Friday, December 31, 2021
குறுவையையும் ஒரு கை பார்க்கலாம்
Thursday, December 30, 2021
இந்தாங்க சட்டம் என்கிறார் முதல்வர்
தமிழ்த்தாய் வாழ்த்து நாட்டுப்பாடலாக அறிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளவே முடியாமல் தவிக்கும் H.ராஜாவும்
நாம் கேட்டது வந்திருக்கிறது
உசிலம்பட்டியில் மீண்டும் சிசுக்கொலை தொடங்கி இருப்பதற்கான அறிகுறி தெரியவே
Wednesday, December 29, 2021
மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது உசிலம்பட்டி
அதே காரணத்திற்காக
பட்டைய கிளப்பலாம் வாங்க தோழர்
தோழர் மாதவன் மற்றும் கேத்தரீன் இணையரின் இயக்க வாழ்க்கை என்பது அவர்களது இரண்டு குழந்தைகளையும் இணைத்தவாறே தெளிந்த நீரோடைபோல ஓடக்கூடியது
Tuesday, December 28, 2021
அருள்கூர்ந்து மாற்றித் தொடங்குங்கள்
வீடு வந்ததும் பேத்தியிடம் காண்பிக்கிறேன்
நல்லவர்களா இருந்தா மட்டும் போதுமா?
நல்லவர்களே இல்லை என்கிறார்கள்.
இருக்கிறார்களே தோழர் என்று தொடங்கினால்
நல்லவர்களா இருந்தா மட்டும் போதுமா? என்கிறார்கள்.
இந்தக் குரலை வைத்துக்கொண்டு இவ்வளவு சீக்கிரமா எங்கய்யா போனீங்க மாணிக்கம்
இசை அமைப்பாளரும் பிரபலத் திரைப்படப் பாடகரும் திரைப்பட நடிகருமான மாணிக்க விநாயகம் அவர்கள் காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது சமீபத்தில்தான் ”மனதோடு மனோ” நிகழ்ச்சியில் மாணிக்க விநாயகம் அவர்களது நேர்காணல் ஒன்றினைப் பார்க்க நேர்ந்தது பார்த்து பதினைந்து நாட்களுக்குள் இப்படி ஒரு செய்தி வரும் என்று நினைக்கவில்லை இசை மேதையான C.S.ஜெயராமன் அவர்களின் மருமகனும் சிஷ்யனுமான இவர் 1980 ஆம் ஆண்டில் வானொலி நிலையத்தின் A GRADE MUSIC COMPOSER ஆகிறார் 1984 இல் இருந்து கிராமியப் பாடல்கள், பக்திப் பாடல்கள, என்று ஏறத்தாழ 15,000 பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார் இசை அமைப்பாளர் பர்வீன் மணி அவர்களும் இவரும் இணைந்து “மேக்னோ சவுண்ட்” நிறுவனத்திற்காக ஒரு இசை ஆல்பம் வெளியிடுகிறார்கள் ஒரு நட்சத்திர ஓட்டலில் ”மேக்னோ சவுண்ட்” ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இவர் அந்த ஆல்பத்தில் இருந்து இரண்டு பாடல்களைப் பாடுகிறார் “வீட்டுக்குள்ள இருந்துகிட்டே கதவ சாத்தறா விதிய நெனச்சு அழுதுகிட்டே இருக்கச் சொல்லறா” என்ற பாடலால் ஈர்க்கப்பட்ட வித்யாசாகர் ”தில்” என்ற படத்தில் வாய்ப்பு தருகிறார் “சின்ன வீடா வரட்டுமா” என்ற பாடல் உலகத் தமிழ் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கிறது எப்படி இவ்வளவு நேர்த்தியாக உங்களை செதுக்கிக் கொண்டீர்கள் ? என்ற கேள்விக்கு நிறைய நல்ல பாடல்களைக் காதுகொடுத்துக் கேட்டேன் என்கிறார் எவ்வளவுப் பெரிய ஞானம் இது ஒருமுறை இலங்கையில் இசைநிகழ்ச்சியில் பாடுகிறார் “விடைகொடு எங்கள் நாடே” என்ற பாடலைக் கேட்ட ஒரு தாயார் இவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, எங்களது வலிய உணர்ந்து பாடுறப்பா இந்தக் குரலை வைத்துக்கொண்டு இத்தனை வருஷமா எங்கப்பா இருந்த? என்று கேட்டதை நெகிழ்ந்தபடியே மாணிக்கம் கூறுகிறார் நாம் கேட்பது இதுதான் இந்தக் குரலை வைத்துக்கொண்டு இவ்வளவு சீக்கிரமா ஏம்ப்பா போன? #சாமங்கவிய சரியாக ஒருமணி நேரம் 26.12.2021
Monday, December 27, 2021
ஆணிற்கும் 18 என்க
இன்று
தமிழ்மார்க்ஸ் ட்விட்டர் ஸ்பேசில்
தமிழ்நாடு ஜனநாயக மாதர் சங்கத்தின்
தோழர் சுகந்தி அவர்களின்
பெண்களின்
திருமண வயதை 21 ஆக மாற்ற எத்தனிக்கும் ஒன்றிய அரசின் முயற்சி குறித்த உரை
குறித்து கேட்க வாய்த்தது
தற்போதைய
பெண்கள் திருமணம் செய்துகொள்ளும் சராசரி வயது இருபத்தி இரண்டிற்கும் இருபத்தி
நான்கிற்கும் இடையில் ஊடாடும் உண்மையை ஆய்வுகள் தருகின்றன
தற்போது 18 வயது என்று
இருக்கும்போதே 15 வயது குழந்தைகளுக்கும் சில நேரங்களில் திருமணம் நடக்கத்தான் செய்கின்றன
குறைந்த வயது
திருமண முயற்சிகள் பல தடுத்து நிறுத்தப்படுவதும் வழக்கம் என்பதையும் பள்ளி
ஊழியத்தில் 35 ஆண்டுகளாக இருக்கும் நாம் அறிந்ததுதான்
இதுவரைக்கும்
நாம் அறிந்ததுதான்
ஆனால் அப்படி
தடுத்து நிறுத்தப்பட்ட திருமணப் பெண் குழந்தைகளின் இன்றைய நிலை என்ன என்று தோழர்
சுகந்தி கேட்டபோது
தடுத்ததோடு சில
நேரங்களில் நாமடைந்த திருப்தியின் அல்ப ஆயுளை நினைத்து கவலை பிறந்தது
பெண்கள்
அனைவரும் உயர் கல்வி பயில்வதற்கான சூழலை ஏற்படுத்தினாலே 26 அல்லது 27 வயதுக்கு
முன்பாக யாருக்கும் திருமணம் செய்வதற்கான வாய்ப்பே அமையப் போவதில்லை
வேலைக்காக புலம்
பெயர்ந்து செல்லும் பெற்றோர் அப்படி புறப்படும் முன் குழந்தைக்கு திருமணம் செய்து
வைத்து விடுகிறார்கள் என்கிறார் தோழர்
இது
உண்மையும்கூட
அனைவருக்குமான
வேலைக்கு உத்திரவாதம் தருகிற ஏற்பாட்டை அரசுகள் செய்தாலே எந்த சட்டமும் இல்லாமலே
பெண்களின் சராசரி திருமண வயது 25 ஐத் தாண்டிவிடும்
போக,
21 என்ற சட்டம் வருமானால் பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளுக்கான வாய்ப்புகள் உண்டு
என்று தோழர் சுகந்தி சொல்வதை போகிற போக்கில் யாரும் நிராகரித்துவிட முடியாது
ஆண்களின் வயது 21 என்பதே
ஆணாஅதிக்கத்தின் குறியீடுதான் என்றும் தோழர் சொல்வது நியாயம்தான்
ஆணுக்கும்
பெண்ணிற்கும் திருமண வயது 18 என்பதே சரி என்பதை அனைவரும் ஏற்கவேண்உம்
என்றுகூட சுகந்தி சொல்லவில்லை
விவாதிக்கலாம்
வாங்க என்றுதான் அழைக்கிறார்
இதுமாதிரி நல்ல
முன்னெடுப்புகளை எடுக்கிற தமிழ் மார்க்சிற்கு என்னுடைய அன்பும் நன்றியும்
சாமங்கவிய 52 நிமிடங்கள்
27.12.2021
Monday, November 1, 2021
பிள்ளைகளின் அலப்பறை
ஆறாம் வகுப்பில் நுழைகிறேன்
Thursday, October 14, 2021
செய்யவேண்டும் CPM
திருவண்ணாமலையில் ஆக்கிரமிக்கப்பட்ட ஏழரை ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்கப் போராடிய தோழர்கைளை மாவட்டம் மாவட்டமாக அழைத்து CPM மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி பாராட்டு விழாக்களை நடத்த வேண்டும்
Wednesday, October 13, 2021
நானூறு தேவதைகளின் தகப்பன்
மிகுதியான மன இறுக்கத்தோடு அமர்ந்திருக்கிறேன்.
"MADE IN TAMIL NADU"
"MADE IN TAMIL NADU" என்கிற கருத்தாக்கத்தை முதல்வர் அறிவித்திருக்கிறார்
வாக்கு கேட்டுவிட்டு நகரும் உங்கள் கண்களில்...
டீ மாஸ்டரை கொஞ்சம் ஒதுங்கச் சொல்லி
Wednesday, August 18, 2021
எழுதியவனுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம்
இதை முதலில்.....
அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?
அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...
-
நேற்று “ஆற்றுப்படை” மின்னிதழில் அய்யா சதீஷ் எழுதியிருந்த “நவாப் அமைத்த லிங்கம்” கட்டுரை குறித்து எழுதியிருந்தேன் முருகனின் ஐந்தாம் படை வீட...
-
அத்வானி இல்லாமலா ராமர் கோவில் சாத்தியமானது அவரையே ஆலயத் திறப்பு விழாவிற்கு வரவேண்டாம் என்பதா இது எந்த ஊரு நியாயம் என்கிறீர்கள் அத்வானிக்கே...