விஜய் தொலைக்காட்சியில் இன்று அழகில் சிறந்தவர்கள் கேரளப் பெண்களா? தமிழ்ப் பெண்களா? என்கிற தலைப்பில் நீயா நானா நடக்க இருப்பதாக அறிய முடிகிறது.
பெண்களைக் கேவலப் படுத்துவது போல இந்தத் தலைப்பு இருப்பதாக நிறைய எதிர்விணைகளை முகநூலில் பார்க்க முடிகிறது. அவற்றில் சில மேம்போக்காகவும் சில மிக ஆழமாகவும் அமைந்திருக்கின்றன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபோது கேரள முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் அந்த மாநிலத்தின் கவர்னரும் ஒரே விமானத்தில் பயனித்து சென்னை வந்து சென்னை விமான நிலையத்திலிருந்து ஒரே வாடகைக் காரில் வந்து மரியாதை செலுத்திவிட்டு அதே வாடகைக் காரில் விமான நிலையம் போய் அங்கிருந்து கேரளா போகிறார்கள்.
இந்த எளிமைக்கு காரணம் அந்த மூவரில் தனிப்பட்ட வகையில் யாருமல்ல. அது அந்த மண்ணின் வெகுஜன அரசியலின் கலாச்சாரம். இந்தக் கலாச்சாரம் ஏன் தமிழ் மண்ணில் இல்லை என்கிற விவாதத்தை எந்த ஊடகமும் தொடங்க வில்லை?
அந்த மநிலத்தில் முன்னாள் முதல்வர்கள் போதுப் பேருந்துகளில் மிக சகஜமாக பயணிக்கிறார்கள்.
கல்வியில் மிகச் சிறந்து விளங்குகிறது.
இவை பற்றியெல்லாம் ஏன் ஊடகங்கள் விவாதங்களைத் தொடங்குவதில்லை என்றெல்லாம் கேள்விகள் முகநூலில் எழுகின்றன.
மகிழ்ச்சியாக இருக்கிறது.
அங்கங்கு நமது எதிர்ப்பை நம்மால் முடிந்தவரைத்ந்திரண்டு காட்டினால் என்ன?
அல்லது கேரளாவிற்கும் நமக்குமான வேறுபாடுகள் குறித்து பொதுவெளியில் நாம் பேசினால் என்ன?
அல்லது கேரளாவிற்கும் நமக்குமான வேறுபாடுகள் குறித்து பொதுவெளியில் நாம் பேசினால் என்ன?