Showing posts with label போராட்டம். Show all posts
Showing posts with label போராட்டம். Show all posts

Saturday, March 22, 2025

நல்லது செய்ய வேண்டும்

 அன்பிற்குரிய முதல்வர் அவர்களே,

தகுதி மறு வரையறையில் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்காக நீங்கள் இன்று ஏற்பாடு செய்திருக்கக் கூடிய கூட்டமைப்புக் கூட்டம் நியாயமானது

வெற்றிபெற வாழ்த்துகிறோம்

மாவட்டத் தலைநகரங்களில்  நாளை நடைபெற உள்ள ஜேக்டோ - ஜியோ கூட்டமைப்பின் சார்பில் பெருந்திரள் பட்டினிப் போராட்டமும் நியாயமானது என்பதை நீங்கள் நன்கு உணர்ந்தவர் 

எனவே, நாளை நடக்கும் பட்டினிப் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து நீங்கள்  அணுக வேண்டும் என்றும்

தலைவர்களை அழைத்துப் பேசி நல்லது செய்ய  வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்

22.03.2025

மக்களுக்கான போராட்டத்திற்கு பிறகுதான்

 மலையடிக் குப்பம் 

இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது நேற்றிரவு 9 மணி

இன்று காலை தோழர் Shanmugam Perumal பெரம்பலூர் வரவேண்டும்

முந்தாநாள் அவர் மதுரையில் இருந்தார்

நேற்று மாலை ஆறு மணிக்கு விடுதலை என்றதும்

ஒரு முடிவுநோக்கிய பேச்சுவார்த்தையைத் தொடங்காமல் நகரமாட்டோம். வேண்டுமானால் ரிமாண்ட் செய்துகொள்ளுங்கள் என்கிறார்

மக்களுக்கான போராட்டத்திற்கு பிறகுதான் நிதிபெறுவது உள்ளிட்ட வேறு எதுவும் எங்களுக்கு


22.03.2025

Friday, March 21, 2025

இனி போராட்டத்தின் திசையை பாதிக்கப்பட்ட மக்கள் தீர்மானிப்பார்கள்

 போலீஸ் தாக்குதலில் அடிபட்டு மயக்கமடைந்த தாயொருத்தியை நான்கைந்து பிள்ளைகள் தூக்கிக்கொண்டு போகிறார்கள்

அப்படித் தூக்கிப்போகும்போது தங்களது இன்னொரு கையில் அருவாள் சுத்தியல் கொடியை இறுக்கிப்பிடித்தபடியும் கோஷமிட்டபடியும் சென்ற மலையடிக் குப்பம் மக்கள் ஒன்றைச் சொல்கிறார்கள்
இனி போராட்டத்தின் திசையை பாதிக்கப்பட்ட மக்கள் தீர்மானிப்பார்கள்
தலைமை தாங்கி நெறிப்படுத்தினால் போதும்
இந்த நிலைக்கு கடலூர் தோழர்களின் உழைப்பு மகத்தான

Monday, January 15, 2024

என்ன நியாயம் இது?

 

பாலின் கொள்முதல் விலையை மூன்று ரூபாய் உயர்த்தி இருக்கிறது மாநில அரசு

நாங்கள் பெரம்பலூர் பால் உற்பத்தியாளர் சங்கத்தில் இருந்துதான் பால் வாங்குகிறோம்

மாதா மாதம் முதல் தேதில் இருந்து நான்காம் தேதி வரைதான் பால் அட்டை வழங்கப்படும்

இந்த மாதம் அட்டை வாங்கிய பிறகுதான் கொள்முதல் விலையை அரசு உயர்த்துகிறது

மிக நல்ல விஷயம்

கொள்முதல் விலை உயர்ந்ததால் விற்பனை விலையை நான்கு ரூபாய் உயர்த்தியது பால் உற்பத்தியாளர் சங்கம்

இதுவும் சரி

அட்டை வாங்கியவர்கள் மிச்சத் தொகையை செலுத்தினால்தான் பால் தொடர்ந்து பெற முடியும் என்று பா. உ.சங்கம் பால் விநியோகிப்பவர்கள் மூலம் தெரிவித்தது

இதுவும் சரி

கட்டி விட்டோம்





அட்டையில் இரண்டாவதாக PAID என்று வைத்திருக்கும் சீல் அதற்கானது

எல்லாமே சரி

அரசு கொள்முதல் விலையை உயர்த்துகிறது

நீங்கள் விற்பனை விலையை உயர்த்துகிறீர்கள்

அரசு உயர்த்திய கொள்முதல் விலை தங்களுக்கு வரவில்லை பால் உற்பத்தியாளார்கள் பெரம்பலூரில் போராட்டம் நடத்தியதை14.01.2024 நாளிட்ட தீக்கதிர் கூறுகிறது

என்ன நியாயம் இது?

Wednesday, January 10, 2024

வேண்டாம் ஸ்டாலின் சார்

அன்பின் ஸ்டாலின் சார்,

வணக்கம்
போக்குவரத்துத் தொழிலாளிகள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள்
புதியக் கோரிக்கைகள் எதுவும் இல்லை
தங்களது பணத்தைத் தரச் சொல்லிக் கேட்கிறார்கள்
துயரம் என்னவெனில்
இந்த வலியை நன்கு உணர்ந்த நீங்கள்
இந்த வலிக்கான நிவாரணம் கேட்டு குரல் குடுத்த நீங்கள்
அவர்களது வலியை உதாசீனப்படுத்துவதுதான்
இப்போதும்கூட தோழர் அ.சவுந்தரராஜன் சொன்னதுதான்
இது எங்களது அரசுதான்
உங்களுக்கும் புரியும்
எங்களது அரசானாலும் அதனோடும் தொழிலாளிகளின் நியாயத்திற்காக மல்லுக்கட்டவே செய்வோம்
நீங்கள் கேட்டுக் கொண்டால் பகலிலும் ஆம்னி பேருந்துகளை இயக்கத் தயாராக இருப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறியிருக்கிறார்கள்
போராடிக்கொண்டிருக்கும் தொழிலாளிகளுக்கு எதிராக
ஆளும் வர்க்கத்திற்கு ஆதாரவாக முதாலித்துவம் அதன் தொழிலாளிகளைக் கொண்டே உதவும்
கவனமாக இருங்கள்
உங்களுக்கும் மக்களுக்கும் ஒன்று சொல்வேன்
இடர் காலங்களில் ஆம்னி பேருந்துகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஓடிப் பதுங்கும்
அப்போதும் மக்களுக்காகவும்
இடர்மிகும் காலத்தில் அரசின் பணிகளுக்கு உதவிடும் வகையிலும்
முழங்கால்த் தண்ணீர் பள்ளிக்கரனையிலும் இப்போது போராடிக்கொண்டு இருக்கும் தொழிலாளிகள் பேருந்துகளை இயக்குவார்கள்
இவர்கள் உங்கள் அரசின் தொழிலாளர்கள் ஸ்டாலின் சார்
2003 என்று பார்க்கிறேன்
ஆணவத்தின் உச்சியில் ஜெயலலிதா அம்மையார்
போராடிக்கொண்டிருந்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஆதரவாக CITU தொழிலாளர்கள் ஒரு போஸ்டர் வைத்தார்கள்
“திருட்டுக் கொடுத்தவன்
திரும்பக் கேட்கிறான்
திருடியவன் சொல்கிறான்
யூ ஆர் அண்டர் அரஸ்ட்”
அப்போது இதை கூட்டம் கூட்டமாக இதைப் பேசுவேன்
திமுக தோழர்கள் கொண்டாடுவார்கள்
வேண்டாம் ஸ்டாலின் சார்
அழைத்துப் பேசுங்கள்
நன்றி
அன்புடன்,
இரா.எட்வின்
10.01.2024

Tuesday, January 9, 2024

நீங்கள் தந்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரிதான் போராட்டம்

 

உங்களால் போக்குவரத்தை வெற்றிகரமாகக்கூட இயக்க முடியும்
உங்களிடமுள்ள நெட்ஒர்க் அப்படியானது
ஆனால் இதை வெற்றி என்று கொள்கிறீர்களா ஸ்டாலின் சார்
அப்படிதான் என்றால் அது ஆபத்தானது
நீங்களும் வைத்த கோரிக்கை
நீங்கள் தந்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரிதான் போராட்டம்
கொஞ்சம் இளகுங்கள்

Thursday, January 4, 2024

தேசியப் பேரிடர் என்று சொல்

 



இந்தப் பெருமழையின் கோரத் தாண்டவத்தை தேசியப் பேரிடராக அறிவிக்கக் கோரி CPM சாஸ்திரி பவனை இன்று முற்றுகை இட்டபோது
மகிழ்ச்சி

Friday, October 12, 2018

நெறியோடும், வீரியத்தோடும் நடத்திக் காட்டிய ஜல்லிக்கட்டுப் போராட்டம் குறித்து....

தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கும் மாணவர்களை சந்திக்க வந்த அமைச்சர் கூறுகிறார்,
“பாருங்கள், நேற்று முந்தினம்கூட இந்தியாவில் நடந்த சாலை விபத்துகளில் 32 பேர் இறந்து போனார்கள். இந்திய மாணவர்களைப் பாருங்கள். உங்களை மாதிரி போராடிக்கொண்டா இருக்கிறர்கள். நல்லப் பிள்ளைகளா கல்லூரிக்கு போய்க்கொண்டு இருக்கிறார்கள்.”
இப்படிக் கூறியவர் பெயர் தெரியவில்லை. ஆனால் அவர் வங்க தேசத்தின் அமைச்சர் என்று 07.08.2018 நாளிட்ட தமிழ் இந்து கூறுகிறது.
மாணவர்கள் போராடிக்கொண்டிருந்த இடம் வங்க தேசத்தின் தலைநகர் டாக்கா.
போராட்டத்திற்கான காரணம் தொடர்ந்து உயிர்ப்பலி வாங்கிக் கொண்டிருக்கும் சாலை விபத்துக்களை கட்டுப்படுத்தக் கோரி
29.07.2018 அன்று டாக்கா பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த மாணவர்கள்மீது தாறுமாறாக வந்த பேருந்து ஒன்று மோதியதில் ஒரு மாணவனும் ஒரு மாணவியும் உயிரிழக்கிறார்கள்.
பொதுவாகவே வங்கத்தில் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகள் சாலைவிபத்துகளின் வழியாக ஏற்படுவதாகவும் அதிலும் குறிப்பாக டாக்காவில் சாலை விபத்துகள் ஏற்படுத்தும் உயிரிழப்புகள் பேரதிகம் என்று உணர்ந்த மாணவர்கள் உணர்கிறார்கள். உடனே அவர்கள் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த பதாகைகளுடன் தொடர் போராட்டத்தில் குதித்துவிட்டனர்.
மாணவர்கள் போராட்டத்தில் குதித்ததும் டாக்கா மாநகர காவல்துறை ஆணையர் மாணவர்களை சந்திக்கிறார். வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் வங்கநாட்டு மக்கள் அங்கு விதிகளுக்கு உட்பட்டு வாகனங்களை ஓட்டுவதாகவும் ஆனால் உள்ளூரில் விதிகளை மதிக்காமல் தாறுமாறாக வாகனங்களை ஓட்டுவதாகவும் கூறுகிறார். இதனால்தான் விபத்துகளும் அதன்மூலமாக பேரதிக அளவில் உயிர்ப்பலிகள் ஏற்படுவதாகவும் கூறுகிறார்.
அதாவது சுற்றி வளைத்து விபத்துகளுக்கும் உயிர்ப்பலிகளுக்கும் வாகன ஓட்டிகள்தான் காரணம், அரசு எந்த விதத்திலும் இதற்கு காரணம் அல்ல, எனவே மாணவர்கள் இதற்காக அரசுக்கு எதிராகப் போராடுவதை விடுத்து கல்லூரிகளுக்கு செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மாணவர்கள அவரது சமாதானத்தை ஏற்கவில்லை.
மாணவர்களது போராட்டத்தில் சமூகவிரோதிகள் கலந்து அந்தப் போராட்டத்தைப் பயன்படுத்தி சமூகவிரோத செயல்களில் ஈடுபட இருப்பதாகவும் அப்படி நிகழ்ந்தால் மாணவர்களையும் சமூகவிரோதிகளையும் பிரித்துப் பார்க்க முடியாத நிலை ஏற்படும் என்றும் அதனால் சமூகவிரோதிகளுக்கான இலக்கில் மாணவர்களும் பலியாகக்கூடும் என்றும் வதந்திகளைக் கட்டவிழ்த்து விட்டார்கள்.
இதற்கும் மாணவர்கள் அசரவில்லை. தங்களது கோரிக்கையையும் போராட்டத்தையும் கூர்படுத்தினார்கள்.
இப்போது மாணவர்கள் வாகனச் சோதனையில் இறங்கினார்கள். வாகனங்களை மறித்து ஆவணங்களை சரிபார்த்தார்கள்.
வாகன சோதனையில் வாகனங்கள் போகவேண்டிய திசைக்கு எதிர்த் திசையில் ஒரு மகிழுந்து வந்து கொண்டிருந்தது. அதை மறித்து சோதனையிட்டபோது அது ஒரு அமைச்சரின் மகிழுந்து என்பது தெரிய வந்தது.
இன்னொரு இடத்தில் நடந்த வாகன சோதனையில் ஒரு அமைச்சரின் ஓட்டுநருக்கு ஓட்டுநர் உரிமமே இல்லாத உண்மை தெரிய வந்த்து.
மாணவர்கள் அரசுக்கும் மக்களுக்கும் அம்பலப் படுத்தினார்கள்.
வங்கத்தில் குறிப்பாக டாக்கா மாநகரில் பேரதிக அளவில் விபத்துகளும் உயிர்ப்பலிகளும் ஏற்படுவதாகவும் அதை அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரினர். விபத்துக்கான காரணங்களையும் அவர்கள் தெளிவாக வரிசைப் படுத்தினார்கள்.
எனக்கென்னவோ வங்கக் கல்வியை வணங்கிவிட வேண்டும் என்று படுகிறது.
அறிவைத் தருவது என்பது கல்வியின் ஒரு கூறுதான். சக மனிதனுக்கு ஆதரவாக, அநீதிக்கு எதிராகப் அச்சமும் சமரசமும் இன்றி போராடுவது என்பது அறிவின் ஒரு கூறு. அத்தகைய அறிவினை வங்கத்துக் கல்வி கொடுத்திருப்பதையே இந்தப் போராட்டம் எடுத்துரைக்கிறது.
அறிஞர்களை, மருத்துவர்களை, தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குவது மட்டுமல்ல கல்வியின் வேலை. மக்களை நெறிப்படுத்தவும் மக்கள் போராட்டங்களில் களமேகும் பக்குவத்தையும் கல்வி தர வேண்டும். வங்க்க் கல்வி அதை சரியாய் செய்திருக்கிறது,
யாருடைய அலட்சியத்தாலோ மக்கள் பலியாவதற்கு எதிராக வங்க மாணவர்கள் போராட்ட களத்தில் நிற்கிறார்கள்.
அவர்களை பார்த்துதான்,
“பாருங்கள், நேற்று முந்தினம்கூட இந்தியாவில் நடந்த சாலை விபத்துகளில் 32 பேர் இறந்து போனார்கள். இந்திய மாணவர்களைப் பாருங்கள். உங்களை மாதிரி போராடிக்கொண்டா இருக்கிறர்கள். நல்லப் பிள்ளைகளா கல்லூரிக்கு போய்க்கொண்டு இருக்கிறார்கள். நீங்களும் அவர்களைப் போல நீங்கள்ளும் நல்ல பிள்ளைகளாக கல்லூரிகளுக்கு செல்லுங்கள்” என்று கூறுகிறார்.
அவர் என்ன வேண்டுமானாலும் அவரது பிள்ளைகளிடம் சொல்லட்டும். அதற்கு ஏன் தேவை இல்லாமல் இந்திய மாணவர்களை வம்புக்கிழுக்கிறார் என்று தெரியவில்லை. அதற்காக அந்த அமைச்சருக்கு என் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எம் இளைஞர்களும் மாணவர்களும் ஒன்றிணைந்து நெறியோடும், வீரியத்தோடும் நடத்திக் காட்டிய ஜல்லிக்கட்டுப் போராட்டம் குறித்து அந்த அமைச்சருக்கு யாரேனும் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் 3507 பாதசாரிகள் பலியானார்கள் என்ற தகவலை 08.10.2018 ஆம் நாளிட்ட தமிழ் இந்து தருகிறது என்ற போசெய்தியை எம் பிள்ளைகளுக்கு எடுத்துக்கூறவும் கடமைபட்டிருக்கிறேன்.
சென்ற ஆண்டு நடந்த சாலை விபத்துகளின் மொத்த பலி எண்ணிக்கை அல்ல இது என்பதையும் பலியான பாதசாரிகளின் எண்ணிக்கை மட்டுமே இது என்பதையும் நம் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லவும் நான் கடமை பட்டிருக்கிறேன்.
இந்த பலி எண்ணிக்கை அச்சமூட்டுவதாகவும் உறைய வைப்பதாகவும் உள்ளது
இவை நிகழ்வதற்கான சில காரணங்கள்,
1) விதிகளை மதிக்காத ஓட்டுநர்கள்
2) குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவது
3) வாகனக்கள் போகவேண்டிய திசைக்கு எதிர்த் திசையில் வாகனங்களை ஓட்டுவது
4) அலை பேசிக்கொண்டே வாகனக்களை ஓட்டுவது
5) தேவையான அளவு தூங்காமல் தூக்கக் கலக்கத்தோடு வாகனங்களை ஓட்டுவது
6) வேடிக்கைப் பார்த்துக் கொண்டே சாலையைக் கடப்பது
7) அலை பேசிக்கொண்டே சாலையைக் கடப்பது
   போதுமான அளவில் போக்குவரத்து காவலர்கள் இல்லாதிருப்பது
9) போதுமான அளவு பாதசாரிகளுக்கான நடைபாதை இல்லாதிருப்பது
இதற்கு மாணவர்கள் என்ன செய்ய முடியும்?
1) ஓட்டுநர்களிடமும் பாதசாரிகளிடமும் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்துவது
2) போதுமான போக்குவரத்து காவலர்களையும் நடைபாதைகளையும் கேட்டு அரசைக் கோருவது
இதற்கெல்லாம் போராடக்கூடத் தேவை இல்லை. கைவசமுள்ள அத்தனை கலைவடிவங்களோடும் களமேகினாலே போதும்.
#சாமங்கவிந்து ஒரு மணி 22 நிமிடங்கள்

Tuesday, May 16, 2017

திருப்பிக்கொடு என்றல்லவா....

ஜெயலலிதா அவர்களைக் குற்றவாளி என்று சொன்னது நீதிமன்றம்

அவரை பெங்களூரு சிறையிலே அடைத்தது நீதிமன்றம்

அதற்கு எதிராக பேருந்துகள் எரிந்தன, தாக்கப்பட்டன. தனியார் பேருந்துகளும் இயங்கமுடியாத நிலையை ஆளுங்கட்சியினர் செய்தனர்

வெளியே நடமாடவே முடியவில்லை மக்களால். மருத்துவமனைக்குப் போக முடியவில்லை நோயாளிகளால்

இவை யாவும் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றியதற்காக நிகழ்ந்தவை

எனில், நீதிமன்றத்திற்கு எதிரானவை

அப்போது மொனமாக இருந்த நீதிமன்றம் இப்போது தங்களிடமிருந்து பிடிக்கப்பட்ட பணத்தை திருப்பிக் கேட்டுப்  போக்குவரத்து தொழிலாளிகள் போராடும்போது  வேலைக்குத் திரும்பவில்லை எனில் எஸ்மா பாயும் என்றெல்லாம் மிரட்டுவது வருத்தமளிக்கிறது

ஊழியனிடமிருந்து எடுத்த பணத்தை அவனுக்கு கொடு என்றல்லவா அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுருக்க வேண்டும்தி

Wednesday, March 29, 2017

விவசாயிகள் போராட்டம் என்பது எமக்குமானது

எழுபதுகளில் ஒருமுறை நடந்த ஆசிரியர் போராட்டத்தை அன்றைய அரசு கண்டுகொள்ளவே இல்லை என்றும் இறுதியாக ஆசிரியர்களுக்கு ஆதரவாக விவசாயிகளும் விவசாயக் கூலித் தொழிலாளர்களும் ஒருநாள் போராட்டத்தில் இறங்கியதாகவும், அடுத்த நாளே பேச்சு வார்த்தைக்கு அரசு ஆசிரியர்களை அழைத்ததாகவும் கேள்வி பட்டிருக்கிறேன்.
போராடிய எல்லா நாட்களுக்குமான ஊதியம் ஆசிரியர்களுக்கு வழங்கப் பட்டு விட்டது. ஆனால் விவசாயிகளுக்கான அந்த ஒரு நாள் இழப்பு இன்றுவரை ஈடு செய்யப்படாமலேயே இருக்கிறது என்பதையெல்லாம் எங்கள் முன்னோர்கள் சொல்லக் கேள்வி பட்டிருக்கிறேன்.
அந்த நன்றிக் கடனுக்காக அல்ல இன்றைய விவசாயிகள் போராட்டத்தை நான் ஆதரிப்பது. எது செய்தும் அவர்களது அந்த ஒருநாள் இழப்பை, தியாகத்தை எங்களால் ஈடு செய்துவிட முடியாது என்பதை நான் அறிவேன்.
இன்றைய விவசாயிகள் போராட்டம் என்பது எமக்குமானது

Friday, January 27, 2017

பிழைக்கிறீர்கள் சார்

ஒருக்கால் தில்லி சொன்னால் இவர் உங்கள் பையிலும் ஒசாமா படம் இருந்தததாகக் கூறி உங்களை பதவி நீக்கம் செய்வார் என்பதால் கவனம் மந்திரிமார்களே.
அதே தில்லி சொல்வார்கள் என்றால் உங்கள் பையில் ஒசாமா படம் இருந்ததாகக் கூறி உங்களையும் உங்கள் சின்னம்மா கட்சியிலிருந்து நீக்கக் கூடும் என்பதால் கவனம் முதல்வர் அவர்களே
பிழைக்கிறீர்கள் சார்

எங்க புள்ளைங்கடா

கொடியேற்றம் முடித்ததும் அறைக்கு வந்தோம்
மாணவர் போராட்டம் குறித்து பேச்சு திரும்பியது
"கொஞ்சங்கூட வெக்கம் ரோஷமெல்லாம் இல்ல உங்களுக்கு" என்றான் ஒரு தம்பி என்னைப் பார்த்து.
"ஏண்டா?"
"அவிங்கதான் நீங்க வேணவே வேணாம்னு சொன்னாய்ங்கல்ல"
"ஆனா அவிங்க வேணாம்னு நாங்க எப்படா சொன்னோம். "
எங்க புள்ளைங்கடா

Saturday, January 21, 2017

என்ன செய்ய முடியும் உங்களால் என்பதை

களத்தில் நின்ற பிள்ளைகளே உங்களின் சராசரி வயது அநேகமாக 20 இருக்கலாம்.

அநேகமாக வென்றிருக்கிறீர்கள். எழுதப் படிக்கத் தெரியாத ஒரு தகப்பன் முனைவர் பட்டம் பெற்ற பிள்ளையைப் பார்த்து எப்படி மகிழ்வானோ அப்படி ஒரு மகிழ்ச்சி எனக்கு.

அரியலூரை சேர்ந்த 17  வயதேயான  நந்தினி என்ற தலித் சமூகத்தைச் சார்ந்த உங்கள் சகோதரியை வன்புணர்வு செய்து கொன்றிருக்கிறார்கள். உண்மையான கொலையாளியை கைது செய்யாமல் யார் யாரையோ கைது செய்து போக்கு காட்டுகிறது  உங்களுக்கு ஆதரவாக நிற்கும் இதே காவல் துறை.

ஏதாவது செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

என்ன செய்ய முடியும் உங்களால் என்பதை யோசியுங்கள்.

Wednesday, January 18, 2017

திரும்பும்

"எப்படா வருவ? "

"தெரியாது"

"அப்பப்ப வந்து சாப்ட்டு போங்கடா"

" பார்க்கறேம்மா"

முதல்முறையாக போராடப்போகும் கிஷோரைப் பார்க்க மகிழ்ச்சியாயிருக்கிறது.

பிள்ளைகளின் இந்தக் கோவத்தை கல்வியை பொதுப்படுத்தக்கோரியும் திருப்பிவிட்டோமென்றால் போதும்.

திரும்பும்.

Tuesday, January 17, 2017

எது வேண்டுமானால் செய்யும்...

இந்த அரசாங்கம் எவ்வளவு வன்மமானது, மனிதத் தன்மையற்றது என்பதை பள்ளிக்கரணையிலும் மதுரையிலும் ஆகச் சமீபத்தில் பார்த்தோம்.
போராடிய பிள்ளைகளின் பெற்றோரை வசியம் செய்ய முயற்சித்த காவல்துறை முடியாத நிலையில் மிரட்டிப் பார்த்தார்கள். ஏடிஎம்மில் போதுமான பணம் நிரப்பு என்று மத்திய அரசுக்கெதிராகப் போராடினால் மாநில அரசு மிதித்தது.

50 பேரை 300 காவலர்கள் ரவுண்டு கட்டி தாக்கிவிட்டு காவலர்களைத் தாக்கினார்கள் என்று வழக்கு ஜோடித்துள்ளது.

இப்போது அது எது வேண்டுமானாலும் செய்யும்

நம்முன் உள்ள பணிகள்

1) காயம்பட்டவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மருத்துவம்
2) வழக்குகளை எதிர்கொள்ள திட்டமிடல் (கடுமையான பிரிவுகளில் இருக்கலாம். வருடக்கணக்காக    கோர்ட்டுக்கலையும் இளைஞர்கள் இருக்கிறார்கள்)
3) பிள்ளைகள் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தடையின்றி தொடர ஆவண செய்தல்

இளைய கோவத்தை...

இந்த இளைய கோவத்தை நெறிப்படுத்துவோம்.
ஒவ்வொரு பிள்ளைக்கும் என் முத்தம்.

விவசாயம்
குடிநீர்
எல்லோருக்குமான தரமான சமமான பொதுக் கல்வி
மருத்துவம்
பெருமுதலாளிகளுக்காதவரவான அரசுகளின் திமிரடக்குதல்
சாதி மிதித்தல்
பெண்ணும் ஆணும் எதிர்சமம் என உணர்தல்
என்று சகல தளங்களிலும் இந்த கோவத்தை கொண்டு செல்வோம்

அலங்கா நல்லூரில் உள்ள ஒவ்வொரு பிள்ளைக்கும் மீண்டுமொரு முத்தம்

Tuesday, January 3, 2017

பர்வதாவின் குரலில் இருந்த கம்பீரமும் உயிர்ப்பும்

ஆர்ப்பாட்டம் செய்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ள 51 மாதர் சங்க மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர்சங்க தோழர்களில் தானும் ஒருத்தி என்பதாக காலை பர்வதா (Varthini Parvatha) சொன்னபோது வழமைபோல ஏதேனும் ஒரு மண்டபத்தில் தங்க வைத்து மாலை அனுப்பிவிடுவார்கள் என்றுதான் நினைத்தேன்.
இப்போது கருணாவின் ( கருப்பு கருணா) பக்கத்தை பார்த்தபோதுதான் சுரீரென்றது.
உடனே பர்வதாவைத் தொடர்பு கொண்டேன். திடீரென்று மண்டபத்தின் அனைத்துக் கதவுகளையும் சாத்திவிட்டு உள்ளே நுழைந்த ஆண் காவலர்கள் வட்டம் கட்டி அமர்ந்திருந்ததோழர்களை ரவுண்டு கட்டிக் கொண்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தோழர்கள் சார்லஸ் மற்றும் தமிழை தூக்கிக் கொண்டு அவர்கள் இருவரையும் மட்டும் ரிமாண்ட் செய்வதாகவும் மற்றவர்கள் கலையலாம் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
ஒன்று அனைவரையும் ரிமாண்ட் செய்யுமாறும் அல்லது அனைவரையும் விடுவிக்குமாறும் கோரவே கொடுரமானதும் மிக அசிங்கமானதுமான தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். அந்த இரண்டு தோழர்களும் இருக்குமிடத்தை சொல்ல மறுக்கிறார்களாம்.
தாக்குதலில் தோழர் ஈஸ்வரி மிகவும் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்திருப்பதாகவும், உரிய மருத்துவ சிகிச்சைக்கூட தரப்படவில்லை என்றும் சொல்கிறார் பர்வதா.
பர்வதா காலில் அடி பட்டிருக்கிறது.
பர்வதாவின் குரலில் இருந்த கம்பீரமும் உயிர்ப்பும் வெறுமனே வேடிக்கை பார்க்கும் என்னை ஏளனம் செய்கிறது.

Tuesday, October 18, 2016

இப்படியே போகாது காலம் .



இன்றிரவு போதையில்லாமல் உங்களால் தாங்கமுடியாது நண்பர்களே?
என்ன செய்தானிந்தப் பிள்ளையென்று இவ்வளவு வன்மமுங்களுக்கு?
உங்களுக்கும் எனக்கும் நம் பிள்ளைகளுக்கும் காவிரி ஆணையம் கேட்டு போராடுகிறான் .
பத்தாயிரம் கோடி முழுங்கியவன் போதை, படகுசவாரி என்று கும்மாளமிடுகிறான்.
அவனும் வருவான் , உங்களிலொருவர் அவனுக்கு சல்யூட் அடிக்கவும் கூடும். 

இப்படியே போகாது காலம் .

வாழ்த்துக்கள் மகனே.
தடியடித் தழம்பு ஒவ்வொன்றிற்கும் அப்பனின் முத்தம்

Sunday, September 11, 2016

பிள்ளைகள் பாடம் நடத்தியிருக்கிறார்கள்

கல்லூரிகளின் மாணவர் பேரவைத் தேர்தல்களே கவனிப்புக்குரியவைதான். காரணம் அவற்றில் வென்றவர்களும் தோற்றவர்களும் பிற்காலத்தில் அரசியலில் ஏதோ ஒரு புள்ளியில் களமாடுபவர்களாக மாறுகிறார்கள். மக்களுக்கான அரசியலில் ஈடுபடுபவர்கள் அவர்களில் குறைவு என்றபோதிலும் அந்த அளவிற்காகவேனும் மாணவர் சங்கங்கள் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துதலுக்கும் உரியவையே.
அதிலும் தில்லி ஜவஹர்லால் பல்கலைக் கழகத்து மாணவர் பேரவைத் தேர்தலை உலகமே உற்று கவனிக்கும். காரணம் தோழர் Jothimani Sennimalai சரியாக சொன்னதுபோல் அந்தத்தேர்தல் என்பது அகில இந்திய அரசியல் தேர்தலைப் போன்றதாகும். பல்வேறு மொழி பேசும் பல்வேறு இனக்குழுக்களிலிருந்து வந்திருக்கும் பிள்ளைகள் அவர்கள்.
அவர்களது கருத்தும் செயலும் அந்த அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் மாண்பமை இந்திரா அவர்கள் எமர்ஜென்சியைக் கொண்டுவந்த நேரத்தில் அந்தப் பேரவையின் தலைவராக இருந்தவர் இன்றைய மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரான தோழர் யெச்சூரி அவர்கள்.
அந்தக் காலகட்டத்தில் இந்திரா அவர்களின் வீட்டு வாசலில் ஆர்ப்பாட்டத்தை நடத்தி அவரை வெளியே அழைத்து அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை மனுவாக அவர் கையிலேயே கொடுத்தவர்.
அதற்கடுத்த நாள் இந்திரா அவர்கள் பதவி விலகியது தற்செயலானது என்றும் அதற்கும் யெச்சூரியின் ஆர்ப்பாட்டத்திற்கும் ஒன்றும் தொடர்பில்லையென்றும் சொல்பவர்கள்மீது நமக்கு ஒன்றும் எதிர்கருத்தெல்லாம் இல்லை.
அப்படிபட்ட சூழலில் அங்கு இடதுசாரி அமைப்புகளைச் சார்ந்தவர்கள் பொறுப்புக்கு வந்துவிடக்கூடாது என்பதில் அமெரிக்கா உள்ளிட்ட வலதுசாரி நாடுகள் நிச்சயமாக கவனம் செலுத்தும். வரும் காலங்களில் அதற்காக காசை வாரி இறைக்கவும் அவை தயங்காது.
போக, சமீபத்தில் அங்கு ஒடுக்கப்பட்ட பிரிவிலிருந்து வந்திருந்த பிள்ளைகள்மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள்.
அகில பாரதிய வித்யார்த்த பரிசித்தினை (ஏபிவிபி) எப்படியும் அங்கு கட்டமைப்பது அதன்மூலம் இந்தியக் கல்விக் கட்டமைப்பை தேசம் முழுக்க கொண்டு செல்வது என்ற பாரதிய ஜனதாக் கட்சியின் செயல்திட்டத்தையும் வலது சாரி மற்றும் காவித் தத்துவத்தின் கையெடுப்புச் சான்றோர்களின் கனவுகளையும் சமீபத்தில் நடந்த மாணவர் பேரவைத் தேர்தல் சுக்கு நூறாக உடைத்து எறிந்திருக்கிறது.
ஒற்றைக் கலாச்சாரம், சமஸ்கிருதமெனும் ஒற்றை மொழி, விஞ்ஞானத்தை கடவுளின் கொடையாகப் பறைசாற்ருதல், ஆங்கிலம், கணிதம், மற்றும் அறிவியலை மேட்டுக் குடியினருக்கானதாக மாற்றும் புதியக் கல்விக் கொள்கையை அரசு கை எடுத்திருக்கும் நேரத்தில் இடதுசாரிப் பிள்ளைகளின் இந்த வெற்றி கொண்டாடத் தக்கதும் கவனத்தோடு பரிசீலிக்கத் தக்கதும் தகுந்த முறையில் கொண்டுசெல்லப்பட வேண்டியதும் ஆகும்.
பெரியவர்களுக்குப் பிள்ளைகள் பாடம் நடத்தியிருக்கிறார்கள். கற்றுக் கொள்வோம்.

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...