29.07.2022 அன்று நடந்த தேசியக் கல்விக் கொள்கை 2020 செயல்படுத்தப்பட்ட இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவில் ஒன்றிய உள்ளாட்சித்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா அவர்களது உரை சில அய்யங்களை நமக்கு எழுப்புகிறது
அவற்றின்மீது நமது உயர்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு பொன்முடி அவர்களும்
முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களும் கவனம் செலுத்த வேண்டும் என்று கோருகிறோம்
தனது உரையினூடே
10 மாநிலங்கள் தங்களது மொழியில் பொறியியல் வகுப்புகளை நடத்த ஒத்துக் கொண்டுள்ளதாகவும்
ஆங்கிலம் தவிர 12 மொழிகளில் JEE மற்றும் NEET தேர்வுகள் நடத்தப்படுவதாகவும்
அவர் கூறியிருக்கிறார்
10 மாநிலங்கள் தங்களது மொழியில் பொறியியல் வகுப்புகளை நத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் கூறுவது உண்மை எனில்
1) ஒப்புக்கொண்டுள்ளன என்றால் இதைக் கோரியது ஒன்றிய அரசு என்றும்
அந்தக் கோரிக்கையை 10 மாநிலங்கள் ஏற்றிருப்பதாகவும் பொருள்
இது உண்மையாக இருப்பின் அந்தப் பட்டியலில் தமிழ்நாடும் உள்ளதா?
இல்லை எனில் ஏன் இல்லை?
ஆங்கிலம் தவிர 12 மொழிகளில் NEET மற்றும் JEE தேர்வுகள் நடைபெறுவதாக அவர் சொல்வது உண்மை எனில் அவற்றுள் தமிழ் உள்ளதா?
முதல் பட்டியலில் தமிழ்நாடும்
இரண்டாவது பட்டியலில் தமிழும் இல்லை எனில்
அவை சார்ந்து அமைச்சரும் முதல்வரும் கவனம் செலுத்த வேண்டுகிறேன்
அமைச்சர் சொல்வது உண்மை இல்லை எனில் அதற்கு அமைச்சரும் முதல்வரும் எதிர்வினையாற்ற வேண்டுகிறேன்
முகநூல்
31.07.2022