01
அறைக்குள் நுழைந்திருக்கும்
இந்தப் பிடிச்சப்பிடி மென் குளிரை
சமாளித்து விடலாம்
வாசிக்கிற சூடில்
ஒருதுண்டு கவிதையும்
ஒரு கோப்பை
சர்க்கரைப் போடாத
பாலற்ற எலுமிச்சைத் தேநீரும்
வாய்த்து விட்டால்
02
தன் இருத்தலை நிறுவ
ஒரே ஒரு சொட்டேனும்
இருட்டு தேவைப்படுகிறது வெளிச்சத்திற்கு
03
மலம் அள்ளுவதும்
கீழிறங்கி
சாக்கடை கசடள்ளி சுத்தம் செய்வதும்
என்னை எரித்த பிறகும் தொடருமானால்
இந்தக் கொடுமைக்கு எதிராக
சாராய நெடியும் கோவமுமாய்
கலந்து வரும்
அவனது கெட்ட வார்த்தைகளாகவும்
அவன் காறி உமிழும் எச்சிலாகவும்
மாறியிருப்போம்
என் கவிதைகளும் நானும்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்