“எங்கு சென்றாலும் தமிழ்நாட்டை மறக்க முடியாதவராகவே பிரதமர் இருக்கிறார்”
என்று அவருக்கே உரிய தொனியில் நக்கல் செய்திருக்கிறார் முதல்வர்
நக்கல்தான் என்றாலும் அதற்குள் குழைந்து கிடக்கும் கோவத்தின் வெப்பத்தை தமிழ் மக்கள் உணர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்
இன்னும் சரியாக சொல்வதெனில்,
அவரது கோவம் குழைந்த பகடிக்கு நான் உள்ளிட்ட தமிழர்கள் ரசிகர்களாக மாறிக் கொண்டிருக்கிறோம்
அவர்
இன்னும் உக்கிரமாக
இன்னும் பேரதிக நக்கலைக் குழைத்து
பிரதமரை எதிர்கொள்ள வேண்டும் என்பது
நான் உள்ளிட்ட தமிழ் மக்களின் நேயர் விருப்பம்
தமிழ் மண்ணில் உள்ள “இந்து அறநிலையத் துறை” குறித்து ஏதும் அறியாதவராக
கிட்டத்தட்ட அண்ணாமலைக்கும் திரு H.ராஜா அளவிற்கும் இறங்கி பிரதமர் பேசுவது
அவர் நமக்கும் பிரதமர் என்பதால் கொஞ்சம் வலியைக் கொடுக்கிறது
அசிங்கமாக இருக்கிறது
தெற்குப் பகுதியில் மக்கள் அசிங்கமாகத்தான் இதைப் பார்ப்பார்கள் என்பது அவருக்கும் தெரியும்
பிறகு ஏன் அசிங்கப்படுகிறோம் என்று தெரிந்தும் இப்படி பேசுகிறார்?
இது வடக்கிற்கான அவரது பிரச்சார யுக்தி
தெற்கில் இது பொய் என்று புலப்படுவது மாதிரி வடக்கில் புலப்படாது என்பது அவருக்குத் தெரியும்
கோவிலை திமுக ஆட்டையப் போடுகிறது என்று சொன்னால் தெற்கில் சிரிப்பார்கள்
அடப் போயா என்று நக்கலிப்பார்கள்
ஆனால் வடக்கில் அப்படியா என்று வியப்பார்கள்
அப்படியாகவே அவர்களை படாத பாடுபட்டு பாதுகாத்து வருகிறார்கள்
அவர்களிடம்
எங்களை விட்டால் உங்கள் கோவிலுக்கு பாதுகாப்பில்லை என்கிறார்
ஆகவே எங்களைத்தான் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறார்
இந்தியாவை வெற்றி கொள்ளாமல் மாநிலத்தை மட்டும் வென்றால் அவர்கள்
ரவியை அனுப்புவார்கள்
தமிழிசையை அனுப்புவார்கள்
பெரியாரை
அம்பேத்காரை
வைகுந்தரை
நாராயண குருவை
அவர்களுடைய பாஷையில் அவர்களிடம் கொண்டுபோக வேண்டும்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்