Showing posts with label ரசனை. Show all posts
Showing posts with label ரசனை. Show all posts

Tuesday, July 28, 2026

எச்சிதுப்பி எச்சி காய்வதற்குண்டான நேர மெனக்கெடல்தான்

 


ஜூலை 2026 ’’பொங்கும் பூம்புனல்’’ வந்திருக்கிறது. இது பதினொன்றாவது இதழ்.

முதலில் தொடர்ச்சியாக பதினோறு இதழ்களைக் கொண்டு வருவதற்கு ஒரு பிடிவாதம் வேண்டும். அது நிறையை இருக்கிறது நண்பர்களிடம்.

அதற்காகவே ஒரு விழா எடுத்து இவர்களைக் கொண்டாட வேண்டும்.

ஒவ்வொரு இதழும் நச்சென்று வந்துகொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

வழக்கம்போலவே உள்ளட்டையின் கலைமணி அவர்களின் கவிதையோடு தொடங்குகிறது இதழ். கவிதையும் வைத்திருக்கிற விதமும் அழகு.

பூமணியின் ரீதி, தோப்பு, எதிர்கொண்டு ஆகிய சிறுகதைகள் குறித்த கலைமணியின் பதிவுகள்,

‘’அர்ச்சனா 31 நாட் அவுட்’’ என்ற மலையாளப் படம் குறித்த கலைமணியின் பதிவு

கணேஷ்ராமும் கலைமணியும் தொகுத்தளிக்கும் செய்தித் துளிகள் என்று இதழ் விரிகிறது.

ஆனால் இந்த இதழில் முத்தாய்ப்பாய் படுவது கணேஷ்ராம் எழுதியுள்ள, ’’உலகமயத்தின் மற்றுமொரு சமூக மாறுதல்’’ என்ற கட்டுரையும், ‘’அதனால் என்ன இப்போ?’’ என்ற புனைவு கலந்த அபுனைவும். இரண்டும் வேறு வேறு காரணங்களுக்காக முன் வந்து நிற்கின்றன.

E20 பெட்ரோல் குறித்த கட்டுரை அப்படிவொரு நச். நடையில் இருந்து இதையும் கணேஷ்ராம்தான் எழுதியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

எத்தனால் கலந்த பெட்ரோல்தான் மோடிக்கான அடுத்த தலைவலியாக எழுந்துள்ள சூழலில் இந்தக் கட்டுரை வைக்கும் தரவுகளும் தர்க்கங்களும் அப்படியொரு அழகு.

எத்தனால் குறித்த அரசின் விளக்கங்களை வைத்து அதைத் தகர்த்திருக்கிறது இந்தக் கட்டுரை.

எதையும் சொந்தமாக்காமல் அனைத்தையும் வாடகைக்கு நுகர்வதன் மூலம் நிறைய நுகரலாம் என்கிற தேன் தடவிய தாராளமயத்தின் நச்சுபிஸ்கட் ஏறத்தாழ எல்லோரையும் விழுங்கிக்கொண்டிருக்கிற ஆபத்தை உலகமயத்தின் மற்றுமொரு சமூக மாறுதல் புரிகிற மாதிரி பேசுகிறது. இங்கு புரிகிற மாதிரி என்பதை அழுத்தி அடிக்கோடு இட்டு வாசிக்கக் கேட்கிறேன்.

ஒரு கட்டத்தில் சந்தா முடிந்ததும் நம்மிடம் நாம் நுகர்ந்த ஏதும் இருக்காது. ரெஃபெரன்ஸ் இல்லாத சூழலில் கருத்துச் சண்டைக்கு வாய்ப்பே இருக்காது. அவன் சொல்வதுதான் எல்லாம். மறுக்கத் தரவற்றுப் போகும் அபாயத்தைக் குறித்து கவலைப்படும் கணேஷை சக ஊழியன், தோழன் என்பது தாண்டி பிடித்துக்கொள்ள வேண்டும்.

நான்
காதலென்னும்
கவிதை சொன்னேன்
கட்டிலின் மேலே

அந்தக்
கருணைக்கு நான்
பரிசு தந்தேன்
தொட்டிலின் மேலே

என்ற பாடல் யாருக்குப் பிடிக்காது. என்னவொரு இசை. என்னவொரு ஃபீல். இப்படி விரசமில்லாம எவனால எழுத முடியும் என்பார் என் அப்பா.

கூர்ந்து பாருங்களேன், இதுதான் பெண்ணடிமைத்தனத்தின் உச்சம்.

நான் ஜெசி ராணியை அப்படிக் கொண்டாடுவதற்கு அவரிடம் இருக்கும் ஃப்ளோதான் காரணம்.

இதே ஃப்ளோல இதற்கு எதிராக ஜெசி எழுதும்போது, குறித்து வையுங்கள் அவர் பாபுலர் எழுத்தாளராகி விடுவார்.

எலான் மஸ்க் குறித்த, அதானி குறித்த எல்லாமும் அழகு.

போவோமா ஊர்வலம் எனக்குப் பிடித்தப் பகுதி. இன்னும் கொஞ்சம் மெனகெடுங்களேன் என்பது உரிமையோடான என் நேயர் விருப்பம். விஷயத்தில் பிரச்சினை இல்லை. டெலிவெரியில் சன்னமோ சன்னமாக மெனக்கெட்டால் பூம்புனலின் சிக்நேச்சர் இதுதான்.

ஒன்றைச் சொல்ல வேண்டும்.

கணேஷ்ராமிற்குள் ஆயிரம் கட்டுரைகள் ஊறிக்கிடக்கின்றன.

எச்சிதுப்பி எச்சி காய்வதற்குண்டான நேர மெனக்கெடல்தான், ப்ரொஃபஷனல் டச் முழுவீச்சில் மிளிரும்.

பூம்புனல் இல்லை எனில் நானே அவரிடம் கட்டுரை கேட்பேன். இருக்கு அவரிடம்.

படைப்புகள் வர ஆரம்பித்தால் வேற லெவல்தான்.

மெனக்கெடும் அனைவரையும் இறுகப் பற்றிக் கொள்கிறேன். 

Thursday, February 12, 2026

இவரையும் இவரது எழுத்தையும் யாராலும் நேசிக்காமல் கடந்துபோக முடியாது

 



சிறுவயது கீர்த்தியை இப்படிக் கொஞ்சியதில்லை,
விரும்பி இல்லறத்தில் இணைந்து,
மகிழ்ந்து பரத்தை இம்சைப் படுத்துகிற,
அதைவிடவும் மகிழ்ந்து அவனிடம் இம்சைப்படுகிற,
26 வயது கீர்த்தியை அப்படிக் கொஞ்சுகிறேன்
பத்து நாட்களுக்கு முன்பு ஒரு நாள்,
‘MD முடிச்சிட்டு, ஏதேனுமொரு காலேஜ்ல வேலைக்கு சேர்ந்துட்டு, அப்படியே ஒரு கிளினிக்கும் வச்சிட்டு… ஒரு அஞ்சு வருஷம் பொறுப்பா ஒரு கார் வாங்கித் தரேன்’’என்று கீர்த்தி சொன்னாள்
ரகசியமாய் அப்படி ஒரு அழுகை அழுதேன்
இந்த அன்பை, ஈரத்தை, அது தந்த சுகத்தை கவிதையாக்க நினைத்திருந்தேன்
முடியவில்லை
ஆனால் அந்தக் கலை துஷ்யந்த் சரவணனுக்கு அழகாய் வாய்த்திருக்கிறது
அவர்மீது பொறாமையாகக்கூட இருக்கிறது
நண்பானாக, தோழனாக மட்டுமே வாழ்ந்து பழகிய எனக்கு எஞ்சிய காலத்தை அப்பனாக மட்டுமே வாழ்ந்து கடக்க வாய்க்காதா என்று ஆசை வந்திருக்கிற வேளையில் தோழர் துஷ்யந்த் சரவணாராஜ் அவர்களின் ’’மகள் கையளித்த மயிற்பீலிகள்”’ வந்து சேர்ந்திருக்கிறது
புத்தகம் அழகாக வந்திருக்கிறது
அவரும் அவரது குழந்தையும் இறுக அணைந்தபடி குத்துவிளக்கின் ஒளியில் பேரழகாகப் பிரகாசிக்கிறார்கள்
அவர்கள் காலங்காலத்திற்கும் இதே மகிழ்வோடு இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்
வாழ்த்துகிறேன்
எனக்கு காடு பிடிக்கும். அடர்காடென்றால் அப்படிப் பிடிக்கும். அதுவும் இருண்ட அடர்காட்டிற்காக அடம்பிடித்து தவமிருப்பவன் நான்
அவருக்கும் அப்படித்தான்
எழுதுகிறார்,
“வாழ்வு
அடரிருட் காடு
மகள்
தூரத்து விளக்கு”’
நட்சத்திரங்களைக் குறித்து எழுதும்போது ‘தூரத்து ஊரின் தெரு விளக்கு’ என்று எழுதுவார் பாரதிதாசன்
இதை மட்டும் இருந்து படித்திருந்தால், ‘ஆகா’ என்று அவர் பாராட்டி இருப்பார்
எனக்கு அடரிருட் காடு. துஷ்யந்த்துக்கு மகளெனும் ஒளிபடர்ந்த அடர்க்காடு.
கிழவனாகி நான் கண்டுணர்ந்த மகளெனும் ஒளியின் மகத்துவத்தை துஷ்யந்த் தனது சிறு வயதிலேயே உணர்ந்து பிடித்துக் கொண்டிருக்கிறார்
’தேடல்
நல்லது
தேட எதையேனும்
தொலைக்கலாம்
முதலில்
தொலைக்க எதையேனும்
தேடலாம்’
என்று நான் எழுதினேன்
அவரோ என்னை மிஞ்சுகிறார்
’தேடுவதற்கு
மகளிருக்கிறாள்
தொலைவதற்கு
வருத்தமில்லை’
என்கிறார்.
இப்பவும்பொறாமையாகத்தான் இருக்கிறது
’ஏகத்துக்கும் சிதைந்து
முகமும் உடலும்
எஞ்சித் தெரிந்த
சிறுபகுதி இட முலையும்
எண்ணெய்ப் பிசுக்கும்
துண்ணூறும் குங்குமமும் போதுமந்த
அசலூர்க்காரனுக்கு
பொம்பள சாமி அது எனப்
பிடித்துக் கொள்ள
நொடிக்கு நொடி
தாயேயெனக் கும்பிட்டான்
சுத்திக் கிடந்த செத்தைகளை
பெருக்கித் தள்ளியவன்
சுகத்தையும் படிப்பையும்
வேலையையும்
கலங்காத நல்ல வாழ்க்கையையும்
தன் ஒத்தை மகளுக்காய் யாசித்தவாறே
வரவா தாயே
மழ ஓஞ்சிருச்சு
என நகர்ந்தவனுக்கு
கேட்டிருக்க நியாயமில்லை
போய்வா தந்தையே என்ற
தெய்வத்தின் குரல்’
என்று எனக்கு நீட்டி முழக்க வேண்டி இருப்பதை இவரோ
‘கோயில் வாசலில்
மகளைக் கொஞ்சுகிறான்
தந்தை
அம்மன்
சன்னதியில் இருந்து
சன்னமாய்க்
கேட்கிறது
விசும்பல்’
என்று போகிற போக்கில் நச்செனத் தெளித்துவிட்டு கடந்து போகிறார்
மகள்களை நேசிக்காத யாரும் இருக்க முடியாது,
எனில்,
இவரையும் இவரது எழுத்தையும் யாராலும் நேசிக்காமல் கடந்துபோக முடியாது
நூல் வாங்க
மௌவல்
21/9 வரதர் தெற்கு மடவிளாகம் தெரு
வலங்கைமான் 612804
திருவாரூர் மாவடம்
9787709687
11.02.2026

Sunday, January 4, 2026

அது சிவாஜி போலவும் இருந்தது

 

நேற்று திருச்சி புத்தூர் பெரிய ஆஸ்பத்திரி பக்கத்தில் நானும் ஆட்டோ நண்பரும் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது எதிரே ஒரு அழகான சிலை
ஹென்றி பெண் உள்ளிட்டு நமக்குத் தெரிந்த யார்யாரோ போலிருந்தது
அதனால் அந்த சிலை மிக நெருக்கமாக வந்துவிட்டது
சிலை அழகா இருக்குங்கள்ள பாய் என்கிறேன்
சிவாஜி சிலைனா சும்மாவா சார்
சிவாஜி சிலை என்று அவர் சொன்னபிறகு உற்றுப் பார்க்கிறேன்
அது சிவாஜி போலவும் இருந்தது

03.01.2026

Saturday, June 7, 2025

எதற்கு எது எச?

  "எங்கே

ஒளிந்துகொண்டால்
எனை நீ
கண்டுபிடிப்பாய்....?"

என்பது இளமதியின் கவிதை

"பாகிஸ்தானிடம் முன்னமே சொல்லிவிட்டுதான் தாக்கினோம்"

என்பது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் கூற்று

எதற்கு எது எச?

Wednesday, May 28, 2025

கங்கிற்கலைதல்


"அரச்சிடலாம்
துவையல்
இருக்கு
பழைய பாக்கிக்காய்
வசவிக்கொண்டே
அய்யாத்துரை தந்த
வறுகடலை
கொஞ்சம் சுள்ளியோடு
இருக்கு
ராமாயி தந்த குருனையும்
காய்ச்சிடலாம்
கஞ்சியும்
எதிர் வீடு போன மக
நனச்சிராம கொண்டு வரணும்
கங்க”
என்று இருபது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதினேன்.
எதிர்த்த வீட்டு துர்க்கா அம்மாயி வீட்ல கங்கு வாங்குவதற்காக கரண்டியத் தூக்கிக்கொண்டுபோன அனுபவம் எனக்கு உண்டு.
இப்ப அதெல்லாம் அவுட் டேட்டட் ஆயிடுச்சுபோல என்று நினைத்திருந்தேன்.
தோழர் செஞ்சி தமிழினியன் எழுதிய “ஊத்தாம் பல்லா” நாவல் குறித்து நான் பேச வேண்டும் என்பதற்காகாக அந்த நாவலை தோழர் லார்க் பாஸ்கரன் அனுப்பியிருக்கிறார்.
செமையான நாவல்.
நூல் குறித்து பேசிவிட்டு எழுதுகிறேன்.
அதில் ஒரு இடம்,
மலையனூரம்மா கிழவி அடுப்பை பத்த வைக்கிறாள். கங்கு கேட்டு இருளாயி வருகிறாள் கரண்டியோடு. இருவருக்கும் இடையேயான உரையாடலைக் கேளுங்கள்.
“ஏண்டி இருளாயி, யாரு அடுப்ப பத்த வைப்பாங்கன்னு பாத்துகினே இருந்து கலகலன்னு புடிச்சு எரிய ஆரம்பிச்சதும் வந்தீர்ர, தாலிக்கிற கர்ண்டியையும், ஒரு கொக்காணையும் கையல் எடுத்துக்கீனு”
சிரித்துக்கொண்டே மலையனூரம்மாவிற்கு பதில் சொல்கிறாள் இருளாயி,
“இன்னா சித்தி பண்றது?” இந்த வாரம் தனியா வத்திப்பெட்டி வாங்கியாந்து போட்டேன். எந்த இடத்துல சில்லறை இருக்கும், எந்த இடத்துல வத்திப்பெட்டி இருக்கும்னு தினுசா தெரிஞ்சு கரைட்ட அத தூக்கி இடுப்புல சொருகிக்கிட்டு போய்ட்டா நான் என்ன பண்றது”
எவ்வளவு நுட்பம்
கஞ்சி காய்ச்ச கம்பு, சோளம் குருணை பிரச்சினைதான் பொதுவா பேசப்படும்
பத்த வைக்க வத்திப்பெட்டிக்கே பிரச்சினை தோழர்களே
புருஷனுக்கு பயந்து வத்திப்பெட்டியை ஒளிச்சு வைக்க வேண்டிய நிலையை எவ்வளவு நாசுக்கா வைத்திருக்கிறார் செஞ்சி தமிழினியன்
1970 பக்கமா கரண்டியோட அலைஞ்ச அனுபவம் உண்டு
இப்பவும் இருக்கு போல
முத்தம் செஞ்சி தமிழினியன்

Wednesday, May 14, 2025

ஒரு பிக்னிக்தான் சிலப்பதிகாரத்தின் தோற்றுவாய்

 புதிய ஆசிரியனும் காக்கையும் வந்ததாப்பா?

நான் ஊர்ல இல்ல எட்வின்.
எங்க?
கண்ணகி கோட்டம்
”மண்மகள் அறிந்திராத வண்ணச் சீறடிகளை
மதுரை வரை நடந்த சீரடிகளை
என் அன்பனை இழந்தேன் என்று கதறியழுதவளை
கேட்டதாகக் கூறுப்பா
மணிமேகலையை கண்ணகி மகளென்று மாதவி கூறியதை
கண்ணகி காதில் சொல்லி வாப்பா,
அள்ளிவந்த கண்ணகியில் ஒரு துண்டை அனுப்பு”
என்று சொல்கிறேன்
துண்டென்ன முழுசையும் அனுப்புகிறேன் என்ற பதில் வர சாய்கிறேன்
இப்படியான ஒரு பிக்னிக்தான் சிலப்பதிகாரத்தின் தோற்றுவாய்
இளங்கோ, வேண்மாள், சீத்தனார்
அமைச்சர்கள் புடைசூழ மலையழகை தரிசிக்க பிக்னிக் போகிறான் செங்குட்டுவன்
அங்கு அவனைக் காண வந்த மக்கள்
ஒற்றை முலையோடு நின்ற ஒரு பெண்ணை வானத்தில் இருந்து விமானத்தில் வந்தவர்கள் அதனுள் இருந்த அவளது கணவனைக் காட்டி அழைத்துப் போனார்கள் என்று சொல்கிறார்கள்
அதைக் கேட்டதும்
சாத்தனார் அது கண்ணகி என்றும்,
கண்ணகி காதையை சுருக்கமாக சொல்கிறார்
இதைக் கேட்டதும் இளங்கோ அதை ஒரு காவியமாக எழுத இருப்பதாக சொல்கிறார்
சாத்தானார் மகிழ்கிறார்
இப்படியாக,
அந்த மலைப் பயணம்தான் சிலம்பை கொடுத்திருக்கிறது
இந்த நினைவோடு சாய்ந்து கிடந்தவன்
நாட்டார் இலக்கியத்தில் ஒற்றை மொலைப் பெண்கள் குறித்து இருப்பதுகுறித்து படித்ததெல்லாம் நினைவிற்குள் வந்துபோயின
“ஒரு முலை அறுத்த திருமாவுண்ணி” என்பதும் நினைவிற்கு வந்தது
முகநூலைத் திறந்தால்
”அன்னாந்து அம்மா என்றேன்
ஒரு முலை உதிர்த்தாள்.
ஒவ்வொரு பசியின் கைகளிலும் ஒவ்வொரு முலைகள்.
பனங்காடே
முலையூட்ட நெடுநெடுவென வளர்ந்த தாயே
உமக்கு சலிப்பே வராதா...
கைவிடேன்
உன் மார்பை விட கனமானது உந்தன் அன்பு
சுமக்க முடியவில்லை.”
என்று Poondi Jeyaraj எழுதுகிறான்
ஆசிர்வாதம்

Sunday, March 30, 2025

“போற்றா ஒழுக்கம்”

”நீ இல்லை
இனி எப்போதும் இல்லை
உன்னிடம் சொல்லாத
உனக்கான இந்த வார்த்தைகளை வைத்துக்கொண்டு
என்ன செய்ய?”
என்று 21.02.2024 அன்று எழுதியிருக்கிறாள் Kalai Mani.
கிட்டத்தட்ட ஒரு ஆண்டு ஒரு மாதம் கடந்து சில நாட்களாகிவிட்டன
எத்தனை வலி?
வலியை எவ்வளவு லாவகமாக படிக்கிறமாதிரி கொடுக்கத் தெரிகிறது
பாருங்கள்,
யாருக்கான சொற்களையோ அவர்கள் இல்லாத வேளையில் சுமந்து தெரிவது எவ்வளவு அவஸ்தை
21.02.2024 அன்றே அவளடு பேசி ”எத்தனை அழகு” என்று சொல்லி இருக்க வேண்டும்
ஒருக்கால் அன்று அப்படி தட்டிக் கொடுத்திருந்தால் ஒரு நூறு பக்கங்களை அவள் எழுதி இருக்கக் கூடும்
“எத்தனை அழகு” என்ற அவளுக்கான சொற்களை சொல்லாமலே சுமந்து திரிந்திருக்கிறேன்
இளங்கோ சொல்வதுதான்
“போற்றா ஒழுக்கம்” புரிந்திருக்கிறேன்
இந்தக் கவிதையைக் கொண்டாடாத எல்லோரையும் என்பொருட்டு மன்னித்துவிடு கலை
எழுதிக் குவி

30.03.2025

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...