அப்பா மாதிரியான
இன்னொருவரும்
ஞாயிறு மதியம் செத்துப் போக
காரியம் இன்று
வாசலில்
தேநீர்ப் பருகிக் கொண்டிருப்பவர்களைக் கடக்கையில்
என்னைப் பார்த்துப் புன்னகைக்கிறார் அவர்
அவர்தான் செத்துப் போனாரே
யாரது பின்ன?
யாராவாவது இருக்கும்
இருக்கட்டும்
அவராகவே கொள்தல்
மாயயையாக இருக்கட்டும்
மாயயைகள் சமயத்தில் இனிக்கும்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்