நமது சட்டமன்ற அவைத் தலைவர் திரு அப்பாவு அவர்கள் குடையைப் பிடித்தபடி நிவாரணப் பணிகளைப் பார்வை இடும் படம் ஒன்று கிடைத்தது
அழகாகவும் இருந்தது
மிக இயல்பான கிராமத்து மனிதனைப் போல இருந்தது
நான் பார்த்த ஐந்தாறு படங்களிலும் அவர் குடையை அவரே பிடித்துக் கொண்டிருக்கிறார் என்று வைத்திருந்தேன்
அவர் நதியில் பூ அள்ளிப் போடும்போது அவர் கைகளிலும் அவர் குடை இல்லை
மற்ற சமயங்களில் அவர் கையில் அவர் குடை
இதையும் எழுதி இருந்தேன்
சில நண்பர்களுக்கு கோவம் வந்தது
வரவேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு
அவர் பற்களை அவரே துலக்குகிறார் என்றுகூட எழுதுவோமா என்றுகூட வந்தது
மகிழ்ச்சியாக இருந்தது
என்ன வருத்தம் எனில்
இந்த இடத்தில் எல்லாத் தலைவர்களையும் சொல்லவில்லை
பெருமழை நேரங்களிலும்
பேரிடர் காலங்களிலும்கூட
அரை இஞ்ச் பௌடரோடு
அடுத்தவர் கொடைபிடிக்க கைவீசி நடப்பவர்களைப் பார்த்தும்
உன் பல்லை நீ துலக்குவதுபோலவே உன் குடையையை நீதானே பிடிக்க வேண்டும் என
கோவம் கொள்வதில்லையே என்பதுதான்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்