1936
ஒருநாள் தோழர் பி.ராமமூர்த்தி அவர்களும் ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்களும் தந்தை பெரியாரை சந்திக்கிறார்கள்
காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் சேருமாறு பெரியாரைக் கேட்டுக் கொள்வது அவர்கள் சந்திப்பிற்கான நோக்கம்
அவர்களது உரையாடலினூடே பிஆர் குறித்த விசாரனையை ஆரம்பிக்கிறார் பெரியார்
அவர்களது சாதியில் 22 வயதானாலேயே கல்யாணத்தை முடிச்சு வைத்துவிடுவார்களே. அவரை எப்படி விட்டு வைத்திருக்கிறார்கள் என்று ஆச்சரியப்படுகிறார்
விரட்டிக்கொண்டுதான் இருப்பதாகவும், தான்தான் பிடி கொடுப்பதில்லை என்றும் கூறுகிறார் பிஆர்
ஒருக்கால் தோழர் ராமமூர்த்திக்கு திருமணத்தில் பிரியம் இல்லையோ என்ற எண்ணாம் வந்துவிடுகிறது பெரியாருக்கு
அப்படி இல்லீங்க அய்யா என்ற தோழர்
படித்து பெரிய வேலைக்குப் போவார் என்று தன் அம்மா நினைத்தார்கள் என்றும்
உல்டாவாக ஆனாலும் தான் செய்யும் வேலைக்கு அவர்கள் ஒத்தாசையாக இருப்பதாகவும்
எனவே,
தனது கருத்தின்படி கலப்புத் திருமணம் செய்துகொள்வதன் மூலம் அவர்களது மனதைப் புண்படுத்த விரும்பவில்லை என்றும்
அவரது மறைவிற்குப் பிறகு திருமணம் செய்துகொள்ள விரும்புவாதாகவும் கூறுகிறார்
அப்படி நெகிழ்ந்து போகிறார் பெரியார்
வழக்கமாக குழந்தைகளைக்கூட “ங்க” போட்டு மரியாதையாகப் பேசும் பெரியார்
“தம்பி நீ செய்த முடிவு நல்ல முடிவு. உன் தாயாரை மெச்சுகிறேன். இப்படிப்பட்ட பழைய காலத்து தாய்மார்களைப் பார்ப்பது அரிது.
அம்மா மனசு காயப்படக்கூடாதுன்னு நெனைக்கிற பாரு. அது நல்ல மனசு.
நீ எப்பயாச்சும் கல்யாணம் செய்தா நான் இருந்தா வருவேன்”
என்று தோழர் பிஆர் அவர்களை ஒருமையில் அழைத்து சொல்கிறார்
இரண்டு விஷயங்கள் தோழர் ராமமூர்த்தியை நெகிழ்த்துகிறது
ஒன்று தன்னை பெரியார் ஒருமையில் அழைத்தது
இரண்டு வழக்கமாக இப்படி செண்டிமெண்டெல்லாம் பார்க்காத பெரியார் தோழருக்கு திருமணம் நடந்தால் வருவதாக சொன்னது
ஒருவழியாக 06.12.1952 திருமண பதிவு அலுவலகத்தில் தோழர் பி.ராமமூர்த்திக்கும் அம்பாள் அவர்களுக்கும் பதிவுத் திருமணம் நடக்கிறது
யாருக்கும் சொல்லவில்லை
திருமணத்தை முடித்துவிட்டு சட்டமன்றம் வருகிறார்
அமைச்சர் சி.சுப்பிரமணியம் அவர்கள் அவரை வாழ்த்த அனைவருக்கும் விஷயம் தெரிகிறது
செய்தியைக் கேள்விபட்டதும்
கட்சித் தோழர்கள் அடுத்த நாள் சித்தாதிரிப் பேட்டையில் ஒரு மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறார்கள்
பெரியாருக்கு தொலைபேசியில் செய்தி சொல்லப்படுகிறது
அந்த நேரம் திகவிற்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அவ்வளவாக பொருந்திப் போகாத நேரம்
ஆனாலும் அழைக்கிறார்
தந்தை பெரியாரும் வருகிறார்
தலைமையேற்று வரவேற்பு நிகழ்ச்சியை நடத்திக் கொடுக்கிறார்
சில கம்யூனிஸ்ட் தலைவர்கள் நிகழ்ச்சிக்கு வரவில்லை
தந்தை பெரியாருக்கும் நெருக்கடிகள் இருந்திருக்கக் கூடும்
தந்தை பெரியாருக்கும் தோழர் பிஆர் அவர்களுக்குமான அன்பும் உறவும் அப்படியானது
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்