03.06.2021 அன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் திரு U.U.லலித் மற்றும் திரு வினித் சரண் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் ஒரு முக்கியமான தீர்ப்பை அளித்துள்ளது
கொரோனா தடுப்பில் மோடியின் நிலை குறித்தும்
புல்வாமா வெற்றியை தனது தேர்தலுக்காக மோடி பயன்படுத்திக் கொண்டதை விமர்சித்தும்
இமாசலப்பிரதேசத்தைச் சேர்ந்த வினோத் துவா என்ற பத்திரிக்கையாளர் 30.03.2020 அன்று எழுதிய கட்டுரைக்காக
அவர்மீது போடப்பட்ட தேசத் துரோக வழக்கில்தான் அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது
“அரசின் செயல்பாடுகள் குறித்த விமர்சனக்கள் ஒருபோதும் தேசத் துரோகம் ஆகாது “
என்பது அவர்கள் அளித்த தீர்ப்பு
இதற்கான மேற்கோளாக 1962 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வந்த கேதார்நாத்சிங் வழக்கு எடுத்துக் காட்டப் பட்டது
“அரசு எடுக்கும் எந்த நடவடிக்கை குறித்தும் விமர்சிக்க எவருக்கும் அதிகாரம் உண்டு”
என்று அந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டிருந்தது
நமக்கு ஒரு கோரிக்கை உண்டு
1962 இல் இவ்வளவு தெளிவாக தீர்ப்பு அளிக்கப்பட்ட பின்பும்
2020 இல் வழக்கு போடப்பட்டு
அது உச்சநீதிமன்றம் வந்து சரிப்பட வேண்டியுள்ளது
எனவே,
இது மாதிரி முக்கியமான தீர்ப்புகள் குறித்து
மாவட்ட நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், காவல்துறை துணை ஆய்வாளார்கள் ஆகியோருக்கு அவ்வப்போது கவனப்படுத்தினால் நீதிமன்றங்களின் நேர விரயம் மிச்சமாகும்
#சாமங்கவிய 57 நிமிடங்கள்
05.06.2021
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்