Saturday, October 7, 2023

ராகுலைப் பார்த்து பயப்பட ஆரம்பித்துவிட்டது பாஜக



 அக்ரானி பத்திரிக்கையில் 1945 ஆண்டு வெளி வந்த கார்டூன் படத்தை தோழர் ஷாஜி (Shahjahan R) தனது முகநூல் பக்கத்தில் வைத்திருக்கிறார்




அவரே அந்தப் பகுதியில் எழுதியிருப்பதுபோல அது ”இந்துராஷ்ட்ரா” வாக மாறுகிறது
”அக்ரானி” தடை செய்யப்பட்டதுதான் காரணம்
01.11.1947 அன்று நடைபெற்ற இந்துராஷ்ட்ரா இதழின் பங்குதாரர்களின் கூட்டத்தில் கோட்சே பேசியதை தோழர் அருணன் தனது “கோட்சேயின் குருமார்கள்” என்ற நூலின் 11 ஆம் பக்கத்தில் தருகிறார்
கோட்சே பேசுகிறான்
“தனது பிணத்தின் மீதுதான் இந்தியாவைப் பிளக்க முடியும் என்று காந்தி கூறினார். இந்தியா பிளக்கப் பட்டு விட்டது.
காந்தி இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்”
அதன் பிறகு 100 நாட்களுக்குள் கோட்சே காந்தியைக் கொன்றான்
இப்போது ராகுலையும் ராவணனாக பாஜக சித்தரித்திருப்பதாக கேள்விப்படுகிறேன்



ராகுலை காந்தி அளவிற்கு உயரிய அளவில் சமமாக வைத்துப் பார்க்கிறதா என்று தெரியவில்லை
ஆனால் ஒன்று சொல்ல வேண்டும்
ராகுல் கவனமாக இருக்க வேண்டும்
ஒன்று சொல்லி முடிக்கலாம்
ராகுலைப் பார்த்து பயப்பட ஆரம்பித்துவிட்டது பாஜக

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...