Showing posts with label பள்ளி. Show all posts
Showing posts with label பள்ளி. Show all posts
Monday, January 8, 2024
Friday, January 5, 2024
நீங்களும் யாருன்னுதான் எனக்குத் தெரியல
மாலை,
கிளம்புகிற நேரம் பார்த்து அந்தக் குழந்தை வருகிறாள்
வாயெல்லாம் பல்
அட்டெண்டென்ஸ் செர்டிஃபிகேட் வேணும்
நீ யாருன்னே தெரியல. எப்படித் தரது?
நீங்களும் யாருன்னுதான் எனக்குத் தெரியல. ஆனா கேட்கலையா. அப்படித்தான்
Monday, November 1, 2021
பிள்ளைகளின் அலப்பறை
ஆறாம் வகுப்பில் நுழைகிறேன்
இந்த டீச்சரப் புடிச்சிருக்கா?
ரொம்ப
ஏன்?
விதவிதமான பதில்கள்
வெள்ளையா இருக்காங்க
திட்டவே இல்ல
ரவுண்டு பொட்டு
அட்வைஸ் பண்ணல
பாடம் நடத்தல
பிள்ளைகளின் அலப்பறை
Wednesday, October 13, 2021
நானூறு தேவதைகளின் தகப்பன்
மிகுதியான மன இறுக்கத்தோடு அமர்ந்திருக்கிறேன்.
சந்தியா தலைமையில் ஐந்தாறு குட்டித் தேவதைகள் அறைக்குள் படை எடுக்கின்றனர். இந்தப் பிள்ளைகள் பேச ஆரம்பித்தால் நரசிம்மராவே சிரிப்பார். பார்த்த மாத்திரத்தில் இறுக்கம் ஓடிவிட்டது.
“வாங்ங்ங்க... வாங்ங்ங்க”
“சார், எனக்கு பின்னடி உக்காந்திருப்பாள்ள...”
“இப்படி கிட்டக்க வாங்க மேடம்”
என்றவாறே பிள்ளையை இடுப்போடு அணைத்தவாறே,
“ ம்ம்ம், சொல்லுங்க. என்ன செஞ்சா அவ உங்கள”
“தலையிலேயே அடிக்கிறாங்க சார். ஒரு தாட்டினா பரவாயில்ல. அடிச்சுக்கிட்டே இருக்கா. இப்ப வாங்க , என்னானு கேளுங்க”
“ இதுக்குத்தான் இத்தன எரும வந்தீங்களா?
( எருமை என்றால் தேவதை என்பது என் பிள்ளைகளுக்குத் தெரியும்)”
“அதுக்கு எதுக்கு நான் வந்துக்கிட்டு. அவளுக்கு நான் உன் ப்ரண்டுன்னு தெரியாம இருக்கும். “
“ம்”
“நேரா போ”
“ம்”
“போயி, நான் எட்வினோட ப்ரண்டு. என்ன வம்பிழுத்தா எட்வின் வருவான். அடிப்பான்னு சொல்லு போ”
போய்விட்டார்கள்.
கொஞ்ச நேரம் கழித்து நான் வகுப்புகளைச் சுற்றிப் பார்க்க கிளம்புகிறேன். மரத்தடியில் குழந்தைகளை அமரச் செய்து தம்பிகள் அரவிந்தும் சுந்தரமூர்த்தியும் எதையோ வாசிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களோடு நிற்கிற போது அந்த தேவதைப் பட்டாளம் வருகிறது.
“என்ன சாமி, சொன்னியா?”
“சொன்னேன்”
“என்ன சொன்ன?”
“நான் எட்வினோட ப்ரண்டு. ஏங்கிட்ட வம்பு வச்சுகிட்டா அவன் வருவான், அடிப்பான்னு சொன்னேன்”
“ஐ, அப்புறம்?”
“அவ எட்வின் எனக்கும் ப்ரண்டுதான் எனக்கும் வருவான் சொல்றா. வந்து என்னான்னு கேளுங்க”
அரவிந்தும் சுந்தரமூர்த்தியும் அதிர்கிறார்கள்.
நானூறு தேவதைகளின் அப்பன் நான்.
( ஹெட் மாஸ்டர அவன் இவன் என்று சொல்லலாமா என்று யாருக்கேனும் நெருடல் வருமெனில் இந்த தேவதைகளின் அப்பனிடம் அதற்கான பதில் எதுவும் இல்லை. ரொம்ப உறுத்துமெனில் அவர்கள் என்னை உதறிச் செல்லலாம்)
Saturday, December 21, 2019
அவனோட பேசனும்
மாலை சிறப்பு வகுப்புகள் நடந்துகொண்டிருக்கும்போதே நான் எனது அறையைவிட்டு வெளியே வந்து வேப்ப மரத்தடியில் நின்று கொள்வேன்
வகுப்பு முடிந்து போகும் பசங்களை வம்பிழுத்து விளையாடுவதில் அப்படியொரு சுகம்
இப்படி சொல்வதுகூட சரியில்லை
அவனவனும் என்னையும், சில நேரங்களில் தமிழாசிரியர் செல்வத்தையும் வம்புக்கிழுத்து விளையாடிவிட்டு செல்வார்கள்
“சார், நீங்க கூட்டமெல்லாம் பேசுவீங்களாம்ல?”
“அதுக்கென்ன இப்ப?”
“அதுக்கு என்னவா? ஒன்னு கேக்கனும்”
“ன்ன?”
“நல்ல சாதிக்கு பொறந்தவனா இருந்தா ரேங்க் வாங்கிக்காட்டுங்கறார் எங்க அப்பா? சாதில நல்ல சாதி கெட்ட சாதின்னு இருக்கா சார்?”
“மொதல்ல சாதின்னு இருக்காடா?”
“இருக்கு சார். சாதின்னு இருந்தாதானே அவங்க அவங்க வேலைய அவங்க அவங்க செய்ய முடியும்”
“அதாவது இன்ன இன்ன சாதி இன்ன இன்ன வேலை செய்யனும்னு”
”ஆமாம் சார். அதுக்குத்தான கடவுள் சரியா படச்சிருக்கார்?”
”கடவுள் நல்லவராடா?”
“நல்லவர் எப்படி ஒருத்தர ஒசத்தியாவும் ஒருத்தர கீழயும் படைப்பாரா?”
“ஆமாந்தானே அதுல அவருக்கு என்ன லாபம்?”
“அப்ப யாருக்கு லாபமோ அவருதானே ஜாதிய படச்சிருக்கனும்?”
“ஆமா சார்”
”அப்ப யாரு படச்சிருப்பா?”
குழப்பத்தோடு நின்னான்.
”ஒசந்த சாதி கக்கூசுக்குப் போகுது. ஒடுக்கப்பட்ட சாதி கக்கூச சுத்தம் செய்யுது.”
“அப்ப ஒசந்த சாதிதான் கீழ் சாதிய உண்டாக்குச்சா சார்”
“ஆமா. ஆனா கீழ் சாதி இல்ல. ஒடுக்கப்பட்ட சாதின்னு சொல்லனும்”
அவனோட பேசனும்
Friday, December 20, 2019
வேணுன்டா எட்வின்
அரையாண்டுத் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது
அறைகளைப் பார்வையிட சென்று கொண்டிருக்கிறேன்
மரத்தடியில் மதியம் தேர்வெழுத வேண்டிய ஏழாம் வகுப்பு குழந்தைகளை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் செல்வகுமார்
சிலர் அவரை சூழ்ந்துகொண்டு
சிலர் அமர்ந்தபடி
குனிந்த தலையோடு அவர்களைக் கடக்கிறேன்
சாஆஆர், சார் என்று கத்துகிறார்கள்
அவர்களை நெருங்குகிறேன்
என்ன சாமி?
உங்கள யார் கூப்டா?
இப்ப சார்னு கத்துனீங்களே
சார்னா நீங்களா?
நாங்க எங்க சாரக் கூப்டோம்
நாங்க எங்க சாரக் கூப்டோம்
வேணுன்டா எட்வின்
Wednesday, March 6, 2019
அய்யா பயந்துட்டார் தெரியுமா?”
மேல்நிலை முதலாமாண்டு குழந்தைகளுக்கு இறுதித் தேர்வு நடந்துகொண்டிருக்கிறது. நான்கு அறைகள்.
ஒருபக்கம் மேல்நிலைப் பொதுத் தேர்விற்கான பறக்கும் படைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூன்று நண்பர்கள் அதற்கான வழிகாட்டுதல் கூட்டத்திற்காக சென்றுவிட்டனர்.
தமது தந்தை இறந்துவிட்டதால் ஒரு நண்பர் விடுப்பில் இருக்கிறார்.
இந்தநிலையில் இன்னும் ஆறு ஆசிரியர்களை தேர்வறைக் கண்காணிப்பிற்கான வழிகாட்டுதல் கூட்டத்திற்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவு வந்துவிட்டது.
எப்படி பள்ளியை, திருப்புதல் தேர்வை, நடத்துவதென்று புரியவில்லை.
இதுமாதிரி சூழ்நிலையில் திரு நரசிம்மராவ் அவர்களேகூட வெடித்துவிடக்கூடும்.
இறுகிய முகத்தோடு ஏற்பாடுகளை செய்வதற்காக அறையைவிட்டு வெளியே வருகிறேன். ஒரு அறையை செல்வம் கண்காணித்துக் கொண்டிருக்கிறான். அவனிடம் செய்தியை சொல்லலாம் என்று அறக்குப் போகிறேன். உள்ளே நுழைகிறபோது சிரித்துக் கொண்டே, “இது என்ன எழுதி இருக்குன்னு பாருங்க சார்”.
அவள்தான் வகுப்பில் முதல் குழந்தை.
“என்ன அபி எழுதி இருக்க?”
பேப்பரைப் பிரித்துக் காட்டுகிறாள்.
“என் சாவுக்கு எங்க அய்யாதான் காரணம்” என்று கொட்டை எழுத்தில் எழுதி இருக்கிறாள். அதிர்ந்துபோய் நிற்கிறேன். அவளோ கெக்கபிக்க என்று சிரிக்கிறாள்.
ஒன்றும் இல்லை,
“தண்ணீர் தொட்டி சென்று நீர் அருந்திவர அனுமதி கேட்டிருக்கிறாள். “பேசாம எழுது பாப்பா” என்று மறுத்திருக்கிறான். அவனது செல்லம் அவள். சிரித்துக் கொண்டே ”உடலைனா தாகத்திலேயே செத்துவிடுவேன்” என்று மிரட்டி இருக்கிறாள். “செய்” என்று சிரித்துக் கொண்டே சொல்லி இருக்கிறான்.
இப்படி எழுதிவிட்டு,
“நான் எழுதி வச்சுட்டேன். தாகத்துல செத்துட்டேன்னா HM சார் உங்களப் புடிச்சு போலீஸ்ல கொடுத்துடுவார்”
அந்த நேரம் பார்த்து குறுக்க போயிருக்கேன்.
“அய்யாவ புடிச்சு போலீஸ்ல கொடுப்பீங்கதானே?”
”நீயாச்சு உங்க அய்யாவாச்சு. ஆள விடுங்க புள்ளைங்களா” என்றாவாறு போன வேலையை மறந்தவானாக திரும்பிவிட்டேன்.
மதியம் ரவுண்ட்ஸ் போகும்போது அவளைப் பார்க்கிறேன்.
“என்னமோ சவடால் எல்லாம் விட்ட. கொஞ்சம்கூட வெக்கம் மானமே இல்லாம உக்காந்துருக்க”
“நீங்கதானே அன்னிக்கு ப்ரேயர்ல ‘மானம் கருதக் கெடும்’னு சொன்னீங்க. போக அய்யா பயந்துட்டார் தெரியுமா?”
”எனக்கா?”
“உங்களுக்கு வர்ஷினியே பயப்பட மாட்டா. எங்க அய்யா பயப்படுவாராக்கும். அவர் போலீசுக்கு பயந்துட்டு என்ன தண்ணி குடிக்க அனுப்பிட்டாரு தெரியுமா?”
சிரித்தபடியே நகர்கிறேன்.
இடைவேளையில் அறைக்கு வந்த செல்வத்திடம் “பயந்துட்டியாம்ல, சொன்னா”
“நானா?, ரவி தண்ணி கேட்டான். அனுப்பிட்டேன். பாவமா பார்த்தா. தொலையறானு அனுப்பிட்டேன். பயந்துட்டேன்னு சொன்னாளா? நாளைக்கு வச்சுக்கிறேன்”
சிரித்தேன்.
எங்க பள்ளி இப்படித்தான்.
ஊருல எங்க….?
#சாமங்கவிய 18 நிமிடங்கள்
28.02.2019
28.02.2019
Sunday, July 29, 2018
அஜித் AV AV
அது அந்த நாளின் எட்டாவது பிரிவேளை. இயல்பாகவே அந்த நேரத்தில் சோர்வாகத்தான் இருக்கும். அதுவும் அன்றைக்கு கொஞ்சம் கடுமையான வேலை என்பதால் கொஞ்சம் அதிகப்படியான சோர்வோடு அமர்ந்திருக்கிறேன். அந்த நேரம் பார்த்து இரண்டு குழந்தைகள் கையை நீட்டி அனுமதி பெற்றவாறு உள்ளே வருகிறார்கள்.
அது தலைமை ஆசிரியர் அறை என்பதால் பெரிய குழந்தைகளிடம் காணாப்படும் எந்தவிதமான தயக்கமும் அவர்களிடம் இல்லை. அத்தனைக் கிலோவும் கபடு சூதற்ற வெகுளித்தனம்.
அந்தக் குழந்தைகளின் வருகை அத்துனை சோர்வையும் துடைத்துப்போட்டு புன்னகையை என் இதழ்களுக்கு கொண்டு வருகிறது.
”என்ன?” என்பதாகப் பார்க்கிறேன்.
”நான் ஏழாம் வகுப்பு பஸ்ட் லீடர், இது செகண்ட் லீடர்” தான்தான் லீடர், அவள் இல்லை. அவள் எனக்கு அசிஸ்டெண்ட்தான் என்பதை சொல்லாமல் சொல்லும் வித்தை அந்தக் குழந்தைக்கு வாய்த்திருக்கிறது. இதுவும்கூட தலைமைப் பண்பின் ஒரு கூறுதான்.
”சொல்லுங்க பஸ்ட் லீடர்”
என்னை அறியாமலே புன்னகை இன்னும் அதிகமாய் விரிகிறது.
“சார் இல்லாதப்ப பஸ்ட் லீடர்தான் சார் இடத்துல இருந்து சத்தம்போடாம பார்த்துக்கனும்னு எங்க சார் சொன்னாங்க. சாரும் இல்லாம பஸ்ட் லீடரும் இல்லைனா மட்டும்தான் செகண்ட் லீடர் பேரெழுதனும்னு சொன்னாங்க”
”சரிங்க பஸ்ட் லீடர். அத யாரு இல்லேனா இப்ப?”
“பசங்க எங்களுக்கு அடங்கவே மாட்டேங்கறாங்க. அடிச்சுக்கறாங்க. என்ன பஸ்ட் லீடர்ல இருந்தும் அத செகண்ட் லீடர்ல இருந்து எடுத்துடுங்க”
“ஏன் செகண்ட் லீடர் பேசவே மாட்டேங்கறாங்க?”
“பஸ்ட் லீடர் இருந்தா பஸ்ட் லீடர்தான் பேசனும்” எனக்கு சன்னமாக சிரிப்பு வந்துவிட்டது.
‘உங்க க்ளாஸ் சார்ட போய் சொல்லுங்க?”
“சார்தான் உங்களப் போய் பார்க்கச் சொன்னார்”
செல்வகுமார் பந்தை நம்மிடம் எறிந்துவிட்டு தப்பிக்கப் பார்க்கிறார் என்பது புரிகிறது.
அதற்குள் அவள் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர்
அவளை அருகே அழைத்து தலையை வருடியவாறே,
”பஸ்ட் லீடர் அழக்கூடாது. யாரு அடங்கலன்னு சொல்லு அவன பிரிச்சி எடுத்துடலாம்”
”கருணைராஜா AV, அஜீத் AV AV”
”கருணைராஜா AV என்றால் கருணை ராஜா அடங்கவில்லை என்று புரிகிறது. அது என்னங்க லீடர் அஜீத் AV AV?”
“அஜீத் அடங்கவில்லை அடங்க வில்லை”
“புரியல”
பேசறவங்க பேரெல்லாம் போர்டுல எழுதியிருப்பேனா. அதுல கருணைராஜா பேரும் இருதுச்சுன்னா அவன் அவம்பேர அழிச்சுடுவான். அதனால அவன் AV.“
“அஜீத் மட்டும் ஏன் AV AV?”
“அதுல அவன் பேரும் இருந்துச்சுன்னா அஜீத் எல்லார் பேரையும் அழிச்சுடுவான். அதனால அவன் AV AV”
சத்தமாய் சிரித்து விட்டேன். அந்தக் குழந்தையை அருகில் இழுத்து அணைத்துக் கொள்கிறேன்.
“இங்கே வா சாமி. வெளியே எத்தனை மரம் இருக்கிறது என்று பார்”
வெராண்டாவரை போய் எண்ணிப் பார்த்துவிட்டு ’ஆறு’ என்கிறாள்.
அதில் எந்த மரத்தில் கருணைராஜாவைக் கட்டி வைக்கலாம் என்று கேட்டதும் மீண்டும் வெராண்டா போய் பார்த்துவிட்டு வந்து ’அந்த மொதோ வேப்ப மரத்துல’ என்கிறாள். ’சரி அஜீத்தை எந்த மரத்துல கட்டலாம்?’, அவனையும் அதே மரத்துல கட்டலாம் என்கிறாள்.
”அது எப்படி பாப்பா ரெண்டு பேரையும் ஒரே மரத்துல கட்டிவச்சா பேசிக்கிட்டே இருப்பாங்களே” என்று சொன்னதும் மீண்உம் வெளியே போய் பார்த்துவிட்டு வந்து ‘அவனை மூன்றாவது மரத்துல கட்டலாம்’ என்கிறாள்.
சரி இப்போது கயிறு இல்லை என்றும் நாளை வீட்டிலி இருந்து கயிறு கொண்டு வந்து மரத்துல கட்டி வச்சு தோள உரிச்சு எடுத்துடலாம் என்று ஒரு வழியாக சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தேன்.
அடுத்த நாள் வருகிறது அந்த இரு குழந்தைகளையும் எப்படி சமாளிப்பது என்று தெரியாதவனாக பள்ளிக்கு போகிறேன் அந்த இரண்டு குழந்தைகளையும் அழைத்து வரச் சொல்லலாம் என்று நினைக்கிற போது அந்த இரண்டு குழந்தைகளும் என் அறைக்கு வருகிறார்கள்.
நான் சிரித்தபடியே பஸ்ட் லீடர், அத ரெண்டு கழுதைகளின் கட்டி போட்டுடலாம். இன்னைக்கி கயிறு எடுத்துட்டு வரல. நாளைக்கு எடுத்துட்டு வந்து விடுகிறேன் என்று சொல்கிறேன்.
அந்தக் குழந்தைகள் சிரித்தபடியே
”அவங்களை கட்டி போட வேணாம் சார்”
“ஏங்க பஸ்ட் லீடர்?”
“அவிங்க எங்களுக்கு ப்ரண்ட் ஆயிட்டாய்ங்க”
“ஆஹா”
“நாளைக்கு மீனாவையும் முருகனையும் கட்டிப் போடுங்க சார்”
”இவங்கள ஏன் நேத்து சொல்லல?”
”ரெண்டு பேர சொன்னப்பவே போரடிச்சுது. அதான் சொல்லல”
சிரித்துக் கொண்டே, “மீனாவையும் முருகனையும் நாளைக்கு பிரிச்சு எடுத்துடலாம்”
சிரித்துக் கொண்டே ஓடி விட்டார்கள்.
எனக்குத் தெரியும் நாளைக்குள் அவர்களும் ப்ரண்டாயிடுவாங்க.
குழந்தைகள் தினமும் தினமும் என்னை ஆசிர்வதித்தபடியே இருக்கிறார்கள்
நன்றி: வண்ணக்கதிர்
29.07.2018
29.07.2018
Saturday, September 16, 2017
நானூறு தேவதைகளின் தகப்பன்
மிகுதியான மன இறுக்கத்தோடு அமர்ந்திருக்கிறேன்.
சந்தியா தலைமையில் ஐந்தாறு குட்டித் தேவதைகள் அறைக்குள் படை எடுக்கின்றனர். இந்தப் பிள்ளைகள் பேச ஆரம்பித்தால் நரசிம்மராவே சிரிப்பார். பார்த்த மாத்திரத்தில் இறுக்கம் ஓடிவிட்டது.
“வாங்ங்ங்க... வாங்ங்ங்க”
“சார், எனக்கு பின்னடி உக்காந்திருப்பாள்ள...”
“இப்படி கிட்டக்க வாங்க மேடம்” என்றவாறே பிள்ளையை இடுப்போடு அணைத்தவாறே, “ ம்ம்ம், சொல்லுங்க. என்ன செஞ்சா அவ உங்கள”
“தலையிலேயே அடிக்கிறாங்க சார். ஒரு தாட்டினா பரவாயில்ல. அடிச்சுக்கிட்டே இருக்கா. இப்ப வாங்க , என்னானு கேளுங்க”
“ இதுக்குத்தான் இத்தன எரும வந்தீங்களா? ( எருமை என்றால் தேவதை என்பது என் பிள்ளைகளுக்குத் தெரியும்)”
“அதுக்கு எதுக்கு நான் வந்துக்கிட்டு. அவளுக்கு நான் உன் ப்ரண்டுன்னு தெரியாம இருக்கும். “
“ம்”
“நேரா போ”
“ம்”
“போயி, நான் எட்வினோட ப்ரண்டு. என்ன வம்பிழுத்தா எட்வின் வருவான். அடிப்பான்னு சொல்லு போ”
போய்விட்டார்கள்.
கொஞ்ச நேரம் கழித்து நான் வகுப்புகளைச் சுற்றிப் பார்க்க கிளம்புகிறேன். மரத்தடியில் குழந்தைகளை அமரச் செய்து தம்பிகள் அரவிந்தும் சுந்தரமூர்த்தியும் எதையோ வாசிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களோடு நிற்கிற போது அந்த தேவதைப் பட்டாளம் வருகிறது.
“என்ன சாமி, சொன்னியா?”
“சொன்னேன்”
“என்ன சொன்ன?”
“நான் எட்வினோட ப்ரண்டு. ஏங்கிட்ட வம்பு வச்சுகிட்டா அவன் வருவான், அடிப்பான்னு சொன்னேன்”
“ஐ, அப்புறம்?”
“அவ எட்வின் எனக்கும் ப்ரண்டுதான் எனக்கும் வருவான் சொல்றா. வந்து என்னான்னு கேளுங்க”
அரவிந்தும் சுந்தரமூர்த்தியும் அதிர்கிறார்கள்.
நானூறு தேவதைகளின் அப்பன் நான்.
( ஹெட் மாஸ்டர அவன் இவன் என்று சொல்லலாமா என்று யாருக்கேனும் நெருடல் வருமெனில் இந்த தேவதைகளின் அப்பனிடம் அதற்கான பதில் எதுவும் இல்லை. ரொம்ப உறுத்துமெனில் அவர்கள் என்னை உதறிச் செல்லலாம்)
Monday, February 20, 2017
நீங்க தப்புன்னு ஆயிடும் ஆமா
ஆரல் ஓரல் திருத்திக் கொண்டிருக்கிறேன்.
பார்த்து திருத்துங்க. தப்பு போடாதீங்க ஆமா
சொல்ல சொல்ல எழுதிட்டு என்னமோ தானா எழுதன மாதிரி நாய்க்கு ரவுச பாரு
அதனாலதான் சொல்றேன். தப்பு போட்டீங்கன்னா நீங்க தப்புன்னு ஆயிடும் ஆமா
அடி...
தலையை தனுஷ் மாதிரி சிலிப்பிக் கொண்டே ஓடிட்டான்
Wednesday, February 8, 2017
கரண்டு மாதிரி
காலை கூட்டுப் பிரார்த்தனை முடிந்தது வகுப்புகள் தொடங்கியதும் பத்தாம் வகுப்பு ஆசிரியை வகுப்புக்கு வராத மாணவனை வகுப்புத் தலைவியோடு என்னிடம் அனுப்பியிருந்தார்.
”ஏண்டா?”
“ நேத்திக்கு ஸ்கூலுக்கு வரலன்னு டீச்சர் உங்களப் பார்த்துட்டு வரச் சொன்னாங்க சார்”
” ஏண்டா நேத்து ஒரு நாளைக்காகவா டீச்சர் அனுப்பினாங்க?”
“ ஆமாம் சார். நேத்தி தான் சார் வரல”
இடை புகுந்து வகுப்புத் தலைவி சொன்னதுதான் இங்கு நம்மைக் கொண்டு வந்து நிறுத்தியது
அந்தக் குட்டி பொண்ணு சொன்னாள்,
“இல்ல சார், இவன் கரண்டு மாதிரி எப்பவாச்சும்தான் ஸ்கூலுக்கு வரான்”
Friday, January 27, 2017
Tuesday, December 27, 2016
எழுந்து நிற்பதல்ல...
பள்ளி குடிநீர்த் தொட்டிக்கருகே நின்று திரையரங்குகளில் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்பதன் மூலம் தேசப்பற்றை கொண்டுவர முடியுமா என்பது குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.
ஹிஸ்ட்ரி க்ரூப் ஜெனித் சிரித்துக் கொண்டே இடைமறித்தான்,
"சார், நீங்க வரப்ப எழுந்து நிக்கறோம். ஆனா அதனால எல்லாம் உங்கமேல மரியாத வராது சார். ஆனா மரியாதை இருந்துச்சுன்னு வைங்க நீங்க வரும்போது நாங்களாவே எழுந்து நிற்போம் சார்"
"அதுமாதிரி நாட்டும் பற்று வந்துடுச்சுன்னா யாருமே சொல்லவேனா தேசியகீதம் போட்டது ம் நாங்களாகவே எழுந்துடுவோம். "
Wednesday, December 14, 2016
நான்தானே பெரிசு?
எப்படி என்கிறேன் உங்களைவிட நான்தான் பெரிசென்றவனிடம் .
இப்ப ஹெட்மாஸ்டர் வரலைனா நீங்க ஆக்டிங் ஆயிடுறீங்கதானே என்றவனிடம் ஆமாம் என்கிறேன்
எந்த சார் வரலைனாலும் அவருக்காக இன்னொரு சார ஆக்டிங் போட்டு சமாளிக்க முடியும் உங்களால. ஆனா, நான் வரலைனா எனக்காக யாரையும் ஆக்டிங் போட்டு என் வேலைய வாங்கமுடியாது உங்களால்.
இப்ப சொல்லுங்க உங்களைவிட நான்தானே பெரிசு?
ஆமாண்டா ஆமா
Subscribe to:
Posts (Atom)
இதை முதலில்.....
அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?
அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...
-
நடு வானத்திற்கும் மேற்கே இரண்டு மூன்று முழங்களைக் கடந்திருந்தான் சூரியன். கழுத்தில் கிடந்த துண்டால் முகத்தை துடைத்தவாறே கூவிக் கூவி கடவுள்...
-
“ சாதி ஒடுக்குமுறை உள்ள அல்லது சமத்துவமற்ற எதனோடும், அது தமிழ்த் தேசியமாகவே இருப்பினும் அதனோடு எனக்கு சம்மதம் இல்லை” சென்னை இக்ஷா அரங்கத...



