Thursday, April 26, 2018

ஆணவ அரசியலின் ஒரு சிறு கூறு
இது போர்ஜரிக் குற்றமென்று சொன்னால் தவறு செய்தவர்களாவோம்
எந்த அயோக்கியத் தனத்தையும் செய்வோம் என்ற அவர்களது ஆணவ அரசியலின் ஒரு சிறு கூறு
மற்றபடி செய்தவன் இஸ்லாமியனா இந்துவா கிறிஸ்தவனா என்பதில் எங்களுக்கு எப்போதும் வேறுபாடு எதுவும் இல்லை
மதவெறி பிடித்தவர்களின் அரசியல் அது
எவன் செய்தாலும் அவனைத் தண்டிக்கக் கோருவோம்.
ஆனால் அதில் கோட்பாட்டோடுகூடிய அரசியல் இருப்பின் அதை அம்பலப்படுத்தவும் செய்வோம் அதை

பின் குறிப்பு
*****************
கீதா என்ற பெயரும் படங்களும்தான் போலி செய்தி உண்மை என்கிறான் தம்பி Muralikrishnan Chinnadurai.
அவன் சரிபார்க்காமல் சொல்ல மாட்டான். அது உண்மை எனும் பட்சத்திலும் நமது பதிவு சரிதான். செய்தவன் எவனாயினும் அவன் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவனே
உண்மை தெரிந்ததும் விரிவாய் பேசுவோம்

நீங்களாகவே பதறி எதிலும் சிக்கிக் கொள்ள வேண்டாம் யுவர் எக்ஸலன்சி

தேவையே இல்லாமல் மட்டுமல்ல உரிமையே இல்லாத இடங்களிலும் நீங்கள் உங்களை நீதிபதியாகவே கட்டமைத்துக் கொள்கிறீர்கள்
அப்படித்தான் இப்போதும் முதல்வர் மீதும் அமைச்சர்கள் மீதும் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்தரமே இல்லை என்று சொல்லியிருக்கிறீர்கள்
உங்களிடம் கொடுக்கப்பட்ட முகாந்திரங்களே இல்லாத குற்றச்சாட்டுகள் எவை ?
விசாரிக்கிற அதிகாரம் உங்களுக்கு இல்லை என்றாலும் ஒரு வாதத்திற்காகக் கேட்கிறேன்
யார் யாரை விசாரித்தீர்கள்?
புகார் கொடுத்தவர்களை விசாரனைக்குட்படுத்தினீர்களா?
யார் யார் இடத்தில் குறுக்கு விசாரனை செய்தீர்கள்
இத்தனையுமேன் கேட்கிறேன் என்றால், மோசமான தீர்ப்பில்கூட இவை எல்லாம் இருக்கும்
விடுங்கள்
நீங்களாகவே பதறி எதிலும் சிக்கிக் கொள்ள வேண்டாம் யுவர் எக்ஸலன்சி

தமிழ் மக்கள் மறந்திருப்பார்கள் என்பதைத் தவிர

ஏதோ ஒரு அதிசயம் நடந்து ஒருவாரம் ஊடகங்கள் எல்லாம் இயங்க இயலாசூழல் ஏற்பட்டால்
தமிழிசை ராஜா போன்றோரை தமிழ் மக்கள் மறந்திருப்பார்கள் என்பதைத் தவிர வேறு என்ன நிகழ்ந்துவிடப் போகிறது?

Wednesday, April 25, 2018

இதில் “பிறப்பு” இல்லவே இல்லையா?

நேற்றைக்கு ஒரு மகத்தான, சோர்ந்து கிடந்த உள்ளங்களை உசுப்பிவிடுகிற மாதிரியான ஒரு பேரணி சென்னையில் நடந்திருக்கிறது.உண்மைய சொன்னால் சென்னை குலுங்கி இருக்கிறது.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் உச்சநீதிமன்றத்தின் ஆனையைத் திரும்பப் பெறவேண்டும் என்கிற கோரிக்கைக்கான பேரணி அது.


நிறையபேரின் வயிற்றெரிச்சலை அது சம்பாதித்திருக்கிறது. எந்தவிதமான முகமூடியையும் அணிவதற்குள்ளாகவே அவரை அறியாமலேயே மருத்துவரிடம் இருந்து வரும் எரிச்சலோடான எதிர்வினையை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
பலபேரின் மௌனம்தான் இதைவிடவும் எதைவிடவும் மோசமானதாய் எனக்குத் தெரிகிறது.
இது இடைச்சாதி அரசியலின் கோரமுகம். பார்ப்பணீயத் தளைகளில் இருந்து இடைச்சாதியின் முழுமையான விடுதலைக்கு தலித் விடுதலை என்பது மறுக்க இயலாத நிபந்தனை.
அதுகுறித்து பேசும்போது அங்கும் உள்ளடுக்குப் பிரச்சினைகள் இல்லையா? என்று கேட்கிறார்கள். இருக்கிறதுதான். ஆனால் நமக்கு ஒரு கேள்வி இருக்கிறது. அங்கும் உள்ளடக்குப் பிரச்சினை இல்லையா என்ற கேள்வியை ஏன் கேட்கிறீர்கள்.
1) அந்த உள்ளடுக்குப் பிரச்சினையும் தீர வேண்டும் என்பதாலா?
2) அங்க அடுக்குப் பிரச்சினை இருக்குள்ள அப்ப இங்கயும் இருக்கும் என்கிறீர்களா?
அடுக்குகளே இல்லாத ஒரு சமூகம்தான் தீர்வு.
முதலில் தலித் விடுதலையை சாத்தியமாக்குங்கள். தலித்துகளின் உள்ளடுக்கு தீர்வதற்கும் உதவுங்கள்.
விடுத்து,
தலித் பேரணியால் நான் ஒரே இடத்தில் முக்கால் மணிநேரம் ந்ற்க வேண்டியதாய் போனது என்று என்று நடிகை ஒருவர் புலம்ப, பார்த்தீர்களா பார்த்தீர்களா பொதுமக்களை எவ்வளவு இம்சை செய்கிறார்கள் என்று சிலர் கிளம்பி விட்டனர்.
இந்த முனகல்களை Hராஜா, குருமூர்த்தி, நாராயணன் போன்றவர்கள் ஊதிப் பெரிதாக்க முயல்வார்கள்.
நமக்கிருக்கும் கேள்வி,
எங்கள் பேரணி பொதுமக்களை இம்சித்தது என்று சொன்னால்
நாங்கள் பொதுமக்கள் இல்லையா?
உங்கள் பிள்ளைகள் ஏசி காரிலே பள்ளிக்கு போகும்போது பலநேரம் படிக்கட்டுகளே இல்லாத அரசுப்பேருதுக்காக எம் பிள்ளைகள் காத்துக் கிடக்கிறார்களே
உண்மையை சொல்லுங்கள்,
இதற்கு உங்கள் உழைப்பு மட்டும்தான் காரணமா?
எனில், நாங்கள் உழைக்கவே இல்லையா?
நெஞ்சைத் தொட்டு நினைத்துப் பாருங்கள் இதில் “பிறப்பு” இல்லவே இல்லையா?
உங்களுக்கு முக்கால் மணிநேரம் பாதிப்பு. எங்களுக்கு அடிப்படை உரிமைகளே இல்லாத நிலை
எங்களையும் பொதுமக்களாக ஏற்கும்வரை குறித்து வையுங்கள் இது தொடக்கம்தான்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...