Showing posts with label இந்தியா பாகிஸ்தான் போர். Show all posts
Showing posts with label இந்தியா பாகிஸ்தான் போர். Show all posts

Saturday, May 24, 2025

எங்கள் ஊரில் மைசூர்பாக் மைசூர்பாக்தான்

 நாங்கள் நாளை உங்கள் நாட்டில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது மட்டும் தாக்குதல் தொடங்க இருக்கிறோம்

உங்கள் வாழிடங்களிலோ, அரசு கட்டிடங்களிலோ, ராணுவ முகாம்களிலோ ஏதும் செய்ய மாட்டோம் என்று தாக்குதல் நடத்துவதற்கு முதல்நாள் பாகிஸ்தானிற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியிருக்கிறார்
இதை அவரே சொல்கிறார்
இதை தேசபக்தி என்றும்
பாக் என உச்சரிப்பது தேசத் துரோகம் என்றும் சொல்கிறார்கள் சங்கிகள்
மைசூர்பாக்கை மைசூர்ஸ்ரீ என்றுதான் அழைக்க வேண்டும் என்கிறார்கள்
இன்று ஐந்து கடைகளில் நூறு நூறு கிராம் மைசூர்பாக் கேட்டேன்
கொடுத்தார்கள்
அதிலும் ஒரு கடையில் மைசூர்பாக் கேட்டது நீங்கதானே என்று கேட்டு என்னிடம் கொடுத்தார்கள்
ஆக எங்கள் ஊரில் மைசூர்பாக் மைசூர்பாக்தான்

Friday, May 23, 2025

சசி தரூரை காங்கிரஸ் சகிப்பது என்பது துயரம்

 பகல்காம் தாக்குதல்

அதை ஒட்டி இரு நாடுகளுக்குமிடையே நடந்த சண்டை
சண்டை நிறுத்தம்
இது கடந்து இது குறித்தான பாராளுமன்ற நிலைக்குழு
நிலைக் குழுவின் தலைவராக காங்கிரஸ் கட்சியின் சசிதரூர்
எழுதுகிறார்,
காங்கிரஸ் வெளியுறவுக் கொள்கை
பாஜக வெளியுறவுக் கொள்கை
இரண்டும் வேறு வேறல்ல
இந்திய வெளியுறவுக் கொள்கைதான்
இதை அவர் எழுதிய அதே நாளில் 14,000 பாலஸ்தீனக் குழந்தைகள் உணவின்றி மரணிக்க இருப்பதாகவும்
உணவு அனுப்ப யாரையும் அனுமதிக்க இஸ்ரேல் மறுப்பதாகவும் செய்தி
பிறகு உணவு போனது வேறு
இது பாஜகவிற்கு உவப்பானது
அது இஸ்ரேல் சார்பானது
காங்கிரசும் அப்படியா தரூர்?
சசி தரூரை காங்கிரஸ் சகிப்பது என்பது துயரம்

Thursday, May 15, 2025

நீ ஏன் தாயே உன்னை நிருபிக்க முயற்சிக்கிறாய்

 "நான் ஒரு இஸ்லாமியப் பெண்

ஆனால் பாகிஸ்தானி அல்ல
நான் ஒரு இஸ்லாமியப் பெண்
ஆனால் நான் தீவிரவாதி அல்ல"
என்று சோபியா பேசுவதைக் கேட்க நேர்ந்தது
நீ ஏன் தாயே உன்னை நிருபிக்க முயற்சிக்கிறாய்
நீ
எங்கள் தாய்
எங்கள் சகோதரி
எங்கள் மகள்

Tuesday, May 13, 2025

இருவருக்குமே பொய்தான் பிழைப்பு என்பதால்

 நீங்கள் இருவரும் சண்டையை நிறுத்தவில்லை எனில் உங்களுடனான வர்த்தக உறவை நிறுத்திக் கொள்வேன் என்று விரட்டித்தான் இந்தியாவையும் அமெரிக்காவையும் சண்டையை தான் நிறுத்தச் செய்ததாக ட்ரம்ப் கூறுகிறார்

எனில்
ட்ரம்ப் கூற்றுப்படி சண்டையை நிறுத்த இரு நாடுகளும் விரும்பவில்லை என்றாகிறது
ஆனால் பாகிஸ்தான் கெஞ்சியதால் சண்டையை நிறுத்தியதாக மோடி சொல்கிறார்
இருவருக்குமே பொய்தான் பிழைப்பு என்பதால் யார் சொல்வது பொய் என்பதில் குழம்பிக் கிடக்கிறோம்
#சாமங்கவிந்து 08 நிமிடம்
13-05.2015

Thursday, May 8, 2025

பெரியவனாக மாட்டேன்

 பாலஸ்தீனம்

விளையாடிக் கொண்டிருக்கிறான்

கேட்கிறார்கள்,

பெரியவனாயி என்ன செய்வ?

பெரியவனாக மாட்டேன்

விட மாட்டார்கள்

சின்னப்பிள்ளையா இருக்கப்பவே 

கொன்று போடுவார்கள்

அய்யோ, அய்யோ, ஒரு பிஞ்சு இப்படிப் பேசுவதைக் கேட்கவா இத்தனைக் காலம் வாழ்ந்தேன்

இதை எழுதிக்கொண்டிருக்கும்போதும் தெருவில் எங்கள் குழந்தைகள் விளையாடும் சத்தம் கேட்கிறது

பாகிஸ்தானிலும் குழந்தைகள் விளையாண்டுகொண்டு இருப்பார்கள்

குண்டுகளுக்கு பேதமோ, வயதோ தெரியாது

பயமாக இருக்கிறது

கொடியவர்களை எப்படி வேண்டுமானாலும் சந்தியுங்கள்

போர் வேண்டாம்

#இந்தியபாகிஸ்தான்போர்edn
07.05.2025

Thursday, December 12, 2019

நம்பிக்கை பிறக்கிறது






பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் ஒரு விளம்பரம் தொலைக்காட்சிகளில் வரும்
அநேகமாக ஏர்டெல் விளம்பரம் என்று நினைக்கிறேன்
நமக்கும் பாக்கிஸ்தானிற்கும் இடையிலான கம்பி வேலி
வேலிக்கு அந்தப்பக்கம் ஒரு பாக்கிஸ்தான் குழந்தை
இந்தப்பக்கம் ஒரு இந்தியக் குழந்தை
இந்தப்பக்கம் இருந்து உதைபந்தை அந்தப் பக்கத்திற்கு வேலியில் இருக்கும் இடைவெளி வழியாக உதைத்து அனுப்புவான்
அந்தக் குழந்தை இன்னொரு இடைவெளி வழியாக திருப்புவான்
அப்படி ஒரு நெகிழ்ச்சி
அந்த விளம்பரம் வரும் நேரங்களில் காத்திருந்து பார்த்த அனுபவம் உண்டு
ஆனால் அதை எடுத்து பத்திரப்படுத்தும் தொழில் நுட்பமெல்லாம் நமக்கு கைவராத நேரம்
மனித நல்லிணக்கம் குறித்து ஏர்டெல் நமக்கு பாடம் எடுத்ததாகவே பட்டதால் ஏர்டெல் எண்ணிற்கு மாறிய அனுபவமும் உண்டு
அந்த விளம்பரம் நின்றுபோனது எதையோ இழந்தது மாதிரி இருந்தது
ஆனால் பையப் பைய அதுவும் கடந்து போனது
இன்று தம்பி தாஹிர் தனது பக்கத்தில் வைத்திருந்த இந்தப் படம் அப்படியே நெகிழ்த்திப் பிசைந்து விட்டது
இந்தியக் குடியுரிமை குறித்த நம்பிக்கையில் தங்களது நகங்களால் சிலர் மகிழ்ந்து வெறித்து கீறத் துவங்கியப் பொழுதில் இந்தப் படத்தை வைத்திருக்கிறார் தம்பி
நம்பிக்கை பிறக்கிறது
முத்தம் Dhahir Batcha

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...