மருத்துவம் மட்டும்தான்
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts
Thursday, July 10, 2025
கவிதை 017
படிப்பா ?
ஒரு புள்ளியில்
படித்தவன்
பக்கோடா போடலாமே என்றான்
சுதாரித்தோம்
இல்லையெனில்
பக்கோடா போட
படிப்பெதற்கென்று
நகர்ந்திருப்பான்
இப்போது
சூத்திர
கல்விமறுப்பு குச்சி
அறுபதாயிரம்
யானைகளை
ஒரே கப்பலில் ஏற்றியவனின்
கைகளுக்குப் போனது
அவனோ
மாடு மேய்க்கப்
பழகு
சம்பளம் தருவேன் என்கிறான்
இப்போது
இன்னொருவன் கைகளில்
சூத்திர கல்வி மறுப்பு குச்சி
இன்று
படிப்பைவிட
பக்தி பெரிதென்கிறான்
நாளை
பக்தி போதும்
படிப்பெதற்கென்பான்
குழந்தைகளே
எதற்கும்
சாணி வாளியில்
துடைப்பங்கள்
ஊறியபடியே இருக்கட்டும்
Sunday, March 2, 2025
கவிதை 02 | 2025
எழுவதற்கு கொஞ்சம்
தாமதமானாலும் பரவாயில்லை
இன்று அப்படியாக
என் கனவில் வந்த
ஒரு பாப்பாக்குருவி
நெஞ்சில்
வலிக்காமல் கொத்திப் பார்த்தது
கழுத்தில் மூக்கைத் தேய்த்தது
பிறகு
எப்போதாவது
கிரிஷ் பயல் திருட்டுத்தனமாய் பார்ப்பதுபோல்
பார்த்துவிட்டு
பறந்துவிட்டது
மெனக்கெட்டேனும் கொஞ்சம் தூங்கி
விழிப்பு வரும்போது வரும் கனவை
பார்த்துவிடுங்கள்
ஏதேனும் ஒரு பாப்பாக்குருவி
உங்களையும் ஆசிர்வதிக்கக்கூடும்
Thursday, October 13, 2022
மழைக்கும் கால் வலிக்குமே என்று
பெய்துகொண்டிருந்த மழை நிற்கத் துவங்குவதாகவும்
நின்று கொண்டிருந்ததால் தனக்கு கால் வலிப்பதாகவும்
பாட்டி நாற்காலியில் அமர
நின்றால்
மழைக்கும் கால் வலிக்குமே என்று
Thursday, September 15, 2022
கெடுத்துச் செத்தது
உன்னை மொய்க்கும் ஏராளக் கனவுகளில்
ஏதேனுமொன்றில் நுழைவதென்ற என் திட்டத்தை
கெடுத்துச் செத்தது
உனைக் கடித்த கொசு
Thursday, June 30, 2022
Monday, June 27, 2022
இவன் என்பது ஒருநூறு கோடி
பத்தாது
மிதி
இன்னும் நாலு மிதி
நசுக்கு அவன் மூக்கை
ரத்தம் வரும்வரை
துப்பு அவன் மேல்
பக்கத்து ஊருக்கு பேசி
ஒரு வண்டி கெட்ட வார்த்தைகளை
கடன் வாங்கி
இறுக்கி நசுக்கு உன் வெறிதீறும் மட்டும்
அவன் குரல்வளையை
தூக்கிக் கிடாசு அவனை
உன் வண்டியில்
அடித்த கை வலிக்கும்
மிதித்த கால் வலிக்கும்
திட்டித் திட்டி வாய் வலிக்கும் உனக்கு
கொஞ்சம் வோய்வெடு
வேலையை
அடுத்த தோழனிடம் கை மாற்று
துவைத்து எடு
அவனை
சிறை எடுக்கும் வரை
வீடேகு
மதுகுடி
தூங்கித் தொலை
நாளையும் அழைக்கும்
களமுன்னை
நிற்பான் ஒருவன்
இவனினும் தெம்பாய்
இவனினும் தெளிவாய்
தெரிந்துகொள் நண்பா
ஒருமை அல்ல
இவன் என்பது
ஒருநூறு கோடி
முகநூல்
27.06.2022
Saturday, June 18, 2022
அந்தக் காக்காவும்
முந்தாநாள் பார்த்த
காக்காவைப் போலவே இருக்கிறது
இந்தக் காக்காவும்
முந்தாநாள் பார்த்த
காக்கா போலவே
இந்தக் காக்காவும் இருப்பதாக
உங்களிடம் நான்
சொல்லிக் கொண்டிருப்பதைப் போலவே
முந்தாநாள் பார்த்த மனிதனைப் போலவே இருந்தான் அவனென்று
தன் தோழமைகளிடம்
சொல்லிக்கொண்டிருக்கக் கூடும்
அந்தக் காக்காவும்
அப்பா மாதிரியான இன்னொருவரும்
அப்பா மாதிரியான இன்னொருவரும்
ஞாயிற்றுக் கிழமை
செத்துப் போனார்
காரியமின்று
வாசலில் தேநீர் பருகிக் கொண்டிருப்பவர்களைக் கடக்கையில்
என்னைப் பார்த்து புன்னகைக்கிறார் அவர்
அவர்தான் செத்துப் போனாரே
யாரது பின்ன?
யாராவாவது இருக்கும்
இருக்கட்டும்
அவராகவே கொள்தல் மாயையாகவே இருக்கட்டும்
மாயைகள் சமயத்தில் இனிக்கும்
முகநூல்
18.05.2022
Sunday, June 12, 2022
பேசித் திருத்தி இருக்கலாம்
சுறுக்கமா இல்ல
சுருக்கமாத்தானடா லூசு பேசனுமென்ற
குறுஞ்செய்திக்கு பதில்
ரெண்டே ரெண்டு வார்த்தைகளில்
பேசித் திருத்தி இருக்கலாம்
எதுவெல்லாம் செய்யும்
உனக்கும் எனக்குமான உரையாடல்
என்பதறிந்த நீ
முகநூல்
10.06.2022
Thursday, June 9, 2022
எட்டு கிலோ பட்டர்ஃப்ளையின் முத்த எச்சில்
கீழே கிடந்த வண்ணத்துப்பூச்சி ஸ்டிக்கரை எடுத்த கிரிஷ்
இந்தா தாத்தா பட்டர்ஃப்ளை பிடி
நீட்டியவாறே ஓடிவருகிறான்
தூக்கி அணைக்கிறேன்
பட்டர்ஃப்ளை படத்திற்கு முத்தமிட்டவன்
எனக்கும் ஒரு முத்தம் தருகிறான்
எட்டு கிலோ பட்டர்ஃப்ளையின் முத்த எச்சில்
வரம்
Thursday, May 19, 2022
முந்தாநாள் பார்த்த மனிதனைப் போலவே
முந்தாநாள் பார்த்த
காக்காவைப் போலவே இருக்கிறது
இந்தக் காக்காவும்
முந்தாநாள் பார்த்த
காக்கா போலவே
இந்தக் காக்காவும் இருப்பதாக
உங்களிடம் நான்
சொல்லிக் கொண்டிருப்பதைப் போலவே
முந்தாநாள் பார்த்த மனிதனைப் போலவே இருந்தான் அவனென்று
தன் தோழமைகளிடம்
சொல்லிக்கொண்டிருக்கக் கூடும்
அந்தக் காக்காவும்
மாயைகள் சமயத்தில் இனிக்கும்
அப்பா மாதிரியான இன்னொருவரும்
ஞாயிற்றுக் கிழமை
செத்துப் போனார்
காரியமின்று
வாசலில் தேநீர் பருகிக் கொண்டிருப்பவர்களைக் கடக்கையில்
என்னைப் பார்த்து புன்னகைக்கிறார் அவர்
அவர்தான் செத்துப் போனாரே
யாரது பின்ன?
யாராவாவது இருக்கும்
இருக்கட்டும்
அவராகவே கொள்தல் மாயையாகவே இருக்கட்டும்
மாயைகள் சமயத்தில் இனிக்கும்
Saturday, January 1, 2022
மழை AV
எவ்வளவு அதட்டியும்
அடங்காமல்
காட்டுக் கத்தலாய்க் கத்தும்
மழைமீதான கோவத்தில்
வகுப்புத் தலைவியான பேத்தி ஒருத்தி
தனது ரஃப் நோட்டில்
குறித்து வைத்தாள்
மழை AV
Tuesday, December 28, 2021
அருள்கூர்ந்து மாற்றித் தொடங்குங்கள்
வீடு வந்ததும் பேத்தியிடம் காண்பிக்கிறேன்
கொள்ளுத்தாத்தனின் நெஞ்சில் ஒட்டிக்கொள்ளும் கொள்ளுப்பேத்தியாய்
என் சட்டை ஜோபியின்மேல் வந்து ஒட்டிக் கொண்ட
அந்த வண்ணத்துப்பூச்சியை
”நோட்லதான வரைஞ்சேன்
தாத்தாட்ட ஏன் போன”
அதட்டலுக்கு பயந்து
மீண்டும் அது
பேத்தியின் நோட்டில் படமானது
“ஐ, குட் பாய்” என்று
கைதட்டி குதித்து குதூகலிக்கிறாள் பேத்தி
‘கொள்ளுத்தாத்தனின் நெஞ்சில் ஒட்டிக்கொள்ளும் கொள்ளுப்பேரனாய்’ என்று
அருள்கூர்ந்து மாற்றித் தொடங்குங்கள்
இரண்டாவது பத்தியை
Wednesday, October 13, 2021
வாக்கு கேட்டுவிட்டு நகரும் உங்கள் கண்களில்...
டீ மாஸ்டரை கொஞ்சம் ஒதுங்கச் சொல்லி
டீ போட்டுக் கொடுத்து
வாக்கு கேட்டுவிட்டு
நகரும் உங்கள் கண்களில்
இஸ்திரிக்காரர்
நாற்றுநடும் அக்கா
சித்தாள் என
எல்லோரும் படுகிறார்கள்
மலக்குழி இறங்கும்
என் தோழர்களைத் தவிர
Saturday, August 14, 2021
Saturday, June 12, 2021
கவிதை 20 24.01.2021
01
அறைக்குள் நுழைந்திருக்கும்
இந்தப் பிடிச்சப்பிடி மென் குளிரை
சமாளித்து விடலாம்
வாசிக்கிற சூடில்
ஒருதுண்டு கவிதையும்
ஒரு கோப்பை
சர்க்கரைப் போடாத
பாலற்ற எலுமிச்சைத் தேநீரும்
வாய்த்து விட்டால்
02
தன் இருத்தலை நிறுவ
ஒரே ஒரு சொட்டேனும்
இருட்டு தேவைப்படுகிறது வெளிச்சத்திற்கு
03
மலம் அள்ளுவதும்
கீழிறங்கி
சாக்கடை கசடள்ளி சுத்தம் செய்வதும்
என்னை எரித்த பிறகும் தொடருமானால்
இந்தக் கொடுமைக்கு எதிராக
சாராய நெடியும் கோவமுமாய்
கலந்து வரும்
அவனது கெட்ட வார்த்தைகளாகவும்
அவன் காறி உமிழும் எச்சிலாகவும்
மாறியிருப்போம்
என் கவிதைகளும் நானும்
Subscribe to:
Posts (Atom)
இதை முதலில்.....
அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?
அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...
-
நடு வானத்திற்கும் மேற்கே இரண்டு மூன்று முழங்களைக் கடந்திருந்தான் சூரியன். கழுத்தில் கிடந்த துண்டால் முகத்தை துடைத்தவாறே கூவிக் கூவி கடவுள்...
-
“ சாதி ஒடுக்குமுறை உள்ள அல்லது சமத்துவமற்ற எதனோடும், அது தமிழ்த் தேசியமாகவே இருப்பினும் அதனோடு எனக்கு சம்மதம் இல்லை” சென்னை இக்ஷா அரங்கத...



