“சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே”
இதை கனியன் எழுதி ஏறத்தாழ இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் கடந்திருக்கும்.
சாவது எங்களுக்கு ஒன்றும் புதிது இல்லை. என்ன செய்தேனும் வாழ்வை நீட்டிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சியும் இல்லை. சாதல் என்ற ஒன்று இருப்பதை உணர்ந்தே வாழ்க்கையைத் துவக்கினோம். பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட காலத்தை வாழ்க்கை என ஏற்பதிலும் எங்களுக்கு உடன்பாடு இல்லை. பிறப்பிற்கும் சாவிற்கும் இடைப்பட்ட காலத்தில் உருப்படியாய் நம் சமூகத்திற்கு என்ன செய்திருக்கிறோம் என்பதையே நம் வாழ்க்கையின் அளவாக கொள்கிறோம்.
வாழ்க்கையை, சாவைப் பற்றி வேறெந்தச் சமூகம் இந்த அளவிற்கு யோசித்திருக்கிறது என்று தெரியவில்லை.
“சாதலும் புதுவது இலமே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே”
என்கிற வரிகளுக்கு இப்போது ஒரு தமிழ் இளைஞன் பொழிப்புரையை உண்ணாதிருந்து எழுதிக் கொண்டிருக்கிறான்.
இனவெறி பிடித்ததும், அதன் விளைவாக ஒரு இனத்தை வேரோடு அழித்தொழிக்கும் முயற்சியில் பெருமளவு வெற்றி பெற்றும், அப்படியும் பசி அடங்காமல் மிச்சமிருக்கிற தமிழர்களைக் கொன்றழிக்க தொடர்ந்து முயன்றும் வருகிற இலங்கை அரசு அனுப்பியுள்ள இலங்கை விளையாட்டு வீரர்களை இந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுக்க அனுமதிக்கக் கூடாது என்பது அவனது முதல் கோரிக்கை.
அது இந்த நேரத்திற்கெல்லாம் நிறைவேறாது போனது வேறு விசயம்.
ஆனால் அதில் உள்ள நியாங்களை அரைக்காலே வீசம் அளவிற்கு சுய நினைவு இருப்பவனாலும் தள்ளிவிட முடியாது.
இதை அவன் சொல்லும்போதும் அதில் உள்ள நியாயங்களை நாம் சொல்லும்போதும் சொல்கிறார்கள்,
“விளையட்டை விளையாட்டாப் பாருங்க தோழர், விளையாட்டு இணைப்பதற்காக, பிரிக்கிற வேலைக்கான உங்கள் அரசியலை இதில் திணிக்காதீர்கள்,ஆமாம்.”
நிற வெறியோடு ஆட்டம்போட்டமைக்காக தென் ஆப்பிரிக்காவிற்கு விதிக்கப் பட்டிருந்த தடை நியாயம் என்றால் இனவெறியோடு சதிராடும் இலங்கைக்கு எதிராக சிவந்தன் கேட்கும் தடை ஆயிரம் மடங்கு நியாயம் கொண்டது.
ஜூலை மாதம் இறுதியில் ஒரு நாள் நள்ளிரவில் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறிப் புகுந்து அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த இருபத்தி மூன்று தமிழ் மீனவர்களை இலங்கை கடற்படை வன்மத்தோடு பிடித்துச் சென்று இம்சித்து சிறை வைத்தது.
இதை எதிர்த்து சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் செய்தது. சமீப காலத்தில் எனக்கு மிக அதிகமாக ஆறுதல் அளித்த ஒரு விசயம் இது. அப்போது இடது சாரிகளை மிகக் கடுமையாக விமர்சிக்கும் அதிலும் குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியை உச்ச நிலையில் நின்று பல நேரங்களில் தவறாகவும் கொஞ்சம் விசமத்தோடும்கூட எழுதுகிற வழக்கம் கொண்ட “தினமலர்” “இவரும் ஒரு அரசியல்வாதிதான்” என்று எழுதி அந்தப் போரட்டத்திற்கு ஒரே ஒரு தோழரோடு எந்த வித பந்தாவும் இன்றி மிக எளிமையாக நடந்து வந்த மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் ஜி.ராமக்கிருஷ்ணன் அவர்களது படத்திப் போட்டிருந்தது
இந்தப் பத்தியை நான் எழுதியது எனது சொந்த விருப்பத்தின் பொருட்டே ஆகும்.உலகில் நடக்கும் அநீதிகளுக்கெல்லாம் எதிராக எந்த வித தியாகத்தின் விளிம்புவரைக்கும் சென்று போராடுகிற, மிக எளிமையான வாழ்க்கைக்கு சொந்தக் காரர்களாகத் திகழக் கூடிய தலைவர்களை உள்ளடக்கிய இந்த இயக்கம் ஈழப்பிரச்சினையை ஒரு இன அழிப்புப் பிரச்சினையாக கையில் எடுக்கவில்லையே என்கிற ஆதங்கம் எனக்கும் உண்டு. மட்டுமல்ல அவர்கள் இதை கையெடுக்கும் பட்சத்தில் இன அழிப்பிற்கெதிரான இயக்கம் வலுப்பெறும் என்றும் நான் நம்புகிறேன்.
அந்த இருபத்திமூன்று தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அத்து மீறி நுழைந்து பிடித்துச் சென்றதற்கு அதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக நடந்த இந்தியாவிற்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிராக இந்தியா அடைந்த பெரு வெற்றியைப் பொறுத்துக் கொள்ள முடியாததன் விளைவுதான் என்றும் சொல்லப்படுகிறது. மட்டுமல்ல இந்தியா தொடரை வென்ற நாளில் இருந்து கடலுக்குள் போகும் மீனவர்கள் மிகுந்த அச்சத்தோடே போவதாகவும் கடலுக்குள் போகும் மீனவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கக் கூடும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
ஜூலை இருபத்தி நான்காம் தேதி தினகரனில் ராமேஸ்வரம் மீனவர் சங்க நிர்வாகி சேகர் ‘ இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என்று கோருகிறார்.
ஏற்கனவே உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் மோதுவது உறுதியானபின் ஒருக்கால் அந்தக் கோப்பையை இலங்கையை வென்றிருக்குமானால் அதை தமிழ் மக்களைக் கொன்று குவித்த இலங்கை ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிக்க இருந்தார்களாம்.
நல்ல வேளை தோற்றார்கள். அதன் விளைவு நான்கு தமிழ் மீனவர்களைக் கொன்று குவித்தார்கள்.
இவ்வளவிற்குப் பிறகும் “ விளையாட்டை விளையாட்டாய்ப் பாருங்கள் தோழர்” என்று நம் முன்னே வைக்கப் படும் கருத்துக்களை நம்மால் ஏற்பதற்கு இயலவில்லை.
இதே லண்டனில் இருந்துதான் பேச வரவழைத்திருந்த கூட்டத்தில் பேச வேண்டாம் என்று சொல்லி ராஜபக்ஷேவைத் திருப்பி அனுப்பியது இங்கிலாந்து அரசு. மைனஸ் அளவில் இருந்த குளிரையும் தாண்டி தெறித்த தமிழ்த் திரளின் கோவக் கொதி நிலையை அது அங்கீகரித்தது.
ஆனால் ஒலிம்பிக் என்பது இங்கிலாந்து மட்டும் சம்பந்தப் பட்ட ஒரு விஷயமல்ல. அனைத்து தேசங்களும் உள்ளடங்கிய அமைப்பு சம்பத்தப்பட்ட விசயம் என்பதால்தான் அனைத்து தேசங்களின் கவனத்தையும் இது விசயத்தில் ஈர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்த இளைஞன் ஏறத்தாழ இருபது நாட்களாக உண்ணாதிருக்கிறான்.
பெரிதாய் எதையும் சாதித்துவிடுவோம் என்ற எந்தவிதமான மிகை நம்பிக்கையும் சிவந்தனிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அவன் மிகச் சரியாய் சொல்கிறான்,
“ ஈழமக்களின் பிரச்சினை மீது சர்வ தேசத்தின் கவனத்தைத் திருப்பவே எனது இந்தப் போராட்டம்.”
உலகில் எங்குமே காண இயலாத ஒரு விசயம் இந்தத் தமிழ் இனப் படுகொலைதான். வரலாற்றில் எத்தனையோ இன அழிப்புகளும் இனப் படுகொலைகளும் பதிவாகி இருக்கின்றனதான். ஆனால் இது அவை எதனோடும் சன்னமாகவேனும் பொருந்திபோகாது தனித்திருக்கும் தன்மை கொண்டது. வரலாற்ரில் பதிவாகி உள்ள எந்த இனப் படு கொலாஇயும் இன அழிப்பும் அதன் அரசாங்கத்தாலேயே நிகழ்த்தப் பட்டதல்ல. அப்படி தன் சொந்த மக்களையே கொன்றழித்த ராஜபக்ஷேமீது சர்வதேச நீதிமன்றத்தில் விசாரனை நடத்த வேண்டும் என்பது அவனது இரண்டாவது கோரிக்கை.
09.01.2011 அன்று சென்னையில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் ‘பாகுபாடுகள் மற்றும் இனவெறிக்கு எதிரான சர்வதேச இயக்கத்தின்’ தலைவர் நிமல்கா ஃபெர்னாண்டோ பேசியதைஅதே மாதம் பதினாறாம் தேதி வெளியான ஜூனியர் விகடன் வெளியிட்டிருந்தது. அதை நினைவு கூர்வது இந்த நேரத்தில் அவசியமாகிறது.
“கிழக்கு மாகானத்தில் நல்ல வளங்கள் இருந்த போதும் மக்கள் வேலையின்றி வறுமையில்தான் வாழ்கிறார்கள். இதனால் தமிழ் மக்கள் சொந்த கிராமங்களை விட்டு வெளியேறுகிறார்கள். உடனடியாக, அந்தப் பகுதிகளில் மற்றவர்களைக் குடியமர்த்தி அங்கே இனப் பரப்பல் விகிதத்தை மாற்றி வருகிறார்கள். இஸ்ரேல் - பாலஸ்தீனம் போன்றதொரு மிக மோசமான நிலைமை இலங்கையில் உருவாகிறது.அதுவும் சீனா போன்ற நாடுகளின் உதவியோடு நடக்கிறது.”
இவர் ஒன்றும் தமிழ்ப் பெண்ணுமல்ல. இன்னும் சொல்லப் போனால் தமிழ் பேசவேத் தெரியாத சிங்களப் பெண். இவர் இப்படிப் பேசி இருபது மாதங்களாகின்றன. இந்தக் காலத்தில் நிலைமை இன்னமும் மோசம் அடையவே செய்திருக்கிறது.
தமிழர் பகுதிகளில் சிங்களவர்களை குடியமர்த்துவதை நிறுத்த வேண்டும் என்பதே சிவந்தனின் மூன்றாவது கோரிக்கை.
மட்டுமல்ல தமிழ் யுவதிகளை சிங்கள ஆண்களை விட்டு வன்புணரச் செய்து , அவர்களைக் கர்ப்பமாக்குவதன் மூலமும் இன அழிப்பு வேலையை செய்கிறது சிங்கள அரசு.
முள்ளி வாய்க்கால் பொன்ற வதை முகாம்களிலும் சிறைகளிலும் வாடும் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பது இவனது நான்காவது கோரிக்கை.
அகதிகளாக வருவோரை கருணையோடும், மனிதாபிமானத்தோடும் உலக நாடுகள் ஏற்க வேண்டும் என்பது அவந்து இறுதி கோரிக்கை.
நியாயமில்லாத எந்தக் கோரிக்கையையும் அவன் முன் வைக்கவில்லை.
உலகச் சமூகமே சாவின் விளிம்பின் விளிம்பு வரைக்கும் உண்ணாது சென்று கொண்டிருக்கும் அந்த இளைய மகனது கோரிக்கையைக் காது கொடுத்து கேள். சரி எனப் பட்டால் வினையாற்று.
போதும் சிவந்தா,
இன்னும் நீண்டு போகவே செய்யும் இந்தப் போராட்டம். போராட உன்னைப் போன்ற இளைஞர்கள் வேண்டும். விரதத்தை முடி.
மீண்டும், தமிழர்களைப் பார்த்து நிமல்கா சொன்னதை நினைவு கூர்வது அவசியம்,
“ நடந்ததை மறந்து விடுமாறு அரசாங்கம் திரும்பத் திரும்பச் சொல்கிறது.போரில் அழிக்கப் பட்ட எந்த ஒன்றையும் எளிதில் மறந்துவிட முடியாது. நீங்களும் மறந்துவிடாதீர்கள்.”