லேபில்கள்

Tuesday, August 16, 2022

அவரை அழைத்து சன்னமாக நெறிபடுத்துங்கள்

 பாஜக உடன் குறைந்தபட்ச சமரசத்தை கூட திமுக செய்துகொள்ளாது;

டெல்லிக்கு நான் செல்வது காவடி தூக்கவோ, கைகட்டி வாய் பொத்தி நிற்கவோ அல்ல; கலைஞர் பிள்ளை நான்
என்று கூறி இருக்கிறீர்கள்
மகிழ்ச்சி முதல்வர் அவர்களே
ஆனால்
திரு பூபதி அவர்களை “கல்வித் தொலைக் காட்சியின்” CEO வாக நியமிக்கும் பெருமனது எங்கிருந்து கல்வி அமைச்சருக்கு வருகிறது என்பதை
நீங்கள் கண்டறியாவிட்டால் பள்ளிக்கல்வி பாழாய்ப் போகும் என்பதை நீங்கள் உணர வேண்டும்
உங்களது சித்தாந்ததிற்கு நேரெதிரானவர் அவர் என்பதும்
அவருக்கும் திரு ரெங்கராஜ் பாண்டே அவர்களிக்கும் தோழமை மற்றும் சித்தாந்த உறவு குறித்தும் நீங்கள் அறிந்திருக்கவில்லை என்று என்னால் நினைத்துப் பார்க்கவும் முடியாது
எல்லோருக்கும் கல்வி சேர்ந்துவிடக் கூடாது என்பது அவர்களது சனாதனம்
கடைக்கோடிக் கடையனுக்கும் கல்வி போய்ச்சேர வேண்டும் என்பது
சனாதனத்திற்கு எதிரான சித்தாந்தம்
சனாதனத்தின் நேரடி வாரிசும்
அதை எப்படியும் மீண்டும் தழைக்கவைக்க வேண்டும் என்று துடிப்பவருமான ஒருவரிடம்
கல்வித் தொலைக்காட்சியைக் கொடுக்க நினைப்பது
தற்செயலானது அல்ல என்பது நீங்கள் அறியாதது அல்ல
சமீப காலமாகவே திரு மகேஷ் அவர்களிடம் ஒருவிதமான திடமின்மை வெளிப்படுகிறது
சனாதனத்தின் பக்கம் உங்கள் அரசு சாய்கிறதோ என்ற அச்சத்தை அவரது நடவடிக்கைகள் தருகின்றன
தயவு செய்து
அவரை அழைத்து சன்னமாக நெறிபடுத்துங்கள்
பூபதியின் நியமனம் ரத்து செய்யப்பட்டிருந்தாலும் இதை நீங்கள் செய்வ வேண்டும்
இல்லாவிட்டால்
உங்கள் அரசிற்கும்
சனாதன எதிர்நிலைக்கும் அல்லதுகளை அவரது செயல்பாடுகள் தரக்கூடும்

Friday, August 12, 2022

அவரைப் பாதுகாக்க வேண்டும்

 எதிரே அமர்ந்திருக்கும் திரு நயினார் நாகேந்திரனிடம்

ஏதோ இந்தியில் கேட்கிறார் சத்யம் தொலைக்காட்சி முக்தார் அஹமது
என்ன கேட்டார் என்பது என்னைப் போலவே
நயினாருக்கும் புரியவில்லை
சிரித்துக் கொண்டே
இதைத் தமிழில் கேட்கலாமே
என்ற நயினாரிடம்
இப்ப வலிக்குதுல்ல. இதுதான் இப்போது பாராளுமன்றத்தில் நடக்கிறது
என்று சிரித்துக்கொண்டே கூறுகிறார்
அவரைப் பாராட்டுவது அது இதெல்லாம் அப்புறம்
அவரைப் பாதுகாக்க வேண்டும்

Labels