எங்கள் மாவட்ட செயலாளர் தோழர் Ramesh Perumaldyfi, தோழர் Kalaiyarasi உள்ளிட்டு 15 தோழர்கள் பண்டகப்பாடி, ஆலந்தூர், பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் உண்டியலடித்திருக்கிறார்கள்
கிட்டத்தட்ட 7500 ரூபாய் வசூல் எனத் தெரிகிறது
இந்தத் தொகை அல்ல
வேலையை விடாதப்பா என்று எத்தனையோ தடவை கேட்டும்
விடாப்பிடியாக கைநிறையத் தந்துகொண்டிருந்த வேலையை உதறிவிட்டு முழுநேர ஊழியராக வேலைக்கு வந்தவர்
படத்தில் இருப்பவர்களில் சிலர் ஒருநாள் சம்பளத்தை தியாகம் செய்து உண்டியலடிக்க வந்திருக்கிறார்கள்
மாறாக இவர்கள் இன்று வேலைக்கு போய் அந்த சம்பளத்தைக் கொடுத்திருந்தாலே இதைவிட அதிகம் சேர்ந்திருக்கும்
இப்படி வீடு வீடாக, கடைக் கடையாக அலையத் தேவை இல்லை
நாடு எப்படி இருக்கிறது,
நாங்கள் யார்,
என்ன செய்கிறோம்
மற்றவர்கள் என்ன செய்கிறார்கள்
என்பதை வீடு வீடாக, கடைக் கடையாகக் கொண்டு சேர்க்கிறார்கள்
நம்பிக்கை இழந்துவிடாதீர்கள்
இருக்கிறோம்
என்ற தைரியத்தைத் தந்துகொண்டு இருக்கிறார்கள்
வேறென்ன வேண்டும்
நம்பிக்கையோடு உறங்கப் போகிறேன்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்