இந்த ஆண்டின் துவக்கத்தில் என்னை மகிழ்வித்தவற்றில் முக்கியமான ஒன்று தனது கட்டுரை ”கீழக்குறிச்சி புத்தர்”
“ஆற்றுப்படை” மின்னிதழில் வந்திருப்பதாக தனது பக்கத்தில் தோழர் செல்வ பாண்டியன் வைத்திருந்தது
மிகவும் மகிழ்ந்தவனாக அந்த இதழுக்குள் நுழைந்து
செல்வ பாண்டியனின் கீழக்குறிச்சி புத்தரையும் வாசித்தேன்
மற்றவற்றை வாசிக்க வேண்டும்
சதீஷ் அவர்கள் திருத்தணியில் நான்கு திருச்சுற்றுகள் இருப்பதாகக் கூறுகிறார்
நான்காவது சுற்று குறித்து முடிக்கும்போது ஒற்றை வரியில் மிக முக்கியமான ஒன்றைச் சொல்கிறார்
நான்காம் சுற்றில் காதர் நவாப் என்பவர் அமைத்த லிங்கம் இருப்பதாகப் போகிற போக்கில் சொல்லிவிட்டு சென்று விடுகிறார்
காதர் நவாப் அமைத்த லிங்கம் என்பது ஒரு செய்திதான்
ஆனால் நமக்கோ மதநேயத்தின் அடிவேர்
ஒரு இஸ்லாமியர் லிங்கம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்
இது தமிழ் மண்ணின் விழுமியம்
தேட வேண்டும்
கொண்டுபோக வேண்டும்
நன்றி சதீஷ் சார்
அடுத்து நம்ம தோழரின் கட்டுரை
தமிழ்நாட்டில் புத்தருக்கு எங்கெங்கு சிலைகள் இருக்கின்றன?
அவற்றில் எத்தனை சேதமடைந்திருக்கின்றன?
தலையற்ற புத்தர் சிலைகள் எங்கெங்கு உள்ளன?
புத்தர் சிலையின் தலைகள் மட்டும் எங்கெங்கு உள்ளன?
எந்தெந்த புத்தர் சிலைகள் யார் யார் பொறுப்பில் உள்ளன?
போன்றவற்றிற்கு தூக்கத்தில் இருக்கும் தோழரை எழுப்பிக் கேட்டாலும் சரியாக சொல்வார்
கீழக்குறிச்சி நான் விளையாடிய ஊருக்குப் பக்கத்து ஊர்
பொன்மலை இருக்கும் ஊர் பொன்மலைப்பட்டி
பக்கத்து ஊர் பொன்மலை
புத்தரை பூதம் என்கிறார்கள்
புத்தர் சிலையைத் தொட்டால் அழிந்து போவோம், அல்லது கெட்டது நடக்கும் என்கிறார்கள்
புத்தர் தலையை வெட்டியவர்கள் செய்நேர்த்திமிக்க தச்சர்களும் சிற்பிகளும் என்கிறார் செல்வபாண்டியன்
புத்தரை பூதம் என்றும் அவரைத் தொட்டால் அழிந்துபோவோம் என்ற கற்பிதத்தை யார் செய்தார்கள்
அதன் பின்னுள்ள அரசியல் என்ன?
சிலையை உடைப்பவன் எப்படி சிற்பி ஆவான்?
புத்தரைப் பற்றிய இந்த கற்பிதங்கள், மற்றும் அரசியலுக்கான பின்னணியை நன்கு அறிந்தவர் செல்வ பாண்டியன்
நமக்கு அவர் கட்டுரைகளாகத் தரவேண்டும்
வச்சிக்கிட்டு வஞ்சனை செய்யாதீங்க பாண்டியன்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்