லேபில்

Sunday, June 4, 2023

இன்னும் காடாக்க

 காட்டை
எதற்கு
திருத்திக் கொண்டிருக்கிறாய்?
இன்னும் காடாக்க

கீழே விழுந்து செத்தவன் பாக்கெட்டிலிருந்து

 ரயில்கள் மோதிக்கொண்டபோது
கீழே விழுந்து செத்தவன் பாக்கெட்டிலிருந்து
கீழே விழுந்த செல்போனில்
அவனுக்கு முத்தத்தை அனுப்பியிருந்த
அந்த இளைய குழந்தைக்கானது
என் கண்ணீரும் இரங்கலும்
A

Sunday, May 21, 2023

அமைச்சர் மாற்றத்தோடு தேர்தல் வேலையைத் தொடங்கி இருக்கிறது பாஜக

"The shifting of Riijiju from Law Ministery should end conflict with the judiciary"
என்ற தலைப்பில் தொடங்குகிறது 20.05.2023 நாளிட்ட THE HINDU வின் தலையங்கம்
நேற்று முன்தினம் ஒன்றிய சட்ட அமைச்சர் திரு ரிஜிஜு சட்டத்தில் இருந்து புவி அறிவியல் துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்
அதைப் பற்றி எழுதும்போதுதான் தனது தலையங்கத்திற்கு “நீதித்துறையோடு உள்ள முரண்களை இந்த மாற்றம் சரி செய்யும் ” என்று தலைப்பிடுகிறது
அதற்கான காரணங்களைக் குறித்து உரையாடும்போது,
"To tone down his penchant for confrontation"
முரண்களோடு அவருக்கு இருக்கும் ஆசையை குறைப்பதற்காகவே இந்த மாற்றம் என்கிறது
நிறைய முரண்பட்டார்தான்
தொடக்கத்தில் இருந்தே உச்சநீதிமன்றத்தோடு முரண்பட்டவர்தான் ரிஜிஜு. இப்போது ஏன் அவரை மாற்ற வேண்டும்
அவரது முரண்களும் விமர்சனங்களும் தவறு என்று பிரதமர் உணர்ந்ததால் இந்த மாற்றமா என்றால் நிச்சயமாக இல்லை
நான்காண்டுகளாக அவரது முரண்களை விமர்சனங்களை ரசித்துக் கொண்டிருந்தவர்தான் அவர்
தேர்தலுக்கு ஒரு வருடம்தான் இருக்கிறது
எனவே உச்சநீதிமன்றத்தோடான ஒன்றிய அரசின் இந்த ஒத்திசைவை 2024 தேர்தாலோடு பொருத்திப் பார்க்க வேண்டும்
தனது பிரதிநிதி ஒருவர் மூலம் உச்சநீதிமன்றத்தோடு ஒன்றிய அரசு உரையாடியிருப்பதற்கான வாய்ப்பிருப்பதாகவே ஊடகவியலாளார் கோடீஸ்வரன் கருதுகிறார்
அந்த உரையாடலின் விளைவாக நீதித்துறைக்கும் ஒன்றிய அரசிற்கும் ஒரு ஒத்திசைவு ஏற்பட்டிருப்பதாகவே படுகிறது
அதன் விளைவுதான் சட்ட அமைச்சரின் மாற்றம்
ஏற்கனவே நீதியரசர் ஜோசப் உள்ளிட்டோரது உச்சநீதிமன்ற நீதிபதி நியமனத்திற்கு தடையாக இருந்தவர்களில் மிக முக்கியமானவர் ரிஜிஜு
சில நீதிபதிகளின் நியமனங்கள்
நீதியரசர்கள் பி.கே மிஸ்ரா மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாகப் பொறுப்பேற்றிருக்கிறார்கள்
வந்திருக்கும் சட்ட அமைச்சர் குறித்தும் நிறைய விமர்சனங்கள் உண்டு
அவரைத் தகுதியற்ற அமைச்சர் என்றே 20.05.2023 நாளிட்ட தீக்கதிர் தலையங்கம் கூறுகிறது
ஒரினச் சேர்க்கை குற்றமல்ல என்று தில்லி உயர்நீதிமன்றம் சொன்னபோது அதை எதிர்த்தவர் இன்றைய சட்ட அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால்
2012 இல் ஓரினச் சேர்க்கைக்கு எதிராக பாராளுமன்றத்தில் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தவர்
பிறகு உச்ச நீதிமன்றம் 2013 இல் ஓரினச் சேர்க்கை குற்றம் என்று தீர்ப்பளித்தது
நீதிபதிகள் நியமனம்
நீதித்துறையோடு முரண்பட்ட அமைச்சர் மாற்றம்
இந்தப் பக்கம்
அதானி தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தின் தற்போதைய நிலை
செந்தில்பாலாஜி மீதான விசாரனை
இப்படி கொடுக்கல் வாங்கல்கள் ஆரம்பமாகி உள்ளன
இதுமாதிரியான தொடர்நிகழ்வுகள் தேர்தலுக்கான பிஜேபியின் தேர்தல் வேலைகள் என்பதைப் புரிந்துகொள்ளாவிட்டால்
எதிர்க்கட்சிகள் அதற்கான விலையை வரும் தேர்தலில் கொடுக்க வேண்டி வரும்
All reactions:
Kalai Mani, Zahir Hussain and 5 others

Tuesday, March 7, 2023

02

 ஒய்யாரமாய் படுத்திருக்கிறது
அவனுக்கும்
அவளுக்குமிடையையே
அழகானதொரு நாய்க்குட்டி

Monday, March 6, 2023

01


 


சைக்கிள் ஓட்டுறேனே
சாமி தாத்தா
என்ற
பேரனின் மழலையில் தெறித்த
ஏதோவொரு போதாமையை
இட்டு நிரப்புகிறது
உன்னைவிட ஸ்பீடா என்ற
அவனது அடுத்த வரி


06.03.2023

மூன்று வாரங்கள்... மூன்று நூல்கள்

 கடந்த மூன்று வாரங்களில்

“இவ்வளவுதான்” என்ற எனது இரண்டாவது கவிதை நூல் வேரல் பதிப்பகத்தின் மூலம் வந்திருக்கிறது
இந்த நூல் இவ்வளவு அழகாக வந்திருப்பதற்கு தோழர் அம்பிகா குமரன்தான் காரணம்
கிட்டத்தட்ட 100 கவிதைகளை அவருக்கு அனுப்பியதோடு என் வேலை முடிந்துவிட்டது
அதை இவ்வளவு செறிவாக எடிட் செய்து கொடுத்தது அவர்தான்
மட்டுமல்ல
அட்டைப்படத்திற்காக அவர் வைத்துள்ள இரண்டு கவிதைகளையும் சலித்து எடுத்து வைத்திருக்கிறார்
பேசப்படுகிற அட்டைப்படத்திற்கு உரியவர் தோழர் Lark Bhaskaran
திண்டுக்கல் Vetrimozhi Veliyeetagam வெளியிட்ட “நான் ஏன் உங்களுக்கு வாக்களிக்கப் போவதில்லை? என்ற புத்தகத்தின் இரண்டாம் பதிப்பு வந்திருக்கிறது
மட்டும் அல்ல,
200 நூல்கள் விற்றிருக்கின்றன
அடுத்ததாக
வானம் வெளியீடான “7B னா சும்மாவா?” வின் மூன்றாம் பதிப்பு வந்திருக்கிறது
எடுத்த எடுப்பிலேயே 650 பிரதிகளை ஒரு பள்ளிக் குழந்தைகளுக்காக வாங்கியிருக்கிறோம்
இந்த நூலைப் படித்துப் பார்த்த தோழர் அறச்செல்வன் மே மாதம் 22ஆம் நாள்
தனது வீட்டின் திறப்புவிழாவிற்கு வருபவர்களுக்கு கொடுப்பதற்காக 750 பிரதிகள் கேட்டிருக்கிறார்
மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது

2023 http://www.eraaedwin.com/search/label/2023