டக்கர்
சிதார்த் நடித்த படம்
அதில் ஒரு காட்சி
பாரதிக்கும் வ.ரா விற்கும் இடையே 113 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அவர்களுக்கிடையேயான முதல் உரையாடலை நினைவிற்கு கொண்டு வந்தது
பாரதியைச் சந்திக்க வ.ரா வந்திருப்பார்
பாரதியார் மாடியிலிருந்து கீழே வருகிறார்
பாரதியோடு ஆங்கிலத்தில் பேசினால் மகிழ்வார் என்று கருதிய வ.ரா ஆங்கிலத்தில் பேசுகிறார்
பாரதி திரும்புகிறார்
வ.ரா அழைக்கிறார்
பாரதி கேட்கிறார்,
"இன்னும் எத்தனை காலத்திற்குதான் ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசுவீர்கள்?"
இப்போது படத்திற்கு வருவோம்
ஒரு முடிதிருத்தும் கடைக்கு சித்தார்த் வருகிறார்
ஊழியரிடம்
ஒரு படத்தைக் காட்டுவார்
அதில் சன்னமாக முறுக்கிய மீசையும் குறுந்தாடியுமாக ஒருவர்
அதைக் காட்டி
இந்த முஷ்டேச் இருக்கட்டும்
பியர்ட் எடுத்திடு
அந்தத் தம்பி முடித்திட்டு
எப்படிங்கண்ணா இருக்கு என்று கேட்பார்
பார்த்த சித்தார்த் அதிர்ந்திடுவார்
மீசையை எடுத்துவிட்டு தாடியை வைத்திருப்பார்
அடிக்க ஆரம்பிப்பார்
முதலாளி தலையிடுவார்
இந்தண்ணன்தான் பியர்ட வச்சிட்டு முஷ்டேச்ச எடுக்க சொன்னார்
அதத்தான் செஞ்சேன்
அதான பியர்ட வச்சுட்டு முஷ்டேச்சதான எடுத்திருக்கான் நீங்க கேட்டபடி
பியர்ட்னா தாடின்னும் முஷ்டேச்னா மீசைன்னும் புரிய வைப்பார் சித்தார்த்
முதலாளி சொல்வார்
அத இப்படி புரியற மாதிரி தமிழ்ல சொல்லி இருக்கலாம்ல
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்