கலைமணி மிக நேர்த்தியான கவிதைகளைத் தந்து கொண்டிருக்கிறாள். உரைநடைக்கு வா என்று அவ்வப்போது கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.
நல்ல வாசிப்பாளி. எந்திரக்கணக்காய் வாசித்துக் குவித்தவள். பழைய மாதிரி வாசிப்பதில்லை தற்போது.
நன்கு எழுத வரும். ஆனால் எழுதுவதில்லை.
என்ன செய்வது என்று குழம்பிக் கிடந்த பொழுதொன்றில் இருவரும் NCBH செல்ல வேண்டியத் தேவை வந்தது. இரண்டு மூன்றுமுறை”கீதாரி” யை எடுத்துப் பார்ப்பதும் வைப்பதுமாய் இருந்தாள். பார்த்துவிட்டேன்.
அவளுக்கேத் தெரியாமல் அதை வாங்கி “படி, தமிழ்ச்செல்வியின் எழுத்து நல்லா இருக்கும் என்று சொன்னேன்.
ஒரு அழகான ’ரைட் அப்’ கொடுத்திருக்கிறாள். ஒரு ரைட் அப் எப்படி தொடங்கப்பட்டு எப்படி நகர வேண்டுமோ அப்படி நகர்கிறது.
ஒரு தம்ளர் தண்ணீர்தான் . குற்றல நீர் வீழ்ச்சியையே அவளால் கொண்டுவந்து தரமுடியும் அவளால்.
ஒரு தம்ளர் தண்ணீர்தான் . குற்றல நீர் வீழ்ச்சியையே அவளால் கொண்டுவந்து தரமுடியும் அவளால்.
இனி வாங்கிக் குவித்து வாசிக்க வைக்க வேண்டும்.
என் வீட்டிலிருந்து பெண்ணொருத்தி எழுதுகிறாள் என்ற திமிரோடு அதைப் பந்தி வைக்கிறேன். வாசித்து வாழ்த்துங்கள். மகிழ்ந்து நன்றி சொல்வேன்.
**********************************
NCBH புத்தக நிலையத்தில் இந்தப் புத்தகத்தைக் கையிலெடுத்துப் பார்த்துப் பின் வைத்துவிட்டேன். "சு.தமிழ்ச்செல்வியின் எழுத்து நல்லாயிருக்கும், படி பாப்பா" என்று தோழர்.இரா எட்வின் நூலை வாங்கிக் கையில் திணித்தார். பத்து நாட்கள் பொறுத்திருந்து கையில் எடுத்தேன்
இன்று காலை 10 மணியளவில். இரு பிள்ளைகளுக்கும் விடுமுறை என்பதால் நானும் விடுப்பில்..ஒரு கையில் கீதாரியும் மறுகையில் தேநீர்த் தயாரிப்புமாய் 11/30 மணி..ஒரு கையில் கீதாரியும் மறுகையில்அரிசியுமாய் , 12 மணி..ஒரு கையில் கீதாரியும் மறுகையில்கரண்டியுமாய் சமையலில், 12/30 மணி..இப்படிவலது மாறினாலும் இடது மாறாமல் முழுவதும் படித்து முடித்தபோது 1/45.படித்து முடித்து ஒருமணிநேரம் கடந்துவிட்டது.ஆனால் புத்தகம் இப்போது இருகைகளிலும்.மூடி வைக்க மனமில்லை.வாழ்த்துச் சொல்லவா?கண்கலங்கி நின்ற வரிகளுக்காக வைது தீர்க்கவா?சொல்லுங்கள் தோழி சு.தமிழ்ச்செல்வி