Sunday, December 24, 2023

தமிழ்நாடு பள்ளிகளில் காணப்படும் 28 விதமான சாதிய பாகுபாடுகளில் ஒன்று

 





தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழ்நாடு பள்ளிகளில் காணப்படும் 28 விதமான சாதிய பாகுபாடுகள் குறித்து ஆய்வு நடத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது

இது மிகவும் சவால் வாய்ந்த ஒரு முயற்சி

களம் சென்ற TNUEF தோழர்களையும் இப்படி ஒரு முடிவெடுத்த மாநிலக்குழுவையும் கைகளைப் பற்றி நன்றி சொல்கிறேன்

இந்த அளவிலான அந்த அறிக்கையே அதிர்ச்சி அளிக்கிறது

இப்படி சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது

இந்த அறிக்கை பொய் என்று யாரும் சொல்ல முடியாது

ஆனால் குறைவுதான்

அவர்களது வாய்ப்புகள் அளவிற்கும் மேலான முயற்சி இது

கயிறு விஷயத்தில் திருச்சி விடுபட்டிருக்கிறது

அனுபவத்தில் சொல்கிறேன்

இங்கு அதிகம்

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்

தலித் சமூகத்தை சேர்ந்த குழந்தைகளைக் கொண்டு கழிவறைகளை சுத்தம் செய்யும் பள்ளிகளின் எண்ணிக்கை 15 என்கிறது அறிக்கை




ஒன்று என்று இருந்தாலே நாம் இதற்காக வெட்கப்பட வேண்டும்

பதினைந்து

9 மாவட்டங்களில் இப்படி என்று அறிக்கை கூறுகிறது

கட்சி தனது கவனத்தை அங்கு குவிக்க வேடும்

பள்ளிகளின் பட்டியல் நிச்சயம் இருக்கும்

வாசலை மறிப்போம்

கேள்வி கேட்போம்

மால்கம் “பகை நன்று” ஒரு குறுநாவல் எழுதியிருக்கிறார்

அதிலும் இதுகுறித்து நுட்பமாக வரும்

அணிந்துரையிலும் இது குறித்தே நானும் பேசி இருக்கிறேன்

பாரதி புத்தக வெளியீடு

குழந்தைகளை அவர்கள் பிறப்பின் பொருட்டு கழிவறைகளைக் கழுவச் சொன்னவர்களை

தூக்கிலேகூட போடலாம்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...