Tuesday, November 7, 2023

குறைந்த பட்சம் லெவியக் கூட்டி விடுவோமா

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அறுபதாவது ஆண்டு துவக்க விழாவை ஒட்டி மண்டலங்கள் மட்டத்தில் கருத்தரங்குகளை நடத்தியது
அதில் ஒரு மண்டல கருத்தரங்கிற்கு பெரம்பலூர் பொறுப்பேற்கிறது
05.11.2023 மாலை 05 மணி
பெரம்,பலூர் அகிலா மஹால்
மூன்று மணியில் இருந்தே தோழர்கள் வரத் தொடங்கி விட்டார்கள்
இந்தக் கருத்தரங்கு என்னுள் ஏற்படுத்திய நான்கு அலைகளை அடுத்தடுத்த பதிவுகளில் வைத்து இணைத்து கட்டுரையாக்கிவிட வேண்டும்
1) கலந்துகொண்ட தோழர்களின் உணர்வுப் பூர்வமான உற்சாகம், அது என்னுள் கொண்டுவந்த மாற்றம்
2) மார்சிஸ்ட் கட்சி தோற்றுவிப்பதற்கான தேவை குறித்த தோழர் மாலியின் உரை
3) என்னை என்னென்னவோ செய்த இரா.சிந்தனின் உரை
4) மிகச் செறிவான தோழர் பி.சண்முகத்தின் உரை
ஆண்களும் பெண்களுமாக தோழர்கள் மேடை ஏறி மேடையில் வைக்கப்பட்டுள்ள பெரிய ப்ளக்ஸ் முன்னால் நின்று செல்பி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்
சிலர் யாரையாவது அழைத்து செல்லைக் கொடுத்து தங்களைப் படம் எடுக்கச் சொல்கிறார்கள்



இது வழக்கமாக எல்லா நிகழ்வுகளிலும் நடப்பதுதான்
ஆனால் அந்த உணர்வுக் கலவையில் நான் முதல் முறையாகக் கரையத் தொடங்கியது அன்றுதான்
அப்படி படம் எடுத்துக் கொண்டு இறங்கி வந்த தோழரிடம், (அவர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்)
தோழர் காப்பியன்,
ஏதோ கல்யாணத்துல போட்டோ எடுக்கற மாதிரி எடுக்கறீங்க தோழர் என்று கேட்டதும்
ஆமாந்தோழர்,
இதுதான் எங்க விஷேசமே. எங்க வீட்டுல இவ்வளவு க்ராண்டால்லாம் விழா நடத்த முடியாது தோழர் என்கிறார்
சன்னமாக கண்கள் உடைகின்றன
அந்த நேரம் பார்த்து தோழர் சுதா அழைத்து நிகழ்ச்சி ஆரம்பிக்கலையா இன்னும் என்று கேட்கவே
நான் அந்தத் தோழர் சொன்னதை சொல்கிறேன்
குரலும் உடைந்திருக்கிறது
அவரும் உடைகிறார்
நமக்கு அவசியம் என்பது பல முழுநேர ஊழியர்களுக்கு ஆடம்பரச் செலவுதான் போலப்பா
என்ன சுதா இது
ஏதாவது செய்யனுமே தோழர்
ஒன்னு செய்யலாம் என்று அவர் முடிப்பதற்குள்
குறைந்த பட்சம் லெவியக் கூட்டி விடுவோமா
செய்வோம் தோழர்
இது மட்டும் தீர்வல்ல என்பது தெரியும்.
நாம் சம்பாரிப்பதில் கட்சிக்கானதை அநியாயத்திற்கு ஆட்டையப் போடுகிறோம் என்ற உறுத்தலில் இருந்து ஓரளவு தப்பித்துக் கொள்ள வேண்டும்
அடுத்த மாதத்தில் இருந்து 500 ரூபாய் சேர்த்துடனும்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...