Showing posts with label வேண்டுகோள். Show all posts
Showing posts with label வேண்டுகோள். Show all posts

Sunday, June 8, 2025

உபரி

  10 மணி நேரம் வேலை என்கிறார் சந்திரபாபு

அப்போதுதான் உற்பத்தி அதிகரிக்கும் என்கிறார்
தொழிலாளிகளை அதிகப்படுத்தி உற்பத்தி பெருகினால் அது உற்பத்தி அதிகரிப்பு
வேலை நேரத்தைக் கூட்டி அதன் மூலம் அதிகரிக்கும் உற்பத்தி
உற்பத்தி
உபரி லாபம்
உபரி குறித்து பேசவேண்டும்

Monday, January 15, 2024

என்ன நியாயம் இது?

 

பாலின் கொள்முதல் விலையை மூன்று ரூபாய் உயர்த்தி இருக்கிறது மாநில அரசு

நாங்கள் பெரம்பலூர் பால் உற்பத்தியாளர் சங்கத்தில் இருந்துதான் பால் வாங்குகிறோம்

மாதா மாதம் முதல் தேதில் இருந்து நான்காம் தேதி வரைதான் பால் அட்டை வழங்கப்படும்

இந்த மாதம் அட்டை வாங்கிய பிறகுதான் கொள்முதல் விலையை அரசு உயர்த்துகிறது

மிக நல்ல விஷயம்

கொள்முதல் விலை உயர்ந்ததால் விற்பனை விலையை நான்கு ரூபாய் உயர்த்தியது பால் உற்பத்தியாளர் சங்கம்

இதுவும் சரி

அட்டை வாங்கியவர்கள் மிச்சத் தொகையை செலுத்தினால்தான் பால் தொடர்ந்து பெற முடியும் என்று பா. உ.சங்கம் பால் விநியோகிப்பவர்கள் மூலம் தெரிவித்தது

இதுவும் சரி

கட்டி விட்டோம்





அட்டையில் இரண்டாவதாக PAID என்று வைத்திருக்கும் சீல் அதற்கானது

எல்லாமே சரி

அரசு கொள்முதல் விலையை உயர்த்துகிறது

நீங்கள் விற்பனை விலையை உயர்த்துகிறீர்கள்

அரசு உயர்த்திய கொள்முதல் விலை தங்களுக்கு வரவில்லை பால் உற்பத்தியாளார்கள் பெரம்பலூரில் போராட்டம் நடத்தியதை14.01.2024 நாளிட்ட தீக்கதிர் கூறுகிறது

என்ன நியாயம் இது?

Wednesday, January 10, 2024

வேண்டாம் ஸ்டாலின் சார்

அன்பின் ஸ்டாலின் சார்,

வணக்கம்
போக்குவரத்துத் தொழிலாளிகள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள்
புதியக் கோரிக்கைகள் எதுவும் இல்லை
தங்களது பணத்தைத் தரச் சொல்லிக் கேட்கிறார்கள்
துயரம் என்னவெனில்
இந்த வலியை நன்கு உணர்ந்த நீங்கள்
இந்த வலிக்கான நிவாரணம் கேட்டு குரல் குடுத்த நீங்கள்
அவர்களது வலியை உதாசீனப்படுத்துவதுதான்
இப்போதும்கூட தோழர் அ.சவுந்தரராஜன் சொன்னதுதான்
இது எங்களது அரசுதான்
உங்களுக்கும் புரியும்
எங்களது அரசானாலும் அதனோடும் தொழிலாளிகளின் நியாயத்திற்காக மல்லுக்கட்டவே செய்வோம்
நீங்கள் கேட்டுக் கொண்டால் பகலிலும் ஆம்னி பேருந்துகளை இயக்கத் தயாராக இருப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறியிருக்கிறார்கள்
போராடிக்கொண்டிருக்கும் தொழிலாளிகளுக்கு எதிராக
ஆளும் வர்க்கத்திற்கு ஆதாரவாக முதாலித்துவம் அதன் தொழிலாளிகளைக் கொண்டே உதவும்
கவனமாக இருங்கள்
உங்களுக்கும் மக்களுக்கும் ஒன்று சொல்வேன்
இடர் காலங்களில் ஆம்னி பேருந்துகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஓடிப் பதுங்கும்
அப்போதும் மக்களுக்காகவும்
இடர்மிகும் காலத்தில் அரசின் பணிகளுக்கு உதவிடும் வகையிலும்
முழங்கால்த் தண்ணீர் பள்ளிக்கரனையிலும் இப்போது போராடிக்கொண்டு இருக்கும் தொழிலாளிகள் பேருந்துகளை இயக்குவார்கள்
இவர்கள் உங்கள் அரசின் தொழிலாளர்கள் ஸ்டாலின் சார்
2003 என்று பார்க்கிறேன்
ஆணவத்தின் உச்சியில் ஜெயலலிதா அம்மையார்
போராடிக்கொண்டிருந்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஆதரவாக CITU தொழிலாளர்கள் ஒரு போஸ்டர் வைத்தார்கள்
“திருட்டுக் கொடுத்தவன்
திரும்பக் கேட்கிறான்
திருடியவன் சொல்கிறான்
யூ ஆர் அண்டர் அரஸ்ட்”
அப்போது இதை கூட்டம் கூட்டமாக இதைப் பேசுவேன்
திமுக தோழர்கள் கொண்டாடுவார்கள்
வேண்டாம் ஸ்டாலின் சார்
அழைத்துப் பேசுங்கள்
நன்றி
அன்புடன்,
இரா.எட்வின்
10.01.2024

Sunday, January 7, 2024

இந்தியாவைக் காப்பாற்றுவதற்கு

 

”கணசக்தியின்” 58 வது ஆண்டுவிழா கொல்கொத்தாவில் நடைபெற்றிருக்கிறது
அதில் பேசிய ஊடகவியலாளர் சசிகுமார் பேசும்போது
ஜனநாயகம் வெறுமையாக உள்ளது என்றும்
அதற்கு காரணம் சுதந்திரமாக ஊடகங்கள் இல்லை என்றும் கூறியுள்ளார்
விலை போகாத, சுதந்திரமாக இயங்கக்கூடிய, நெருக்கடிகளைத் தாங்கக்கூடிய ஊடகங்களை உருவாக்கினால் ஒழிய

இந்தியாவைக் காப்பாற்றுவதற்கு காலமாகும்

Thursday, January 4, 2024

தெரிந்து கொள்ளும் ஆவல்தான்

 



கீழடியைவிட பழமையான நகரங்கள் ராஜஸ்தானில் இருப்பதாக சார் சொல்லி இருந்தார்
தரவுகளோடு வருமாறும், உரையாடவும் விவாதிக்கவும் காத்திருப்பதாகவும் சொல்லி இருந்தேன்
சாரிடம் தேதியும் இடமும் கேட்க மறந்து விட்டேன்
இப்பவும் சொல்கிறேன்
கீழடியை நிறுவ வேண்டும் என்பதற்காக இதைக் கோரவில்லை
தெரிந்து கொள்ளும் ஆவல்தான்

தரவுகளோடு வாங்க சார்

 

தரவுகளோடு வாங்க சார்
உரையாடலாம்
விவாதிக்கலாம்



Tuesday, January 2, 2024

அந்த அழுகைச்சத்தமாக வருகிற எழுத்துதான் எழுத்து

                                                                                                                                                                               காரைக்குடியின் குறுக்கும் நெடுக்குமாய்

சின்னச் சின்னக் குவியல்களாய்க்

கையேந்தித் திரியும் குழந்தைகள் குறித்து வைத்திருந்தேன்

என்ன நடக்கும் என்று இப்படி புலம்பற என்று

பொதுவில் வைப்பதற்குத் தயங்கி

அழைத்து அறிவுரை கூறிய நண்பர்கள் உண்டு

ஏதும் நடக்குமா?

அப்படியே நடந்தாலும் முழு நிவாரணமாக அது அமையுமா?

”அவர்கள்” நம்புவதுபோல ஏதுமே நடக்காதா?

முடிவு சொல்கிற தெளிவோ அறிவோ எனக்கில்லை

புவியரசு அய்யா ஒருமுறை சொன்னார்,

”ஒரு குழந்தையும் அம்மாவும் நடந்து போகிறார்கள்

அம்மாவை ஒரு சிறு கூட்டம் தொந்தரவு செய்கிறார்கள்

என்ன நடக்கிறது என்று குழந்தைக்குத் தெரியாது

ஆனால் அம்மாவிற்கு ஏதோ ஆபத்து என்பதை அந்தக் குழந்தை உணர்கிறாள்

தன்னால் காப்பாற்ற முடியாது

அழுகிறாள்

சத்தமாய் அழுகிறாள்

அந்தச் சத்தம் அவளது அம்மாவைக் காப்பாற்றும் என்று நம்புகிறாள்

அந்த அழுகைச்சத்தமாக வருகிற எழுத்துதான் எழுத்து”
என்று

அதைத்தான் செய்ய முயற்சிக்கிறேன்

சத்தம் தோழர் வளவன் வசந்தா சித்தார்த்தா அவர்களுக்கு கேட்டிருக்கிறது

நிச்சயமாக ஏதேனும் நடக்கும் என்ற நம்பிக்கைத் துளிர்க்கிறது

அதன் பொருட்டே ஒரு கோப்பை தேநீர் குடித்தேன்

எல்லோரும் சத்தம் போட்டால் இன்னும் கொஞ்சம் உரத்துக் கேட்கும்

அவ்வளவுதான்

பெரியார் மண்

திராவிடம் ஆள்கிற பூமி

பண்டிதருக்கும், திராவிடத்திற்கும், இடதுசாரிகளுக்கும், அம்பேத்கரிஸ்டுகளுக்கும் நிச்சயமாக சொந்தமான பூமி

இந்தப் பூமியில் எந்தக் குழந்தையும்

அது எந்த மண்ணைச் சேர்ந்த குழந்தையாக இருந்தாலும்

கையேந்தக் கூடாது

புத்தகம் கையெடுக்க வேண்டும்

கூட்டம் கூட்டமாக குழந்தைகள் கையேந்துகிறார்கள் என்று கதறுவதும் அதற்காகத்தான்








All rea

எப்பாடு பட்டேனும் பள்ளிக்குள் கொண்டு சேர்த்துவிட வேண்டும்

 

30.12.2023
காலை ஏழரை மணி
காரைக்குடிக்குள் நுழைந்ததும்
ஒரு கடை ஓரமாக காரை நிறுத்திவிட்டு முகவரியை விசாரிக்க இறங்குகிறேன்
ஐந்து அல்லது ஆறு குழந்தைகள் இருக்கும்
கையேந்துகிறார்கள்
இது இயல்பானதாகத் தெரியவில்லை
யாரோ பின்னிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது
எல்லோரும் காரில் ஏறுங்க ஸ்கூலுக்குப் போகலாம் என்றதும் பறந்து விட்டார்கள்
சராசரி வயது எட்டு இருக்கலாம்
நமக்கும் அவசரம்
பிறகு 12 மணி வாக்கில் நானும் செல்வராஜும் இளநீர் பருக அலைகிறோம்
கடைக்கு வந்தால்
அங்கும் மூன்றுபேர் கை ஏந்துகிறார்கள்
அதே வயது
படிக்கிறீங்களா சாமி?
பறந்து விடுகிறார்கள்
மதிய உணவிற்கு மல்லி ஓட்டல் வந்தால்
சைவம் அசைவம் என்று இரண்டு ஓட்டல்கள் அடுத்தடுத்து
இரண்டின் வாயில்களிலும் பத்துப் பேருக்கும் அதிகமாக
கண்ணதாசன் மணி மண்டபம் அருகில்
எங்கு பார்த்தாலும் கையேந்தும் குழந்தைகள்
நிச்சயமாக இது ஒரு நெட்வொர்க்
எந்த ஊர்க் குழந்தைகள்?
எந்த மாநிலத்துக் குழந்தைகள் இவர்கள்?
பின்னே யார்
உடனே பதிவு போடுகிறேன்
காரணம்
நான்கு வருடங்களுக்கு முன் சென்னையில்
இதேபோல ஒரு ஜனவரி ஒன்றில் நான்கைந்து சிக்னல்களில் இதேபோல குழந்தைகளைப் பார்க்கிறேன்
ஆட்டோவில் அமர்ந்தபடி அழுகிறேன்
தோழர் புஷ்பராஜ் தேற்றுகிறார்
என்ன முடியும் என்னால்
ஒன்று முடியும்
எழுதுகிறேன்
அடுத்த நாள் தோழர் வளவன் வசந்தா சித்தார்த்தா அழைத்து சில தகவல்கள் கேட்கிறார்
தெரிந்ததை சொல்கிறேன்
அடுத்தநாள்
கிட்டத்தட்ட 10 குழந்தைகளை மீட்டுள்ளதாகவும்
விடுதிக்கும் பள்ளிக்கும் ஏற்பாடுகள் நடப்பதாகவும் சொல்கிறார்
போனிலேயே அழுகிறேன்
வேறென்ன முடியும் நம்மால்?
இப்போதும் நம்பிக்கை வருகிறது
இதைப் படிக்கும் யாராவது ஏதாவது செய்ய முடியும்
”பசி இல்லாத காரைக்குடி” என்ற அமைப்பின் தோழர் ஒருவர் உரையாடிக் கொண்டிருக்கிறார்
அவர்கள் வெளியூர்ப் பிள்ளைகள் என்கிறார்
கலக்டரிடம் பேசலாமே என்கிறேன்
அந்தக் குழந்தைகள் அமைச்சரிடமே கையேந்தும் என்கிறார்

அந்தக் குழந்தைகளை எப்பாடு பட்டேனும் பள்ளிக்குள் கொண்டு சேர்த்துவிட வேண்டும்
என்ன செய்வதெனத் தெரியவில்லை?
யாராவது சொல்லுங்களேன்

Friday, November 3, 2023

பாஜக நிலைக்கு முரண்படுகிறார் ரவி என்பது ஒன்று

 

தோழர் சங்கரய்யா சுதந்திரப் போராட்ட வீரர்
நாட்டு மக்களுக்காக உழைத்தவர்
அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என்பதுதான் தமது நிலை என்றும்
ஏன் மறுக்கிறார் என்பதற்கு ஆளுனர் விளக்கம் தர வேண்டும் என்றும் அண்ணாமலை கூறுகிறார்
அண்ணாமலை பாஜக தலைவர் என்ற வகையில் இது பாஜகவின் நிலை
இரண்டுதான்
பாஜக நிலைக்கு முரண்படுகிறார் ரவி என்பது ஒன்று
அல்லது
அண்ணாமலையை பாஜக தலைவராக ரவி அங்கீகரிக்கவில்லை என்பது இரண்டு

பட்டம் பெற்ற குழந்தைகளையும் அறிஞர்களையும் அழைத்து

 

தோழர் சங்கரய்யா அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்க மறுத்த ஆளுனர் கலந்து கொண்ட காமரசர் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்திருக்கிறது தமிழ்நாடு அரசு
உணர்வுப் பூர்வமான நன்றி
அரசு ஒரு விழாவினை ஏற்பாடு செய்து
பட்டம் பெற்ற குழந்தைகளையும் அறிஞர்களையும் அழைத்து
முதல்வர் வாழ்த்த வேண்டும்

Thursday, November 2, 2023


 தமிழ் நாடு அரசு அனைவரையும் உள்ளடக்க வேண்டும் என்ற முனைப்போடு

ஏராளம் செலவழித்து ஏராளமாக திகழ்ச்சிகளை நடத்துகிறது

அரசு நடத்தும்

அல்லது அரசின் ஏதோ ஒரு வகையிலான ஒத்துழைப்போடு நடைபெறும்

புத்தகக் கண்காட்சிகள் உள்ளிட்ட கலைவிழாக்களை அரசு இன்னும் எச்சரிக்கையோடு கண்காணிக்க வேண்டும் என்று கேட்கிறோம்

மயிலாடுதுறையில் நடந்த கலைத் திருவிழாவில் ஏகத்திற்கும் குளறுபடிகள் என்று செய்திகள் வருகின்றன

ஒன்றிய அல்லது வட்ட அளவில் வெற்றி பெற்ற குழந்தை மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை என்ற தகவல் உண்மை எனில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

விழாக்களில் பங்கேற்பவர்களின் பட்டியல் நியாயமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்

துண்டு போடறான் என்று சொன்னாலும் கவலை இல்லை

ஏன் நான் இல்லை என்று ஒவ்வொருவருக்கும் உள்ள கேட்கும் உரிமையை உள்ளடக்கியதே இது

இது குறித்து தோழர் Sukirtha Rani இரண்டு நாட்களுக்கு முன்னர் எழுப்பிய கேள்வியையும்

"புத்தகம் பேசுகிறது அக்டோபர் 2023" தலையங்கத்தையும் வழிமொழிகிறேன்

All rea

Wednesday, October 13, 2021

"MADE IN TAMIL NADU"

 "MADE IN TAMIL NADU" என்கிற கருத்தாக்கத்தை முதல்வர் அறிவித்திருக்கிறார்

கொண்டாட்டத்தோடு இதை கொண்டுபோக வேண்டும்
ஆனால் இதே முழக்கத்தை 2017 இல் தோழர் திருமுருகன் காந்தி தொடங்கினார்
அதனால் இதற்கான ராயல்டியை அவருக்கு வழங்க வேண்டும் என்றெல்லாம் கோரவில்லை
"GREAT PEOPLE THINK ALIKE" என்பதாகவும் இது அமைந்திருக்கக் கூடும்
முதல்வருக்கு நாம் சொல்ல வேண்டியது இதுதான்,
நீங்கள் தொடங்கியுள்ள முழக்கத்தை நான்காண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய தோழர் திருமுருகன் மீதும் அவரது இயக்கத்தினர்மீதும் அன்றைய அரசால் வழக்குகள் போடப்பட்டுள்ளன
இந்த முழக்கத்தின் மீது உங்களுக்கு உண்மையிலுமே பிடிப்பு இருக்குமானால் இதை முழங்கியவர்கள்மீது போடப்பட்டுள்ள வழக்குகளை நீங்கள் திரும்பப் பெறவேண்டும்

Wednesday, November 14, 2018

ஆதலினால்கவாத்துசெய்வோம்

"கஜா" புயல் அதிதீவிர புயலாக உருவெடுக்கும். அநேகமாக நாளை மதியம் வாக்கில் பாம்பனுக்கும் நாகைக்கும் இடையே அது 120 வேகத்தில் கரையைக் கடக்கும். அதன் பாதிப்பு 13 மாவட்டங்களில் இருக்கும் என்கிறார்கள்
விஞ்ஞானம் வளர்ந்திருப்பதன் விளைவு இவை
அரசும் ஆலோசனைகளை நடத்துகிறது
கடலூர் மக்கள் எதன்பொருட்டும் தன்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என்று ஒரு அமைச்சர் கூறியிருப்பதை நான் கொண்டாடவே செய்கிறேன்
மக்களும் எதிர்கொள்ளத் தயாராகவே உள்ளார்கள்
மூன்று விஷயங்கள்
1) இதுமாதிரி புயல்களை எதிர்கொள்ளும் அளவிலான மீனவக் குடியிருப்புகள்
2) இதுமாதிரி கடலுக்குள். போகமுடியாத காலங்களில் மீனவர்களுக்கான மாற்று ஏற்பாடு
3) "தானே" கடலூரைத் தாக்கியபோது ஏராளமான மரங்கள் விழுந்தன. அது உண்டாக்கிய சேதம் அளவற்றது.
மரங்களை உரிய முறையில் அவ்வப்போது கவாத்து செய்திருந்தால் அவ்வளவு சேதம் இருந்திருக்காது என்று சொல்லப்பட்டது
"கஜா" வந்து போகட்டும்.
மரங்களை கவாத்து செய்வதை அரசு இயக்கப்படுத்த வேண்டும்
கவாத்து செய்வதால்
1) நீர் செலவு குறையும்
2) மரங்கள் பலப்படும்
3) சேதம் குறையும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...