Monday, November 6, 2023

இன்னொன்று தெரியுமா ரஞ்சனா

 

திமிறோடும், நெஞ்சுரத்தோடும் உறுதியாக பாரதியை வழிமொழிகிறேன்,
கல்வி சிறந்த தமிழ்நாடு
வெறுமனே சொல்லவில்லை
யாரோடும் இதுகுறித்து உரையாடவும் சித்தமாகவே இருக்கிறேன்
இது சாத்தியப்பட்டதற்கான பல காரணங்களுள்
பள்ளிக் குழந்தைகளுக்கான கட்டணமில்லா பேருந்து வசதி மிக முக்கியமானது
இது சாத்தியப்பட்டதற்கான முக்கிய காரணங்களுள் முதன்மையானது அரசிடம் பேருந்து இருந்தது
எத்தனைபேர் அப்போது என்னைப் போலவே கத்தினார்கள் என்று தெரியாது
ஜெயலலிதா அவர்கள் பள்ளி நேரத்தை 9 மணிக்கு மாற்றியபோது
இது மோசமான விளைவுகளைத் தரும் என்று கத்தினேன்
ஏன் ஆசிரியர்கள் ஒருமணி நேரம் முன்னதாக வர மாட்டீர்களோ என்று எமது குரலின் ஆன்மாவைக் கொச்சைப் படுத்தினார்கள்
பிரச்சினை வேறு தளத்தில் இருந்து வரும் என்று நாம் எதிர்பார்த்ததைப் போலவே வந்தது
மாணவர்களின் வருகை பாதித்தது
காரணம்
குழந்தைகளின் பள்ளி நேரத்தைப் பொறுத்து முன்னர் வந்து கொண்டிருந்த பேருந்துகளின் நேரம் மாற்றப்படவில்லை
பேருந்து இல்லாத காரணத்தால் குழந்தைகளால் வர முடியவில்லை
இப்படி கல்வி பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பெரும்பகுதி யார் என்பது புரியும்
நேரடியாகக் கல்வி இல்லை என்று சொன்னால் மக்கள் எழுவார்கள்
பள்ளிக்கு வர முடியாத நிலையை செய்துவிட்டல்...
என்று சூது இருந்திருக்க வாய்ப்பில்லை என்றெல்லாம் கூறுவதற்கு இல்லை
ஆக,
கல்வி சிறந்த தமிழ்நாடகவே இருக்க வேண்டும் எனில் குழந்தைகளுக்கு கட்டணமில்லாத பேருந்து அவசியம்
அதற்கு,
பேருந்து அரசிடம் இருக்க வேண்டும்
இரண்டு நட்களுக்கு முன்பு
குழந்தைகளும் இளைஞர்களும் தொங்கிக் கொண்டு சென்ற பேருந்தை மடக்கி ரஞ்சனா என்ற பெண்
மாணவர்களைத் தாக்கி இருக்கிறர்
ஓட்டுனரையும் நடத்துனரையும் அசிங்கமாக பேசி இருக்கிறார்
கைதும் செய்யப்பட்டிருக்கிறார்
கொஞ்சம் குசும்பும் குழந்தைகளிடம் உண்டு
இல்லை என்று மறுப்பதற்கு இல்லை
ஏன் குழந்தைகள் தொங்க வேண்டும்?
பேருந்தில் இடம் இல்லை
ஏன் இடம் இல்லை?
பேருந்துகள் போதவில்லை?
பள்ளி கல்லூரி நேர்த்தில் கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டிய தேவை இருக்கிற நேரத்தில்
இயங்கிக் கொண்டிருக்கிற பேருந்துகளையும் குறைக்கிறோம்
ரஞ்சனாவோ அவரது அமைப்போ என்ன செய்திருக்க வேண்டும்
கூடுதல் பேருந்து கேட்டல்லவா போராடி இருக்க வேண்டும்
அது எப்படி ரஞ்சனா, கேமராவோடு வந்திருக்கிறீர்கள்
எனில்,
உங்களிடம் திட்டம் இருந்திருக்கிறது
இந்தத் திட்டம் தேர்தல் நேரத்தில் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தி தேர்தலுக்கு சாதகமாக்கும் திட்டம்
இன்னொன்று தெரியுமா ரஞ்சனா
ஈரோடு மாவட்டம் கெம்பனூர் என்ற ஊரில் இருக்கும் 18 பழங்குடியின குழந்தைகள் மழை காரணமாக பேருந்து வராத காரணத்தால் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிப்பதாக ஒரு செய்தித் துணுக்கை எனக்கு Anandhi அனுப்பி வைத்திருக்கிறார்
ஏன் அங்கெல்லாம் பேருந்து கேட்டு போராட மறுக்கிறீர்கள்
கூடுதல் பேருந்துகள்
குழந்தைகள் தொங்கத் தேவை இல்லாத அளவிற்கான கூடுதல் பேருந்துகள் அவசியம் முதல்வர் சார்
இதை செய்யுங்கள்
அதன் பிறகு தொங்கக் கூடாது என்று குழந்தைகளுக்கு சொல்லித் தருவோம்
இதை செய்யுங்கள்
தறுதலைத் தனங்கள் தலை தூக்காது

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...