Showing posts with label மொழி. Show all posts
Showing posts with label மொழி. Show all posts

Tuesday, July 28, 2026

எதேதோ பிழைக்கும் தமிழ் மண்ணில்

 


அநேகமாக அமைச்சரான கையோடு ஆளுநரே வேந்தர் என்று பொருள்பட பேசிய தமிழ்நாட்டின் விரோதி நீங்கள்.

அவர் இதைத்தானே செய்வார்.

தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவரே மனோன்மணியம்தான்.

எங்களுக்கு

நீங்களோ, விஜயோ, கவர்னரோ

எல்லோரும் ஒன்றென்றும் தெரியும்

இந்த புறக்கணிப்பு நடிப்பென்றும் தெரியும்.

எதேதோ பிழைக்கும் தமிழ் மண்ணில்

நீங்களும் பிழைத்துவிட்டுப் போங்கள்


28.07.2026

Wednesday, January 14, 2026

அவ்வளவுதான் திமுக நண்பர்களே

 ஜனநாயகன் விஜயை மையப்படுத்தி
விஜயை சுற்றி

விஜயின் ப்ரொமோஷனுக்காக மட்டுமே எடுக்கப்பட்ட படம்

பராசக்தி என்பது 

1960களில் நடந்த இந்தித் திணிப்பிற்கு எதிரான போரை மையப் படுத்தி வந்திருக்கும் படம்

ஜனநாயகன் விஜயை மட்டும் மக்களிடம் சேர்ப்பதற்காக எடுக்கப்பட்ட படம்

பராசக்தி தியாகம் செய்து காக்கப்பட்ட மொழி உரிமையை மக்களிடம் சேர்ப்பதற்காக எடுக்கப்பட்ட படம்

சுருக்கமாக சொன்னால்

அங்கு விஜய்க்காக கதை

இங்கு கதைக்காக சிவகார்த்ததேயன்

அவ்வளவுதான் திமுக நண்பர்களே

இல்லாது போனால்

பத்து வருடங்களுக்குப் பிறகு
 உதயநிதிக்கு சிரமம்

புரியும் உங்களுக்கு

14.01.2026

Tuesday, January 13, 2026

வர்க்கப் போராட்டம்தானே

 

இந்தித் திணிப்பிற்கு எதிராக கடுமையாக தமிழ்நாடு களமேகியபோது

அவர்கள் சொன்னார்கள்

இந்தி தெரியலன்னா வடமாநிலத்துல போய் வேலைசெய்ய முடியாது

கும்மிடிபூண்டி தாண்டிப் போனால் யாருக்கும் ஸ்டாலினைத் தெரியாது என்றுகூட இருபதாயிரம் புத்தகம் படித்த அண்ணாமலை சொன்னது நினைவு வருமானால் நான் பொறுப்பல்ல

வேலை செய்யனுமுன்னா என் மொழியை கற்று வா என்பது உழைப்பிற்கான நிபந்தனை என்றால்

உழைப்பிற்கான நிபந்தனை மொழித் திணிப்பு என்றால்

மொழித் திணிப்பிற்கு எதிரான போராட்டத்தில் வர்க்கப் போராட்டத்திற்கான கூறு உண்டுதானே

13-01-2026

அவர் வாசித்த இருபதாயிரம் புத்தகங்களில்

 

பாஜக வலையில் விழுந்த ஷிண்டே ஆட்சியைக் கவிழ்க்கிறார்.
ஒருமுறை அதுகுறித்து பேசும்போது,
சிவாஜி உடனிருந்த பார்ப்பான் அவருக்கு துரோகம் இழைத்ததைப்போல ஷிண்டே தனக்கு துரோகம் இழைத்திருப்பதாக உத்தவ் தாக்கரே கூறினார்
உடனே சங்கிகள் கொதிக்கிறார்கள்
தமிழ்நாட்டில் இருக்கிற பார்ப்பன வெறுப்பு மகாராஷ்டிரத்திலும் நுழைந்துவிட்டதாகவும். தாங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் பேசவும் எழுதவும் ஆரம்பித்தார்கள்
மொழி விஷயத்திலும் இந்தித் திணிப்பை எதிர்ப்பதில் மகாராஷ்ட்ரா தமிழ்நாட்டைப் பின்தொடர்கிறது
மும்பையை , மகாராஷ்டிரத்தை அம்பானி அதானி கைகளில் தாரைவார்க்கும் அரசுகளின் சூழ்ச்சியை மாராத்திய மக்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்
அங்கு வாழும் தமிழ் மக்களும் தங்களை மாராத்திய மாநிலத்தவராகவே கருதவும் ஆர்ம்பித்திருக்கிற அழகான சூழல்
இது சங்கிகளுக்கு எதிரான நிலை
இவர்கள் மொழிசார்ந்து மக்கள் அடித்துக்கொண்டு சாக ஆசைப்படுபவர்கள்
அதனால்தான் ஏறத்தாழ தமிழ்நாட்டு பிரஜைகளாகவே தங்களை பொருத்திப்பார்க்கிற தமிழ்நாட்டுவாழ் பீகார் மக்களுக்கும்
அவர்களை தம் சகோதரர்களாகவே பாவிக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே பகையை விதைத்ததுபோல
மகாராஷ்ட்ராவிலும் ஒரு கலவரத்தை உண்டுபண்ண முயற்சிக்கிறார்கள்
மும்பை மகாராஷ்டிரா நகரம் அல்ல என்று சொன்ன அண்ணாமலைக்கு
1950களில் நடந்த "samyukta maharashtra movement" பற்றி எல்லாம்
அந்த போராட்டத்தில் உயிரிழந்த 106 தியாகிகள் குறித்தெல்லாம்
இந்த பிரச்சினையில் தனது ஒன்றிய நிதி அமைச்சர் பதவியை தேஷ்முக் ராஜினாமாசெய்ய நேர்ந்தது குறித்தெல்லாம்
எதுவும் தெரியாது.
அவர் வாசித்த இருபதாயிரம் புத்தகங்களில் இவை குறித்து எதுவும் இல்லை
பிரியத்திற்குரிய உத்தவ் அவர்கள் கொதிப்படைந்து வார்த்தைகளை விட வேண்டாம்
பீகாரிகள் பிரச்சினையை தமிழ்நாடு கையாண்ட சாதுர்யம் உங்களுக்கு வெளிச்சம் காட்டும்

13.01.2026

Wednesday, June 4, 2025

யார் மூப்பு என வந்துவிட்டால்

   எப்போதும் சொல்வதுதான்

1992 என்று நினைக்கிறேன்
தமுஎச மாநில மாநாடு
சென்னை கிருஷ்ணகான சபா
வரபேற்குழுத் தலைவர் பாலு மகேந்திரா இப்படியாகத் தொடங்குகிறார்
“All mothers are great. But my mother is the greatest"
இதை இப்படியாகப் பெயர்க்கலாம்,
எல்லாத் தாய்மார்களும் வணக்கத்துக்குரியவர்கள்தான். ஆனால் எல்லாத் தாய்மார்களும் எழுந்து நின்று வணங்குவதற்குரிய தகுதி கொண்டவள் என் தாய்
இதை மொழிக்கும் பொருத்திப் பார்க்கலாம்
எல்லாத் தாய்மார்களும் எழுந்து நின்று வணங்குவதற்குரிய தகுதி கொண்டவள் என் தாய் என்று சொல்வதற்கு தமிழனுக்கு உள்ள உரிமை
மலையாளிக்கும் உண்டு கன்னடனுக்கும் உண்டு
இது தகுதி சார்ந்த உணர்வெழுச்சி
யார் மூப்பு என வந்துவிட்டால் கொந்தளிக்கத் தேவை இல்லை
தரவுகள் இருக்கின்றன
உட்கார்ந்து ஆய்ந்து விவாதிப்போம்
அவ்வளவுதான்

Friday, April 11, 2025

மொழி உயிரனையது

 17.07.1903

ரஷ்ய சமூக- ஜனநாயகக் கட்சியின் இரண்டாவது காங்கிரஸ் பிரஸ்சல்சில் தொடங்குகிறது

கிட்டத்தட்ட 13 அமர்வுகள் அங்கு நடந்த நிலையில்

காவல்துறை அடாவடி செய்யவே

அடுத்த அமர்வுகள் லண்டனுக்கு மாற்றப்படுகிறது

கிட்டத்தட்ட அனைத்து அமர்வுகளுமே போல்ஷிவிக்குகளுக்கும் மென்சிவிக்குகளுக்கும் இடையிலான போராட்டங்களால் நிறைந்து கசிகிறது

மென்சிவிக்குகளின் தலைவராகவே காங்கிரஸ் முழுவதும் செயல்படுகிறார்

மொழிகளின் சமத்துவம் குறித்து பிரச்சினையிலும் குடிமக்களின் சம உரிமையே போதுமானது என்கிறார் மாரித்தவ்

இதை மிகச் சரியாக இதை எதிர்கொள்கிறார் லெனின்

தேசிய இனங்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகள் உள்ளன

சில தேசிய இன மக்கள் தங்களது தாய்மொழியைப் பயன்படுத்தக் கூடாது என்று தடுக்கப்படுகிறார்கள்

எனவே மொழிகளின் சமத்துவம் என்பது முக்கியமானது என்கிறார்

மொழி உயிரனையது

Sunday, March 30, 2025

பிஞ்ச செருப்பையும் ...

on this day பார்த்துக்கொண்டிருக்கிறேன்

சென்ற வருடம் இதே நாளில்,
“மொழி உணர்வை பிஞ்ச செருப்பைப் போலக் கழட்டிக் கிடாச வேண்டும்” என்று தனக்கே உரிய கேவலமான உடல்மொழியோடு அண்ணாமல் கூறியிருக்கிறார்
சென்ற ஆண்டு அவருக்கு சொன்ன பதில்தான் இப்போதும்
தமிழர்கள் பிஞ்ச செருப்பையும் ஒரு காரியத்திற்காகப் பயன்படுத்துவார்கள்
வேண்டாம் அண்ணாமலை

Monday, March 24, 2025

தாய்மொழியில் பெயர்ப் பலகை



22.03.2025 அன்று சென்னையில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பு எதிர்ப்பு கூட்டுக்குழுக் கூட்டத்தில்

கலந்துகொண்ட தலைவர்களின் பெயர்ப் பலகைகள் அவர்களது தாய்மொழியிலும் ஆங்கிலத்திலும் வைக்கப்பட்டிருந்தன

சிறப்பு ஸ்டாலின் சார்

Wednesday, March 12, 2025

இருமொழி போதும்தானே என்று வாக்கெடுப்பு நடத்தினால் என்ன?

தமிழ்நாட்டில் ஏறத்தாழ 15 லட்சம் குழந்தைகள் CBSE வழியில் படிப்பதாக அமைச்சர் மகேஷ் சார் வழியாக அறிய முடிகிறது

இந்தக் குழந்தைகளிடம் இருமொழி போதும்தானே என்று வாக்கெடுப்பு நடத்தினால் என்ன?

12.03.2025

Friday, March 7, 2025

ஒன்றிய அரசை தற்காப்பாட்டத்தை நோக்கித் தள்ள வேண்டும்

இந்தித் திணிப்பின் கயமை குறித்தும்

தாய்மொழிகளைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும்
இந்தித் திணிப்பை எதிர்த்து ஆங்கிலத்தை கையிலெடுத்ததன் காரணமாக தமிழ்நாடு அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும்
ஆங்கிலம் கற்றுக் கொண்டால் இந்தி மக்கள் பாய்ச்சசலைக் காணலாம் என்ற எதார்த்ததம் குறித்தும்
இந்தியா முழவதும் நாம் பிரச்சாரத்தைத் தொடங்க வேண்டும்
இந்தி போதாது எங்களுக்கு ஆங்கிலம் கொடு என்று இந்தி மக்களிடம் கையெழுத்து இயக்கத்தை தொடங்க வேண்டும்
நாங்கள் பிழைப்பதற்கு தமிழ்நாடுதான் போகவேண்டும்
ஆகவே எங்களுக்கு தமிழைச் சொல்லிக்கொடு என்று அந்த மக்களை கேட்கச் சொல்ல வேண்டும்
ஒன்றிய அரசை தற்காப்பாட்டத்தை நோக்கித் தள்ள வேண்டும்

07.03.2025

Thursday, February 27, 2025

இவ்வளவுதான் மொழி

 மாதா மாதம் யாரேனும் ஒரு கூர்கா வீடுவீடாக வந்து பணம் வாங்கிப் போகிறார்கள்

எல்லோரும் இருபது ரூபாய்க்கு குறையாது தருகிறார்கள்

கூர்காக்களின் துயர்மிகு வாழ்க்கை குறித்து தெரிந்துகொண்டபிறகு விட்டு 50 ரூபாய்க்கு குறைவாகத் தருவதில்லை

இப்போது நான்தான் பெரும்பாலும்

வந்ததும் தண்ணீர் தருகிறேன்

முடிந்ததைத் தருகிறேன்

இந்தமுறை வந்தவரிடம்

நலமா கேட்டேன்

நலமென்றார்

சாரி நேப்பாளி தெரியாதென்றேன்

எதுக்கு எனக்குதான் தமிழ் தெரியுமே என்றார்

எப்படி தமிழென்றதும்

பொழைக்கப்போற இடத்து பாஷையை தானா கத்துப்போமென்றார்

இவ்வளவுதான் மொழி

Friday, April 12, 2024

கோவத்தைப் புரிந்துகொள்ள மொழி அவசியம் இல்லை

 1919 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் தேதி ரௌலட் சட்டம் இயற்றப்படுகிறது

மூன்று நாட்கள் கழித்து 21.03.1919 முதல் அது அமலுக்கு வருகிறது அதை எதிர்த்து மக்கள் இயக்கங்களை முன்னெடுக்கிறார்கள் அதன் ஒரு பகுதியாக 13.04.1919 அன்று அமிர்தசரசில் உள்ள ஜாலியன்வாலாபாக் என்ற இடத்திலும் ரௌலட் சட்டத்தை எதிர்த்து ஒரு கூட்டம் நடக்கிறது உள்ளே புகுந்த டயர் என்பவன் பைத்தியக்காரன் காக்காவை சுடுவதுபோல மக்களை சுட்டுக் கொள்கிறான் அதன் நீட்சியாக காங்கிரஸ் கட்சியின் ஒரு மாநாடு 1920 செப்டம்பர் மாதத்தில் கல்கத்தாவில் நடைபெறுகிறது அன்னியப் பொருட்களை நிராகரிப்பது உள்ளிட்ட ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன அந்தத் தீர்மானங்களை விளக்குவதற்காக நாடெங்கிலும் கூட்டங்களை காங்கிரஸ் கட்சி நடத்தியது அதிலொரு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் காந்தி அப்போது பள்ளி மாணவனாக இருந்த தோழர் பி.ராமமூர்த்தி அவர்களும் காந்தியின் உரையைக் கேட்கப் போகிறார் ”காந்தி என்னமா பேசினார், காந்தி என்னமா பேசினார்” என்று புலம்பிக்கொண்டிருந்தவரை அவரது அண்ணான் மகாலிங்கம் ஆவலோடு காந்தி என்னடா பேசினார்? என்று கேட்கிறார் யாருக்குத் தெரியும்? காலையில் ”இந்து” பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் என்ன பேசினார்னே தெரியாம இவ்வளவு பில்டப்பா என்பது மாதிரி மகாலிங்கம் நக்கல் செய்கிறார் சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் இதை வாசித்தபோது நமக்கும் நக்கலாகத்தான் இருந்தது என்ன பேசினார்னு புரியாமல் கொண்டாடுவது என்ன வகை மனோபாவம் என்றுதான் தோன்றியது 31.03.2024 அன்று தில்லி ராமலீலா மைதானத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சிபுசோரன் ஆகியோரது சட்டத்திற்கு புறம்பான கைதினைக் கண்டித்து இந்தியா கூட்டணி நடத்திய கூட்டம் நடந்தது கல்பனா சிபுசோரன் பேசுகிறார் இறுதியாக “ஜெய் ஹிந்த்” என்று மூன்றுமுறை சொன்னது தவிர எதுவும் புரியவில்லை என்ன மொழி என்றும் புரியவில்லை எட்டு நிமிடமும் வைத்த விழி திருப்பாமல் கவனம் பிசகாமல் கேட்கிறேன் சுனிதா கெஜ்ரிவால் பேசியபோதும் அப்படியே மொழி புரியவில்லை அவர்கள் கேட்ட நியாயம் புரிகிறது அவர்களது ஆதங்கம் புரிகிறது அவர்களது கோவம் புரிகிறது அடுத்த நாள் சோஷியல் மீடியாக்களிலும் செய்தித் தாள்களிலும் அவர்கள் என்ன பேசினார்கள் என்று தேடுகிறேன் என்ன ஆச்சரியம் எதுவும் புதிதாக இல்லை நேற்று அவர்கள் பேசும்போது என்ன புரிந்து கொண்டேனோ நூல் அளவு கூடவோ குறைவாகவோ இல்லை அநியாயத்திற்கு எதிரான நியாயத்தின் குரலை, ஆதங்கத்தை கோவத்தைப் புரிந்துகொள்ள மொழி அவசியம் இல்லை என்பது புரிந்தது என்ன எனக்கு அறுபதில் புரிகிற இந்த உண்மை தோழர் P.R அவர்களுக்கு அவரது பள்ளிக் காலத்திலேயே புரிந்திருக்கிறது

Wednesday, February 21, 2024

இது அவர்களது மொழியாதிக்கத்தின் மீதான நமது எதிர்வினை

 பொதுவாகவே எல்லா மொழிகளும் வாழ்வாங்கு வாழவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் நாம்

இந்தியும் வாழ வேண்டும்
சமஸ்கிருதமும் வாழ வேண்டும்
என்னதென்றே பெயர் தெரியாத எந்தவொரு மொழியும் சிறந்து வாழவேண்டும் என்பதே நம் ஆசை
மொழிகளிடையே பகையை விதைத்துக் கொண்டிருப்பவர்கள் நாமல்ல
அதை அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்
சமஸ்கிருதத்தை இந்திய ஒன்றியத்தின் ஒற்றை மொழியாக்க படாதபாடு படுகிறார்கள்
அதற்கு முன்காப்பாக இந்தியை முன்னெடுக்கிறார்கள்
அதற்கான எதிர்வினைதான் ஒன்றியரசின் மொழிக்கொள்கை மீதானது நமது கோவம்
மற்றபடி உலகின் எந்தவொரு மொழிமீதும் நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை
இது அவர்களது மொழியாதிக்கத்தின் மீதான நமது எதிர்வினை
உலகின் எல்லா மொழிபேசும் மனிதர்களுக்குமானது
நமது தாய்மொழிநாள் வாழ்த்து
இப்படி முடிக்கிறேன்
ஆதிக்கம் எதுவாயினும் எதிர்க்கவே எதிர்ப்போம் என்ற வகையில்
எம் மீதான இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பை எதிர்ப்போம்தான்
ஆனாலும்
அந்த மொழிகளின் மக்களுக்கும்
அனைத்து மொழி மக்களுக்கும்
எமது தாய்மொழிநாள் வாழ்த்துகள்
All reactions

Tuesday, January 23, 2024

கொஞ்சம் கடவுள், கொஞ்சம் மொழி என்று இருக்கிறது

 



பெரம்பலூரில் ”தேவராயன் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ்” திறக்கிறார்கள்.

அதற்கென்ன?

வீடு வீடாக வந்து அழைப்பிதழைத் தந்து போனார்கள்

அதற்குமென்ன?

இருக்கிறது

கொஞ்சம் கடவுள், கொஞ்சம் மொழி என்று இருக்கிறது

தேவராயன் நகைக் கடை சென்னை சில்க்சின் பகுதி

அவர்களுக்குத்தான் ”ஸ்ரீகுமரன் தங்க மாளிகை” என்று இருக்கிறதே. பிறகு ஏன் “தேவராயன் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ்” என்று பெயர் வைக்க வேண்டும்

வேறொன்றும் இல்லை,

இவர்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நகைக் கடைகளை திறக்க இருக்கிறார்கள். அந்த மக்கள் தமிழ்க் கடவுளை ஏற்கத் தயங்குவார்கள் என்பதாலும்

தங்க மாளிகை என்பதை அவர்கள் உச்சரிக்க ஏதுவாக இல்லாததாலும்

தேவராயன் என்று பெயரை மாற்றி இருக்கிறார்கள்

 




Sunday, January 7, 2024

எங்கள் தாய் எந்த வண்ணத்தில் இருந்தால் உங்களுக்கு என்ன பழுப்பர்களே


 

இசை அமைப்பாளார் AR ரஹ்மானுக்கு இன்று பிறந்த நாள் என்பதால் வாழ்த்துகளோடு இதை மீண்டும் வைக்கிறேன்

*************************************************

எனக்கென்னவோ இசையமைப்பாளர் A.R.ரஹ்மான் மொழி அரசியலை நன்கு அறிந்தவராகவும்
சனாதனம், மொழி, மற்றும் ஜனநாயகத்தை தின்று செரிக்க சங் பரிவாரம் முயலும் ஒவ்வொருப் பொழுதும் மிகச் சரியாகவும் அச்சம் இன்றியும்
எதிர்வினையாற்றுபவராகவும் தெரிகிறார்
அமித்ஷா ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை கற்க வேண்டும் என்றும்
இந்தியாவின் ஒற்றைமொழியாக இந்தியை கொண்டுவர வேண்டும் என்றும்
ஆதிக்கக் குரலெடுத்ததும்
கீழ்க்காணும் படத்தை ரஹ்மான் தனது ட்விட்டரில் வைக்க
பற்றிக் கொண்டது
உடனே,
தமிழ்த்தாய் எவ்வளவு அழகானவள்
அவளை இவ்வளவு கருப்பாகவும் கொடூரமாகவும் வரைவது வக்கிரம் அல்லவா என்று கொதிக்கிறார்கள்?

இவ்வளாவு உக்கிரமாய் கொதிக்கிறார்களே, யார் இவர்கள் என்று பார்த்தால்

தமிழை நீஷ பாஷை என்பவர்கள் அவர்கள்
தமிழ் எம் தாய்,
அவள் கருப்பாய் இருந்தாலும்
கொடூரமாய் இருந்தாலும் எம் தாய்
கறுப்பு காக்கையை எங்களின் மூதாதையராகப் பார்ப்பவர்கள் நாங்கள்
காகத்தை ஊரின் தோட்டியாக பார்ப்பவர்கள் நீங்கள்
எங்கள் தாய் எந்த வண்ணத்தில் இருந்தால் உங்களுக்கு என்ன பழுப்பர்களே
இந்தியாவின் இணைப்பு மொழி தமிழ் என்கிறார் ரஹ்மான்
இது மொழி அரசியலில் புதுக் குரல்
அய்யோ அய்யோ
தமிழா, இணைப்பு மொழியா என்று கதறுகிறார்கள்
ஏன் கூடாது என்கிறேன்
அத்தோடு நிறுத்தவில்லை அவர்
கறுப்பாக இருப்பவர்களை தொகுப்பாளர்களாக,
நடிகர்களாக வாய்ப்பு கொடுங்கள்
நம் மக்களுக்கு நமது நிறம் பிடிக்கும் என்கிறார்
”திண்டேர் நள்ளி கானத் தண்டர்
பல்லாப் பயந்த நெய்யிற் றொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோ
றெழுகலத் தேந்தினுஞ் சிறிதென் றோழி
பெருந்தோ ணெகிழ்த்த செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே.”
என்கிறார் காக்கைப்பாடினியார்
காதலியைப் பிரிந்து நெடுநாள் கழித்து வருகிறான் காதலன்.

தான் வரும்வரை தன் காதலியை தன் காதலியை ஆற்றுப்படுத்திக் காத்தமைக்காக நன்றி சொல்கிறான்
தான் எதுவும் செய்யவில்லை என்றும்,
அவ்வப்போது கரைந்து நீ வரப்போவதாய் காக்கைதான் அவளை ஆற்றுப்படுத்தியது என்றும் தோழி சொல்கிறார்
காக்கையை “ஊரின் தோட்டி” என்று தீட்டாய்ப் பார்த்த இலக்கியங்களை நாங்கள் நிராகரிப்போம்
காக்கை கருப்பு,
கரைந்து எமது உறவினரின் வருகையைக் கூறி எம்மை ஆற்றுப்படுத்தும் எமது கரிய தோழர்
அதனால்தான்
விடியல் வரும் என்று கரைந்துகொண்டிருக்கும் எமது பத்திரிக்கைக்கு “காக்கை” என்று பெயர் வைத்தோம்
நன்றி ரஹ்மான்

Friday, December 29, 2023

உணவுப் பட்டியல் தமிழில்

கோவை குனியமுத்தூரில் உள்ள அன்னபூரணா உணவகத்திற்கு சூரியா அழைத்துப் போனான்

எப்படி இருக்கும்னு வந்து பாருங்க அங்கிள் என்றான்

உணவெல்லாம் அப்புறம்

போனதும் உணவுப் பட்டியல் தமிழில் வந்தது

அப்படியொரு மகிழ்ச்சி






Friday, October 27, 2023

அத இப்படி புரியற மாதிரி தமிழ்ல சொல்லி இருக்கலாம்ல

டக்கர்

சிதார்த் நடித்த படம்

அதில் ஒரு காட்சி

பாரதிக்கும் வ.ரா விற்கும் இடையே 113 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அவர்களுக்கிடையேயான முதல் உரையாடலை நினைவிற்கு கொண்டு வந்தது

பாரதியைச் சந்திக்க வ.ரா வந்திருப்பார்

பாரதியார் மாடியிலிருந்து கீழே வருகிறார்

பாரதியோடு ஆங்கிலத்தில் பேசினால் மகிழ்வார் என்று கருதிய வ.ரா ஆங்கிலத்தில் பேசுகிறார்

பாரதி திரும்புகிறார்

வ.ரா அழைக்கிறார்

பாரதி கேட்கிறார்,

"இன்னும் எத்தனை காலத்திற்குதான் ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசுவீர்கள்?"

இப்போது படத்திற்கு வருவோம்

ஒரு முடிதிருத்தும் கடைக்கு சித்தார்த் வருகிறார்

ஊழியரிடம்

ஒரு படத்தைக் காட்டுவார்

அதில் சன்னமாக முறுக்கிய மீசையும் குறுந்தாடியுமாக ஒருவர்

அதைக் காட்டி

இந்த முஷ்டேச் இருக்கட்டும்

பியர்ட் எடுத்திடு

அந்தத் தம்பி முடித்திட்டு

எப்படிங்கண்ணா இருக்கு என்று கேட்பார்

பார்த்த சித்தார்த் அதிர்ந்திடுவார்

மீசையை எடுத்துவிட்டு தாடியை வைத்திருப்பார்

அடிக்க ஆரம்பிப்பார்

முதலாளி தலையிடுவார்

இந்தண்ணன்தான் பியர்ட வச்சிட்டு முஷ்டேச்ச எடுக்க சொன்னார்

அதத்தான் செஞ்சேன்

அதான பியர்ட வச்சுட்டு முஷ்டேச்சதான எடுத்திருக்கான் நீங்க கேட்டபடி

பியர்ட்னா தாடின்னும் முஷ்டேச்னா மீசைன்னும் புரிய வைப்பார் சித்தார்த்

முதலாளி சொல்வார்

அத இப்படி புரியற மாதிரி தமிழ்ல சொல்லி இருக்கலாம்ல

All 

Friday, August 11, 2023

வழக்கம் போலவே திருமிகு நிர்மலா பொய் சொல்கிறார்

 


எல்லாக் காலத்திலும் தமிழைப் போலவே இந்தியும் சமஸ்கிருதமும் விருப்ப மொழிகளாக பள்ளிகளில் உள்ளன
மீண்டும் சொல்கிறேன்
தமிழ்நாட்டில்
ஆங்கிலம் கட்டாய மொழிப் பாடம்
இந்தி, ஃப்ரெஞ்ச்,சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளைப் போலவே தமிழும் ஒரு விருப்ப மொழி
அவ்வளவுதான்
தமிழே படிக்காமல் தமிழ்நாட்டில் உயர் கல்வியை முடித்து விடலாம் என்ற அவலம் தான் இன்னமும் உள்ளது
இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பதுகூட
மூன்றாவது கட்டாய மொழியாக இந்தியைத் திணித்தது எதிர்த்து தான்
1965 வாக்கில் கூட இந்தி ப்ரக்சார சபாக்கள் தமிழ் நாட்டில் இயங்கியது என்றே அறிகிறேன்
ஆனால்,
தமிழ்நாட்டில் தங்களை இந்தியும் சமஸ்கிருதமும் படிக்க விடவில்லை என்று கூறுகிறார் ஒன்றிய நிதி அமைச்சர்
வேறொன்றுமில்லை,
வழக்கம் போலவே திருமிகு நிர்மலா பொய் சொல்கிறார்

Friday, August 12, 2022

அவரைப் பாதுகாக்க வேண்டும்

 எதிரே அமர்ந்திருக்கும் திரு நயினார் நாகேந்திரனிடம்

ஏதோ இந்தியில் கேட்கிறார் சத்யம் தொலைக்காட்சி முக்தார் அஹமது
என்ன கேட்டார் என்பது என்னைப் போலவே
நயினாருக்கும் புரியவில்லை
சிரித்துக் கொண்டே
இதைத் தமிழில் கேட்கலாமே
என்ற நயினாரிடம்
இப்ப வலிக்குதுல்ல. இதுதான் இப்போது பாராளுமன்றத்தில் நடக்கிறது
என்று சிரித்துக்கொண்டே கூறுகிறார்
அவரைப் பாராட்டுவது அது இதெல்லாம் அப்புறம்
அவரைப் பாதுகாக்க வேண்டும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...