Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Sunday, June 1, 2025

சொத்து ஒரு குடும்பத்தைப் படுத்தும் பாடு

 தூங்குவதற்கு முன்பாக சொல்வதற்கு இரண்டு


மதுரையில் முதல்வர் ஸ்டாலின் ரோட் ஷோ நிகழும் இடங்களில் பந்தல் குடியும் உண்டு

அந்தப் பகுதியில் உள்ள தூர் வாரப்படாத சாக்கடை இருக்கிறது

இந்தப் பகுதி அவரது கண்களில் பட்டுவிடக்கூடாது என்பதற்காக துணி கொண்டு மறைக்கப்பட்டிருக்கிறது

இது திராவிட மாடலுக்கு எதிரானது என்பது ஒன்று

பாமகவில் நடந்துகொண்டிருப்பது அரசியல் மோதல் அல்ல

அது சொத்து ஒரு குடும்பத்தைப் படுத்தும் பாடு குறித்த தெறிப்பு என்பது இரண்டு

#சாமங்கவிந்து ஒரு மணி எட்டு நிமிடங்கள்
01.06.2025

Wednesday, March 26, 2025

திமுக கூட்டணியை இவர்கள் கெட்டிப்படுத்தி இருக்கிறார்கள்

 உறவினர் வீடுகளில் தொடர் ரெய்டுகள்

முன்னாள் அமைச்சர்களின் கழுத்தைக் குறிபார்த்து தொங்கும் கத்திகளாக ஊழல் வழக்குகள். அதனால் அவர்கள் தரும் நெருக்கடி
போக, இன்னொரு பக்கம் கொடநாடு வழக்கு
எடப்பாடி சாரால் வேறு எதுவும் செய்ய இயலாது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது
ஆனால் அதிமுகவைப் பொறுத்தவரை இது ஒரு வரலாற்றுப் பிழை
தங்களுக்கு எதிரான இன்னொரு காரியத்தையும் இதன் மூலம் இவர்கள் செய்திருக்கிறார்கள்
இதன்மூலம் உடைந்தால் பாஜக வந்துவிடும் என்ற அச்சத்தை கொடுப்பதன்மூலம் திமுக கூட்டணியைக் கெட்டிப்படுத்தி இருக்கிறார்கள்

Monday, March 24, 2025

எல்லாம் அந்தக் கொடி தந்த தெம்புதாம்பா

 இவர் போராடி இருக்கலாம்

அவற்றில் வெற்றியும் பெற்றிருக்கலாம்
ஆனாலும் இனி இவரால் ஒன்றும் வாய்க்காது
இவரைப் போய் மாநில செயலாளராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று
தோழர் Shanmugam Perumal அவர்களையும் அவரைத் தேர்ந்தெடுத்த கட்சியையும்
போகிற போக்கில் எழுதிவிட்டு போயிருந்தார்

எப்போதும் நான் மதிக்கும்
அவரது நான்கு வரி இரங்கலுக்காகவே அவருக்கு முன்னால் போய்விட வேண்டும் என்று நான் ஆசைப்படும் என் மரியாதைக்குரிய நண்பர்
நண்பர்கள் சுட்டினார்கள்
இதற்கிடையில் தோழர் P.S அவர்களோடு இரண்டரை மணி நேரம் பயணிக்கும் வாய்ப்பு முந்தா நாள் கிட்டியது
இடையே சொன்னார்
வாச்சாந்தி போராட்டம் குறித்து ஒரு பெண்ணிடம் நேர்காணல் எட்வின்
இத்தனை வலி, இத்தனை இழப்பு, இத்தனை தாமதம்
இத்தனையையும் எந்தத் தெம்பில் தாங்கி, விடாது போராடினீர்கள்? என்று கேட்டதும் அந்தப் பெண்
எல்லாம் அந்தக் கொடி தந்த தெம்புதாம்பா என்று கட்சிக் கொடியைக் காட்டினாராம்
P.S போராடியாதாக PS அவர்களை வைத தோழரே பதிந்திருக்க
கொடி போராடியாதவே P.S கருதுகிறார்
இவ்வளவுதான்

Sunday, March 2, 2025

அவர் வியாபரம் செய்கிறார்

 ஒரு வாரத்திற்கு முன்னர் தவெகவின் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா நடந்தது

தேர்தல் ஸ்ட்ரேடஜிஸ்ட் ப்ரசாந்த் கிஷோர் அவர்கள் அதில் ஒரு சிறப்பு விருந்தினர்
சொன்னார்,
”விஜய்தான் தமிழ்நாட்டின் நம்பிக்கை”
தவெகவும் தனது கட்சியான ’ஜன் சுராஜ்’ கட்சியும் எட்டு சதவிகிதம் அல்லது பத்து சதவிகிதம் வாக்குகளையெல்லாம் பெற இயலாது. அதற்கு பத்து ஆண்டுகள் உழைக்க வேண்டும்
என்று இப்போது பேசி இருக்கிறார்
வேறொன்றும் இல்லை
அவர் வியாபரம் செய்கிறார்

02.03.2025

Sunday, February 4, 2024

இதை விஜய் தெளிவுப் படுத்தட்டும்

 

தான் “தமிழ் நாடு” என்று சொல்லப் போவதில்லைஎன்றும்

ஏன் எனில் இது நாடு அல்ல என்றும்
தான் தமிழகம் என்று அழைப்பதைப் போலவே

மக்களும் ”தமிழகம்” என்றுதான் அழைக்க வேண்டும் என்று ஆளுனர் ரவி கூறினார்
சென்ற ஆண்டு குடியரசுதின விழா தேநீர் விருந்திற்கான அழைப்பிதழில்கூட
“தமிழக ஆளுனர்” அழைப்பதாகத்தான் அச்சடித்திருந்தார்
மக்கள் கொதித்தப் பிறகு அதை மாற்றினார்
அது விஷயத்தில் தன்னையும் மாற்றிக் கொண்டார்
ஆளுனர் பயந்து பின்வாங்கிய விஷயத்தை விஜய் கையெடுக்கிறார்
ஆளுனர் “தமிழகம்” என்றதற்குப் பின்னால் ஒரு சித்தாந்தம் இருந்தது
அது தமிழர்களுக்கு எதிரான சித்தாந்தம்
மூன்று இருக்கின்றன
அந்த சித்தாந்தத்தோடு விஜயும் உடன்படுகிறார் என்பது ஒன்று
தன்னால் முடியாததை விஜயை வைத்து ஆளுனர் முயற்சிக்கிறார்
அல்லது,
ஆளுனரால் முடியாததை விஜய் முயற்சித்துப் பார்க்கிறார் என்பது இரண்டு
ஏதோ ஒரு ப்ளோவில் இந்தப் பெயர் வந்துவிட்டது என்பது மூன்று
இதை விஜய் தெளிவுப் படுத்தட்டும்
மற்றபடி நடிகர் அரசிலுக்கு வரலாமா? என்பதெல்லாம் அபத்தம்
இயங்கட்டும்
அதை விமர்சிக்கலாம்
All reactions

Wednesday, January 24, 2024

பட்டேலுக்கு ஏன் சிலை வைத்தீர்கள் ரவி

 சுதந்திரத்திற்கு காரணம் காந்தியல்ல சுபாஷ்தான் என்பதை ஏற்பதில் சங்கடமில்லை

யார் கூட
யார் குறைச்சல் என்பதல்ல எமக்கு பிரச்சினை
அது உண்மையெனில்
சுபாசுக்கு வைக்காமல் பட்டேலுக்கு ஏன் சிலை வைத்தீர்கள் ரவி

Thursday, January 4, 2024

இரண்டும் ஒரே குரல்

 

திமுகவும் நாங்களும்தான்
வேறு யாரும் இல்லை என்கிறார் அண்ணாமலை
பாஜகவும் நாங்களும்தான் வேறு யாரும் இல்லை என்கிறார் திமுக எம்பி

இரண்டும் ஒரே குரல்
திமுக நண்பர்கள் கவனப்பட வேண்டும்

Wednesday, July 26, 2023

என்ன பயம் திரு நரேந்திரர்?

 அத்தனை ஆயிரங் கோடியைக் கொட்டி நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்டியாயிற்று

உங்கள் மனங்குளிரப் பார்த்துப் பார்த்துக் கட்டிய கட்டிடம்
புதிய அரண்மனையைத் திறக்கும்போது அந்நாட்டின் சக்கரவர்த்திக்கு தரப்பட்ட அத்தனை மரியாதையையும் ஏறத்தாழ உங்களுக்கு நீங்கள் விரும்பியபடி கொடுத்தாயிற்று
ஆகமத்திற்கு உட்பட்ட வைணவக் குருக்கள்
ஆகமத்திற்குள் வராத சைவ சன்னிதானங்கள் உள்ளிட்டு
அனைவரையும் உள்ளடக்கிய
அனைத்து யாகங்களையும் நடத்தி
ஏறத்தாழ உங்களுக்காகவே நீங்கள் கட்டிய அரண்மனையொத்த நாடாளுமன்றத்தின்
நீங்கள் ஆசைப்பட்டு பெற்ற செங்கோல் இருக்கும் தர்பாருக்குள் வந்து பரிபாலிக்க
என்ன பயம் திரு நரேந்திரர்?

பாஜக விரும்பிகிற ஆட்டத்தை நீங்கள் ஆடாதீர்கள்

 ஒரு மரம் விழுந்தால் கொஞ்சம் சுற்றுப் பகுதியில் அதிர்வுகள் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே

மணிப்பூர் என்பது இந்தியா என்ற ஒரு உடலின் ஒரு அங்கம்
ஒரு உடலின் ஒரு அவயத்தில் ஊறு ஏற்பட்டால் அது அடுத்தடுத்த அவயங்களை பாதித்து மொத்த உடலையும் காவு கேட்கும்
இந்த உண்மையை மணிப்பூர் கலவரமும் நமக்கு உணர்த்த ஆரம்பித்துள்ளது
மணிப்பூர் கலவரத்தின் அதிர்வுகளை மிசோரமும் அசாமும் உணர ஆரம்பித்திருக்கின்றன
மிசோரத்தில் உள்ள பாம்ரா என்ற அமைப்பு மெய்தி மக்கள் மிசோரத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறியிருக்கிறது
சாலை வழியாகவும் ஆகாய மார்க்கமாகவும் மெய்தி மக்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர்
மிசோரத்தில் உள்ள மெய்தி மக்களில் பெரும்பாலானோர் அசாமில் இருந்து சென்றவர்கள்
எனவே
அசாமில் உள்ள ”மணிப்பூர் - அசாம் மாணவர் கூட்டமைப்பு” இதனால் எரிச்சலடைந்துள்ளது
அசாமில் வசிக்கும் மிசோரம் மக்கள் உடனடியாக அசாமை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்த அமைப்பு எச்சரித்திருக்கிறது
இந்த நிலையில்,
”பாம்ரா” அமைப்பினரை அழைத்து அவர்களோடு உரையாடலை நடத்திய பின்பு
மெய்தி மக்கள் மிசோரமைவிட்டு வெளியேற வேண்டாம் என்றும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும்
மிசோரம் முதல்வர் ஜோரம் தங்கா கேட்டுக் கொண்டிருக்கிறார்
இந்த அளவில் மெல்லிசாக ஒரு அப்பாடா போட்டுக் கொள்ளலாம் என்று பார்த்தால்
அதற்கும் வழி இல்லை
மணிப்பூரில் குக்கிகளுக்கு தனி நிர்வாகக் கவுன்சில் உருவாக்க வேண்டும் என்று ஜோரம் தங்கா கேட்கிறார்
மணிப்பூர் பழங்குடியினருக்கும் மிசோரம் பழங்குடியினருக்கும் உறவு இருக்கும் நிலையில்
இது மிசோரத்தை அகண்ட மிசோரமாக்கும் முயற்சி என்று
இன்னொரு புகைச்சல் கிளம்பியுள்ளது
”நான் இந்தியாவை நன்கு உணர்ந்திருக்கிறேன். என்ன செய்தால் இந்தியாவின் பகுதிகள் எப்படி எதிர்வினையாற்றும் என்பது எனக்குத் தெரியும்.
வடகிழக்கு இந்தியாவில் நீங்கள் ஒரு மோசமான காரியத்தை ஆரம்பித்து விட்டீர்கள்.
அது இந்தியாவிற்கு நல்லதல்ல. உங்களுக்கும் நல்லதல்ல.
எனவே அதை உடனடியாக நிறுத்துங்கள்” என்று
ஏற்கனவே ஒருமுறை நாடாளுமன்றத்தில் ராகுல் கூறியதாக ”லிபர்டி” யூட்யூப் சேனலுக்கான ஒரு நேர்காணாலில் பத்திரிக்கையாளர் கார்த்திகேயன் கூறுகிறார்
எனில்,
இரண்டு புலனாகிறது
இதை இவர்கள் திட்டமிட்டு ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது ஒன்று
இதை நன்கு உணர்ந்ததோடு மட்டுமல்லாமல் இவர்களை எச்சரிக்கவும் செய்திருக்கிறார் ராகுல் என்பது இரண்டு
என்ன செய்யலாம்?
ஒரு மாபெரும் போராட்டம் தேவை
அடிக்கடி சசிகாந்த் சொல்வதை எதிர்க்கட்சிகளுக்கு நினைவூட்ட வேண்டும்
பாஜக விரும்பிகிற ஆட்டத்தை நீங்கள் ஆடாதீர்கள்
அவர்களை நீங்கள் தடுப்பாட்டதை ஆட வையுங்கள்
அல்லது
தேசம் எரிகிறது. அந்நிய சக்திகள் ஆடுகிறார்கள். எங்களைவிட்டால் ஆளில்லை என்று வந்து விடுவார்கள்
நம் மக்கள் இளகியவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்

Thursday, October 13, 2022

கோர்ட்டாச்சு அவராச்சு

அறியப்பட்ட வருமான ஆதாரங்களில் இருந்து திரு ஆ.ராசாவின் சொத்து 579 சதவிகித அளவு உள்ளது என்று அவர்மீது குற்றம் சாட்டப்படுகிறதே தற்கென்ன?

அதுபத்தியெல்லாம் பேசமாட்டியோ?
ஏன், அதைபத்தி நீ பேசேன்
நீ பேசமாட்டியா என்பதுதான் முதல் கேள்வி
”மாப்ள அதை அவர் பார்த்துகுவார்.
கோர்ட்டாச்சு அவராச்சு.
அதுமட்டுமில்ல
சனாதனத்தை வலுவா எதிர்க்கிற நான்கைந்து திமுககாரங்கள்ள அவரும் ஒருவர்,
அவர் பேசினா மதவெறியர்கள் அலறுறாங்க பாரு.
அதற்காக அந்தப் புள்ளியில் அவரோடு இருப்பதே என் பணி
அப்ப ஊழலை பேசமாட்டியா?
இப்பவும் சொல்கிறேன், அதை கோர்ட்டும் அவரும் பார்த்துக்குவாங்க

Thursday, October 6, 2022

அரசாங்கம் எங்கள் அரசாங்கம்

 


நாங்கள் அதைத் தருகிறோம்

இதைத் தருகிறோம்

சம்பளம் தருகிறோம் என்கிறீர்கள்
நீங்கள் தருமளவு உங்களிடம் ஏது இவ்வளவு
அரசாங்கம் தருகிறது
அரசாங்கம் எங்கள் அரசாங்கம்
அது எந்தக் கட்சியின் அரசாங்கமானாலும்
அரசாங்கத்தைக் கட்டமைத்து எங்களுக்கு பணி செய்யும் வேலையை உங்களுக்குத் தந்திருக்கிறோம்
உங்களுக்கும் சம்பளம் தருகிறோம்
கார் தருகிறோம்
பெட்ரோல் தருகிறோம்
வீடு தருகிறோம்
இன்னும் என்னென்னமோ தருகிறோம்
எங்களுக்குப் பிடிக்கவில்லை எனில் உங்களை வீட்டிற்கும் அனுப்புவோம்
இதை முதல்வர் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்
அதானால் அவரை நேசிக்கிறோம்
புரிந்து வைத்திருக்கிற அமைச்சர்களையும் மதிக்கவும் நேசிக்கவுமே செய்கிறோம்
இதை மற்ற அமைச்சர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்

உலகம் கொஞ்சம் கொஞ்சமாய் சிவப்பது புரிகிறதா?






உலகம் கொஞ்சம் கொஞ்சமாய் சிவப்பது புரிகிறதா?

அமெரிக்காவை மீட்டெடுக்க அமெரிக்க கம்யூனிஸ்டுகள் போதும் பைடன்






 

Wednesday, October 5, 2022

யார் காங்கிரசின் தலைவர் என்பது காங்கிரசின் வேலை

 காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் நடக்க இருக்கிறது

தேர்தலில் போட்டியும் இருக்கிறது
போட்டியில் திரு மல்லிகார்ஜுனே அவர்களும் போட்டியிடுகிறார்
இதுவெல்லாம் அவர்களது உட்கட்சி விஷயங்கள்
இந்த நிலை காங்கிரஸ் கட்சியில் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடும்
அந்த வகையில் காங்கிரஸ் உத்வேகம் பெறுவது இந்த நாட்டுக்கும் நல்லதே
தேர்தலில் போட்டி இருக்கிறது என்ற வகையில் போட்டியாளர்கள்
ஏன் தான் வெற்றிபெற வேண்டும் என்றும்
ஏன் தன்னை எதிர்த்து போட்டி இடுபவர் தோல்வி அடைய வேண்டும் என்றும் கட்சி வாக்காளர்களிடம் பிரச்சாரம் செய்வது இயல்பானது
அவர் யார், இவர் யார்
யார் கட்சிக்குத் தேவை என்று அந்தக் கட்சியனர் கூடி விவாதிப்பதும் புரிந்துகொள்ளக் கூடிய ஒன்று
காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக யார் வந்தால் நமக்கு வசதி என்று மற்ற கட்சிகள்
குறிப்பாக பாஜக எதிர்பார்ப்பதையும் புரிந்துகொள்ள முடியும்
யார் காங்கிரசின் தலைவராக வரவேண்டும் என்று கார்பரேட் முதலாளிகள் விரும்புவதும் இயல்புதான்
யார் வந்தால் பாஜக மதவெறி பாசிச எதிர்ப்பு வலுப்படும் என்ற கணக்கை பொதுமக்கள் போடுவதும் ஏற்கக்கூடியதுதான்
இந்தி எழுத்தாளர் ஆதேஜ் ராவல் காங்கிரஸ் கட்சியின் தேர்தலில் திரு மல்லிகார்ஜுனே போட்டியிடுவது குறித்து எழுத வரும்போது
”கருப்புக் குதிரையைவிட கருப்பானவர் காங்கிரஸ் கட்சித் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடுகிறார்”
என்று எழுதி உள்ளதைக் கண்டித்து ஆசிரியர் வீரமணி 02.10.2022 விடுதலையில் எழுதி உள்ளார்
பிரச்சினை எழுந்ததும்
குதிரை பேரம் நடக்கிறது,
கருப்பு பணம் விளையாடுகிறது
அதைப் பற்றிதான் எழுதினேன் என்று சமாளிக்க முயன்று அம்பலப்பட்டு நிற்கிறார்
நானொன்றும் காங்கிரஸ்காரன் அல்ல
ஆனாலும்
அதேஜ் ராவலின் குரல் சனாதனத்தின் குரல்
காங்கிரசில் யார் வரவேண்டும் என்பதற்கு இவருக்கு காரணம் இருக்கலாம்
அதுகுறித்து எழுதலாம்
ஆனால் மல்லிகார்ஜுனே கருப்பு நிறத்தவர்
ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவர்
ஆகவே அதை இவர் கிண்டல் செய்வார் என்றால்
காங்கிரசிற்கு உயர்சாதியை சார்ந்தவர், வெள்ளை நிறத்தவர்தான் வரவேண்டும் என்ற இவரது சனாதனப் புத்தி முந்திரிக்கொட்டையைவிட வேகமாக முன்னுக்கு வந்து நிற்கிறது
இவர் கருப்பு நிறத்தவர்
ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பது மட்டுமல்ல
அவர் சனாதனத்திற்கு எதிராகவும் மதச்சார்பின்மைக்கு ஆதரவாகவும் தொடர்ந்து பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் குரல் கொடுப்பவர்
அதில் இரண்டு சம்பவங்களையும் ஆசிரியர் தருகிறார்
27.11.2015 அன்று பாராளுமன்றத்தில்
மதச்சார்பின்மை, சமதர்மம்” ஆகியவை அம்பேத்கார் அறியாதவை என்றும்
அரசமைப்பு சட்டத்தின் 42 வது திருத்தமாக அவை சேர்க்கப்பட்டதாகவும்
ஆகவே ”மதச்சார்பின்மை” என்ற வார்த்தையையே ஒழிக்க வேண்டும் என்று
ராஜ்நாத்சிங் பேசியவுடன் எழுந்த மல்லிகார்ஜுனே
அந்த இரண்டு வார்த்தைகளும் அம்பேத்கார் கொண்டுவர நினைத்த வார்த்தைகள் என்றும்
அவர்கள் தடுத்துவிட்டதாகவும் கூறியதோடு நில்லாமல்
“நீங்கள் ஆரியர்கள், வேறு நாடுகளில் இருந்து வந்தவர்கள்
நாங்கள் 5000 ஆண்டுகளாக இங்கு வசிக்கிறோம். பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிறோம். ஆனாலும் இங்குதான் வசிப்போம்”
என்றும் கூறுகிறார்
நான் ஆரியன் அல்ல, இந்த மண்ணின் மகன்” என்று மல்லிகார்ஜுனே பேசியதுதான் அவர்களின் கோவத்திற்கு காரணம்
மல்லிகார்ஜுனே ஆரியன் அல்ல
அவர் ஒடுக்கப்பட்ட பிரிவை சேர்ந்தவர்
அதுமட்டும் அல்ல
அவர் அதை உணர்ந்தவராகவும்
அதற்கு எதிராடுபவராகவும் இருக்கிறார்
ஆகவே அவர் காங்கிரசின் தலைவராகக் கூடாது என்று காங்கிரசிற்கு வெளியே இருக்கும் ஆரியர்கள் கத்துகிறார்கள்
யார் காங்கிரசின் தலைவர் என்பது காங்கிரசின் வேலை
மல்லிகார்ஜுனே வெற்றி பெறலாம்
தோற்கலாம்
தோற்றால்
அது இந்தக் காரணத்தினால் என்று இருக்கக் கூடாது
அவ்வளவுதான்
#சாமங்கவிய 50 நிமிடங்கள்
03.10.2022

Wednesday, September 14, 2022

இன்னும் கொஞ்சம் கூடுதலாய் கவலைப் படுகிறோம்



கோவாவிலும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவிற்கு தாவியுள்ளார்கள் என்பதில் பகடி செய்ய ஏதும் இல்லை
இது ஜனநாயகத்தின் மீது
மக்கள் அளிக்கும் தீர்ப்பின் மீது
நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் கவலைப்பட வேண்டிய விஷயம்
கவலைப் படுகிறோம்
இதுகுறித்து காங்கிரஸ் கவலைப்படாதது குறித்து இன்னும் கொஞ்சம் கூடுதலாய் கவலைப் படுகிறோம்

Tuesday, June 28, 2022

நிச்சயம் இந்தியாவும் ஒருநாள் சிவக்கும்

 





சன்னஞ் சன்னமாய் உலகம் சிவந்து கொண்டிருக்கிறது

அதைப் பார்க்க நாங்கள் இல்லாமல் வேண்டுமானால் போகலாம்
ஆனால் நிச்சயம் இந்தியாவும் ஒருநாள் சிவக்கும்

Sunday, June 12, 2022

ரெண்டுமே அசிங்கம்

 பழைய சேகர்பாபுவைப் பார்க்க நேரும் என்று சேகர்பாபுவும்

அதற்கு பதில் அளிப்பதாக நினைத்துக்கொண்டு
பழைய அண்ணாமலையைப் பார்க்க நேரும் என்று அவரது ஆதரவாளர்களும்
பேசுவதாகத் தெரிகிறது
ரெண்டுமே அசிங்கம்

முகநூல்
12.06.2022

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...