Sunday, July 31, 2022

இந்திவழிக் கல்வியை நோக்கியான நகர்வு இது

 


ஒருவர் சரியாகப் பேசினால்

பேசியது மாண்பமை அமித்சாவே ஆனாலும் பாராட்டிவிட வேண்டியதுதான்
அதே நேரத்தில் அதை பின்னணியில் உள்ள அரசியல் அய்யங்களையும் சேர்த்தே வைக்க வேண்டிய தேவையும் இருக்கிறது
அதை ஒட்டி சில கோரிக்கைகளையும் வைக்க வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது
மூன்றையும் சேர்த்துதான் நாம் செய்து வருகிறோம்
செய்யவும் செய்வோம்
நேற்று அதாவது 29.07.2022 அன்று நடைபெற்ற தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020 இன் இரண்டாம் ஆண்டு நிறைவுநாளில் இந்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா உரையாற்றிய செய்தியை 30.07.2022 நாளிட்ட THE HINDU தருகிறது
மிகச் சரியான தயாரிப்போடு கூடிய மிகச் சரியானதும் தேவையானதுமான உரை அது
இந்த நாட்டில் 95 சதவிகிதம் குழந்தைகள் தங்களாது தாய்மொழி வழியிலேயே கல்வி பயில்வதாலும்
தாய்மொழி வழியிலேயே ஒருவரது இயல்பான சிந்தனை இருக்கும் என்பதாலும்
பொறியியல், சட்டம், மருத்துவம் போன்றவற்றை தாய்மொழியிலேயே தருவதுதான் அவசியம் என்கிறார்
தாய்மொழி வழியில் ஆராய்ச்சிகள் நடக்காததால்தான் ஆராய்ச்சித் துறையில் இந்தியா இன்னும் போகவேண்டிய இடத்திற்கு போகவில்லை என்றும் ஆதங்கப்படுகிறார்
நாட்டின் 5 % விழுக்காடு ஆற்றலே கிடைக்கிறது என்றும் கூறுகிறார்
அதாவது,
தாய்மொழி வழியில் மருத்துவம், பொறியியல், சட்டம், ஆராய்ச்சி போன்றவை நடக்காததால் 5% விழுக்காடு மட்டுமே வெளி வருகிறது என்கிறார்
அதாவது,
தாய்மொழியில் படிக்காதவர்களான 95% மட்டுமே சட்டம்,ஆராய்ச்சி,மருத்துவம், மற்றும் பொறியியல் துறையில் படிக்கவும் பணியாற்றவும் செய்கிறார்கள் என்றும்
இவர்களால் எந்த முன்னேற்றமும் நாட்டிற்கு இல்லை என்றும்
தாய்மொழியில் படித்த 5% பேரால்தான் இந்தத் துறைகளில் வெளிச்சம் இருப்பதாகவும் அவர் சொல்வதாகத்தான் இதைக் கொள்ள முடியும்
இந்த விழுக்காட்டு அளவீட்டில் நமக்கு உடன்பாடு இல்லை
அமைச்சரிடம் நாம் கேட்க விரும்புவது
நீங்கள் குறிப்பிடும் இந்த விஷயத்தில் நீங்கள் இப்போது பேசியது மாதிரி தேசியக் கல்விக் கொள்கை உள்ளதா?
ஆம் எனில் திறந்த மனதோடு விவாதிப்போமா?
ஒருக்கால் இல்லை என்பதை நீங்கள் ஏற்பீர்கள் எனில் மாற்று என்ன?
எங்களைப் பொறுத்தவரை அந்த ஐந்து விழுக்காட்டினருக்காக வடிவமைக்கப் பட்டதே தேசியக் கல்விக் கொள்கை
அதே கூட்டத்தில் உரையாற்றியக் கல்வித்துறை அமைச்சர் திரு தர்மேந்ரா ப்ரதாபன் தேசியக் கல்விக் கொள்கை 2020 மெக்காலே திட்டத்திற்கு எதிராகக் கட்டமைக்கப் பட்டது என்பது
ஆங்கில வழிக் கல்விக்கு எதிரானது இது என்பத்தாகக் கொள்ள வைக்கிறது
உங்களது கட்சிக் கொள்கை ஒரே மொழி என்பதாக இருக்கிறது
கல்வி அமைச்சர் பேசுவது ஆங்கில வழிக் கல்விக்கு எதிரானது தேசியக் கல்விக் கொள்கை 2020 என்று கொள்ள வைக்கிறது
எனில்
இந்திவழிக் கல்வியை நோக்கியான நகர்வு இது என்றும் கொள்ள வைக்கிறது
அன்பிற்குரிய அமித் ஷா அவர்களே
எங்களது அய்யத்தைத் தெளிவுபடுத்துங்கள்

முகநூல்
30.01.2022

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...