Showing posts with label பிஜேபி. Show all posts
Showing posts with label பிஜேபி. Show all posts

Saturday, June 28, 2025

எடப்பாடி உணரவேண்டியது

 2026 இல் தமிழ்நாட்டில் பாஜக பங்கேற்கும் NDA கூட்டணி ஆட்சி

2026 இல் தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சி
2026 இல் அதிமுக தலைமையில் பாஜக பங்கேற்கும் NDA கூட்டணி ஆட்சி
2026 இல் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி
எடப்படி தலைமையில்தான் கூட்டணி ஆட்சி
எடப்பாடி அல்லாத அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி
என்று மாறி மாறி ஷா பேசுவதும்
இது நியாயமா, அடுக்குமா என்றெல்லாம் விவாதங்கள் கிளம்புவதும் வேடிக்கையாக உள்ளன
இதில் எதுவும் நடக்கப் போவதில்லை என்பது பாஜகவிற்குத் தெரியும்
பிறகு ஏன்?
இப்படியாக அதிமுகவை குழப்பி அதை ஆட்டையப் போட வேண்டும்
ஆக, இந்தத் தேர்தல் என்பது பாஜகவை பொறுத்தவரை அதிமுகவை சிதைத்து ஏப்பம் விடுவதற்கானது
இதை அதிமுக ஊழியன் உணர்ந்திருக்கிற அளவிற்கு எடப்பாடி உணரவில்லை என்பதுதான் துயரமானது

Tuesday, June 24, 2025

நாத்திகர்கள் நாங்களே புன்னகைத்து நழுவும் இடம்

 

ஒரு கிழவி நடந்துகொண்டே இருக்கிறாள்
அசதியாக இருக்கிறது
ஒரு மரம் தென்படுகிறது
நிழலுக்காக ஒதுங்குகிறாள்
ஒரு சுட்டிப் பொடியன் மரத்தின் கிளையொன்றில் அமர்ந்திருக்கிறான்
“பாட்டி” என்று கத்துகிறான்
கிழவி மேலே பார்க்கிறாள்
பசிக்குதா?
ஆமாம்பா
பழம் சாப்பிடுகிறாயா
உலுக்கித் தாயேன்
சரி பெரிசு என்ன பழம் வேண்டும்
நாவல் மரத்தில் மாம்பழமா இருக்கும். உலுக்குடா பொடியா
இல்ல பாட்டி இதுல ரெண்டுவிதமான பழங்கள் இருக்கு
கிழவியே குசும்புக்காரி. குசும்பென்றால் அப்படியொரு ஞானக் குசும்பு. தன்னையே சீண்டுகிறானே என்று ஒரு நிமிடம் குழம்பியவள்
என்ன ?
சுட்ட பழமும் இருக்கு சுடாத பழமும் இருக்கு. எது வேண்டும்
சரி சரி, சுட்ட பழமா போடு. சாப்பிடற சூடில்
உலுக்குகிறான்
பழங்கள் உதிர்கின்றன
பழமெல்லாம் மணல்
மணலை ஊதிக்கொண்டே கேட்கிறாள்
சேட்டக்காரக் கழுத, சுடவே இல்ல
பையன் சொல்கிறான்
சுடாமலா ஊதற
கிழவி வெளவெளத்துப் போகிறாள்
உங்களுக்குப் புரியும் ,
கிழவி அவ்வை, பொடியன் முருகன்
இது அமித்ஷாவிற்குப் புரிய வேண்டும்
இது புனைவாகவேகூட இருந்துவிட்டுப் போகட்டும்
எங்கள் தமிழ் சமய மரபு எங்கள் முருகனை தன் பிள்ளைகளோடு இப்படியாக உறவாடவும் விளையாடவுமாக படைத்தளித்திருக்கிறது
எங்கள் கிழவிமார்கள்
எங்கள் முருகனுக்கே புத்தி சொல்வார்கள்
உன் தத்துவம் தவறென்று சொல்லவும் அவ்வையின் தமிழுக்கு உரிமை உண்டு என்பார்கள்
இந்த இடம் நாத்திகர்கள் நாங்களே புன்னகைத்து நழுவும் இடம்
இது குமரி அனந்தன் அய்யா பொண்ணுக்கே புரியாதபோது அமித்ஷாவிற்கு எப்படி புரியும்
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் என்ற பாடலில் ஒரு இடம்
”சிறப்புடனே கந்தக்
கோட்டமுண்டு உன்
சிங்கார மயிலாட
தோட்டமுண்டு
உனக்கான மனக் கோயில்
கொஞ்சமில்லை
உனக்கான மனக் கோயில்
கொஞ்சமில்லை
அங்கு உருவாகும் அன்புக்கோ
பஞ்சமில்லை
அங்கு உருவாகும் அன்புக்கோ
பஞ்சமில்லை”
அமித்ஷா
எங்கள் முருகனை உங்களுக்குத் தெரியாது
நகருங்கள்
அவனுக்கான மனக்கோயிலில் அன்புக்கு பஞ்சமேயிருக்காது ஷா சார்
அதைக் கெடுக்காமல் நகருங்க சாமிகளா

Thursday, June 12, 2025

இவ்வளவு ஈனத்தனமா எல்லாம் பேசக்கூடாது

 



தம்பி நீங்க மரியாதைக்குரிய ஒன்றிய அமைச்சர்
இவ்வளவு ஈனத்தனமா எல்லாம் பேசக்கூடாது

Friday, June 6, 2025

G7 அமைப்பில் இந்தியா இல்லை

  G7 அமைப்பில் இந்தியா இல்லை

எனவே G7 Summit கு இந்தியாவை அழைக்காததில் ஏதுமில்லை
G20 யில் இந்தியாவிற்கு தலைமைப் பொறுப்பும்
சுழற்சியில் வந்தது என்பதைத் தவிர
சிறப்பாக ஏதுமில்லை

Thursday, June 5, 2025

தனியார் CA நிறுவனங்களிடம் இருந்து

  உள்ளாட்சித் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தணிக்கை செய்வதற்கு

டெண்டர் கோரி இருக்கிறது ஒன்றிய அரசு
இது ஊழலுக்கான அச்சாரம்
தெருவிறங்கி இதற்கெதிராகத் திரள வேண்டும்

Sunday, May 25, 2025

தமிழ் மண்ணின் தொன்மை இந்தியாவின் தொன்மை

 கீழடி தொன்மை தமிழ் மண்ணின் தொன்மை

தமிழ் மண்ணின் தொன்மை இந்தியாவின் தொன்மை
பிற்கேன் ஒன்றிய சங்கிகள் இவ்வளவு பதறுகிறார்கள்?
தமிழ் மண்ணின் தொன்மை அவர்கள் கட்டமைக்க விரும்பும் பாரத தொன்மையை கேள்வி கேட்கும் என்பது அவர்களுக்குப் புரிகிறது
எனவே அவர்கள் பதறுகிறார்கள்
துயரம் என்னவெனில் தமிழ்நாட்டில் உள்ள சங்கிகளும் பதறுவதுதான்

Saturday, May 24, 2025

”மூத்த” என்பது வயது மட்டும்தானா?

 டாஸ்மாக்கில் 1000 கோடிக்கு ஊழல் என்றும்

இதோ ED உதயநிதியைக் கைது செய்யப் போகிறது என்றும் ஒரு பரபரப்பை சங்கிகள் கட்டமைக்கின்றனர்
டாஸ்மாக் சம்பந்தமாக மொத்தம் 47 FIR கள்
அவற்றில் 41 அதிமுக காலத்தைச் சார்ந்தவை
ஆனால் அதை வைத்து திமுக மீது ஒரு போலியான எதிர் பிம்பத்தைக் கட்டமைக்க முயற்சி செய்கிறது சங்கிக் கூடாரம் .
எல்லோரைப் போலவே உங்களுக்கும் அரித்திருக்கிறது மூத்த பத்திரிக்கையாளர் மணி அவர்களே
எல்லோரைப் போலவே நீங்களும் சொறிந்து கொண்டிருக்கிறீர்கள்
அந்த அரிப்பும் சொறிதலும் கேவலம் என்பதும் உங்களுக்குத் தெரிந்தே இருந்திருக்கிறது
என்ன, அதை நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள்
நீங்கள் சொன்ன Cheap என்ற வார்த்தையை கேவலம் என்று சொல்லியிருக்கிறேன்
அவ்வளவுதான்
சரி , இதை இவ்வளவு சிரிப்போடா ஒத்துக் கொள்வீர்கள் ?
இரண்டை சொல்லுங்கள் மணி
என்ன அரிப்பு உங்களுக்கு?
சொறிந்து கொண்டதால் என்ன கிடைத்தது?
”மூத்த” என்பதற்கு வயது மட்டும்தான் அளவுகோலா மணி

எங்கள் ஊரில் மைசூர்பாக் மைசூர்பாக்தான்

 நாங்கள் நாளை உங்கள் நாட்டில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது மட்டும் தாக்குதல் தொடங்க இருக்கிறோம்

உங்கள் வாழிடங்களிலோ, அரசு கட்டிடங்களிலோ, ராணுவ முகாம்களிலோ ஏதும் செய்ய மாட்டோம் என்று தாக்குதல் நடத்துவதற்கு முதல்நாள் பாகிஸ்தானிற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியிருக்கிறார்
இதை அவரே சொல்கிறார்
இதை தேசபக்தி என்றும்
பாக் என உச்சரிப்பது தேசத் துரோகம் என்றும் சொல்கிறார்கள் சங்கிகள்
மைசூர்பாக்கை மைசூர்ஸ்ரீ என்றுதான் அழைக்க வேண்டும் என்கிறார்கள்
இன்று ஐந்து கடைகளில் நூறு நூறு கிராம் மைசூர்பாக் கேட்டேன்
கொடுத்தார்கள்
அதிலும் ஒரு கடையில் மைசூர்பாக் கேட்டது நீங்கதானே என்று கேட்டு என்னிடம் கொடுத்தார்கள்
ஆக எங்கள் ஊரில் மைசூர்பாக் மைசூர்பாக்தான்

Tuesday, April 29, 2025

தயவு செய்து படிக்க வேண்டியதைப் படிங்க

சட்டவிரோதமாக செயல்படுவதாக உச்சநீதிமன்றம் சொன்ன ஒருவர் 

இவரது பணிகளில் நேர்மையில்லை என்று உச்சநீதிமன்றம் சொன்ன ஒருவர்

தனது வேலையை சரிவர செய்யாதவரென்று உச்சநீதிமன்றத்தால் இடித்துரைக்கப்பட்ட ஒருவர் அழைத்தார் என்பதற்காக 

 எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களரசிற்கு குடைச்சல் தருவதற்கு வந்திருந்தாலும் 

 குடைச்சலைத் தருவது யாரென்ற போதும் எதிர்கொள்வோம் என்றபோதும்

 நீங்கள் இன்றையத் தேதியில் எங்கள் ஒன்றியத்தின் இரண்டாவது மகன்

அம்மா இரண்டாவது மகள் புத்தகம் தந்து வரவேற்கிறோம் 
 
தயவு செய்து படிக்க வேண்டியதைப் படிங்க

Thursday, April 17, 2025

திருநெல்வேலியில் ஒரு பள்ளியில்

ஒரு குழந்தை இன்னொரு குழந்தையை அரிவாளால் வெட்டியிருக்கிறான்

பதறுகிறது
ஒன்றும் ஆகவில்லை என்பது கொஞ்சம் ஆறுதலைத் தருகிறது
அரசைக் குற்றம் சொல்கிறார்கள்
பள்ளிக் கட்டமைப்பைக் குற்றம் சொல்கிறார்கள்
ஆசிரியர்கள் சரியில்லை என்கிறார்கள்
குழந்தைகள் சரியில்லை என்கிறார்கள்
எந்த ப்ரிஜுடிசும் இல்லாமல் நெருக்கமான காரணத்தை
திரைப் படங்கள் ஒரு காரணம் என முன்வைக்கிறார் Bhuvana Gopalan
மேற்சொன்ன எல்லாவற்றிலும் உண்மை இருக்கிறதுதான்
ஆனால் அதே திருநெல்வேலியில் இருந்து ஒரு தலைவர்
வைரமுத்த கொல்ல வேணாமா என்று கொலைவெறியை மேடை போட்டுத் தூண்டுகிறார்
ஆன்மீகப் பெரியவர்கள் அந்த மேடையில் அமர்ந்திருக்கிறார்கள்
இதைத் தவறென்று அவர்கள் கண்டிக்கவில்லை
பிரதமர் கண்டிக்கவில்லை
சகோதரிகள் வானதி தமிழிசை என்று யாரும் அவரைக் கடிந்து கொள்ளவோ நெறிப்படுத்தவோ இல்லை
ஒரு தலைவர் இப்படிப் பேசினால் குழந்தைகள் இப்படித்தான் மாறுவார்கள் என்று யாரும் அவர் நோக்கி சுட்டுவிரலை நீட்டவில்லை
கொலைவெறியைத் தூண்டுகிற அந்தத் தலைவரை ஒன்றியத்தை ஆள்கின்ற கட்சி
தனது மாநிலத் தலைவராக அங்கீகரித்து ஆசிர்வதிக்கிறது
துயரம் என்னவெனில் அந்தக் கட்சியும் அந்தத் தலைவரும் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்காகக் கொந்தளிப்பதுதான்

17.04.2025

Tuesday, April 8, 2025

இனி நிர்மலா பெயரைக் கேட்டால் அவனது கண்களும் சிவக்கும்

 நிதியமைச்சர் நிர்மலானு கேட்ட மாத்திரத்தில் உன் கண்களில் தெரியும் வெறுப்பு நான் எப்போதும் உன்னிடம் பார்க்காதது. ஏன் மாப்ள

2018 ஜூன் முதல் வாரம்னு நினைக்கிறேன்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு ஒரு வார்த்தை இரங்கல் கூட பிரதமர் சொல்லவில்லையே பிரதமர் என்று நிர்மலாவிடம் கேட்கிறார்கள்
பொறுங்க அவரிடம் ஏனென்று கேட்டுச் சொல்கிறேன் என்று நக்கலாகக் கூறினார்
அவரது அப்போதைய உடல்மொழி அவ்வளவு அருவெருப்பாக இருந்ததுடா மாப்ள
அதான்
இனி நிர்மலா பெயரைக் கேட்டால் அவனது கண்களும் சிவக்கும்

Tuesday, April 1, 2025

புல்டோசர் முன் நின்றபடி

அது சரி,

அவர்களுக்காச்சும் ஐகானா புல்டோசர் இருக்கு. உங்களுக்கென்னடா இருக்கு மாப்ள?

அவங்களுக்கு புல்டோசர் ஐகான் எனில் எங்களுக்கு

புல்டோசர் முன் நின்றபடி முடிஞ்சா இடிச்சுப் பாரென்று நின்று கர்ஜிக்கும் பிருந்தா படம்டா...

புல்டோசரை தங்களது கம்பீரத்தின் சின்னமாக

யோகி புல்டோசர் கொண்டு இடித்த ஐந்து வீடுகளுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது

ஐந்து வீடுகள்தானா

இல்லையெனில் கண்டுபிடித்து வழக்குத் தொடுக்க வேண்டும்

புல்டோசரை தங்களது கம்பீரத்தின் சின்னமாக பாஜக நினைத்தது

அடி விழுந்திருக்கிறது

Monday, March 31, 2025

அதை சொல்வதற்கான உரிமை நமக்கில்லை

அதிமுக பொதுச் செயலாளர் யார் என்பதை அதிமுகதான் முடிவுசெய்ய வேண்டும்

அதை சொல்வதற்கான உரிமை நமக்கில்லை

ஜெயலலிதா இறந்தது முதலே அதிமுகவை தன் கட்டுக்குள் கொண்டுவந்து கொஞ்சம் கொஞ்சமாக கபளீகரம் செய்வதற்கான முயற்சியில் பாஜக இறங்கியது

கிட்டத்தட்ட தன் கட்டுக்குள் கொண்டும் வந்துவிட்டது

தலைவர்கள் விலைபோய்க்கொண்டு இருக்கிறார்கள்

ஆனாலும் பாஜக உணராததும்

ஒரு போதும் அதனால் உணர்ந்து கொள்ள முடியாததுமான ஒன்று உண்டு

திமுகவோ அதிமுகவோ,

தொண்டர்கள் ஒருபோதும் விலைபோக மாட்டார்கள்

ஒரு கட்டத்தில் அவர்கள் விலை போன தலைவர்களைத் தூக்கி எறிந்துவிட்டு 

தமக்கான தலைவனைத் தேர்ந்தெடுப்பார்கள்

31.03.2025

Thursday, March 27, 2025

செருப்பு விசயத்துலயே .

 தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி இல்லைனு அண்ணாமலை சொல்றாரே மாப்ள

அத்தைக்கும் மீசை முளைக்கலாம் ஆனால் பாஜக வராது என்பது வேறு

செருப்பு விசயத்துலயே அந்தப் பையன நம்ப முடியலையேடா

எடப்பாடி சார் வேண்டுமானால் பம்மலாம்

 நாகை மாவட்டத்தில் உள்ளது தலைஞாயிறு பேரூராட்சி

15 உறுப்பினர்கள்

ஏழு பேர் திமுக

ஏழு பேர் அதிமுக

ஒருவர் பாஜக

அதிமுகவும் பாஜகவும் இணைந்து அதிகாரத்திற்கு வருகிறார்கள்

அதிமுகவைச் சேர்ந்த திருமிகு செந்தமிழ்செல்வி பேரூராட்சி தலைவர்

பாஜகவின் கதிரவன் இணைத் தலைவர்

சுவாரசியம் என்னவென்றால்

திமுகவும் அதிமுகவும் இணைந்து பாக்க கதிரவனை இம்பீச் செய்திருக்கிறார்கள் என்ற செய்தியை 25.03.2025 இந்து தருகிறது

எடப்பாடி சார் வேண்டுமானால்  பம்மலாம் அமித்ஷா சார்

பாஜக விசயத்தில் திமுக அதிமுக ஊழியர்கள் இணைந்து கூட பாஜகவை வீழ்த்துவார்கள்

கவனம்

27.03-2025

Tuesday, September 3, 2024

இந்தியாவிற்குமான திருப்பத்தை மக்கள் தருவார்கள்

தன்வசம் இருந்த ஆறு இஸ்ரேலிய பிணையக்கைதிகளை ஹமாஸ் கொன்றுள்ளதாக தகவல்கள் வருகின்றன

அப்பாவி மக்களை யார் கொன்றாலும் கண்டனத்திற்கு உரியதுதான்
கண்டிக்கிறோம்
இந்த நிலைக்கு ஹமாஸைத் தள்ளியதில் இஸ்ரேலின் அணுகுமுறைதான் காரணம்
இதை மிகச் சரியாக இஸ்ரேலிய மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்
ஹமாஸ் ஆறு இஸ்ரேலியர்களை கொன்றதற்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவின் அலட்சியமும் ஆணவமுமே காரணம் என்றும்
ஆகவே நேதன்யாகு பதவி விலகவேண்டும் என்றும் கோரி
ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தெருவிற்கு வந்திருக்கிறார்கள்
இஸ்ரேலின் மக்கள் தொகை 97 லட்சம்தான்
இதில் குழந்தைகள், முதியவர்கள், இயலாதவர்கள் கணக்கு 30 லட்சம் வரும்
ஆக போராடும் சக்தி கொண்டவர்களில் பன்னிரண்டில் ஒருவர் தெருவிற்கு வந்து விட்டார்கள்
இது சிறுகச் சிறுகக் கூடும்
கிட்டத்தட்ட ஒரு சதவிகிதம் சீனர்களின் போராட்டம்தான் சீனத்தை மாற்றியது
எகிப்து இப்படியான கொதிநிலையில்தான் மாறியது
இலக்கிலும் நெறிப்படுத்துதலிலும் கொண்டிருந்த போதாமை எகிப்தை ஒழுங்கமையாமல் தடுத்தன
கிட்டத்தட்ட இலங்கை
சமீபத்தில் வங்கதேசம்
திருந்தாவிட்டால்
மக்களை முன்னிருத்தாவிட்டால்
இஸ்ரேலுக்கு மட்டுமல்ல
இந்தியாவிற்குமான திருப்பத்தை மக்கள் தருவார்கள்
மக்கள் பலம் எதனினும் பெரிது

Monday, September 2, 2024

ஹிமந்த பிஸ்வா சர்மா யாருக்கும் இரண்டாம் நபராகத் தெரியவில்லை

இஸ்லாமிய எதிர்ப்பில்

அசாம் மாநில முதல்வர்
இஸ்லாமியர்கள்மீது தனது வன்மத்தைக் காட்ட எந்த அபத்தத்தையும் அசிங்கத்தையும் செய்வதற்கு இவர் தயங்குவதே இல்லை
அசாம் சட்டமன்றம் கூடும் நாட்களில்
வெள்ளியன்று மதியம் 12 மணிமுதல் 02 மணிவரை தொழுவதற்காக இடைவேளை விடப்பட்டு வந்ததை ரத்து செய்திருக்கிறார்
பாஜக கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளமும் லோக் ஜனசக்தியும்கூட கடுமையாக எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன

Wednesday, August 14, 2024

பீஹார் மாதிரி தமிழ்நாட்டுக் கல்வியை ...

 திரு ரவி அவர்களுக்கு,
வணக்கம்


தமிழ்நாடு ஏதோ கல்வியில் அதல பாதாளத்தில் இருப்பது போலவும்

ஏதோ இந்தியாவிலேயே நீங்கள்தான் நான்காவது அறிவாளி போலவும் பாவித்துக் கொண்டு

எங்களுக்கு ஞான உபதேசம் செய்வதாக உளறிக்கொண்டிருப்பதையே வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்

விஷேஷம் என்னவெனில்,

உளறுகிறபோதுகூட தவறியும் ஒரு துண்டு உண்மையையும் உளறிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறீர்கள்

உண்மையை சொன்னால்

உண்மையோ ஞானமோ துளியும் இல்லாதவர் நீங்கள்

இப்போது ஒரு தகவல் கிடைத்திருக்கிறது

இந்தியாவில் உள்ள 100 சிறந்த கல்லூரிகளில் 37 தமிழ்நாட்டில் உள்ளதாக அந்த தகவல் கூறுகிறது

அந்தப் பட்டியலில் மன்னர் பிறந்த குஜராத் இல்லை, நீங்கள் பிறந்த பீஹார் இல்லை, யோகி பிறந்த உத்திரப் பிரதேசம் இல்லை

இந்த நிலையில் நீங்கள் தமிழ்நாடு குறித்து தொடர்ந்து இப்படி உளறிக்கொண்டே இருப்பதற்கும்

தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களின் நடைமுறைகளில் அசிங்கமாக தலையிடுவதற்கும்

கொண்டுவந்துவிட வேண்டும் என்பதுதான் உங்கள் செயல் திட்டமோ என்ற அச்சம் வருகிறது

உங்கள் ஞானத்தைப் பயன்படுத்தி பீஹாரை வெளிச்சப் படுத்த முயற்சி செய்யக் கிளம்புங்கள்

Wednesday, July 17, 2024

விக்கிரவாண்டி தரும் பாடம் இதுதான்

 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக பெருவெற்றியைப் பெற்றிருக்கிறது
இந்தத் தேர்தலில் அதிமுக பங்கேற்கவில்லை
அதிமுகவிற்கென்று அந்தத் தொகுதியில் நிச்சயம் 50,000 வாக்குகளாவது இருக்கும்
அவை எங்கு போயின?
அதிமுக ஊழியன் ஒருபோதும் திமுகவிற்கு ஓட்டு போடமாட்டான்
அதிமுக என்பது திமுக எதிர்ப்பில் வளர்வது
திமுக ஒழிக, கலைஞர் ஒழிக, உதயசூரியன் ஒழிக என்பவை அதிமுக கொள்கை என்பதே
இப்போது வேண்டுமானால், ஸ்டாலின் ஒழிக, உதயநிதி ஒழிக ஆகிய இரண்டையும் கொள்கையில் சேர்க்கலாம்
என்றெல்லாம் சொல்லப்படுவது வழக்கம்
இது உண்மையும்கூட
இப்போது பாமக பெற்றிருக்கும் வாக்குகளைப் பார்த்தால்
உதயசூரியன் ஒழிக என்று சொல்லும் அதிமுக ஊழியனே திமுகவிற்கு வாக்களித்திருப்பது புரிகிறது
பாஜககாரர்கள் சொல்கிறார்கள்,
அதிமுகவும் பாஜகவும் கூட்டணி வைத்தால் திமுக காலியாகி இருக்கும்
அய்யோ அய்யோ
பாஜகவோடு அதிமுக கூட்டணி வைத்தால் அதிமுக தோழன் திமுகவிற்கு வாக்களிப்பான்
பாஜக வெறுப்பு என்பது திமுக வெறுப்பைவிட அதிகமாகி இருக்கிறது அதிமுக தோழனுக்கு
விக்கிரவாண்டி தரும் பாடம் இதுதான்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...