Sunday, January 31, 2021

கவிதை 11

 விபத்தில்

எனக்கு
கால் ஒடிந்ததால்தான்
நிகழ்ச்சியை
ஒத்தி வைக்க நேர்ந்ததென்று
அவனிடம் சொன்னதை
என்னிடமும் சொல்லியிருக்கலாம் நீ
விந்தி விந்தியாவது
நடந்து தொலைத்திருப்பேன்
நேற்றவனை பார்க்க நேர்ந்தபோது

கவிதை 10

 குளிருக்கு

இவளிடம்

கோவம் மட்டும்





கவிதை 09

 அறைக்குள் நுழைந்திருக்கும்

இந்தப் பிடிச்சப்பிடி மென் குளிரை
சமாளித்து விடலாம்
வாசிக்கிற சூடில்
ஒருதுண்டு கவிதையும்
ஒரு கோப்பை
சர்க்கரைப் போடாத
பாலற்ற எலுமிச்சைத் தேநீரும்
வாய்த்து விட்டால்

சூத்திர விடுதலைக்கான முன் நிபந்தனை

 தலித்தைவிட சூத்திரன் உசத்தியானவன் என்று சூத்திரர்கள் பலர் கருதுவதும்

ஏதோ தாம் பெரிய அவதாரம் என்பதுபோல் கருதி கிடைக்கிற தலித்துகளைத் தாக்குவதுமாக நகர்வது தொடர் கதையாக இருக்கிறது
ஆவுடையார்கோவிலுக்கு அடுத்துள்ள குணத்திரான்பட்டியைச் சேர்ந்த இளைஞன் மதன்
பொறியியலில் பட்டையம் பெற்றவன்
கோவையில் கார் ஓட்டுனராகப் பணி புரிகிறார்
பொங்கலுக்காக விடுப்பில் வந்திருக்கிறார்
24.01.2021 அன்று மாலை தனது நண்பர்களோடு பட்டமங்கலத்தில் மீன் பிடிக்க சென்றிருக்கிறார்
அவரை தண்ணிகொண்டான் மங்கலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ப்ரதீப், மெய்கண்டன் உள்ளிட்ட இளைஞர்கள் மதனை ஜாதியை சொல்லித் திட்டியும் தாக்கியும் உள்ளனர்
ஒருவழியாகத் தப்பித்து மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்ரு வீடு திரும்பும்போது
மீண்டும் வழி மறித்து தாக்கியுள்ளனர்
ஒருகட்டத்தில் நா வறண்ட நிலையில் தண்ணீர் கேட்ட மதனது வாயில் சிறுநீர் கழித்திருக்கிறார்கள்
போதையில் இருந்த அவர்கள் மயங்கியபோதுதான் மதனால் அங்கிருந்து தப்பிக்க முடிகிறது
என்கிற செய்தியை தம்பி
ஸ்டாலின் தி
தனது பக்கத்தில் வைத்திருக்கிறார்
தலித் என்றால் பரிகசிக்கவும் தாக்கவுமான லைசென்சை இவர்களுக்கு எவன் தந்தது?
அவ்வளவு உயர்வானவர்களா இடை சாதியினர்?
இவர்களே இன்னும் தங்களுக்கான விடுதலைக்காக குரல் கொடுப்பவர்கள்தானே?
எனில்,
இவர்களுக்கும் மேல் யாரோ இருக்கிறார்கள்தானே?
இன்னும் சொல்லப்போனால் இப்படியான ஒரு அடுக்கு ஏற்பாடே அவர்களுக்கு எதிராக எல்லோரும் ஒன்று சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காகப் பார்ப்பனர்கள் செய்ததுதானே
அடுத்தவனை அடிமையாகக் கருதும் இடைசாதிக் காரன் எப்படி தனது விடுதலைக்காக குரல் கொடுக்க முடியும்
இனி இப்படி ஒரு சம்பவம் நடக்காத அளவிற்கு கடுமையான தண்டனை இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கிடைக்க வேண்டும்
எப்போதும் சொல்வதைத்தான் இப்போதும் சொல்கிறேன்
சூத்திர விடுதலைக்கான முன் நிபந்தனை தலித் விடுதலை

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...