Showing posts with label CPM. Show all posts
Showing posts with label CPM. Show all posts

Tuesday, July 28, 2026

வன்னியரசுவிற்கு இது தெரியும்.

 

அனிதாவின் உடல் அரியலூர் மருத்துவமனையில் இருக்கிறது.

CPM கட்சியின் தோழர்கள் ரமேஷ், செல்லத்துரை, மருத்துவர் கருணாகரன்,

விசிகவினர்

அனிதாவின் உறவினர்கள்

மற்றும் பொதுமக்கள் திரண்டு நின்று உடலை வாங்க மறுத்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

திருமா வருகிறார்.

உடலை நல்லடக்கம் செய்வோம் முதலில் என்கிறார்.

மறுத்தபடி கோஷமிடுகிறார்கள்.

மக்களை சமாதானம் செய்ய திருமா பட்ட பாடு சொல்லி மாளாது.

உடலை வாங்கக் கூடாது என்று கோஷமிட்டவர்களில் பேரசிரியர்கள் இருந்தார்கள், அரசு ஊழியர்கள் இருந்தார்கள், ஆசிரியர்கள் இருந்தார்கள், சிபிஎம் தோழர்கள் இருந்தார்கள்,

விசிக தோழர்களும் இருந்தார்கள்.

வன்னியரசுவிற்கு இது தெரியும்.

அந்த ஏழைகளுக்கு நிலம் கிடைக்கும்வரை மகிழ்ச்சியோடு அடி வாங்குவோம்

 


இந்தப் படத்தை தம்பி Senthil Vel பக்கத்திலிருந்து எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

இந்தப் படத்தோடு,

போராடும் தோழமைக் கட்சிகளுக்கே பாதுகாப்பில்லை. மக்களுக்கெங்கே பாதுகாப்பிருக்கப் போகிறது என்று சொல்லியிருந்தார்.

உண்மைதான். என்ன, போராடுவது யாரெனினும் எந்த ஆட்சியிலும் பாதுகாப்பில்லை என்பதுதான் கள எதார்த்தம்.

அவிநாசிக்கு அருகேயுள்ள ஈட்டி வீராம்பாளையத்திலுள்ள அறிவொளி நகரில் வீட்டு நிலமற்ற மக்களுக்கு நிலப்பட்டா வழங்கப்பட்டது.

இது நடந்தது 1994 இல்.

ஆனால் அந்த நிலங்களை அளந்து பயனாளிகளுக்கு இதுவரை வழங்கவில்லை.

இது தொடங்கியபோது ஜெயலலிதா முதல்வர்

பிறகு 1996 முதல் கலைஞர் முதல்வர்

2011 முதல் மீண்டும் ஜெயலலிதா முதல்வர்

பிறகு பன்னீர் செல்வம் முதல்வர்

பிறகு பழனிசாமி முதல்வர்

அதன்பிறகு என் ஆயுளின் சிறந்த முதல்வர் என்று நான் கருதும் ஸ்டாலின் முதல்வர்

இப்போது விஜய்

எல்லோரது காலத்திலும் போராடியாயிற்று

எல்லோரிமும் அடிவாங்கியாயிற்று

இப்போதும் 15 நாட்களுக்குள் அளந்து தருவதாகக் கூறியிருக்கிறார்கள்.

இல்லையென்றால் 17.08.2026 அன்று மீண்டும் வருவோம்

அடிவாங்குவோம்

அந்த ஏழைகளுக்கு நிலம் கிடைக்கும்வரை மகிழ்ச்சியோடு அடி வாங்குவோம்

அவ்வளவுதான் செந்தில்


காணாமல் போனவர்கள் யாரேனும் உள்ளனரா

 

ஒன்றிற்கொன்று தொடர்புடையதும் மிக முக்கியமானதுமான மூன்று செய்திகளை 28.07.2026 தீக்கதிரில் பார்க்க வாய்த்தது.
25.07.2026 அன்று பீகாரில் நீட் தாள் கசிவிற்கு எதிராக டில்லியில் நடந்த ஆர்ப்பட்டத்திற்கு ஆதராக பீகாரில் ஒரு பந்திற்கு SFI உள்ளிட்ட இடதுசாரி மாணவர் அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன.
இதில் கடையை அடைத்துவிட்டு சாலையில் நடந்து வந்த 15 வயது சலீமை பீகார் காவலர் ஒருவர் AK 47 துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்.
நல்வாய்ப்பாக கழுத்தில் இருந்து குண்டு எடுக்கப்பட்டு பிள்ளை நலமாக இருக்கிறான்.
AK 47 காவலருக்கு எப்படி வந்தது? அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

இது போதாது. அவரைக் கைது செய்ய வேண்டும்.
கரப்பான் பூச்சிகள் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டார்கள் என்பதற்காக மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையனவர்கள் முஸ்லிம் என்று அர்பா கானும் ஷெர்வானி என்ற பத்திரிக்கையாளர் கூறுகிறார்.
டில்லி போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டோர்மீது வழக்கெதுவும் இருக்காது. அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது.
இது மீறப்படுவதாகவும். சரி செய்யப்படாவிட்டால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்றும் CJP செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ் கூறுகிறார்.
பாஜகவிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
காணாமல் போனவர்கள் யாரேனும் உள்ளனரா என்பதையும் கண்டடைய வேண்டும்

Thursday, January 15, 2026

எளிய மக்களுக்காக நிற்பதும்

 இன்றைய பொங்கல் பொழுதை மகிழ்ச்சிப் படுத்திப் போயிருக்கிறார்கள் மில்ட்டன் கிராமத்தான், சேகுவாரா, சுபஸ்ரீ மற்றும் அவர்களோடிருந்த மூன்று பிள்ளைகள்

அந்த குழந்தைகள் மூவரின் பெயர் மறந்துபோனதற்காக அந்த மூவரும் என்னை மன்னித்துவிட வேண்டும் என்று கோருவது வெறும் சொற்களல்ல
மில்டன்தான் அந்தப் பிள்ளைகளைப் பார்க்கப் போகிறான்
அப்படியொரு அரட்டை
அம்மாடி
மில்டனும் Indra Kumar ரும் என் பிள்ளைகள்தான்
மில்டன் சார் என்பான், காதில் அப்பா என்று விழும்
இந்திரா அப்பா என்றே அழைப்பான்
கிஷோரையும் இவர்களையும் வேறாக ஒருபோதும் கருதியதில்லை
இந்திரா மகிழ்நனுக்கு கொடுத்த முதல் நேர்காணலைக் கேட்டதும் இரவு தூங்காமல் மகிழ்ந்திருந்தவன் நான்
பாரு இந்திரா திமுககாரய்ங்க உன்ன தூக்கிட்டு போகப்போறாங்க என்று சொன்னேன்
நடந்திருக்கிறது
இந்த அரட்டை கிஷோருக்கும் அவனது நண்பர்களுக்குமான அரட்டையாகவே மகிழவைத்தது
சுபாவை மில்டன் கேட்கிறான்
அரசியலில் யாரை ஆதரிக்கறம்மா?
இந்தியா கூட்டணியை
ஏன்?
எளிய மக்களுக்காக நிற்பதும் அவர்களுக்காகப் போராடுவதும்தான் அரசியல்
சரி, அதனால
கம்யூனிஸ்டுகளும் சிறுத்தைகளும் எளிய மக்கள் பக்கம் நின்று அவர்களுக்காகப் போராடுகிறார்கள்
சரி
அவங்க ரெண்டுபேரும் இந்தியா கூட்டணியில இருக்காங்க. அதனால அத நான் ஆதரிக்கிறேன்
அதையேதான் பிள்ளை சேகுவாராவும் சொல்கிறான்
எல்லோரும் அதைத்தான் சொல்கிறார்கள்
என்னவொரு அரசியல்
யூட்யூப் மீது நம்பிக்கை குறைந்து வருகிற காலத்தில் நம்பிக்கையை கையளித்துப் போயிருக்குதுகள் பொடிசுகள்
மகிழ்ந்திருங்க சாமிகளா
ஆறு பசங்களுக்கும் அன்பும் முத்தமும்

15.01.2026

Thursday, January 1, 2026

அவனோடு நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கிறேன்


 

இந்தப் படத்தை அனுப்பியிருக்கிறான் SFI மாவட்டச் செயலாளர் பிள்ளை ராமு

Al யில் அவனது குறும்பு

பெரம்பலூர் இடதிற்கான என் நம்பிக்கை அவன்

ஆசை ஆசையாக அவனோடு நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கிறேன்

வருவான்

Wednesday, December 24, 2025

பேசாம உட்டிருக்கலாம்

 


அட லூசுங்களா
பேசாம உட்டிருக்கலாம்
இப்ப பேசனதுபோல நாலு மடங்கு விளக்கம் தருவோமே

Wednesday, December 17, 2025

57 என்பது 62 ஆக மாறி இருக்கிறது

 

”57 ஆகிறது
இன்னும் ஒருமுறைகூட அருவாள் சுத்தியலுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை” என்று நொந்துபோய் 17.12.2020 அன்று எழுதியிருக்கிறாய் எட்வின்

இப்ப எப்படி ஃபீல் பண்ற?

57 என்பது 62 ஆக மாறி இருக்கிறது என்பதைத் தவிர வேறு மாற்றம் இல்ல மாப்ள

Friday, July 11, 2025

எவனடா எங்களின் முகவரி கேட்டவன்

 



இருவரின் நேற்றைய (09.07.2025) செயல்கள் என்னைக் கட்டிப்போட்டிருக்கின்றன
கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றுதானே முன்னோர்கள் சொன்னார்கள். பள்ளி இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றா சொன்னார்கள்
கோவில கட்டுங்கப்பான்னா
கோவில் வருமானதில் ஸ்டாலின் கல்லூரிகளைக் கட்டுவது நியாயமா என்று முன்னாள் முதல்வர் மாண்பமை எடப்பாடி உளற
அறநிலையத்துறை விதிகளில் அதற்கு இடமிருக்கிறது
அப்படித்தான்
கல்லூரிகளாகத்தான் கட்டுவோம் என்று நிமிர்ந்து சொன்ன ஸ்டாலின் சாரின் செயல் ஒன்று
இன்னொன்று
நெசத்துக்குமே ரயிலை மறித்து
நெருங்க நெருங்க ரயில் ஓட்டுநருக்கு மரண பயத்தைக் கொடுத்த குழந்தை அகல்யாவின் செயல்
இவளது செயலை
SFI அமைப்பின் முன்னாள் உறுப்பினன்
CPM கட்சியின் ஒரு மாவட்டக்குழு உறுப்பினன் என்ற வகையிலும்
அந்தக் குழந்தையின் தகப்பன் என்ற இடத்தில் இருந்தும் கொஞ்சம் அசைபோடுகிறேன்
எப்படிப் பார்த்தாலும்
சிலிர்க்கிறது
இரண்டு நாட்களுக்கு முன்புதான் எடப்பாடி அவர்கள் “கம்யூனிஸ்டுகள் முகவரி இல்லாமல் நிற்கிறார்கள்” என்று கூறினார்

இந்த மறியல் போரின் வெற்றி தந்த திமிரால் நெஞ்சுப் புடைக்கிறது
”எவனடா எவனடா
எவனடா
எங்களின்
முகவரி கேட்டவன்
இவளடா இவளடா
இவளடா
எங்கள் உயிர்ப்பின்
முகவரி”
என்று கர்வத்தால் கண்கள் சிவந்து கொதிநிலை கொள்கின்றன
வேறொன்றுமில்லை
அடையாளமாக இல்லாமல் ரயில் மறியலுக்கு உயிரை ஊட்டியிருக்கிறாள் பிள்ளை
பார்க்கிறேன்
உற்றுப் பார்க்கிறேன்
பெத்தவன்
ஈரக்குலை நடுங்குகிறது
விபரீதம் நடந்திருப்பதற்கான வாய்ப்புகளைக் கொண்ட நிகழ்வு அது
கவனம் அவசியம்
இப்படியா முறுக்குவ என்று கொட்டவும் செய்கிறேன்
இயக்கம் எழுவதற்கான ஒரு காரியத்தை செய்திருக்கிறாய் என்று பிள்ளையை ஆரத் தழுவி முத்தமும் இடுகிறேன்
10.07.2025

Wednesday, July 9, 2025

நாங்கள் எப்போதும் C/O மக்கள்

  அன்பின் எடப்பாடி சார்,

வணக்கம்
கம்யூனிஸ்டுகள் முகவரியை இழந்துவிட்டார்கள் என்று நக்கல செய்திருக்கிறீர்கள்
அரசியலில் இது சகஜம்தான்
நேரம் கிடைத்தால்
ஏதேனும் ஒரு செய்தித் தாளின் அத்தனை பதிப்புகளையும் வாங்குங்கள்
அவற்றில் மாவட்டச் செய்திகள் என்று ஒரு பகுதி இருக்கும்
நிதானமாகப் படியுங்கள்
எதற்கும் அலைபேசியை அணைத்துவிட்டு படியுங்கள்
அமித்ஷா அழைத்துக் கெடுத்துவிடப் போகிறார்
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏதேனும் சில பகுதிகளில்,
கழிவறை வசதி கேட்டு,
ரேஷன் கடைகளில் வெயிலில் நிற்கும் மக்களுக்கு நிழற்குடை கேட்டு,
மருத்துவமனை கேட்டு,
அர்சு மருத்துவமனைகளின் போதாமையை சுட்டிக்காட்டி,
ஏதேனும் ஒரு தாசில்தாரின் ஆணவத்திற்கு எதிராக,
பேருந்து வசதி கேட்டு,
தங்கள் ஊரிலும் ரயில் நின்றுபோக வேண்டும் என்று கேட்டு,
ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்ற வகையில் ஏழை மக்களின் குடிசைகளைக் காவு கேட்கும் புல்டோசர்களுக்கு எதிராக,
ஆணவக் கொலைகளுக்கு எதிராக,
நெல்லுக்கு, கரும்புக்கு நியாயமான விலை கேட்டு,
ஒன்றிய அரசு தரவேண்டிய நிதியைக் கேட்டு,
தீண்டாமைச் சுவர்களுக்கு எதிராக,
காலியான பணியிடங்களை நிரப்பக் கேட்டு,
நீங்களும் கையெழுத்துப்போட்ட CNAவிற்கு எதிராக,
குழந்தைகளை காவு வாங்கும் நீட்டிற்கு எதிராக,
மதவெறிக்கு எதிராக
பட்டியல் நீளும்
இதுபோன்ற போராட்டங்களில் ஆயிரக்கணக்கில் கம்யூனிஸ்டுகள் நிற்பதை உங்களால் காண முடியும்
மக்களுக்கான போராட்டக் களங்களே கம்யூனிஸ்டுகளின் முகவரி
தோழர் Kanagaraj Karuppaiah சொன்னதுபோல்
நீங்கள் C/O அமித்சா
தெரிந்துகொள்ளுங்கள்,
நாங்கள் எப்போதும் C/O மக்கள்

Sunday, June 8, 2025

உபரி

  10 மணி நேரம் வேலை என்கிறார் சந்திரபாபு

அப்போதுதான் உற்பத்தி அதிகரிக்கும் என்கிறார்
தொழிலாளிகளை அதிகப்படுத்தி உற்பத்தி பெருகினால் அது உற்பத்தி அதிகரிப்பு
வேலை நேரத்தைக் கூட்டி அதன் மூலம் அதிகரிக்கும் உற்பத்தி
உற்பத்தி
உபரி லாபம்
உபரி குறித்து பேசவேண்டும்

Monday, May 5, 2025

கனவு காண காசும் வேண்டும்


தோழர் சுபவீ முதன்முறையாக லண்டன் போனபோது கேட்கிறார்கள்

பார்க்க வேண்டிய இடங்கள் எவை

முதலும் முத்தாய்ப்புமாக ஒரு கல்லறை என்கிறார்

கண்கள் விரிய கேட்டவர் சொல்கிறார்

காரல் மார்க்ஸ் கல்லறை...

ஆம்

இதைப் படித்தபோது கீர்த்தியிடம் சொன்னேன்

எனக்கும் மார்க்ஸ் கல்லறைக்கு மரியாதை செய்யனும் வெள்ளை

அதெற்கெல்லாம் காசிருக்கனும்

நீ மொதல்ல போய் அவர் இருந்திருந்தாலும்

அவராலும் உன் கல்லறைக்கும் வரமுடியாது

ரெண்டுபேரும் காசில்லாதவர்கள்

கனவு காண காசும் வேண்டும் என்றாள்

அப்போது அவள் எட்டு அல்லது ஒன்பாதம் வகுப்பில்

இன்று அவள் MD நீட்டிற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறாள்

மாறவில்லை எதுவும்

முத்தம் மார்க்ஸ்
 

Friday, April 11, 2025

மொழி உயிரனையது

 17.07.1903

ரஷ்ய சமூக- ஜனநாயகக் கட்சியின் இரண்டாவது காங்கிரஸ் பிரஸ்சல்சில் தொடங்குகிறது

கிட்டத்தட்ட 13 அமர்வுகள் அங்கு நடந்த நிலையில்

காவல்துறை அடாவடி செய்யவே

அடுத்த அமர்வுகள் லண்டனுக்கு மாற்றப்படுகிறது

கிட்டத்தட்ட அனைத்து அமர்வுகளுமே போல்ஷிவிக்குகளுக்கும் மென்சிவிக்குகளுக்கும் இடையிலான போராட்டங்களால் நிறைந்து கசிகிறது

மென்சிவிக்குகளின் தலைவராகவே காங்கிரஸ் முழுவதும் செயல்படுகிறார்

மொழிகளின் சமத்துவம் குறித்து பிரச்சினையிலும் குடிமக்களின் சம உரிமையே போதுமானது என்கிறார் மாரித்தவ்

இதை மிகச் சரியாக இதை எதிர்கொள்கிறார் லெனின்

தேசிய இனங்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகள் உள்ளன

சில தேசிய இன மக்கள் தங்களது தாய்மொழியைப் பயன்படுத்தக் கூடாது என்று தடுக்கப்படுகிறார்கள்

எனவே மொழிகளின் சமத்துவம் என்பது முக்கியமானது என்கிறார்

மொழி உயிரனையது

Wednesday, April 9, 2025

சோசலிச எதிர்ப்பு உரையை...

 காங்கிரஸ் இயக்கத்தில் இரட்டை உறுப்பினர் முறை அங்கீரிக்கப் பட்டிருந்த காலம்.

இடதுசாரி சிந்தனை கொண்டவர்களும் இடது சாரிகளும் சோசலிஸ்ட் கட்சியிலும் காங்கிரஸ் கட்சியிலும் உறுப்பினராக இருந்தனர். தமிழ் நாட்டில் தோழர்கள் பி. ராமமூர்த்தி, ஜீவா போன்றவர்கள் இதில் குறிப்பிடத் தகுந்தவர்கள்.
சோசலிசத்தையும் சோவியத் ரஷ்யாவையும் அறவே பிடிக்காத பல தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தனர்.
சோவியத்தையும் சோசலிசத்தையும் வறட்டுத்தனமாக எதிர்த்தவர்களில் ஒருவர் மினுமசானி. அவர் போகும் இடங்களில் எல்லாம் அவை இரண்டிற்கும் எதிராக நஞ்சைக் கக்கும் வழக்கத்திலிருந்தார்.
அவர் ஒரு முறை சென்னையில் பேச வந்திருந்தார். அவர் பேச இருந்த பகுதி அங்கிருந்த அப்போதைய இளம் தோழர்களால் சோசலிச மற்றும் சோவித் ஆதரவை பூசிக் கொண்டிருந்தது.
பேச வந்திருந்த மினு மசானிக்கு இந்த விவரம் எடுத்துச் சொல்லப் பட்டது. தனது சோவியத் மற்றும் சோசலிச பேச்சிற்கு என்ன வரவேற்பு இருக்குமோ என்ற அச்சத்தோடுதான் மினு மசானி பேசினார். ஆனாலும் கொஞ்சமும் சமரசமின்றி தன் நிலையினின்று கொஞ்சமும் பிசகிப் போகாமல் சகட்டுமேனிக்கு கிழி கிழி என்று சோவியத்தையும் சோசலிசத்தையும் கிழித்துப் போட்டார்.
திரண்டிருந்த கூட்டம் ஆர்ப்பரித்துக் கொண்டாடியது.
எல்லோரும் சொல்வது போல் இல்லை. இங்கும் சோவியத் மற்றும் சோசலிச எதிர்ப்பே இருக்கிறது என்று மகிழ்ந்து திரும்பினார்.
எல்லாம் தெரிந்ததாய் நினைத்திருந்த அவருக்கு தெரியாமல் போனது இதுதான்,
அவரது ஆங்கில பேச்சினை தமிழில் பெயர்த்துக் கொண்டிருந்த தோழர் பி. ராமமூர்த்தி அவர்கள் அவரது சோவியத் மற்றும் சோசலிச எதிர்ப்பு உரையை ஆதரவு உரையாக மொழி மாற்றியிருந்தார்.

09.04.2025

Monday, April 7, 2025

கம்யூனிஸ்டுகள் இல்லாவிட்டால் இந்தியா இருக்குமா?

 எங்களை கிண்டல் செய்பவர்களுக்கு (விமர்சிப்பவர்களுக்கு அல்ல) எனக்கும் தோழர் யெச்சூரிக்கும் வேறுபாடெல்லாம் இல்லை

இருவரிடமும் ஒரே நக்கல்தான், ஒரே கேள்விதான்
எம்மிடம் கேட்பதைப் போலவே கேட்டிருக்கிறார்கள்
இந்தியாவில் கம்யூனிஸ்டுகளே இல்லையே
யெச்சூரி சொன்னாராம்
இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகள் இருக்கிறார்களா இல்லையா என்பதல்ல பிரச்சினை
கம்யூனிஸ்டுகள் இல்லாவிட்டால் இந்தியா இருக்குமா?
மிஸ் யூ தோழர்

Sunday, April 6, 2025

நெகிழ்ச்சியும் நன்றியும்


 தங்களிடமிருந்து பிரிந்து வந்த கட்சியின் அகில இந்திய மாநாட்டை வாழ்த்தும் CPI

நெகிழ்ச்சியும் நன்றியும்

மதுரை

06.04.2025

Thursday, April 3, 2025

இந்தியாவும் சிவக்கும்

 மாநாட்டில் எங்கேனும் வைப்பதற்காக தோழர் ஜெயசீலன் கேட்டார்

சில தந்தேன்
அவற்றில் ஒன்று
“இலங்கையே சிவக்குமென்றால்
இந்தியாவும் சிவக்கும்”

03.04.2025

Wednesday, April 2, 2025

கவிதை 04 /2025

 படித்தோரை

படித்த படிப்பிற்கு
பணி தேடித் திரிந்தோரை
பணியில் அமர்ந்தோரை
பணி தந்த ஊதியத்தில்
சொகுசள்ளிப்
புசித்தோரை
காதைத்
திருகி
கரம்பிடித்து
இடதிழுத்து
பசித்தோரை
பசிக்கான காரணத்தை
அறியாத எளியோரை
நினை
அவனுக்காய்
களமேகி உழை என்றுரைத்த
ஊனே
எங்கள் உயிரே
செங்கொடியே
வைகை நீராட
மாமதுரை போனவளே
பார்க்க வாய்க்காமல்
நான் போக வாய்ப்புண்டு
பிள்ளைக்கும்
பேரனுக்கும்
வாய்க்காமல் போனாலும்
என்
எள்ளோ
கொள்ளோ
இல்லை
அடுத்தடுத்து வருபவரோ
உன்னை
கோட்டை ஏற்றி
வருங்காலம்
காப்பார்கள்
இன்குலாப்
இன்குலாப்
இன்குலாப்
ஜிந்தாபாத்

02.04.2025

Friday, March 28, 2025

பார்த்ததில் இருந்து கிடந்து பிசையுது

 



இந்தப் படத்தைப் பார்த்ததில் இருந்து கிடந்து பிசையுது


டில்லி பாபு

10 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்

கண்ணியமான அரசியல்வாதி

இதை போராட்டமாகக்கூட கொள்ள முடியாது

திண்டிவனத்தில் இருந்து ஆந்திரா நகரி வரைக்குமான மற்றும் NH 205 தேசிய நெடுன்சாலைத் திட்டத்திற்குமாக நிலம் கொடுத்த திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு இதுவரை உரிய இழப்பீடு கிடைக்கவில்லை

அதற்காக தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், CPM கட்சியும் போராடிக்கொண்டிருக்கின்றன

அதன் ஒரு பகுதியாக 26.03.2025 அன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுக்கப் போனபோதுதான்

தோழர் டில்லி பாபு இப்படி நடத்தப்பட்டிருக்கிறார்

திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் திரு அந்தோணி கெட்டவார்த்தைகளால் வைதபடியே டில்லி பாபுவை இழுத்து போய் கைது செய்திருக்கிறார்

மாவட்ட ஆட்சித் தலைவரைப் பார்த்து மனு கொடுப்பது என்பது அவ்வளவு மோசமான செயலாகிப் போனதா என்பதை ஸ்டாலின் சார் விளக்க வேண்டும் 

பாலியல் வழக்கு

காவல்துறை விசாரனைக்கு அழைக்கிறது

“முடியாது இப்ப என்ன பன்னுவ” என்று ஆணவத்தோடு பேச, கூடியிருந்தவர்கள் குதூகலித்துக் கொண்டாடியதை வேடிக்கைப் பார்க்கிறது தமிழ்நாடு காவல்துறை

 ஒரு வழியாக விசாரனைக்கு வருகிறார். கோஷத்தோடு அவரை வரவேற்க ஒரு கூட்டமே காவல்நிலையம் முன்பு திரள்கிறது

சேனல்களுக்கு பேட்டி கொடுக்கிறார்கள்

காவலர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள்

நியாயமா ஸ்டாலின் சார் 

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...