Showing posts with label தென்னகப் பேரிடர். Show all posts
Showing posts with label தென்னகப் பேரிடர். Show all posts

Wednesday, December 20, 2023

PM ஏன் தூத்துக்குடிக்கே வரவில்லை?

 இந்தியா கூட்டணிதான் தென் மாவட்டங்களைவிட முக்கியமா?

தூத்துக்குடிக்கும் ஸ்டாலின்தானே முதல்வர் என்று PM கேட்டால் என்ன சார் செய்வீங்க?
அவர் தூத்துக்குடிக்கும் சேர்த்துதானே சார் PM
அவர் ஏன் தூத்துக்குடிக்கே வரவில்லை?

Tuesday, December 19, 2023

மாநில வானிலை

தென்னகப் பேய் மழை குறித்த வானிலை ஆய்வு மையத்தின் தகவல் தாமதமாகக் கிடைத்ததாக முதல்வர் கூறுகிறார்

இதற்குபின் ஏதேனும் இருக்கிறதா என்று கண்டறிவதும்
மாநிலத்திற்கென்று ஏதோ ஒரு வகையில் வானிலை ஆய்வுக்கான அமைப்பு தேவையா?
சாத்தியமா? என்பது குறித்தும் கவனம் குவிக்க வேண்டும்

இப்படியான ஒரு பெருமழை குறித்து

இப்படியான ஒரு பெருமழை குறித்து குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு முன்னால் கண்டுபிடித்து சொல்ல முடியாதா என்ற கேள்விக்கு

ஓரளவு இப்படி இருக்கும் என்பது போன்ற கணிப்புகளுக்குள் வந்துவிடலாம்
ஆனால் இது இயற்கை
மாறும்
எனவே ஐந்து நாட்களுக்கான கணிப்பை எடுத்துக் கொள்வதே சரி என்கிறார் ரமணன்

இந்த மழையளவு ஒரு மழையை பார்த்தவர் யாரும் இந்தியாவில் இல்லை

ஒரே நாளில் இந்தியா பெற்ற பெருமழை அளவு 103.6 செமீ

இது நிகழ்ந்த இடம் சிரபுஞ்சி
நிகழ்ந்த ஆண்டு 1876 என்ற தகவல்களை திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தருகிறார்
எனில்
இது நிகழ்ந்து 147 ஆண்டுகள்
இந்தியாவில் 147 வயதுடைய யாரும் இப்போது இல்லை
ஆக இப்போது காயல்பட்டிணத்தில் பேயென 95 செமீ அளவிற்கு கொட்டித் தீர்த்த மழையளவு ஒரு மழையை பார்த்தவர் யாரும் இந்தியாவில் இல்லை

உன் பல்லை நீ துலக்குவதுபோலவே

 

நமது சட்டமன்ற அவைத் தலைவர் திரு அப்பாவு அவர்கள் குடையைப் பிடித்தபடி நிவாரணப் பணிகளைப் பார்வை இடும் படம் ஒன்று கிடைத்தது
அழகாகவும் இருந்தது
மிக இயல்பான கிராமத்து மனிதனைப் போல இருந்தது
வைத்திருந்தேன்
நான் பார்த்த ஐந்தாறு படங்களிலும் அவர் குடையை அவரே பிடித்துக் கொண்டிருக்கிறார் என்று வைத்திருந்தேன்
அவர் நதியில் பூ அள்ளிப் போடும்போது அவர் கைகளிலும் அவர் குடை இல்லை
மற்ற சமயங்களில் அவர் கையில் அவர் குடை
இதையும் எழுதி இருந்தேன்
சில நண்பர்களுக்கு கோவம் வந்தது
வரவேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு
அவர் பற்களை அவரே துலக்குகிறார் என்றுகூட எழுதுவோமா என்றுகூட வந்தது
மகிழ்ச்சியாக இருந்தது
என்ன வருத்தம் எனில்
இந்த இடத்தில் எல்லாத் தலைவர்களையும் சொல்லவில்லை
பெருமழை நேரங்களிலும்
பேரிடர் காலங்களிலும்கூட
அரை இஞ்ச் பௌடரோடு
அடுத்தவர் கொடைபிடிக்க கைவீசி நடப்பவர்களைப் பார்த்தும்
உன் பல்லை நீ துலக்குவதுபோலவே உன் குடையையை நீதானே பிடிக்க வேண்டும் என
கோவம் கொள்வதில்லையே என்பதுதான்

அவரே குடையைப் பிடித்துக்கொண்டு நிற்கிறார்

 







மழை கடுமையாகப் பெய்துகொண்டு இருக்கிறது

அவைத் தலைவர்தான் ஆனாலும் சட்டமன்ற உறுப்பினர்

பொறுப்புணர்ந்து வருகிறார்

நான் பார்த்த நான்கைந்து படங்களிலும் அவரே குடையைப் பிடித்துக்கொண்டு நிற்கிறார்

16.12.2023

அடுத்தும் மழை வரும் அடுத்தும் வீட்டிற்குள் தண்ணீர் வரும்

 


எல்லா இடங்களுக்கும் இது பொருந்தும் என்றாலும்
தெற்கே கொஞ்சம் கூடுதலாகப் பொருந்துகிறது
சாலை போட்டால்தான் கமிஷன் வரும் என்பதற்காக
சாலை மேலே சாலை என்று போட்டுக் கொண்டே போகிறார்கள்
ஒரு கட்டத்தில் மொட்டைமாடி உயரத்திற்கு சாலை வந்து விடுகிறது
மழை பெய்தால் தண்ணீர் வீட்டுகளுக்குள் வருவதற்கு இது ஒரு பெருங்காரணம்
10 டன் ஜல்லி, மணல் தார் போட்டால்
10 டன் பெயர்த்தெடுக்க வேண்டும் என்பது சட்டம்
மழை நின்றதும்
திரண்டு இதைக் கேட்க வேண்டும்
இல்லாது போனால்
அடுத்தும் மழை வரும்
அடுத்தும் வீட்டிற்குள் தண்ணீர் வரும்

இரண்டுப் பேரிடர்கள் இரண்டு ஆட்சியர்கள்

 

இந்த நேரத்தில் இரண்டு பேரிடர்களையும்
இரண்டு மாவட்ட ஆட்சித் தலைவர்களை அந்தந்தப் பேரிடர் காலத்து அவர்களது செயல்பாடுகளுக்காக நினைக்கவும் வணங்கவும் கடமைப் பட்டிருக்கிறோம்
ஒரு பேரிடர் சுனாமி
ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் சுனாமியின்போது நாகையின் அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவரான திரு ராதாகிருஷ்ணன்
அப்போது சுனாமிக்கு தங்களது அனைத்துக் குழந்தைகளையும் சில தாய்மார்கள் பறிகொடுத்து இருந்தனர்
அவர்களில் சிலர் குடும்பக் கட்டுப்பாடு அறுவை செய்திருந்தனர்
அவர்களை அன்போடு அரவணைத்து ஆறுதல் சொன்னதோடு அவர்களுக்கு மறு அறுவை செய்து மீண்டும் அவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கச் செய்தவர் திரு ராதாகிருஷ்ணன்
இப்போது தெந்தமிழ்நாட்டின் பேய்மழைப் பேரிடர்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் தனது மாவட்டத்தில் மகப்பேற்றிற்காக காத்திருக்கும் தாய்மார்களை அடையாளம் கண்டு
அவர்களை இப்போதே மருத்துவ மனைகளில் சேர்த்து பாதுகாத்திருக்கிறார்
இந்த இரண்டு செயல்களையும் நிர்வாக ரீதியாக குறிப்பிட வேண்டுமெனில் சிறப்பான பேரிடர் மேலாண்மை என்று குறிப்பிடலாம்
ஆனால் இவை இரண்டு செயல்களும் எந்தப் பெயருக்குள்ளும் பொருந்தாத மேன்மையானவை

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...