Showing posts with label ஊடக அரசியல். Show all posts
Showing posts with label ஊடக அரசியல். Show all posts

Thursday, January 15, 2026

எளிய மக்களுக்காக நிற்பதும்

 இன்றைய பொங்கல் பொழுதை மகிழ்ச்சிப் படுத்திப் போயிருக்கிறார்கள் மில்ட்டன் கிராமத்தான், சேகுவாரா, சுபஸ்ரீ மற்றும் அவர்களோடிருந்த மூன்று பிள்ளைகள்

அந்த குழந்தைகள் மூவரின் பெயர் மறந்துபோனதற்காக அந்த மூவரும் என்னை மன்னித்துவிட வேண்டும் என்று கோருவது வெறும் சொற்களல்ல
மில்டன்தான் அந்தப் பிள்ளைகளைப் பார்க்கப் போகிறான்
அப்படியொரு அரட்டை
அம்மாடி
மில்டனும் Indra Kumar ரும் என் பிள்ளைகள்தான்
மில்டன் சார் என்பான், காதில் அப்பா என்று விழும்
இந்திரா அப்பா என்றே அழைப்பான்
கிஷோரையும் இவர்களையும் வேறாக ஒருபோதும் கருதியதில்லை
இந்திரா மகிழ்நனுக்கு கொடுத்த முதல் நேர்காணலைக் கேட்டதும் இரவு தூங்காமல் மகிழ்ந்திருந்தவன் நான்
பாரு இந்திரா திமுககாரய்ங்க உன்ன தூக்கிட்டு போகப்போறாங்க என்று சொன்னேன்
நடந்திருக்கிறது
இந்த அரட்டை கிஷோருக்கும் அவனது நண்பர்களுக்குமான அரட்டையாகவே மகிழவைத்தது
சுபாவை மில்டன் கேட்கிறான்
அரசியலில் யாரை ஆதரிக்கறம்மா?
இந்தியா கூட்டணியை
ஏன்?
எளிய மக்களுக்காக நிற்பதும் அவர்களுக்காகப் போராடுவதும்தான் அரசியல்
சரி, அதனால
கம்யூனிஸ்டுகளும் சிறுத்தைகளும் எளிய மக்கள் பக்கம் நின்று அவர்களுக்காகப் போராடுகிறார்கள்
சரி
அவங்க ரெண்டுபேரும் இந்தியா கூட்டணியில இருக்காங்க. அதனால அத நான் ஆதரிக்கிறேன்
அதையேதான் பிள்ளை சேகுவாராவும் சொல்கிறான்
எல்லோரும் அதைத்தான் சொல்கிறார்கள்
என்னவொரு அரசியல்
யூட்யூப் மீது நம்பிக்கை குறைந்து வருகிற காலத்தில் நம்பிக்கையை கையளித்துப் போயிருக்குதுகள் பொடிசுகள்
மகிழ்ந்திருங்க சாமிகளா
ஆறு பசங்களுக்கும் அன்பும் முத்தமும்

15.01.2026

Friday, July 4, 2025

ஊடக அறம்


The Hindu வில் 03.07.2025 அன்று  வெளியான இந்த செய்தியை தமிழ் இந்துவில் காணவில்லை

வேறு எந்த தமிழ் நாளிதழிலாவது வந்துள்ளதா என்றும் தெரியவில்லை

SBI அம்பானியின் கடன் கணக்கை Fraud என்கிறது

10 பவுன் நகையை திருடியிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் FIR கூட இல்லாமலேயே ஒரு பிள்ளையை இங்கு கொண்று போட்டிருக்கிறார்கள்

அம்பானி குறித்து எந்த மீடியாவாவது

யூட்யூப் சேனலாவது விவாதம் நடத்தியிருப்பின் சொல்லுங்கள்

பார்க்க வேண்டும்

 

Saturday, May 24, 2025

”மூத்த” என்பது வயது மட்டும்தானா?

 டாஸ்மாக்கில் 1000 கோடிக்கு ஊழல் என்றும்

இதோ ED உதயநிதியைக் கைது செய்யப் போகிறது என்றும் ஒரு பரபரப்பை சங்கிகள் கட்டமைக்கின்றனர்
டாஸ்மாக் சம்பந்தமாக மொத்தம் 47 FIR கள்
அவற்றில் 41 அதிமுக காலத்தைச் சார்ந்தவை
ஆனால் அதை வைத்து திமுக மீது ஒரு போலியான எதிர் பிம்பத்தைக் கட்டமைக்க முயற்சி செய்கிறது சங்கிக் கூடாரம் .
எல்லோரைப் போலவே உங்களுக்கும் அரித்திருக்கிறது மூத்த பத்திரிக்கையாளர் மணி அவர்களே
எல்லோரைப் போலவே நீங்களும் சொறிந்து கொண்டிருக்கிறீர்கள்
அந்த அரிப்பும் சொறிதலும் கேவலம் என்பதும் உங்களுக்குத் தெரிந்தே இருந்திருக்கிறது
என்ன, அதை நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள்
நீங்கள் சொன்ன Cheap என்ற வார்த்தையை கேவலம் என்று சொல்லியிருக்கிறேன்
அவ்வளவுதான்
சரி , இதை இவ்வளவு சிரிப்போடா ஒத்துக் கொள்வீர்கள் ?
இரண்டை சொல்லுங்கள் மணி
என்ன அரிப்பு உங்களுக்கு?
சொறிந்து கொண்டதால் என்ன கிடைத்தது?
”மூத்த” என்பதற்கு வயது மட்டும்தான் அளவுகோலா மணி

Friday, February 9, 2024

இதுதான் ஊடக அரசியலுக்கான அறம்

இன்றைய இந்தியத் தேர்தல் களம் பெரிதாக இரண்டாகவும் கொஞ்சம் உதிரிகளோடும்தான் தட்டுப்படுகிறது

ஒரு பக்கம் ஒரே சித்தாந்தம்
ஒரே தலைவர்
யாரும் எதுவும் கேட்கக் கூடாது
கேட்பதில்லை
அவர்களை அச்சமும் சுயநலமும் இப்படியாகக் கட்டிப் போட்டிருக்கிறது
இன்னொருபக்கம் பல்வேறு கட்சிகள்
பல்வேறு கோட்பாடுகள்
பல்வேறு சிந்தனைகள்
அப்படியான சிந்தனைகளுக்குள்ளும் சன்னமாக முரண்கள்
கடந்து ”இந்தியா” என்ற சிந்தனை அவர்களை ஒன்றுபடுத்த முயற்சிக்கிறது
ஆனாலும் முரண்களின் உரசல்களில் சில மாச்சரியங்கள்
ஊடகங்கள் இதை ஏதோ தோல்விபோல குரல் எழுப்புவது அவர்களுக்கே ஆபத்தானது
ஒன்று அந்தப் பக்கம் நில்லுங்கள்
அல்லது இந்த முரண்களைக் களைந்து இவர்கள் ஒன்றுபட வேண்டிய அவசியத்தை எழுதுங்கள்
இதுதான் ஊடக அரசியலுக்கான அறம்

Sunday, January 7, 2024

இந்தியாவைக் காப்பாற்றுவதற்கு

 

”கணசக்தியின்” 58 வது ஆண்டுவிழா கொல்கொத்தாவில் நடைபெற்றிருக்கிறது
அதில் பேசிய ஊடகவியலாளர் சசிகுமார் பேசும்போது
ஜனநாயகம் வெறுமையாக உள்ளது என்றும்
அதற்கு காரணம் சுதந்திரமாக ஊடகங்கள் இல்லை என்றும் கூறியுள்ளார்
விலை போகாத, சுதந்திரமாக இயங்கக்கூடிய, நெருக்கடிகளைத் தாங்கக்கூடிய ஊடகங்களை உருவாக்கினால் ஒழிய

இந்தியாவைக் காப்பாற்றுவதற்கு காலமாகும்

Friday, July 24, 2020

அவரை இயக்குவது பலம் மிக்கவர்கள் என்பது கடந்து நம் எதிரிகள்



வழக்கு பதிவு சரி

ஏன் கைது செய்யவில்லை?

அவரை இயக்குவது பலம் மிக்கவர்கள் என்பது கடந்து நம் எதிரிகள்

எனவே அனைத்துக் எதிர்க் கட்சியினரும் ஒன்றினைந்து அவரது கைதைக் கோரி களமாட வேண்டும்

வழக்கு நீர்த்துப் போகாமல் முன்னெடுக்க வேண்டும்


24.07.2020
மதியம்

Monday, July 20, 2020

இந்தியாவை விற்பதற்கான ஆதரவாளர் என்று

தொலைக் காட்சி வழி உரையாடலை மத்திய அரசு தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்கிறது
அதில் ஒரு பகுதி வெற்றியும் பெற்றிருக்கிறது
அதற்காக இதற்கு முன்புவரை ஏதோ நியாயமான உரையாடலை ஊடகங்கள் வழங்கி வந்ததாகக் கொள்ளத் தேவை இல்லை
ஒருநாள் வலதுசாரி ஆதரவாளார் என்று ஒருவர் வருவார்
அவரே மறுநாள் சங்கரமட ஆதரவாளர் என்று வருவார்
அவரே மறுநாள் அல்லது அதே நாளில் இன்னொரு நேரத்தில் இன்னொரு தொலைக் காட்சியில் பாஜக காரராக விவாதத்தில் கலந்து கொள்வார்
இன்னும் இந்தியாவை விற்பதற்கான ஆதரவாளர் என்று ஒருவரும் வந்ததில்லை என்று நினைக்கிறேன்
ஒருக்கால் அதுவும் நிகழ்ந்து இருக்கக்கூடும்
ஐந்து பேர் விவாதத்திற்கு என்று கொண்டால்
நிச்சயம் மூன்றுபேர் சமயங்களில் நான்குபேர் அவர்களாகவே இருப்பார்கள்
அவர்கள் பேசுவதைவிட கத்துவதே பெரும்பான்மை நேரங்களில் நிகழும்
Aazhi Senthil Nathan சொன்னதுமாதிரி நமது கருத்தாளர்கள் பெரும்பாலும்
”தற்காப்பு ஆட்டத்தைத்தான்” ஆட வாய்த்தது
ஆனால் அதை நம் நண்பர்கள் மிகச் சரியாக செய்தனர்
வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அவர்களை அம்பலப்படுத்தவும் செய்தனர்
இதையே அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை
அதற்கு நியாயமான காரணம் உண்டு
அவர்களது பிரதிநிதிகள் நிறைய பேசினாலும்
நமது மக்கள் குறைவாகவே பேசினாலும்
அதிலும் குறுக்கீடுகள் இருந்தாலும்
நமது நண்பர்கள் மக்களிடம் போய் சேர்ந்தார்கள்
அவர்கள் அம்பலப்பட்டு நின்றார்கள்
பாஜகவின் மிகப்பெரிய கனவு
“தமிழ்நாடு”
இந்த அளவிலான விவாதங்கள்கூட தங்களுக்கு ஆபத்தானவை என்று மிகச் சரியாக உணர்ந்தார்கள்
அவர்களுக்கான குரலைத் தவிர மற்றவற்றை மௌனப்படுத்திவிட முடிவெடுக்கிறார்கள்
விவாதிக்கும் நண்பர்களுக்கும் தொல்லை தந்திருக்கலாம்
அடுத்து அதையும் அவர்கள் தரக்கூடும்
வழக்குகள் பாயலாம்
சிரமப்படுத்தலாம்
அதற்கு முன்னதாக மக்கள் நலனில் ஆதரவு நிலையோடு இருந்த நெறியாளர்களை நெருங்கி இருக்கிறார்கள்
தோழர் அருணன் பேசும்போது,
ஆழியின் மொழியுரிமை விவாதத்தின்போது
புன்னகைத்த நெறியாளர்களையும் அவர்கள் கணக்கெடுத்திருக்கக் கூடும்
அதற்கான சாணக்கிய ஆளுமைகள் தமிழகத்தில் இல்லையா என்ன?
பட்டியல் ரெடி
அவர்கள் நம்புவது இதைத்தான்
ஏற்கனவே உள்ள மூவரோடு நெறியாளரும் சேர்ந்து நண்பர்களை அழுத்த வேண்டும்
நாம் போகாத நிலை வந்தாலும் அவர்களுக்கு மகிழ்ச்சியே
ஆனால் அவர்கள் நினைப்பது நடக்காது
காரணம் இப்போதைக்கு விவாதங்களை மக்கள் பார்ப்பதே நம் நண்பர்களின் செய்தியை, விவாதத்தைக் கேட்பதற்காகத்தான்
இவர்களும் இல்லை எனில்
மக்களுக்கு அது போரடிக்கும்
சரி முடிப்போம்,
ஊடக உரையாடலுக்கான வாய்ப்பு நமக்கு குறைந்திருக்கிறது என்பதை உணர வேண்டும்
நியாயமான ஊடகவியலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை எப்படி எதிர்கொள்வது என்று தீர்மானிக்க வேண்டும்
”யூட்யூப்” உள்ளிட்ட ஊடகங்களைக் கையெடுக்க வேண்டும்
சிறு சிறு துண்டுப் பிரசுரங்கள்
தெருமுனைக் கூட்டங்கள் என்று
மக்களோடு உரையாட ஏராளமான வழிகள் உள்ளன
நம்பிக்கையோடு நகர்வோம்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...