Showing posts with label தமிழ்நாடு அரசியல். Show all posts
Showing posts with label தமிழ்நாடு அரசியல். Show all posts

Saturday, June 28, 2025

எடப்பாடி உணரவேண்டியது

 2026 இல் தமிழ்நாட்டில் பாஜக பங்கேற்கும் NDA கூட்டணி ஆட்சி

2026 இல் தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சி
2026 இல் அதிமுக தலைமையில் பாஜக பங்கேற்கும் NDA கூட்டணி ஆட்சி
2026 இல் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி
எடப்படி தலைமையில்தான் கூட்டணி ஆட்சி
எடப்பாடி அல்லாத அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி
என்று மாறி மாறி ஷா பேசுவதும்
இது நியாயமா, அடுக்குமா என்றெல்லாம் விவாதங்கள் கிளம்புவதும் வேடிக்கையாக உள்ளன
இதில் எதுவும் நடக்கப் போவதில்லை என்பது பாஜகவிற்குத் தெரியும்
பிறகு ஏன்?
இப்படியாக அதிமுகவை குழப்பி அதை ஆட்டையப் போட வேண்டும்
ஆக, இந்தத் தேர்தல் என்பது பாஜகவை பொறுத்தவரை அதிமுகவை சிதைத்து ஏப்பம் விடுவதற்கானது
இதை அதிமுக ஊழியன் உணர்ந்திருக்கிற அளவிற்கு எடப்பாடி உணரவில்லை என்பதுதான் துயரமானது

Sunday, June 8, 2025

அன்புமணியும் அனைத்து அக்காக்களோடும்

  முகுந்தன் அரசியல் பொறுப்பை ஏற்பதைவிடவும் தொழில் செய்வதிலேயே ஆர்வமாயிருக்கிறார்

என்று ராமதாஸ் சொல்வதுதான் கருத்தில் கொள்ள வேண்டியது
குடும்ப பைசல் முடிந்துவிட்டது
முகுந்தனுக்கு வேறுவகையில் செட்டில் செய்தாயிற்று என்றே தெரிகிறது
இனி சௌம்யாவோடு முகுந்தன் அம்மா இணைந்து போஸ் கொடுப்பார்
போஸ் கொடுப்பார்
முகுந்தனும் தாய்மாமனும் இணைந்து சிரிப்பார்கள்
தன் அம்மாமீது அன்புமணி பாட்டிலை எறிந்தார் என்று சொன்னேனா
விடுங்கள்,
எந்த மகன் தன் அம்மாமீது பாட்டிலை எறியவில்லை என்பார் டாக்டர்
எல்லோருமாக சேர்ந்து அமித்ஷாவை சந்திப்பார்கள்
எனக்கென்ன கோபம் என்றால்
ஒத்துக்கலைனா அன்புமணி சிறைக்கு போகனும்னு சொல்லும் நாம் ஏன்
அந்த ஊழலை அம்பலப் படுத்தத் தயங்குகிறோம் என்பதில்தான்

Sunday, June 1, 2025

சொத்து ஒரு குடும்பத்தைப் படுத்தும் பாடு

 தூங்குவதற்கு முன்பாக சொல்வதற்கு இரண்டு


மதுரையில் முதல்வர் ஸ்டாலின் ரோட் ஷோ நிகழும் இடங்களில் பந்தல் குடியும் உண்டு

அந்தப் பகுதியில் உள்ள தூர் வாரப்படாத சாக்கடை இருக்கிறது

இந்தப் பகுதி அவரது கண்களில் பட்டுவிடக்கூடாது என்பதற்காக துணி கொண்டு மறைக்கப்பட்டிருக்கிறது

இது திராவிட மாடலுக்கு எதிரானது என்பது ஒன்று

பாமகவில் நடந்துகொண்டிருப்பது அரசியல் மோதல் அல்ல

அது சொத்து ஒரு குடும்பத்தைப் படுத்தும் பாடு குறித்த தெறிப்பு என்பது இரண்டு

#சாமங்கவிந்து ஒரு மணி எட்டு நிமிடங்கள்
01.06.2025

Monday, April 14, 2025

கொஞ்சம் பொறுங்கள் மார்க்ஸ்

 அன்பின் மார்க்ஸ்,

வணக்கம்
அந்த இந்தியச் சீமான் ஒரு வழியாக சென்னை வந்து சேர்ந்தார்
அவ்வளவுதான் என்றார்கள்
எல்லோரும் வரிசையாக வந்து பாதம் பணிவார்கள் என்றார்கள்
பூச்சாண்டியாக மட்டும் பார்க்கக்கூடாது
அவர்களை ஆராயவும் வேண்டும் என்றீர்களே
அவர் சாதாரண பூச்சாண்டியல்ல பிள்ளைப் பிடிக்க வந்த பூச்சாண்டி என்று தெரிந்திருந்தது எல்லோருக்கும்
சாத்திய வீட்டிற்குள்ளிருந்து ஜன்னலைக் கூட திறந்து பார்க்கவில்லை சித்தப்பாவே என்றால் பாருங்கள் மார்க்ஸ்
அந்த சீமான் வந்ததே சித்தப்பாவிற்காகத்தான்
வேறொன்றுமில்லை மார்க்ஸ்,
சித்தப்பாவிற்கு பின்னால் ஒரு இருபது சதம் வாக்கிருக்கிறது
வருகிறாயா இல்லையா என்று மிரட்டினார்கள்
வரவில்லை
சித்தப்பாவிடம் இருக்கும் 20 சதம் வாக்கு சீமானின் முகத்தில் வழிந்த அவமானத்தைத் துடைத்தது
வீர சாணக்கியன் சித்தப்பா வீட்டுக் கதவைத் தட்டினார்
அந்த நேரம் பார்த்து சித்தப்பாவின் சம்பந்தி அலைபேசியில் அழைத்தார்
சித்தப்பா கண்முன் கம்பிகள்
கதவைத் திறந்து காபி கொடுத்தார்
சம்பந்தம் கலந்ததாக சாணக்கியன் சொன்னார்
சித்தப்பாவிற்கும் ஈயாடவில்லை
20,000 புத்தக அலமாரிக்கும் ஈயாடவில்லை
நாலு கோடி ரூபாய் டிராலியும் சாணக்கியத் துருவும் சிரித்தன
அற்பவாதம்தானே மார்க்ஸ்
அற்பவாதத்தின் மீதான தாக்குதலை கூராக ஒருங்கிணைக்காத நீயும் அற்பவாதி என்றுதானே சொல்ல வருகிறீர்கள்
கொஞ்சம் பொறுங்கள் மார்க்ஸ்
செவிட்டு மிசினை கழட்டி விட்டு வருகிறேன்

Monday, March 31, 2025

அதை சொல்வதற்கான உரிமை நமக்கில்லை

அதிமுக பொதுச் செயலாளர் யார் என்பதை அதிமுகதான் முடிவுசெய்ய வேண்டும்

அதை சொல்வதற்கான உரிமை நமக்கில்லை

ஜெயலலிதா இறந்தது முதலே அதிமுகவை தன் கட்டுக்குள் கொண்டுவந்து கொஞ்சம் கொஞ்சமாக கபளீகரம் செய்வதற்கான முயற்சியில் பாஜக இறங்கியது

கிட்டத்தட்ட தன் கட்டுக்குள் கொண்டும் வந்துவிட்டது

தலைவர்கள் விலைபோய்க்கொண்டு இருக்கிறார்கள்

ஆனாலும் பாஜக உணராததும்

ஒரு போதும் அதனால் உணர்ந்து கொள்ள முடியாததுமான ஒன்று உண்டு

திமுகவோ அதிமுகவோ,

தொண்டர்கள் ஒருபோதும் விலைபோக மாட்டார்கள்

ஒரு கட்டத்தில் அவர்கள் விலை போன தலைவர்களைத் தூக்கி எறிந்துவிட்டு 

தமக்கான தலைவனைத் தேர்ந்தெடுப்பார்கள்

31.03.2025

Sunday, March 30, 2025

இதுக்கு எதுக்குப்பா டில்லி போனீங்க

 அமித்ஷாவை எடப்பாடி அவரது கோஷ்டியோடு சந்தித்தாராம்

இப்போது செங்கோட்டையன் சந்தித்திருக்கிறாராம்
ஸ்டாலின் அவ்வளவுதானாம்
லூசுங்களா,
அமித்ஷா பேரைச் சொன்னாலே தமிழ்நாட்டில் ஒவ்வொரு தொகுதியிலும் 1000 வாக்குகள் குறையும்
அவரைச் சந்திக்க நினைத்தால் இன்னுமொரு 1000 வாக்குகள் குறையும்
சந்தித்தால் இன்னுமொரு 1000 வாக்குகள் குறையும்
அதுகுறித்து பெருமையாக பேசினால் இன்னுமொரு 10,000 வாக்குகள் குறையும்
என்னமோ போனாங்களாம்
அமித்ஷாவப் பாத்தாங்களாம் ....
அட லூசுங்களா
இதுக்கு எதுக்குப்பா டில்லி போனீங்க
உங்க தெருவுலேயே யாராவது வீடு கட்டிட்டு இருந்தா
அங்க போய் கொஞ்சம் மணலெடுத்து
தலையில் போட்டுட்டு வந்திருக்கலாமே
0 others

Friday, March 28, 2025

வருடத்திற்கு 1000 கோடி எனில்

 இன்று தவெகவின் பொதுக்குழு கூடியிருக்கிறது

அதன் முக்கியப் பொறுப்பாளர் ஆதவ் அர்ஜுனா பேசும்போது

வருடத்திற்கு 1000 கோடி ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருந்த தங்கள் தலைவர் அதை விட்டு விட்டு அரசியலுக்கு வந்திருப்பதாகக் கூறுகிறார்

மகிழ்ச்சி

நான் 30 விழுக்காடு வருமான வரி கட்டிக்கொண்டு இருந்தவன்

அதற்குமேல் இருக்கிறதா என்று தெரியவில்லை

வருடத்திற்கு 1000 கோடி எனில்

எப்படிப் பார்த்தாலும் வருடத்திற்கு 300 கோடி ரூபாய் வருமான வரி கட்டியிருக்க வேண்டும்

கட்டினாரா என்பதை அவர் பொதுவெளியில் நிறுவ வேண்டும்

அல்லது வருமான வரித்துறை அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஆதவ் சொன்னது பொய் எனில்

இவர்கள் சொல்வதனைத்தும் பொய் என்பதை மக்களிடம் நாம் கொண்டுபோக வேண்டும்

28.03.2025

Wednesday, March 26, 2025

திமுக கூட்டணியை இவர்கள் கெட்டிப்படுத்தி இருக்கிறார்கள்

 உறவினர் வீடுகளில் தொடர் ரெய்டுகள்

முன்னாள் அமைச்சர்களின் கழுத்தைக் குறிபார்த்து தொங்கும் கத்திகளாக ஊழல் வழக்குகள். அதனால் அவர்கள் தரும் நெருக்கடி
போக, இன்னொரு பக்கம் கொடநாடு வழக்கு
எடப்பாடி சாரால் வேறு எதுவும் செய்ய இயலாது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது
ஆனால் அதிமுகவைப் பொறுத்தவரை இது ஒரு வரலாற்றுப் பிழை
தங்களுக்கு எதிரான இன்னொரு காரியத்தையும் இதன் மூலம் இவர்கள் செய்திருக்கிறார்கள்
இதன்மூலம் உடைந்தால் பாஜக வந்துவிடும் என்ற அச்சத்தை கொடுப்பதன்மூலம் திமுக கூட்டணியைக் கெட்டிப்படுத்தி இருக்கிறார்கள்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...