Thursday, January 4, 2024

இஸ்மாயில் ராவுத்தர் அவர்களால் ஒரு பிள்ளையார் கோவில் தரப்பட்டிருக்கிறது

 

நேற்று “ஆற்றுப்படை” மின்னிதழில் அய்யா சதீஷ் எழுதியிருந்த “நவாப் அமைத்த லிங்கம்” கட்டுரை குறித்து எழுதியிருந்தேன்
முருகனின் ஐந்தாம் படை வீடான திருத்தணியின் நான்காம் திருச்சுற்றில் நவாப் அவர்கள் அமைத்துக் கொடுத்த லிங்கம் இருப்பதைக் குறித்து அந்தக் கட்டுரை பேசும்
அந்தக் கோவில் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது என்று தெரியவில்லை
அது தேவையும் இல்லை
ஆனால் இந்துக்களின் வழிபாட்டிற்காக கடவுள் சிலைகளை, ஏன் கோவில்களை, வழிபாட்டிற்கான செலவிற்காக பணத்தை, நிலத்தை, நகையை இஸ்லாமியர்கள் கொடுப்பதும் வாடிக்கை
இது, இந்த மண்ணின் மிகப்பெரும் விழுமியம்
இதுதான் சிலருக்கு எரிச்சலாக இருக்கிறது
இந்த எரிச்சலுக்கு எண்ணெய் ஊற்றுவதுபோல ஒரு செய்தியை அண்ணன் G G Rajan Balachandran ஒரு தகவலைத் தருகிறார்
எங்கள் ஊருக்கும் அருகில் உள்ள தோகைமலையில் 03.10.1968 இல் இஸ்மாயில் ராவுத்தர் அவர்களால் ஒரு பிள்ளையார் கோவில் தரப்பட்டிருக்கிறது
அந்தக் கோவிலும் இன்னும் இருக்கிறது




ஆதாரமான கல்வெட்டும் இருக்கிறது



இதுபோல் இன்னும் இன்னும் நிறைய இருக்கும்
அறியத் தருவோம்
இஸ்லாமியத் திருத்தளங்களுக்கும் இந்துக்கள் செய்தது ஏராளம் உண்டு
நமது வேலை
அவற்றைத் தேடி எடுத்து அறியத் தருவதுதான்
இது அன்பின் விளை நிலம்
வெறுப்பால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை சொல்லிக்கொண்டே இருப்போம்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...