 ரூபாயோடு உட்கார்ந்தோம்
முதலாவது ஆட்ட முடிவில் வென்ற உங்களிடம் 10,300 இருக்கும்
தோற்ற என்னிடம் 9,500 இருக்கும்
நிறுவனத்தின் கையில் 200 ரூபாய் போயிருக்கும்
இரண்டாவது ஆட்டத்தில் நான் வெற்றி பெறுவதாக வைத்துக் கொள்வோம்
இப்போது என்னிடம் 9,800 ரூபாயும் உங்களிடம் 9,800 ரூபாயும் இருக்கும்
நிறுவனத்திடம் 400 ரூபாய் இருக்கும்
ஆட்டம் விறுவிறுப்பாய் நகர்கிறது
40 முறை ஆடுகிறோம்
ஆளுக்கு இருபதுமுறை வெற்றி பெறுகிறோம் என்றால்
80 x 200 = 16,000 ரூபாய் நிறுவனத்திற்கான கமிஷன்
40 ஆட்டம் நான், 40 ஆட்டம் நீங்கள் சமமாக வெற்ரி பெற்றிருப்போம்
நான் கொண்டு வந்த 10,000 ரூபாயில் 2,000 என்னிடம் இருக்கும்
நீங்கள் கொண்டுவந்த 10,000 ரூபாயில் 2,000 உங்களிடம் இருக்கும்
விளையாடியது நாம்
சமாமாக வென்றிருக்கிறோம்
நாம் விளையாட விளையாட அவன் எவ்வளவு சம்பாரிக்கிறான் பாருங்கள்
நமக்குள் ஒரு போதை வருகிறது
விளையாடாமல் இருக்க முடியவில்லை
கையில் இருப்பதை எல்லாம் இழந்து
ஒருகோடி ரூபாய் கடன் வாங்கி
அதை வைத்து விளையாடி
தோற்றெல்லாம் இல்லை
விளையாடியதலாயே அனைத்தையும் இழந்து
கடனை அடைக்க முடியாமல்
மனைவியையும் பிள்ளைகளையும் கொன்று
தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் மணிகண்டன்
அரசு இதிலிருந்து இளைஞர்களை மீட்பதற்கு யோசிக்க வேண்டும்
#சாமங்கவிந்து 50 நிமிடங்கள்
04.01.2022

Monday, January 3, 2022

ஜனவரி 2025 இல் 5000 சந்தா

 

சரியாக நினைவில்லை
2011 ஜூலையின் ஏதோ ஒரு நாள்
“வாங்க ஒரு பத்திரிக்கைத் தொடங்கலாம்” என்று வைகறை அய்யா அழைக்கிறார்
அறைக்கும் ஏற்பாடு செய்துவிடுங்கள்
எதோ வாங்க ஒரு கப் காபி சாப்பிடலாம்ங்கற மாதிரி வங்க ஒரு பத்திரிக்கைத் தொடங்கலாம் என்கிறாரே அய்யா என்று குழப்பம்
ஆனாலும்
அறை தேநீர், சாப்பாடு அனைத்தும் ஏற்பாடாகிறது
அறை எண் 17
ஆசிரியர் இல்லம்
அய்யா, தோழர் சந்திர சேகர், சரவணன், பேராசிரியர் சுப்பிரமணியன், அன்பிற்குரிய தோழன் அழகிய பெரியவன், முத்தையா, நான்
கூடுகிறோம்
குழு சாராது
பாதிக்கப்பட்டவர்களின் குரலாகக் கொண்டு வருவது என்று முடிவு செகிறோம்
அக்டோபர் 1, 2011 இல் இக்‌ஷாவில் வெளியிடுகிறோம்
ஞாநி, தோழர் அருள் மொழி, அய்யா க.திருநாவுக்கரசு, தோழர் இன்குலாப், ஓவியர் வீர சந்தானம், ஓவியர் மாருதி
வாழ்த்துகிறார்கள்
ஒரு சந்தா வரவில்லை என்றாலும் எப்படியும் ஒன்றரை ஆண்டுகளுக்கு விடாமல் கொண்டு வந்து விடுவோம் என்று அப்போது பேசினேன்
இதோ இன்று 124 வது இதழ் உங்கள் கைகளில்
ஊழியர்கள் இல்லை
ஒரு சின்ன அறைதான் அலுவலகம்
முத்தையாவே சென்று பேப்பர் தூக்கி வருகிறார்
அவரே அடித்து முடித்து அலுவலகத்திற்கு கொண்டு வருகிறார்
அவரே கவரில் போடுகிறார் அவரே முகவரி சீட்டுகளை கவரில் ஒட்டுகிறார்
அவரே அஞ்சல் நிலையம் சென்று அஞ்சல் செய்கிறார்
இன்னொரு பக்கம்
தோழர் சந்துரு வருகிற அத்தனைப் பக்கங்களையும் வாசித்து,
தேர்வு செய்து,
லே அவுட்டிற்கு உடார்ந்து,
பிழை திருத்தி
சொல்லி மாளாது
என்னால் கடந்த சில வருடங்களாக எந்த வேலையையும் செய்ய இயலவில்லை
தோழர் மருது ஒவ்வொரு மாதமும் அட்டைப்படம் தருகிறார்
தோழர் Mukunthan Kandiah Mukilan அவர்களின் பங்களிப்பை எப்படி வார்த்தைகளாக மாற்றுவது என்று தெரியவில்லை
தோழர் Vivekanandan Kanagasabhapathy அவர்கள் இல்லாமலும் காக்கை இல்லை
துர்கா பைண்டிங் முதலாளி சரவணன்தான் எங்களது முதலாளியும்
எத்தனைப் படைப்பாளிகள்
விடாது தங்களது படைப்புகளால் எம்மைத் தாங்கிப் பிடிக்கும் தோழர்கள் மோகன்ராஜ், Ramasubramanian Subbiah ஆகியோருக்கு எம் நன்றிகள்
பணிக்காலம் முடிய இருக்கிறது
இனி காக்கையின் சுமையை பழையபடி தோழர்கள் சந்துருவோடும் முத்தையாவோடும் பகிர்ந்துகொள்ள வேண்டும்
5000 சந்தா இலக்கு
2024 டிசம்பருக்குள் இதை முடிக்க வேண்டும் என்று ஒரு திட்டம் இருக்கிறது
உங்களை நம்பி சொல்கிறேன்,

ஜனவரி 2025 இல் 5000 சந்தா என்பதை மகிழ்வோடு அறிவிப்போம்
#சாமங்கவிய ஒரு மணி 10 நிமிடங்கள்
02.01.2022



Sunday, January 2, 2022

காவல்துறையின் இந்த காவி சாய்ந்த போக்கை

 அன்பின் முதல்வருக்கு,

வணக்கம்.
நான் அத்தனை முறையும் உதயசூரியனுக்கே வாக்களித்த ஒரு இடதுசாரி
தேர்தலுக்கு முன்பிருந்த உங்கள் மீதிருந்த அன்பு தேர்தலுக்குபின் பேரன்பானது
உங்கள் மீதான மரியாதையும் பலமடங்கு கூடியுள்ளது
உங்கள் அயராத உழைப்பும் அர்ப்பணிப்பும் உங்கள் உடல்நலன் மீதான கவலையைத் தருகிறது
ஆனாலும்,
உங்களது உழைப்பு விழலுக்கு இழைத்த நீராகிப் போகுமோ என்கிற அச்சத்தில் இந்தக் கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறேன்
பத்திரிக்கையாளர் திரு S.P. லட்சுமணன் அவர்கள் திமுக சார்பாளர் எல்லாம் அல்ல
இன்னும் சரியாக சொல்வதெனில் வக்காளத்து எல்லாம் வாங்குகிற நபரெல்லாம் இல்லை என்றாலும்
அதிமுகவை எப்போதும் ஈர நெஞ்சோடு பார்ப்பவர்
அது செய்கிற தவறுகளையெல்லாம் சொன்னாலும் அதிமுக நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்
அவர் உங்களைப் பற்றிய கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கும்போது
70 வயதை நெருங்கும் ஒருவர் ஆறுமாத காலமாக இப்படி அலைவதைக் கண்டு வியப்பாக இருப்பதாகவும்
அத்தனை பயணங்களையும் பயனுள்ளவையாக நீங்கள் மாற்றி வருவதையும் பெருமையோடு குறிப்பிடுகிறார்
அத்தனையும் உண்மை
29.12.2021 அன்று தஞ்சை வருகிறீர்கள்
இலக்கான ஒரு லட்சத்தி ஆறாயிரம் ஏக்கரைத் தாண்டி ஒரு லட்சத்தி அறுபத்தி ஆறாயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளதை சொல்கிறீர்கள்
நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள சுமை தூக்குபவர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்டு நிறைய செய்கிறீர்கள்
வணங்குகிறேன்
30.12.2021 அன்று முன்னிரவு வரை திருச்சியில் இருக்கிறீர்கள்
சென்னையில் பேய்மழை
விடிந்து எழுந்தால்
அதிகாலை 5 மணிக்கே சென்னையில் மழைநீரை அகற்றும் பணியை ஆய்வு செய்கிறீர்கள்
ஆச்சரியமாயிருக்கிறது
அறிவிப்புகளை அரசானைகளாக மாற்றும் வேகத்தை லட்சுமணன் அப்படி மெச்சுகிறார்
வாசகனை ரசிகனாக்கும் வித்தை உங்களுக்கு இயல்பாகவே இருக்கிறது
இரண்டு சம்பவங்களை உங்களது கவனத்திற்கு கொண்டுவர ஆசைப்படுகிறேன்
17.12.2021 அன்று கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தோழர் சுபவீ அவர்கள் உரையாற்றுகிறார்
அதை எதிர்த்து பல்கலைக்கழக வாசலில் மேடைபோட்டு திரு H,ராஜா ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்
அதற்கு காவல்துறை அனுமதி வழங்குகிறது
கோவையில் உள்ள ஒரு பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் ஷாகா பயிற்சி தருகிறது
அதை எதிர்த்து தோழர் கோவை ராமகிருஷ்ணன் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது கைது செய்யப்படுகிறார்
இதை எதிர்த்து அய்யா வீரமணி அவர்கள்கூட 01.01.2022 அன்றைய “விடுதலை” யில் ஒரு கண்டன அறிக்கையை வெளியிடுகிறார்
நீங்கள் சனாதனத்திற்கு எதிராகக் களமாடுபவர் என்பதில் ஆசிரியருக்கும் அய்யம் இல்லை
எனக்கும் அய்யம் இல்லை
ஆனால்
இது மாதிரி சம்பவங்கள் நீங்கள் எவ்வளவுதான் அவர்களுக்கு எதிராக களமாடினாலும்
சனாதனத்தை வளர்க்கவே உதவும்
கோவை உங்களது கவனத்தில் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும்
ஆனாலும்
காவல்துறையின் இந்த காவி சாய்ந்த போக்கை நீங்கள் கண்டு சரி செய்ய வேண்டும்
இது,
வாக்களிக்க ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை உதயசூரியனுக்கு மட்டுமே வாக்களிக்கும் வாய்ப்பினைப் பெற்ற ஒரு இடதுசாரியின்
கையேந்திய விண்ணப்பம்
அருள்கூர்ந்து கவனியுங்கள்
அருள்கூர்ந்து உடல்நலத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்
நன்றி
அன்புடன்,
இரா,எட்வின்
#சாமங்கவிய 07 நிமிடங்கள்
01.01.2022

Saturday, January 1, 2022

2021 இல் சில நம்பிக்கைகளும் துளிர்த்துள்ளன

 இருக்கிற எல்லா திக்குகளில் இருந்தும் ஆம்புலன்ஸ் ஷைரன் ஒலி

மருத்துவப் படிப்புக்கு இடம் கேட்டு அலைந்ததைப் போலவே மருத்துவமனைகளில் ஒரு கிடைத்துவிடாதா என்ற அலைச்சல்
மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் வரிசை
இவ்வளவு ஏன்,
சுகாடுகளில் வரிசையாக அடுக்கிவைக்கப் பட்டிருந்த பிணங்களின் வரிசை
கொடும் மழை
இப்படி ஏராளம் இருந்தாலும்
2021 இல் சில நம்பிக்கைகளும் துளிர்த்துள்ளன
2021 மே மாத தேர்தல் முடிவுகள்
கர்நாடகாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் காங்கிரஸ் பாஜகவை வீழ்த்திய நிகழ்வு
இன்றுமுதல் நடைமுறைக்கு வருவதாக இருந்த ஜவுளி மீதான GST உயர்வை ஒன்றிய அரசு ஒத்திவைக்க வேண்டிய அவசியத்தைக் கொடுத்தது
இப்படி
முடியும் என்பதற்கான நம்பிக்கைகளையும் இந்த ஆண்டின் இறுதிவாரம் நமக்கு அளித்திருக்கிறது
பிடித்துக் கொள்வோம்

அந்தி 07.45
01.01.2022

மழை AV

எவ்வளவு அதட்டியும்

அடங்காமல்

காட்டுக் கத்தலாய்க் கத்தும்

மழைமீதான கோவத்தில்

வகுப்புத் தலைவியான பேத்தி ஒருத்தி

தனது ரஃப் நோட்டில்

குறித்து வைத்தாள்

மழை AV

அவரை இயற்கை இந்தப் பாடு படுத்தக் கூடாது

 யாரும் எதிர்பார்க்கவே இல்லை

ஏன்?
வானிலை ஆய்வு மையமே அதை கணித்திருக்கவில்லை
நேற்று (30.12.2021) அப்படியொரு கடும் மழை சென்னையில் கொட்டித் தீர்த்திருக்கிறது
ஒருநாள் மழையில் சென்னை சாலைகளில் மழைநீர்
ராட்சஷ மோட்டார்களைக் கொண்டு நீரை அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்
அந்தப் பணியைப் பார்வையிட வருகிறார் முதல்வர்
நேற்று முன்னிரவுவரை திருச்சியில் இருந்தவர் இன்று அதிகாலை சென்னையில் மழைநீரை அகற்றும் பணியை பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார்
அவரை இயற்கை இந்தப் பாடு படுத்தக் கூடாது
“பேய்போல கொட்டித் தீர்த்துவிட்டது” என்று அவர் கூறுகிறார்
அப்படியொரு மழை
நேற்று இப்படி ஒரு மழை வரும் என்று வானிலை ஆய்வு மையம் ஏன் கணித்து சொல்லவில்லை என்று வானிலை ஆய்வு மைய இயக்குனரை ஊடகவியலாளர்கள் கேட்கிறார்கள்
இந்த மழையை வானிலை ஆய்வு மையம் கணிக்கத் தவறிவிட்டதை திரு புவியரசன் ஒத்துக் கொண்டிருக்கிறார்
நிலத்தில் இருந்த வளிமண்டல சுழற்சியை கடலில் இருப்பதாக வானிலை ஆய்வுமையம் தவறாகக் கணித்து விட்டதாகக் கூறுகிறார் அவர்
போக,
தங்களிடம் போதுமான அளவு ரேடார்கள் இல்லாததால்
தாங்கள் தரவுகளின் அடிப்படையில்தான் கணித்துக் கொண்டிருப்பதாகவும்
அவர் கூறுகிறார்
பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு தயாநிதி மாறன் அவர்கள் 2020 டிசம்பர் மாதமே ரேடார் தேவை குறித்து ஒன்றிய அரசிற்கு கடிதம் எழுதியிருப்பதாகவும்
ஒரு வருடமாக ஒன்றிய அரசிடம் இருந்து எந்தவிதமான பதிலும் இல்லை என்றும் சென்ற பெரு மழையின்போது கூறினார்
போதுமான ரேடார்களைக் ஒன்றிய அரசிடம் கேட்டுப்பெற வேண்டும் மாநில அரசு
#சாமங்கவிய ஒரு மணி முப்பத்திநான்கு நிமிடங்கள்
31.12.2021

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...