Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Thursday, March 13, 2025

காதுகேட்கும் கருவி குறித்த என் பதிவு குறித்து

இன்று மாப்பிள்ளை அழைத்தான்

காதுகேட்கும் கருவி குறித்த என் பதிவு குறித்து பேசினான்
“அம்மாவிற்கு ஏற்பாடு செய்யவேண்டும் மாமா” என்று விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டான்
இதை எல்லாம் எழுத வேண்டுமா என்று நிறையபேர் கேட்டார்கள்
நான் காதுகேட்கும் கருவி வைத்திருப்பதுகுறித்து இதுவரை நான்கைந்துமுறை இங்கு வைத்திருக்கிறேன்
இதுவரை நான்கைந்துபேர் விசாரித்து, தயக்கம் களைந்து தெளிவு பெற்றிருக்கிறார்கள்
இதற்குத்தான் இதை இங்கு வைப்பது

வைத்துக்கொண்டுதான் இருப்பேன்

13.03.2025

Wednesday, March 12, 2025

இருமொழி போதும்தானே என்று வாக்கெடுப்பு நடத்தினால் என்ன?

தமிழ்நாட்டில் ஏறத்தாழ 15 லட்சம் குழந்தைகள் CBSE வழியில் படிப்பதாக அமைச்சர் மகேஷ் சார் வழியாக அறிய முடிகிறது

இந்தக் குழந்தைகளிடம் இருமொழி போதும்தானே என்று வாக்கெடுப்பு நடத்தினால் என்ன?

12.03.2025

”மழை உங்களுக்கு ஒத்துக்காதா சார்?”

நேற்று தோழர் இ.தாஹிர் பாட்சா அவர்களின் அப்பாவை இறுதியாக வழியனுப்பி வைப்பதற்காகப் போயிருந்தோம்

மழை
குடைக்குள் இருப்பதில் கவனமாக இருந்த என்னைப் பார்த்த நண்பர் கேட்டார்
”மழை உங்களுக்கு ஒத்துக்காதா சார்?”
”செவிட்டு மிஷினுக்கு ஒத்துக்காதுங்க சார்”
மருத்துவர் கருணாகரன் நிமிர்ந்து என்னைப் பார்க்கிறார்
“இதில் ஒன்றும் இல்லை தோழர். ஆனால், கேட்காதபோது நிறைய அவமானப்பட்டிருக்கிறேன் .” என்கிறேன்.
கண்கள் கசிந்தனதான். யாரும் பார்க்கவில்லை என்பது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
என்னை இழுத்துப் போய் மருத்துவரிடம் காட்டி மிஷினை மாட்டி கேட்கச் செய்த Kalai Mani மற்றும் தோழர் கணேசிற்கும்
அதுவரை எனக்கு கேட்கவேண்டும் என்பதற்காக சத்தமாகப் பேசி சிரமப்பட்ட அனைவருக்கும்
அன்பு

12.03.2025
Like
Comment
Share

Wednesday, November 1, 2023

இனி நமக்கு பொதுவாக நான்கு வகைகளில் மரணம் வரலாம்


அநேகமாக அப்போது எனக்கு வயது ஐம்பது இருக்கும்

வண்டி ஸ்டாண்டிலிருந்து ஸ்டேண்டை எடுக்காமல் கவனப்பிசகோடு வண்டியை எடுத்ததில்
இடதுகால் கட்டைவிரல் நகம் போனது
அப்போது மருத்துவர் அமரவைத்து சொன்னார்
50 கடந்திட்டோம்
இனி நமக்கு பொதுவாக நான்கு வகைகளில் மரணம் வரலாம்
1 மாரடைப்பு
2 கால் கட்டை விரல் நகம் விழுதல்
3 சளி
4 பாத்ரூமில் வழுக்கி விழுதல்
இதில் மாரடைப்பை விடுங்கள்
மற்ற மூன்றிலும் கவனமாக இருங்கள்
கடலூர் தோழர் ஜான் விக்டர்
குளியலறையில் வழுக்கி விழுந்து மரணமடைந்திருக்கிறார்
குறைந்தபட்சம் இன்னும் இருபத்தி ஐந்து ஆண்டுகளேனும் கட்சி வேலை பார்த்திருக்க வேண்டியவர்
பேரிழப்பு
கவனமாக இருப்போம்
நகம் காயப்படாமல்
சளியை அலட்சியமாக விடாமல்
குளியலறை வழுக்காமல்
கவனமாக இருப்போம்

Tuesday, March 1, 2022

அடித்து ஆடுங்கள் தோழர் ஸ்டாலின்

 

அன்பின் முதல்வருக்கு,

வணக்கம்.

நான் கண்ட இரண்டு சம்பவங்களும்

முதல்வராகப் பதவியேற்ற நாளில் நீங்கள் போட்ட கையெழுத்துகளில் ஒன்றும்

ஒன்றோடு ஒன்றைப் பொருத்திப் பார்க்குமாறும்

அது குறித்து தங்களுக்கு கடிதம் எழுதுமாறும் என்னைத் தொடர்ந்து தொந்தரவு செய்துகொண்டே இருக்கின்றன

முதல் சம்பவம் மூன்று வருடங்களுக்கு முன்னர் திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் நிகழ்ந்தது

புதுக்கோட்டையில் நடந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றுவதற்காக சென்றுகொண்டிருக்கிறேன்

பேருந்தைப் பிடிப்பதற்குமுன் தேநீர் பருகத் தோன்றியதால் ஆவினுக்கு செல்கிறேன்

ஆவினுக்கும் பெரியார் புத்தக நிலையத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் ஆண்களும் பெண்களுமாய் இருநூறிலிருந்து இருநூற்றி ஐம்பது பேர்  நின்றுகொண்டிருக்கிறார்கள்

கைகளிலே தூக்குப்போனி

அவர்களது கலகலப்பான உரையாடல் என்னை அந்த இடத்திலேயே கட்டிப்போடுகிறது

அவர்கள் கொத்தனார்களும் சித்தாள்களும்

வரப்போகும் மேஸ்திரிகளுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்

மேஸ்திரிகள் வந்தால்தான் அவர்களில் எத்தனைபேருக்கு அன்று வேலை கிடைக்கும் என்பது தெரியும்

தேநீரை முடித்துக் காசு கொடுப்பதற்குள் பத்துப் பதினைந்துபேர் அங்கே வருகிறார்கள்

அவர்கள் அனைவரும் மேஸ்திரிகள் என்பது புரிகிறது

அவர்கள் தலைக்கு பத்திலிருந்து பதினைந்துபேர் வரை தேர்ந்தெடுக்க மிச்சம் ஒரு இருபது அல்லது இருபத்தி ஐந்துபேர் சோகத்தோடு ஒதுங்குகிறார்கள்

இவர்களுக்கு அன்று வேலை இல்லை

இப்படித்தான்ஒவ்வொரு நாளும் சிலருக்கு வேலை கிடைக்காது என்கிறார்கள்

அதுவரை இருந்த கலகலப்பு மாறுகிறது

அந்தக் கலகலப்பான அரட்டையும் அதன்பிறகான இந்த சோகமும் அன்றாட வாடிக்கை என்கிறார் டீமாஸ்டர்

வேலை கிடைக்காத ஆண்கள் மிக சொற்பம்.

அவர்கள் தங்களது அல்லது தங்கள் நண்பர்களது இருசக்கர வாகனங்களில் புறப்படுகிறார்கள்

வேலை கிடைக்காத பெண்களில் சிலருக்கு கண்கள் கலங்கிவிட்டது

அவர்கள் நகரப் பேருந்தில் வந்து திரும்ப வேண்டும். போக வர இருபது ரூபாயாவதும் அன்றைக்கு அவர்களுக்கு இழப்பு

அன்றில் இருந்து இன்றுவரை வேலை கிடைக்காது பேருந்துக்கு காசு செலவு செய்ய வேண்டிய அந்தப் பெண்களின் கண்ணீர் என்னை உலுக்கிக்கொண்டே இருக்கிறது முதல்வர் அவர்களே

மூன்று நாட்களுக்கு முன்னால் பெரம்பலூர் அய்யங்கார் பேக்கரி அருகே அதே மாதிரி ஒரு கூட்டத்தைக் கண்டேன்

ஏறத்தாழ அதே நடைமுறை

இங்கும் இருபது அல்லது இருபத்தி ஐந்து பேருக்கு வேலை இல்லை

ஆனால் அன்று திருச்சியில் கண்ட சோகம் இல்லை

வேலை கிடைத்த ஒரு பெண் வேலை கிடைக்காத தன் தோழியிடம் தனது சாப்பாட்டுக் கூடையைக் கொடுக்கிறார்

இன்னைக்கு மோல்டு மலரு, சாப்பாடு தருவாங்க. எடுத்துட்டுப் போ

இவரும் கை அசைத்து வழி அனுப்பிவிட்டு பேருந்திற்காக காத்திருக்கிறார்

வேலை கிடைக்காத வருத்தம் தெரிகிறது. ஆனால் அன்று திருச்சியில் அந்தப் பண்களின் முகத்தில் நான் கண்ட வலியின் சுவடுகளை இப்போது இவர்களிடத்திலே காணவில்லை

இதற்கு காரணம் முதல்வராகப் பதவியேற்ற அன்று

இனி சாதாரண நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் இல்லைஎன்று நீங்கள் போட்ட உத்தரவு

திருச்சியில் அந்தப் பெண்களின் முகத்தில் நான் கண்ட வலியின் தழும்புகளை உங்களது ஒற்றைக் கையெழுத்து துடைத்துப் போட்டிருக்கிறது

ஒருமுறை சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில்லோட் மேன்கள்என்று அழைக்கப்படும் மூட்டை தூக்கும் தோழர்கள் அன்றைய முதல்வர் கலைஞரை ஒரு கோரிக்கையோடு சந்திக்கிறார்கள்

தாங்கள் சுமக்கும் மூட்டை ஒன்றிற்கு பத்துப் பைசாவோ இருபது பைசாவோ கூடுதலாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை

அவர்களுக்கு “TIME SCALE” நிர்ணயித்து அவர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றுகிறார் கலைஞர்

அவர்களை நிரந்தரப்படுத்தி கலைஞர் அன்று போட்ட கையெழுத்திற்கு சற்றும் குறைந்தது அல்ல நிங்கள் போட்ட இந்தக் கையெழுத்து

இதனால் அரசுக்கு எவ்வளவு இழப்பு வரும் என்று பொருளாதார மேதைகள் கணக்குப் போட்டு கதறுவார்கள்

அவர்கள் கதறட்டும்

இது இழப்பல்ல,

கூடுதல் செலவு,

அவ்வளவுதான் என்பதை நீங்கள் அறிவீர்கள்

அதை வருவாயைக் கூடுதலாக்குவதன் மூலம் சரிசெய்துவிடலாம் என்பதையும்

வருவாயை எப்படிக் கூட்டுவது என்பதையும் நீங்களும் அறிவீர்கள்

அதை அறிந்தவர்களை கூடவே வைத்திருக்கவும் செய்கிறீர்கள்

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த                                                             வகுத்தலும் வல்லது அரசு

இயற்றவும்                                                                                                                          ஈட்டவும்                                                                                                                          ஈட்டியதைக் காக்கவும்”                                                                 

உங்களால் முடியும்

வல்லமையோடு வகுத்தலை செய்கிறீர்கள்

ஒன்று சொல்ல வேண்டும்,

எங்கள் பள்ளியின் ஆசிரியைகள் சிலரும் கட்டணமில்லா பேருந்தில் வருகிறார்கள்

இதுபோல் ஏராளம்

இவற்றைத் தடுக்கலாம்

தொடருங்கள்

வாழ்த்துகள்

அன்புடன்,

இரா.எட்வின்.

  

 

 

 

Thursday, July 8, 2021

அசந்தல்

 ரெண்டு மணிக்கு வருவதாக சொல்லி மூன்று மணிக்கு வந்த பிள்ளை சொன்னான்

”செத்த செத்து தூங்கிட்டேன் சார்”
என்னாது செத்து தூங்கிட்டியா?
“அசந்தல் ஸ்லிப்பாகி செத்துனு வந்துடுச்சு சார்”
அட அழகா இருக்கே
“அசந்தல்”

ஒன்றியம் முழுக்க இந்த இயக்கம் ...





 

UAPA சட்டத்திற்கு எதிராக

கொடுஞ்சட்டத்தால் சிறையிருப்போரை விடுவிக்கக் கோரி
இன்று மாலை வள்ளுவர் கோட்டம் அருகே CPM நடத்தும் கண்டண இயக்கம்



விசிக உரிமையோடும் உணர்வோடும் அதில் பங்கேற்கிறது
திமுகவும் காங்கிரசும் கலந்துகொள்ள வேண்டும் என்பதே நமது ஆசை
கூட்டணிக்கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப் பெரிய கண்டன இயக்கத்தை திமுக முன்னெடுக்க வேண்டும்
ஒன்றியம் முழுக்க இந்த இயக்கம் வீரியத்தோடு கொண்டுசெல்லப்பட வேண்டும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...