தமிழ் நாடு அரசு அனைவரையும் உள்ளடக்க வேண்டும் என்ற முனைப்போடு
ஏராளம் செலவழித்து ஏராளமாக திகழ்ச்சிகளை நடத்துகிறது
அரசு நடத்தும்
அல்லது அரசின் ஏதோ ஒரு வகையிலான ஒத்துழைப்போடு நடைபெறும்
புத்தகக் கண்காட்சிகள் உள்ளிட்ட கலைவிழாக்களை அரசு இன்னும் எச்சரிக்கையோடு கண்காணிக்க வேண்டும் என்று கேட்கிறோம்
மயிலாடுதுறையில் நடந்த கலைத் திருவிழாவில் ஏகத்திற்கும் குளறுபடிகள் என்று செய்திகள் வருகின்றன
ஒன்றிய அல்லது வட்ட அளவில் வெற்றி பெற்ற குழந்தை மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை என்ற தகவல் உண்மை எனில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
விழாக்களில் பங்கேற்பவர்களின் பட்டியல் நியாயமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்
துண்டு போடறான் என்று சொன்னாலும் கவலை இல்லை
ஏன் நான் இல்லை என்று ஒவ்வொருவருக்கும் உள்ள கேட்கும் உரிமையை உள்ளடக்கியதே இது
இது குறித்து தோழர் Sukirtha Rani இரண்டு நாட்களுக்கு முன்னர் எழுப்பிய கேள்வியையும்
"புத்தகம் பேசுகிறது அக்டோபர் 2023" தலையங்கத்தையும் வழிமொழிகிறேன்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்