Showing posts with label நிலைத் தகவல்கள். Show all posts
Showing posts with label நிலைத் தகவல்கள். Show all posts

Monday, June 7, 2021

தனக்கு கிடைக்காத விருதை

 சாகித்ய அக்காதமி விருதுகளை விமர்சிப்பதனால் அதைப் பெறுவதில்லை என முடிவுசெய்தேன். அவ்வமைப்பின் மையப்பொறுப்புகளில் என்மேல் பெருமதிப்பு கொண்டவர்கள், என் நண்பர்கள் என்றே நான் சொல்லத்தக்கவர்கள் இருந்திருக்கிறார்கள். டெல்லி சென்றால் நான் சென்று சந்தித்தாகவேண்டிய அளவுக்கு அணுக்கம் கொண்டவர்கள். பலமுறை அவ்விருதை ஏற்கும்படி என்னிடம் சொல்லப்பட்டுள்ளது- நான் மறுத்துவிட்டேன். -

என்று ஜெயமோகன் தனது வலைப் பக்கத்தில் எழுதியுள்ளதாக தோழர் மதி கண்ணன் தனது பக்கத்தில் வைத்திருக்கிறார்
சாகித்திய அகாதமி விருதை ஏற்கும்படி இவரை வற்புறுத்தியவர்கள் யார்?
அதை அவர் சொல்ல வேண்டும்
அவர் கூறுவது உண்மை எனில் அவர்கள் அகதமியின் பொறுப்புகளுக்கு தகுதியற்ரவர்கள்
அவர்களை முறையாக விசாரிக்க வேண்டும்
எனக்கு என்ன தோன்றுகிறது என்றால்
தனக்கு கிடைக்காத விருதை இவர் மலினப்படுத்த முயல்கிறார் என்பதே

Saturday, May 27, 2017

ரெண்டு பீரியட் அளவுக்கு குறையாமல் நடக்கிறேன்

இன்றைய நடைபயிற்சியைத் தொடங்குவதற்காக வண்டியை நிறுத்தும்போது நடையை முடித்துவிட்டு வண்டியை எடுக்க வந்த இளம் ஆசிரியரோடான உரையாடலில் சொன்னான்,
"தெனமும் ரெண்டு பீரியட் அளவுக்கு குறையாமல் நடக்கிறேன் சார்"
குறைந்தது ஒன்றரை மணிநேரம் ஒவ்வொரு நாளும் நடக்கிறானாமாம்

போதும் மகளே.

யவனிகாவின் கவிதை குறித்து மயிலாடுதுறையில் பேசும்போது Kani Mozhi G சொன்ன இரண்டு விஷயங்கள் என்னை நெகிழ்த்தின
1) Yavanika Sriram எந்த மண்ணையும் சுவிகீரித்துக் கொள்வதன் மூலம் அவரது கவிதைகள் எந்த நிலத்திற்கும் பொருந்திப் போகிறது.
இது முழுக்க முழுக்க உண்மை. அதுமட்டும் அல்ல யவனிகா எந்த மண்ணின் உழைக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட ஏன் நடுத்தர மக்களையும் சுவீகரிப்பதன் மூலம் இவரது கவிதைகள் எல்லா மக்களோடும் பொருந்திப் போகிறது. இதை அங்கேயே சுட்டவும் செய்தேன்.
என் தோழர்களைக் கொண்டாடும் யாருக்கும் நான் கடமைபட்டிருக்கிறேன் என்ற வகையில் கனிமொழிக்கென் அன்பு
2) எட்வினைப் பற்றி நினைக்கும் தோறும் அவர் ஒரு அணுக்கமான அப்பனாகவே எனக்குப் படுகிறார் என்றாள் பிள்ளை.
போதும் மகளே..

Monday, May 22, 2017

யவனிகா எனும் பேராளுமை

நேற்று மாலை மயிலாடுதுறை AVC கல்லூரியில் தன் கவிதைகள் குறித்தான ஆய்வுரைகளுக்கு நன்றி தெரிவித்து ஏற்புரையாற்றினார் தோழன் Yavanika Sriram.

திருச்சியிலிருந்து திண்டுக்கல் 100 கிலோமீட்டர். ஒன்னேமுக்கால் மணிநேரம்தான் பயணம்.

கீழத்தஞ்சை பகுதியில் 50 கிலோமீட்டர் பயணத்திற்கு ரெண்டுமணி நேரமாகிறது.

காரணம் அங்கு சாலைகள் நேராகவும் இங்கு வளைந்து வளைந்துமாயும் இருக்கிறது.

இதற்கு காரணம் சாலை கட்டமைப்பிற்கு அங்குபோல் இங்கு நிலங்களை கையகப் படுத்த முடியாது. காரணம் அங்கு சாமானியனிடமும் இங்கு ஆண்டைகளிடமும் நிலமுருப்பதுதான்.

ஆக, நாடு நல்லா இருக்கனும்னா நெலம் சாமானியர்களிடம் இருக்கனும்

இவ்வளவு எளிமையா சொல்லமுடியுமா யவனிகா.

என் அணைப்பும் முத்தமும்

தம்பிகள் துவாரகா சாமிநாதன் முருக தீட்சண்யா Kavingnar Thambi மூவருக்கும் என் அன்பும் முத்தமும்

யாராவது இருக்கிறீர்களா என்ன?

நேற்று வல்லத்தைக் கடந்து போகும்போது தாஜூபாலும் அவரது கவிதைகளும் என்னை தொந்தரவு செய்யத் தொடங்கவே அதை பதிவாக்கினேன்.

அதற்குப் பின்னூட்டமிட்டிருந்த தோழர் Sundarappa Kamaraj எந்தெந்த ஊரைக் கடக்கும்போதெல்லாம் யார் யார் நினைவுகளைத் தவிர்க்க முடியவில்லை என்றொரு பட்டியல் போட்டிருந்தார்

பெரம்பலூரை நினைத்தால் உன் பெயரும் கூடவே நினைவுக்கு வருகிறது எட்வின் என்று யாராவது இருக்கிறீர்களா என்ன?

Friday, May 12, 2017

நமது போராட்டம்

ATM அட்டையைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும் 25 ரூபாய் கட்டணம் என்ற தனது முடிவை SBI திரும்பப் பெற்றுக் கொண்டதாக நண்பர்கள் கூறுகிறார்கள்
இது தற்காலிகமானதாகத்தான் இருக்கும்
போக வங்கியில் உள்ள நமது பணத்திற்கு அவர்கள் வட்டி தருவதற்கு பதிலாக நமது பணத்தைப் பாதுகாப்பதற்காக நாம் கட்டணம் செலுத்த வேண்டிய நடைமுறை சமீபத்தில் வந்துவிடும் என்று தெரிகிறது
உடனே நாமென்ன செய்வோம்?
இந்தக் கட்டணங்கள் இல்லாத தனியார் வங்கிகளை நோக்கி நகர்வோம். அவர்களும் நம்மை தேனொழுக வரவேற்று உபசரிப்பார்கள்.
விளைவு, பையப் பைய பொதுத்துறை வங்கிகள் தமது வாடிக்கையாளர்களை படிப்படியாக இழந்து தேக்க நிலையை அடைந்து மூடப்படும் நிலை வரும்
இந்த நிலைக்குப் பிறகு தனியார் வங்கிகள் கட்டணங்களை பன்மடங்கு ஏற்றினாலும் நமக்கு வேறு போக்கிடம் இருக்கப் போவதில்லை
ஆனால் இது உலகமயம் மற்றும் தாராளமயமாக்கலின் விளைவு. எனில், நமது போராட்டம் அவற்றிற்கு எதிரானதாகத்தான் இருக்க வேண்டும்

Tuesday, May 9, 2017

மார்க்சிஸட் கட்சிக்கு கோரிக்கை

இன்றைக்கு இருக்கிற அரசியல் சூழலில் தோழர் யெச்சூரி பாராளுமன்றத்தில் இருப்பதென்பது எவ்வளவு சரியானது என்பதைக் கடந்து எவ்வளவு அவசியம் என்பது எல்லோரும் அறிந்ததே. ஏதோ இது அவர்கள் கட்சி விசயம் என்று வாளாயிருந்துவிடாமல் மூன்றாவது முறையும் அவரை மாநிலங்களவைக்கு அனுப்புமாறு மார்க்சிஸட் கட்சிக்கு கோரிக்கை வைப்போம்.
பிடிக்காதவர்கள் மௌனமாய் கடந்துவிட வேண்டுகிறேன்

ஒரு சர்வ கட்சி கூட்டம் அவசியம்.

கீழ்க்கோர்ட் வரைக்கும் வந்துவிட்டார்கள். ‘தமிழைப் புழங்க தடை விதிக்க மாட்டார்கள் என்று நம்புகிறோமா? அல்லது தடை வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கிறோமா?
தேர்தல் கூட்டணி என்பது வேறு, மொழிப் பாதுகாப்பு என்பது வேறு. மொழி அழிப்பு என்பது இன அழிப்பின் தொடக்கம்.
ஒரு சர்வ கட்சி கூட்டம் அவசியம். கூடுங்களேன். இடது சாரிகள் இது விஷயத்தில் ஒரு சர்வகட்சி கூட்டத்தைக் கூட்டினால் என்ன?

Friday, December 11, 2015

நிலைத் தகவல் 68

இன்று காலை பள்ளிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். பேருந்து கொணலை என்ற இடத்தில் நின்றபோது மிகச் சரியாக பத்து இளைஞர்கள் ஏறினர். தமிழும் ஹிந்தியும் கலந்துதான் பேச முடிந்தது அவர்களால். சமயபுரத்திற்கு பயணச்சீட்டு வாங்கினர். சமயபுரத்திற்கு மூன்று கிலோமீட்டர் இருக்கும் போது ஒரு இடத்தில்அம் மூன்று கிலோமீட்டர் நடக்க வேண்டும். நிறுத்தச் சொல்லி இந்தியிலும் தமிழிலுமாக நடத்துநரிடம் கெஞ்சினர்.
அந்த இடத்தில் எழும்பும் கட்டிடத்தில் வேலை பார்ப்பதாகச் சொன்னார்கள். நடத்துநர் முடியவே முடியாது என்று சொல்லிவிட்டார்.
சமயபுரம் இறங்கி இங்கு வருவதெனில் நிச்சயம் மூன்று கிலோமீட்டர் நடக்க வேண்டும்.
“எவ்வளவு சம்பளம்?” ஓட்டுநர் கேட்டார்.
“ரெண்டு நூறு”
ஓட்டுநர் அவர்கள் கேட்ட இடத்தில் பேருந்தை நிறுத்தினார். மகிழ்வோடு இறங்கினார்கள். நடத்துனரின் முகம் இறுகியது.
“ நான் முடியாதுங்கறேன். நீ நிறுத்தினா என்னடா அர்த்தம்?”
பதிலேதும் சொல்லாமல் ஓட்டுநர் சிரித்தார்.
“என்ன நக்கலா”
“இல்லடா மாப்ள. பீகார்ல இருந்து வந்திருக்காய்ங்க. இருனூறு ரூபாய்க்கு சக்கையா நம்மாலுங்க சுரண்டுறாங்க. ஏதோ நம்மால முடிஞ்சது ரெண்டு கிலோமீட்டர் நடைய குறச்சிருக்கோம். கோவப் படாதடா. குடிகாரங்க அலும்புக்கெல்லாம் ப்ரேக் போடுறதில்லையா?. பாவம் உழைக்கிறப் பசங்க உடுடா”
நடத்துநர் எதுவும் பேசவில்லை.
எனக்கு பேசியே ஆக வேண்டும் என்றாகிவிட்டது. கொட்டிவிட்டேன்.

Friday, February 13, 2015

நிலைத் தகவல் 67

ஸ்ரீரங்கம் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் அண்ணாத்துரை எனது மாணவர். ஒழுங்காப் படிச்சு வேலைக்குப் போய் சம்பாதித்து தன் பெண்டு தன் பிள்ளை என்று சுகமாக வாழ்ந்திருக்க வேண்டியவன்.
மக்களுக்கான போராட்டங்கள், போலீஸ் தடியடி, சிறை என்று அவனை மக்களுக்கான போராளியாக மடை மாற்றியதில் என் பங்கும் உண்டு. என்னைவிட 6 வயதே இளைய என் மாணவன்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ஒரு சான்றிதழ் வாங்க பள்ளிக்கு வந்திருந்தபோது “ஒழுங்கா பாடம் நடத்தாம அதையும் இதையும் சொல்லி என்னை இப்படி அலைய விட்டுட்டியே அண்ணா” என்றான்.
ஆசிரியர் பணிக்கு வந்ததற்கான பயனை அந்தத் தருணத்தில் உணர்ந்தேன்.
தனக்கோ குடும்பத்தில் யாருக்கோ திடீரென மருத்துவ செலவு 2000 ரூபாய் அளவு வருமெனில் கட்சியையோ அல்லது கட்சி ஊழியர்களையோ சார்ந்தே நிற்க வேண்டியவன்.
அதுவும் பெருமையாகத்தான் இருக்கிறது.
அவனால் ஆளுக்கு 2000 ரூபாய் என்பதெல்லாம் சாத்தியமே இல்லை.
இப்படி மக்களுக்குக்காக போராடும் என் மாணவன் ஒருவனும் தேர்தல் களத்தில் நிற்கிறான்.
தேர்தலில் நிற்பவர்களில் எவன் யோக்கியன் என்று கேட்கும் நல்ல உள்ளங்கள் இருக்கிறார்கள்.
சுரண்டத் தெரியாத ஒருவனும் களத்தில் இருக்கிறான் என்பது அவர்களின் தகவலுக்காக.

Thursday, February 12, 2015

நிலைத் தகவல் 66

நேற்று காலை பள்ளிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது ஏதோ ஒரு தவிர்க்க முடியாத காரணத்திற்காக ஓட்டுநர் திடீரென்று ப்ரேக் போடவே பெரும் பகுதி பயணிகள் ஏதோ ஒன்றில் மோதிக் கொண்டோம். எனது கண்ணாடி விழுந்துவிட்டது. நான் இருக்கைகளுக்கு அருகே நடப் பட்டிருக்கும் கம்பம் ஒன்றில் பலமாக மோதிக் கொண்டேன். இடது கண் அடிபட்டுவிட்டது.

பலபேருக்கு கை வலி, சிலர் முன்னிருக்கை கம்பியில் மோதிக் கொண்டதில் நெற்றியில் அடி. வேறு ஒன்றும் பெரிதாயில்லை. அவரவர் இறங்கி அவரவர் வேலைக்கு சென்றுவிட்டோம்.

வலி இருக்கவே மாலை பெரம்பலூர் வாசன் ஐ கேர் போனேன். பரிசோதித்த மருத்துவர் ஒன்றும் இல்லை சார் பயப்படாதீங்க என்று சொல்லிக் கொண்டே சரி செய்தார்.

அப்போது அவர் கேட்டதை சொல்லவே இந்தப் பகிர்வு.

ரெண்டு கண்ணுலயும் அறுவை செய்திருக்கீங்க போல சார். யார் செய்தது?

நான் டாக்டர் ரமேஷ் என்றேன். வலது கண்? என்றார். அதற்கும் டாக்டர் ரமேஷ்தான் சார் என்றேன்.

மிக மிக நேர்த்தியான அறுவை, wonderful piece of surgery என்றார்.

என்ன சொல்வது,

அடுத்த மருத்துவர் செய்த நேர்த்தியான அறுவையை பாராட்டும் இன்னொரு மருத்துவரின் கஞ்சத்தனமற்ற பெருந்தன்மையையா?

அல்லது,

17 ஆண்டுகளுக்குப் பிறகும் தான் செய்த அறுவை சிகிச்சை மற்றொரு தரமான மருத்துவர் பாராட்டும்படி செய்த எனக்கு பார்வையை மீண்டும் பெற்றுத் தந்த மருத்துவர் ரமேஷ் அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையையா?

ரெண்டும்தான்.

Wednesday, February 11, 2015

நிலைத் தகவல் 65

ஆயிரம்தான் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் H.ராஜா அவர்கள் பொறுப்புமிக்க ஒரு தலைவர் என்பதை நாம் உணர்ந்தே இருக்கிறோம். சோதனை என்னவென்றால் இதை ராஜா அவர்கள் உணர்ந்ததாகவே தெரியவில்லை.

தந்தை பெரியார் அவர்களின் சித்தாந்தத்திலோ செயல்பாட்டிலோ உங்களுக்கு கருத்திருப்பின் சொல்லுங்கள். அதற்கான உங்களது உரிமையை மறுக்கவில்லை.

உளறுவதை அருள்கூர்ந்து நிறுத்துங்கள்.

தந்தை பெரியார் என்பவர்களுக்கெல்லாம் அவர்தான் தகப்பனா என்பது மாதிரி உளரியிருக்கிறீர்கள்.

ஒன்று கேட்கவா நீங்கள் உங்கள் கட்சியின் மரியாதைக்குரிய பெண்ணுறுப்பினர் எவரையும் தங்கை என்றோ சகோதரி என்றோ விளித்ததே இல்லையா?

நிச்சசயமாய் இருக்கவே இருக்கும்.

எனில் உங்கள் இருவருக்கும் ஒரே தந்தைதானா என்று யாரேனும் உளரினால் அவருக்கும் எதிரான குரல்தான் இந்தப் பதிவு.

Wednesday, November 19, 2014

நிலைத் தகவல் 64

” என்னங்க சார், மூனு தரம் போன் செஞ்சிட்டோம். வந்து வாங்கிக்க மாட்டீங்கறீங்க. எப்ப வரீங்க. அல்லாட்டி திருப்பி அனுப்பட்டுமா?”
என்னுடனான ஒரு கூரியர் அலுவலரின் உரையாடலே இது.
கூரியர் வந்த புதிதில் எல்லோரும் அதன் விரைவு சேவையை ஆகா ஓகோ என்று கொண்டாடினார்கள். தபால் துறையை விட இதன் சேவையை உச்சிமுகர்ந்து மெச்சினார்கள்.
தபால் துறையில் கோளாறுகளே இல்லை என்று சொல்லவில்லை. ஆனாலும் அவற்றைப் போக்குவதற்குரிய எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் அதற்கு மாற்று இது என்றார்கள்.
தெருக்கள் அதிகரிக்கும் அளவிற்கு தபால் காரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற சன்னமான அக்கறைகூட இல்லாதே இருக்கிறார்கள். இருக்கிற காலிப் பணியிடங்களையே நிரப்ப எண்ணம் இல்லாதவர்களிடம் இதை எதிர்பார்ப்பது தவறுதான்.
இந்த லட்சணத்தில் ரயில்வேயை 100 விழுக்காடு தனியாருக்கு தாரை வார்ப்பதே தனது லட்சியம் என்பதை எந்த வித கூச்ச நாச்சமும் இன்றி சொல்லியிருக்கிறார் பிரதமர்.
விடுங்க சார்,
இனி எங்களுக்கு ரயிலும் இல்லை

Tuesday, September 2, 2014

நிலைத் தகவல் 63

அநேகமா இது எனக்கு இப்படியான இருபதாவது அனுபவம்
இன்று ஒரு நண்பர் அலைபேசியில் அழைத்தார்.
“ வந்தால் பார்க்க முடியுமா எட்வின்?”
“ இல்லை தோழர். மதுரையில் ஒரு கூட்டம். நாளை பார்க்கலாம்”
“உங்களுக்கென்ன. ஓய்வு பெற்றாச்சு. ஜாலியா ஊர் சுத்தலாலாம் இன்னும் நாலு வருஷம் ஓட்டனும்.”
“ நான் இன்னும் எட்டரை வருஷம் ஓட்டனும் தோழர்”
“என்னது?”
“ஆமாம், 2022 மேதான் ஓய்வு”
ஆமாம், எனக்கு மட்டும் ஏன்தான் இப்படி ஆகுது.

Tuesday, August 5, 2014

நிலைத் தகவல் 62

தில்லியைச் சேர்ந்த நடத்துனர் ஒருவர் 15 பைசாவிற்கு தரவேண்டிய பயணச்சீட்டிற்கு பதிலாக 10 பைசா பயணச்சிட்டு கொடுத்தமைக்காக பணிநீக்கம் செய்யப்பட்டு அந்த வழக்கு ஏறத்தாழ 40 வருடங்களுக்கும் மேல் நடந்துள்ளதாக போன வாரம் பத்திரிக்கைகளில் பார்க்க முடிந்தது.

அரசுக்கு 5 பைசா இழப்பு ஏற்படுத்திருக்கிறார் எனவே ஓய்வூதியப் பலன்கள்கூட அவருக்கு வழங்க இயலாது என்று தில்லி அரசு போக்குவரத்துக் கழகம் சொல்லிவிட்டதாகவும் தெரிகிறது.

மாண்பமை அருண் ஜேட்லியோ தினம் தினம் 200 ரூபாய் சம்பாரிக்கும் செல்வந்தன் மானிய விலையில் சமையல் எரிவாயு வாங்குவது எப்படி சரியாகும். அரசுக்கு இழப்பல்லவா? என்கிறார்.

இப்படி மானிய விலையில் எரிவாயு வாங்குவது தேசத் துரோகமென்றும். அதை விடுத்து தேசப் பற்றாளர்களாக மாறுமாறும் சித்தாள்களுக்கும் தள்ளு வண்டி வியாபாரிகளுக்கும் எங்கிருந்தோ அசிரீரி குறுஞ்செய்திகள் வருகின்றன.

தேவையற்ற செலவுகளில் இருந்து அரசைக் காப்பாற்றும் தேச பக்தர்களைப் பார்த்து நெசத்துக்குமே புல்லரிக்கத்தான் செய்கிறது.

2007 ஆம் ஆண்டு தொலை தூரத்தில் உள்ள 27 மாநிலங்களைச் சார்ந்த 500 மாவட்டங்களுக்கு தொலை தொடர்பு இணைப்பு கொடுக்கும் திட்டம் தனியாருக்கு தாரை வார்க்கப் பட்டது.

இதில் நடந்த முறை கேடுகள் கண்டு பிடிக்கப் பட்டு அந்த 14 நிறுவனங்களுக்கும் 600 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டது. 600 கோடியிலிருந்து அபராதமானது 5 கோடிக்கு இறங்கிவிட்டதாகவும் இந்த வகையில் அரசுக்கு 595 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் மத்திய தலைமை கணக்காயர் (சிஏஜி) கூறியுள்ளார் என்ற தகவல் இன்றைய (03.08.2014) தீக்கதிரில் கிடைக்கிறது.

மாண்பமை ஜேட்லி அவர்களுக்கு இந்தத் தகவலை ஃபார்வர்ட் செய்கிறேன்.

இது கண்டுபிடிக்கப் பட்டால் காங்கிரஸ் கட்சிக்குத்தான் பிரச்சினை.

ஆனாலும் செய்யமாட்டார். காரணம் அந்த நிறுவனங்கள் காங்கிரசுக்கும் வேண்டியவர்கள், இவர்களுக்கும் வேண்டியவர்கள்.

Monday, July 28, 2014

நிலைத் தகவல் 61

தோழர் நம்மாழ்வார் இறந்த அன்று எழுதியது

இப்படி ஒரு துயரம் நடக்காது போயிருந்தால் இந்நேரம் நானும் சந்திரசேகரும் தோழர் நம்மாழ்வாரோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்திருப்போம். அவர் காக்கைக்காக ஒதுக்கியிருந்த நேரம் இது.

அவரிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள் என்னிடமிருந்தன. அவற்றில் ஒன்று,

“ இயற்கையை சூறையாடுபவனைக் கண்டால் அவன் பன்னாட்டு நிறுவனமாயினும், உள்நாட்டு முதலாளிகளாயினும் அவர்களை எதிர்த்து போராட வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கிறீர்கள். தொடர்ந்து அதற்காக குரலும் தருகிறீர்கள்.

இதே தளத்தில் போராடிக் கொண்டிருக்கும் இடதுசாரி கட்சிகளைச் சார்ந்த விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளிகளோடு இணைந்து களமேகத் தவறிவிட்டோமே என்று எப்போதேனும் எண்ணியிருக்கிறீர்களா?”

இதற்கு பதில் சொல்ல அய்யா இல்லை.

இடது சாரித் தலைவர்களிடம் உரிமையோடு கேட்கிறேன்,

“ தோழர் நம்மாழ்வாரோடு தேவையான அளவு இணைந்து அல்லது இணைத்துக் கொண்டு செயலாற்றத் தவறியிருக்கிறோம் என்ற உணர்வு எழுகிறதா தோழர்களே?”

Sunday, July 20, 2014

நிலைத் தகவல் 60

மாண்புமிகு முதல்வர் அவர்களை மிகக் கடுமையாக விமர்சிப்பவர்களில் நானும் ஒருவன். இன்னமும் அந்த நிலையிலிருந்து கொஞ்சமும் பின்வாங்கவில்லை. 

ஆனால் சமீப காலமாக அவரது நடவடிக்கைகளைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

தமிழ் மொழியோடு, தமிழ்க் கலாச்சார அடையாளங்களோடு தன்னை இணைத்துக் கொண்டுள்ள ஒருவரிடமிருந்து இத்தகைய செயல்பாடுகள் வந்திருக்கும் என்றால்கூட கொண்டாடியிருக்கவே செய்திருப்போம். ஆனால் அப்படி எந்த ஒரு இடத்திலும் தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளாத, இன்னும் சொல்லப் போனால் இத்தகைய அடையாளங்களுக்கு எதிராகவே வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் தன்னை பொறுத்தி வெளிப்படுத்திக் கொண்ட ஒருவரிடமிருந்து இத்தகைய எதிர்வினைகள் வெளி வரும் போது அதைக் கொண்டாடி வரவேற்று வாழ்த்துவது கடமையாகும்.

 அது ஒரு புத்தக வெளியீடு. 

காரிலிருந்து இறங்கி அரங்கம் நோக்கி நடக்கிறார் அவர். உள்ளே நுழைகிறவரை உள்ளே அனுமதிக்க முடியாது என்று ஒருவர் தடுக்கிறார். ஏன் என்று கேட்டபோது வேட்டி கட்டியவர்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்கிறார்.

அரங்கின் உள்ளே நுழைய இருந்தவர் ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி. அவரைத் தடுத்தவர் அந்த அரங்கத்தின் வாயிற் காவலர்.

இதேமாதிரியான ஒரு அனுபவம் டிராஃபிக் ராமசாமி அவர்களுக்கும் அதே அரங்கத்தில் ஒருமுறை நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது.

அந்த அரங்கம் தமிழ்நாடு கிரிக்கெட் கிளப் பில் உள்ளது. அந்த கிளப் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப் பட்டது. அப்போது எல்லோரும் உள்ளே வந்துவிடக் கூடாது என்பதைக் காட்டிலும் இந்தியர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியோடு அப்படி ஒரு ஏற்பாட்டினைச் செய்தது.

அப்படியும் வேட்டி கட்டியவர்களை உள்ளே விடக் கூடாது என்று சொல்லவில்லை. கண்ணியமான உடையோடு உள்ளே வரவேண்டும் என்றுதான் சொல்கிறது. 

அப்படி என்றால் வேட்டி கண்ணியமான உடை இல்லையா என்ற நியாயமான கேள்வியோடு, வேட்டியை நிராகரிக்கும் எந்த கிளப்புகளுக்கும் தமிழ்நாட்டில் அனுமதி இல்லை என்று அறிவித்தார்.

இதை வணங்கி வரவேற்கிறோம்.

 இரண்டாவதாக பன்முகத்தன்மையை சிதைப்பது என்ற தனது மறைமுக செயல்திட்டத்தை பி.ஜே.பி கையிலெடுத்தபோது முதல்வர் ஆற்றிய எதிர்விணை.

சமஸ்கிருத வாரம் கொண்டாடுமாறு தனது பள்ளிகளுக்கு மத்திய அரசு சுற்றரிக்கை அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையின் துவக்கத்தில் எல்லா இந்திய மொழிகளுக்கும் தாய் சமஸ்கிருதம் என்று இருப்பதாக அறிய முடிகிறது.

இதனை அறிந்ததும் சமஸ்கிருதத்தின் மீது அளப்பற்ற பற்று வைத்திருக்கக் கூடிய நமது முதல்வர் அவர்களது எதிர்விணையானது மிகச் சரியானது.

இந்தியா போன்ற பலமொழிகள் புழங்கக் கூடிய, பன்முகதன்மை கொண்ட ஒரு நாட்டில் இத்தகைய முயற்சியானது தேவையற்ற பிரச்சினைகளைக் கொண்டுவந்து சேர்க்கும் என்று சொன்னதோடு அதை தன் கடுமையாக எதிர்ப்பதாகவும் தெரிவித்துளார்.

சமஸ்கிருதம் இந்திய மொழிகளின் தாய் என்கிற ஒரு பிம்பத்தைக் கட்டமைப்பதென்பது ஆர்.எஸ்.எஸ் சின் திட்டம். அதைத்தான் மத்திய அரசு இப்போது கையிலெடுத்திருக்கிறது.

இந்த சுற்றரிக்கைகையை போகிற போக்கில் எடுத்துக் கொள்ளமுடியாது. இது மிகவும் விஷமத் தனமானது. மட்டுமல்ல இது ஏதோ மொழி சம்பந்தப் பட்ட பிரச்சினை மட்டுமன்று. சமஸ்கிருதம் தேவபாசை என்றும் தமிழ் உள்ளிட்ட ஏனைய மொழிகள் நீஷ பாஷைகள் என்றும் சொல்பவர்களால் இது முன்னெடுக்கப் படுவதால் இதற்குள் மதம் நிச்சயமாக இருக்கிறது.

இதனைத் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இல்லாத பட்சத்தில் உணர்ச்சிவசப் படாமல் தமிழ்ச் சமூகம் மிகுந்த திட்டமிடலோடு எதிர்கொள்ள வேண்டும் என்று ஆசைப் படுகிறோம்.

முதல்வரின் சரியான நிலைபாட்டிற்காக மீண்டும் ஒருமுறை அவருக்கு நன்றியை சொல்லிக் கொள்கிறோம்

Saturday, July 19, 2014

நிலைத் தகவல் 59

பயணங்களின் ரசிகன் நான்.

ஒரு தாய் மாதிரி பயணம் நிறைய தந்திருக்கிறது எனக்கு.

பலருக்கு களைப்பைத் தரும் பயணங்கள் எனது களைப்பை சுத்தமாய் துடைத்துப் போடுகின்றன. 

புத்தனுக்கு போதி மரமென்றால் எனக்கு வைப்பர் வேலை செய்யாத அரசுப் பேருந்து என்று ஒரு முறை நான் எழுதியது சத்தியம்.

ஒரு முறை யகமாயினி சித்தன் என்னிடம் உனது பேருந்து பயணங்கள் குறித்து ஒரு தொடர் எழுதேன் என்றார். எழுத இருந்த போது நாங்கள் யுகமாயினியை நிறுத்த வேண்டியதாயிற்று.

நேற்று முன்தினம் ஒரு வேலையாக கடலூர் போகவேண்டி இருந்தது.

உளுந்தூர்பேட்டையில் மூன்று பேர் அமரும் இருக்கையில் இடம் கிடைத்தது. ஜன்னலோரத்தில் ஒரு இளைய பெண், அடுத்து அவரது கணவர், அவருக்கடுத்தது நான்.

உழைத்துப் பிழைக்கிற இணையராகத் தெரிந்தார்கள்.

மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டே பேசிக் கொண்டே வந்தார்கள். அவர்களது நீண்ட உரையாடலில் எந்த இடத்திலும் சலிப்போ, வருத்தமோ, கவலையோ அயற்சியோ எதுவுமே தெரியவில்லை. மகிழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களது குதூகலம் எனது வியர்வை முழுவதையும் துடைத்துப் போட்டு உற்சாகப் படுத்தியது.

அடுத்தவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்பது தவறுதான். அதுவும் இளைய தம்பதியரின் உரையாடலைக் கேட்பது என்பது தவறோ தவறு. ஆனாலும் இவர்கள் பேசுவது தானாகவே உள்ளேறியது.

ஒரு இடத்தில்,

இங்க இருந்து போறப்ப ஆன காச விட வாரப்ப ஆகிற பேருந்து கட்டணம் அதிகம் என்பதாக அந்தப் பெண் கூறவே, அதெப்படி போக ஒரு காசு வார ஒரு காசு ஆகும் என்று அந்தப் பையன் சொன்னார். இதே உரையாடல் பலமுறை தொடர்ந்தது.

அந்தப் பெண் கணக்கெல்லாம் சொல்லி நிறுவ முயன்றபோது அந்தப் பையன் சொன்னார்,

“போறதுக்கு கொறச்ச வாரதுக்கு அதிகம்கிற, சரிவிடு இனி போறதோட நிறுத்திக்குவோம், வர வேண்டாம்”

அந்தப் பெண் வெட்கத்தோடு அவரை ஒருமாதிரி பார்த்துக் கொண்டே அவரது தொடையில் அதைவிடவும் வெட்கத்தோடு தட்டினார். நான் பார்ப்பதை பார்த்தவுடன் வெட்கம் இன்னும் அதிகரித்தது.

” அந்த அண்ணனுக்கும் சிப்ஸ் கொடுப்பா. எடுத்துக்கண்ணா”

எடுத்துக் கொண்டேன்.

ரெண்டு பேரும் இப்படியே மகிழ்ந்து நீண்டு வாழ வேண்டும்.

Friday, July 18, 2014

நிலைத் தகவல் 58

நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது .

முன்பெல்லாம் எங்களூரில் வருடா வருடம் "கட்டபொம்மன் "நாடகம் நடைபெறும். எங்களூரைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பாய் தலையணையோடு நாடகம் பார்க்க. வந்துவிடுவார்கள்.

உரையாடல்கள் பாடல்களாகவே இருக்கும் . ஆச்சரியம் என்னவென்றால் கட்டபொம்மனாய் நடித்தவரிலிருந்து பல நடிகர்களுக்கு எழுதப் படிக்கவே தெரியாது. எப்படி அவ்வளவு நீளமான வசனங்களை மனப்பாடம் செய்து அவ்வளவு நேர்த்தியாக பிரயோகம் செய்தார்கள் என்பது இன்றும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.

"போனவருஷம் இந்த வசனத்ததானே குட்டியண்ணன் மறந்துபோனான்" என்று பெரிசுகள் பேசிக்கொள்வதையும் கேட்டிருக்கிறேன் .

அந்த அளவிற்கு வசனங்களும் நாடகமும் மக்களோடு ஒன்றிப் போயிருந்தன.

நாகேஷின் தீவிர ரசிகரான எங்கள் அப்பா “வைத்தி பாத்திரத்த நாகேஷ் செய்ததைவிட குட்டியண்ணன் சலம்புவாண்டா. பாடி லாங்க்வேஜ்ல நாகேஷுக்கு கொஞ்சமும் குறைச்சல் இல்ல அவன்” என்பார். 

எழுதப் படிக்கத் தெரியாதவரிடமும் இலக்கியத்தை கொண்டுசேர்த்த ஜனநாயக வடிவம் இசை .

Thursday, July 17, 2014

நிலைத் தகவல் 57

எந்த ஒரு அணி தங்களது இறுதிப் போட்டிக்கான கனவை துவைத்து தூரப் போட்டிருந்ததோ அந்த அணி இறுதிப் போட்டியில் வெற்றிபெற ஆராவரித்துக் கொண்டாடிய மக்களை இந்த இறுதிப் போட்டியில் பார்த்தோம்.

அரையிருதியில் பிரேசிலை வறு வறு என்று வறுத்து எடுத்திருந்தது ஜெர்மெனி. அந்த வகையில் பிரேசிலின் இறுதிப் போட்டிக் கான கனவை தகர்த்திருந்ததே ஜெர்மெனிதான்.

ஆனால் இறுதிப் போட்டியில் ஜெர்மெனியை ஆரம்பம் முதலே உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தனர் பிரேசில் ரசிகர்கள். உள்ளூர் திரளின் ஆதரவை இந்த வகையில் அனுபவித்தது ஜெர்மெனி. ஜெர்மெனி வென்றதும் பிரேசில் ரசிகர்களும் ஜெர்மெனி ரசிகர்களும் கட்டித் தழுவி மகிழ்ந்தனர்.

காரணம் எளிதானது. கால்பந்தைப் பொறுத்தவரை அர்ஜெண்டினாவும் பிரேசிலும் பரம வைரிகள். கிரிக்கெட்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் மாதிரி.

ஆக, எதிரிக்கு எதிரி நண்பன் என்பது அரசியலுக்கு மட்டுமல்ல, விளையாட்டுக்கும் பொருந்தும்.

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...