Monday, January 8, 2024

நிச்சயம் வருவோம்

 




கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் ஆயிற்று  ஆட்சியிழந்து

ஒருபுறம் மாநில ஆட்சி

இன்னொரு புறம் ஒன்றிய அரசு

இரண்டும் மல்லுக்கட்டிக் கொண்டு அழித்துவிட ஆனதை எல்லாம் செய்துகொண்டிருக்கின்றன

காவல்துறை, குண்டர் படை எல்லாவற்றையும் ஏவிப் பார்த்துவிட்டார்கள்

எத்தனைப் பலிகள்

எத்தனை விதமான பயமுறுத்தல்

வந்துவிடு இல்லையேல் குடும்பத்தையே அழிப்போம் என்பதுமாதிரி மிரட்டல்கள்

வாக்குப்போட வெளியே வரவிடாமல் தடுக்கும் வன்முறை

இவை எல்லாம் கடந்து,

இவர்கள் மக்களுக்கானவர்கள் என்று நம்பி எங்களோடு நின்ற அனுதாபிகளிடம் அப்பட்டமான பொய்ப் பிரச்சாரங்கள்

பதிலளிக்க வாய்ப்பே தராமல் வன்முறையான அவதூறுகள்

இப்போதுதானே தமிழில் மரிச்ஜாப்பி 

இன்னும் அதுகூட என் போன்றவர்கள் கைகளில் இல்லை

இத்தனையும் கடந்து இத்தனை எழுச்சி 

எழுவோம்

கற்றுக்கொண்டே எழுவோம்

முன்னிலும் பலத்தோடு எழுவோம்

முன்னிலும் இன்னும் இன்னுமாய் மக்களோடு பினைந்து நிற்போம்

ஒன்றே ஒன்றுதான்

நிச்சயம் வருவோம்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...