Sunday, January 31, 2016

தமிழ் மாணவன்தான்.....



போப் அவர்கள் கல்லறையில் “இங்கொரு தமிழ் மாணவன் உறங்குகிறான்” என்று எழுதி வைக்கப் பட்டிருப்பதாக ஏறத்தாழ எனக்கு விவரம் தெரிந்த 45 ஆண்டுகளாக கேள்விபட்டு வருகிறேன். தமிழின் பெருமையை இதைக் கொண்டு நிறுவவே ஏராளமானோர் முயன்று வருகிறார்கள். நானும்கூட ஒன்றிரண்டு கூட்டங்களில் இதைப் பேசியிருக்கிறேநன்தான்.

போப் அவர்கள் தமிழை வியந்து ஓதியவர்தான். அதில் தமிழின் எதிரிக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.

ஆனால், போப் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவரது கல்லறையில் இப்படியாக எழுதப் பட்டிருக்கிறது என்பது தவறான தகவல் என்று 1961 ஆம் ஆண்டே மீ.ப. சோமசுந்தரம் அவர்கள் நிறுவியுள்ளார். அவரது கல்லறைக்கே சென்று பார்த்து கல்லறைக்கல்லில் எழுதியிருப்பதை எடுத்துப் போட்டு நிறுவியிருக்கிறார்.

"George Uglow Pope DD of south India, sometime lecturer in Tamil and Telungu, in the university and chaplain of Balliol college, Oxford. Born 24 th April 1820, Died 11th February1908.

This stone has been placed here by his family and his Tamil friends in south India.

In loving Admiration of his lifelong labours in the cause of Orient literature and philosophy"

என்றுதான் அந்த கல்லில் இருப்பதாக அங்கு போய் பார்த்து வந்த ஒருவர் சொன்ன பிறகு ஒன்று அப்படி சொல்வதை நாம் தவிர்த்திருக்க வேண்டும். அல்லது அதை சரி பார்த்து வந்திருக்க வேண்டும்.

தன்னை ஒரு தமிழ் மாணவனாகத்தான் போப் கருதினார். இன்னும் சொல்லப் போனால் இதைக்கூட அவர் சொல்லியிருப்பார்தான். ஆனால் சொல்லவில்லை. அதை ஏற்போம்.

இதுமாதிரியான தவறான வரலாறுகளை தவிர்ப்போம்.

தமிழ் மட்டுமல்ல வேறு எந்த மொழியும் இப்படிப் பட்ட காரியங்களால் வாழ்ந்துவிடப் போவதில்லை.

தகவல் தோழர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களது  “கிறிஸ்தவமும் தமிழ் சூழலும்”
என்ற நூலில் இருந்து

பரணில் கிடைத்த அழைப்பு 03


Saturday, January 30, 2016

கடிதம் 16

அன்பின் தோழர்களே,
வணக்கம். நலம்தானே?

சமீபத்தில் வெளியான எனது “வலைக்காடு” நல்லபடியாக போய்க்கொண்டிருப்பதாக வருகிற தகவல்கள் மகிழ்ச்சியைத் தருகிறது.

எனது ‘பத்துக் கிலோ ஞானம்’ நூலை நியூ செஞ்சுரி மறு பதிப்பாக கொண்டு வருகிறது. பிரச்சினை என்னவெனில் அந்தப் புத்தகம் கைவசம் இல்லை. தோழர்கள் யாரிடமேனும் இருந்தால் கொடுத்து உதவுங்கள்.

திருப்பித் தந்து விடுகிறேன்.

அன்புடன்,
இரா எட்வின்

ஒரு மழை வந்து போகவேண்டும் நூல் வெளியீடு


24.01.2016 அன்று பெரம்பலூரில் நடந்த  தோழர் செல்வகுமார் கவிதைநூல் வெளியீட்டு விழா குறித்து தினமணி 

14 வந்தேமாதரம் சொல்லு

                                                            ”மலம் அள்ளுபவனின்
                                                            எந்தக் கை
                                                            பீச்சாங்கை?” 
                                                            _ சதீஷ் பிரபு              

இப்போது இருப்பது போல் நவீன கழிவறை வசதிகள் இல்லாத இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளின் அந்திப் பகுதி அதுவீடுகளின் பின்புறம் கொல்லைப் புறம் என்று அப்போது அழைக்கப் படும்பொதுவாக எல்லோருமே இயற்கை உபாதைகளை ஏதோ ஒரு ஒரு ஒதுக்குப் புறத்தில் முடித்துக் கொள்வார்கள்வசதி படைத்த மேட்டுக் குடிகள் மட்டும் வீட்டின் கொல்லைப் புறத்தின் ஓரத்தில் ஒரு மறைப்பு கட்டியிருப்பார்கள்அதனினும் வசதியானவர்கள் அந்த மறைப்பை சுவர் கொண்டு எழுப்பியிருப்பார்கள்அதன் உள்ளே உட்காருகிற மாதிரி தேவையான அளவு சின்ன மேடை போல கட்டியிருப்பார்கள்அதன் மேலே அமர்ந்து மேடையின் அந்தப் பகுதியில் விழுகிற மாதிரி மலம் கழிப்பார்கள்.

குவிந்து கிடக்கும் மனித மலத்தை அள்ளி சுத்தம் செய்வதெற்கென்று ஒரு சாதியை சாதிக் கட்டுமானம் ஏற்பாடு செய்திருந்ததுஅந்தத்  தோழர்கள் ஒரு தட்டுக்கூடைஒரு டப்பாவில் சாம்பல்மலத்தை அள்ளி கூடையில் கொட்டுவதற்குத் தோதான இரண்டு இரும்புத் தட்டுகள் ஆகியவற்றோடு வருவார்கள்.

குவிந்து கிடக்கும் மனித மலத்தில் சாம்பலைக் கொட்டி அதை கொஞ்சம் உலர வைத்து கொண்டு வந்திருக்கும் அந்த இரண்டு தட்டுகளால் வாரி வழித்து தட்டுக்கூடையில் போட்டு கொண்டுபோய் மந்தைகளில் கொட்டுவார்கள்தட்டுக்கூடையை தலையில்தான் சுமந்து போக வேண்டும்அப்படிப் போகும் போது தட்டுக்கூடையிலிருந்து பல நேரம் மலம் அவர்களடு கன்னங்களில் கசியும்அதை தங்களது இரண்டு கைகளாலும் துடைத்துக் கொள்வார்கள்.

இந்தக் கொடுமை சகிக்காமல் சதீஷ்பிரபு என்ற தம்பி தனது கவிதையில்,

மலம் அள்ளுபவளின்
எந்தக் கை
பீச்சாங்கை’ என்று எழுதினான்

அன்றைய தூத்துகுடியில் நிறைய ஆங்கிலேயர்கள் வசித்து வந்தனர்அவர்களை துரை என்றுதான் மக்கள் அழைப்பார்கள்.

ஒரு காலைப் பொழுதில் அப்படிப் பட்ட ஒரு துரைமார் ஒருவரின் வீட்டின் கொல்லைப் புறக் கழிவறையை சுத்தம் செய்வதற்காக ஒரு அம்மாயி வருகிறார்கொல்லைக் கதவு திறந்திருக்கிறதுஅந்த வெள்ளைத் துறை கழிவறைக்கும் கொஞ்சமாய் தள்ளி நின்று பல் விளக்கிக் கொண்டிருக்கிறான்வந்தக் கிழவி தனது கூடையை கீழே வைத்து விட்டு துரையைக் கும்பிட்டுக் கொள்கிறாள்ஒரு சன்னமான தலை அசைப்பில் அந்த வெள்ளைத் துரை அவளது மரியாதையை ஏற்கிறான்பதிலுக்கு மரியாதை செய்யா விட்டாலும் இப்படி மரியாதையை ஏற்பது என்பதுகூட நமது ஆண்டைகளிடம் இல்லாத ஒரு பெருந்தன்மை.

வழக்கமாக இது முடிந்ததும் கிழவி சுத்தம் செய்ய கழிவறைக்குள் நுழைந்து விடுவாள்ஆனால் அன்று கூடையை வைத்து விட்டு வணங்கிய இடத்திலேயே நின்று கொண்டிருந்தாள்இது வழக்கத்துக்கு முற்றிலும் புதிதானதுஎதோ தேவை போல கிழவிக்கு என்று படுகிறது அந்தத் துரைக்குஏதேனும் உதவி தேவைப் படுகிறதா என்று கேட்கிறான்இல்லை என்று அந்தக் கிழவி சொல்லவேஅப்புறம் ஏன் தேவையில்லாமல் நிற்க வேண்டும் என்று கேட்கிறான்அப்போது கிழவி சொல்கிறாள்,

எனக்கு வேற ஒன்னு வேணும் தொர

என்ன வேணும்?’

கிழவி மீண்டும் மௌனமாகி விடவே அவன் மீண்டும் என்ன வேண்டுமென்று கேட்கிறான்ஏதும் பேசாது கிழவி மௌனமாக இருக்கவே எரிச்சலடைகிறான்.

கேக்குறேன்லகாதுல விழலசெவுடேஎன்ன வேணும்?’

தொரஒரே ஒருதரம்…’
என்ன?’

வந்தே மாதரம் சொல்லு தொர

‘ திமிறா கெழட்டு நாயே

சொல்லு தொர

சொல்ல மாட்டேன்

அப்ப அள்ள மாட்டேன்

கிழவி போய்விட்டாள்கிட்டதட்ட அன்றைய தேதியில் எல்லா துரைமார்கள் வீடுகளில் இதுதான் நடந்திருக்க வேண்டும்இப்படி நடந்திருக்கும் பட்சத்தில் துரைமார்களின் வீடுகள் நாறிப் போயிருந்திருக்கும்இதன் பிறகு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லைஆனால் என்ன நடந்திருக்கும் என்று யூகிக்க முடிகிறது.நிச்சயமாக கழிவறை சுத்தம் செய்பவர்களை ஆங்கிலேயர்கள் தண்டித்திருக்க முடியாதுகாரணம் அவர்களைத் தண்டித்துவிட்டு கழிவறைகளை சுத்தம்செய்ய அவர்களால் மாற்று ஏற்பாடுகளை செய்திருக்க முடியாதுஏனெனில் இவர்களை விட்டால் மலம் அள்ளுவதற்கு யாரும் இல்லை என்பதும் இவர்களைப் பகைத்துக் கொள்வதால் வீடு நாறிப் போவதைத் தவிர வேறு ஒன்றும் நிகழ்ந்துவிடாது என்பதும் ஆங்கிலேயர்களுக்கு தெரிந்துதானிருக்கும்ஆகவே எனது யூகப்படி இதுதான் நடந்திருக்க வேண்டும்,

அவர்கள் வந்தேமாதரம் சொல்லியிருக்க வேண்டும்.

இந்தச் சம்பவத்தை அநேகமாக ச.தமிழ்ச்செல்வன் அவர்களது 1947 என்ற குறுநூலில் இருந்துதான் எடுத்திருக்க வேண்டும்அல்லது வேறு நூல் என யாருக்கேனும் தெரியும் பட்சத்தில் சொன்னால் நலமாயிருக்கும்

இது புனைவல்லவரலாறுஎனில் இந்த வரலாறு எத்தனைபேருக்கு தெரியும்குறைந்த பட்சம் பள்ளிக் குழந்தைகளுக்கு வரலாறு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களுக்காவது அல்லது அந்த வரலாறு பாட ஆசிரியர்களுக்கு கல்லூரிகளில் வரலாறு சொல்லிக் கொடுத்த பேராசிரியர்களுக்காவது தெரியுமாதெரியாது என்பதே கசந்தாலும் உண்மை.

தெரியாது என்பது அவர்களின் குற்றமாஅவர்களுக்கு தெரியுமளவிற்கு இந்த சம்பவம் பள்ளிகளிலோ கல்லூரிகளிலோ பாடத் திட்டத்தில் இல்லைஏன் இல்லை.

வந்தேமாதரம் சொல்லக் கூடாது என்று ஆங்கிலேயம் சட்டம் போடுகிறான்அந்த வார்த்தையை ஏறத்தாழ ஒரு கெட்ட வார்த்தையாகதமது பேராதிக்கத்தை அசைக்கக் கூடிய ஒரு கொடும் ஆயுதமாக அவன் பார்க்கிறான்அந்த வார்த்தையை பொது இடங்களில் உச்சரித்தால் கடுந்தண்டனைகளைத் தருகிறான்.சொல்பவர்களை சிறையில் அடைத்திருக்கிறான்கோபத்தின் உச்சத்தில் வந்தே மாதரம் சொன்னவர்களை ஈவு இரக்கமே இல்லாமல் சுட்டுப் போட்டிருக்கிறான்.

வந்தேமாதரம் என்ற ஒற்றைச் சொல் சுதந்திரப் போராட்டக் காலத்தில் களத்தில் நின்றகளமேக முடியாத அனைவருக்கும் ஒருவிதமான புத்தெழுச்சியைக் கொடுத்த வார்த்தைஇன்னும் கொஞ்சம் இறங்கி உண்மையை சொல்ல வேண்டும் எனில் அந்த மந்திரச் சொல் கிழவர்களை பெண்களை முடியாதவர்களைக் கூட களத்தில் கொண்டு வந்து தள்ளியது.

சொல்லாதே என்றான்திரண்டு நின்று சொன்னார்கள்மிரட்டினான்இன்னும் கூடுதலாய் குரலெடுத்து வந்தேமாதரம் என்று உயிர்கசியக் கத்தினார்கள்அடித்துச் சிறை படுத்தினான்.

அப்படி அந்த வார்த்தையை சொல்லி அதற்காக வதை பட்டவர்களை எல்லாம் அவன் தேசத்துரோகி என்றான்.நான் அப்படி சொல்வதை தேசப் பற்று என்கிறோம்அவன் அந்த செயலை தேசத் துரோகம் என்றான்நாம் அதை தியாகம் என்று போற்றுகிறோம்.    

தமிழ்நாட்டுப் பள்ளிகளில் சுதந்திரதின நிகழ்ச்சிகளின் போது நிச்சயமாக ஒரு குழந்தையேனும் குமரன் வேடம் போட்டிருக்கும்கையில் கொடியோடு மழலையில் அந்தக் குழந்தை வந்தேமாதரம் சொல்லும் போது குமரனையே நேரில் பார்ப்பது போன்ற ஒரு சிலிர்ப்பு இன்றைக்கும் ஏற்படவே செய்கிறது.

கொடியை காத்ததற்காக மட்டுமல்ல குமரனைக் கொன்றதுதிருப்பூர் வீதிகளில் மூன்றுவர்ணக் கொடியைப் பிடித்துக் கொண்டு அவன் வந்தேமாதரம் சொல்லிக் கொண்டுவந்த போது அவன் தாக்கப் படுகிறான்அவன் பேரதிகமாய்த் தாக்கப் பட்டது வந்தே மாதரம் சொன்னதற்காகத்தான்.

ஒரு உண்மையை சொல்ல வேண்டும்எவ்வளவு தாக்கியும் குமரன் சாக வில்லைஇது ஆங்கிலேயர்களை ஆச்சரியப் பட வைக்கிறதுவாங்கிய அடிக்கு அவன் ஏழெட்டு முறையேனும் செத்திருக்க வேண்டியவன்.கொடியை இறுக்கிப் பிடித்தவாறே வந்தேமாதரம் என்று முனகிக் கொண்டே இருக்கிறான்ஒருக்கால் கையிலிருக்கும் கொடியைப் பிடுங்கினால் அவன் மரணமடையக் கூடும் என்று யாரோ கூறவே கொடியைப் பிடுங்குகிறார்கள்கொடியைப் பிறிந்த பிறகு அவன் உயிர் பையப் பையப் பிரிகிறதுஉயிர்ப் பிரிகிற அந்த வேளையிலும் அவன் வாய் வந்தேமாதரம் சொல்கிறது.

அவனது தியாகம் மிகப் பெரிய ஒன்றுஅவர்களைப் பற்றிய வரலாறுகூட போதுமான அளவிற்கு சொல்லித் தரப் படவில்லைஏன்போதிய அளவிற்கு பதியப் படவே இல்லை.

நம் மக்கள் 5000 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு இன்னும் கொஞ்சம் துப்பாக்கி ரவைகள் இருந்திருக்குமானால் இன்னும் நிறையபேரைக் கொன்றழித்திருப்பேன் என்று கொக்கறித்த டயரைப் பற்றி பதிவுகள் கிடைக்குமளவிற்கு நமக்கு அவனைக் காத்திருந்து கொன்ற உதம்சிங் பற்ரி பதிவுகள் இல்லையே.   

வழக்கமாக இவற்றை நேரம் கிடைக்கும் போதெல்லாம் என் குழந்தைகளுக்கு சொல்லி இரண்டு கேள்விகளை அவர்களிடம் வைப்பேன்.

1)   பள்ளிப் பாடப் புத்தகங்களில் 5000 இந்தியர்களை சுட்டுக் கொன்ற டயரின் வரலாறு வைக்கப் பட வேண்டுமாஅல்லது இந்தியர்களை சுட்டுக் கொன்ற டயர் என்னும் கொடியவனை 20 ஆண்டுகள் தவமிருந்து கொன்று சாய்த்த உதம்சிங்கின் வரலாறு வைக்கப்பட வேண்டுமா?
2)   வந்தேமாதரம் சொல்லியதால் தண்டிக்கப் பட்ட தியாகிகளைப் போற்றிக் கொண்டாடி வரலாறுகளில் பதிந்து மாணவர்களுக்கு சொல்லித் தருவது போலவே வந்தேமாதரம் சொல்லச் சொல்லி வெள்ளையர்களை நிர்ப்பந்தித்த அந்த மலம் அள்ளும் அம்மாயியின் வரலாறு சொல்லித் தரப்பட வேண்டுமாஇல்லையா?

என் பள்ளிக் குழந்தைகள் உதம்சிங்கின் வரலாறு கேட்கிற போதெல்லாம் சிலிர்த்தே போகிறார்கள்மலம் அள்ளும் கிழவியின் செயலைக் கேட்டதிலிருந்து நிறையக் காலத்திற்கு அந்தக் கிழவியே கதாநாயகியாக இருப்பது எனக்குத் தெரியும்எனவே அவர்கள் என்ன பதிலை எனக்கு சொல்லுவார்கள் என்பது மிகவும் வெளிப்படையானது

அதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் டயரைப் பாட்த் திட்ட்த்தில் இருந்து நீக்கிவிட்டு உதம்சிங்கின் வரலாறைத் தங்களுக்கு வைக்க வேண்டுமென்றும்வந்தே மாதரம் சொல்லி உதைபட்டவர்களை விடவும் வந்தே மாதரம் சொல்லச் சொல்லியஅல்லது சொல்ல வைத்த அந்தக் கிழவி போன்றோரின் வரலாறுகளே தங்களுக்குத் தேவை என்றும் பல பிள்ளைகள் சொல்வார்கள்.

அப்படியெல்லாம் இல்லை டயரின் வரலாறும் அவசியம்ஏன் எனில் அப்போதுதான் உதம்சிங்கின் வரலாறு முழுமைபெறும் என்றும்வந்தேமாதரம்  சொல்லச் சொல்லி போராடியவர்களையும் வந்தேமாதரம் சொல்லிப் போராடியவர்களையும் சேர்த்தே படிக்க வேண்டும்அவர்களின் நோக்கம் ஒன்றென்பதைப் புரிய வைத்துவிட்டால் போதும் கண்கள் அகலமாய் விரிய ஏற்றுக் கொள்வார்கள்.


இப்படியாக மறைக்கப் பட்ட வரலாறுகளை பதிவு செய்து பொதுத் தளத்திற்கு அறியத் தருவது மிகவும் அவசியமானதாகும்அவற்றைப் பாடத் திட்டத்தில் வைத்து மாணவர்களுக்கு சொல்லித் தர வேண்டியது வேறெதை விடவும் அவசியமானது.  

Friday, January 29, 2016

33

அலைபாயும்
கண்களுக்கு
கடவுள் மட்டும்

Thursday, January 28, 2016

காய்தல் உவத்தலின்றி



ஷெல்லிக்கு படகில் பயணிப்பது பிடித்தமான ஒன்று. அது போன்ற ஒரு சமயத்தில்தான் அவரது படகு அலைகளின் கோரத் தாண்டவத்திற்கு இரையாகி கவிழ்ந்தது.
அவரது மரணச் செய்தி பரவவே கரையில் ஒரு பெரும் கூட்டம் நின்றது. அதில் ஒருவர் ஆத்திகர். ஷெல்லியின் நண்பர். ஷெல்லியிடம் அவருக்குப் பிடிக்காத ஒரே விஷயம் அவர் நாத்திகராய் இருந்ததுதான்.
ஷெல்லியின் உடல் கரைக்கு கொண்டு வரப் படுகிறது.
அந்த ஆத்திக நண்பர் அங்கு நின்று கொண்டிருந்த பத்திரிக்கை நண்பர் ஒருவரிடம் “ஷெல்லியின் கோட்டுப் பையில் ஒரு வேதாகமம் இருந்தது. அவர் ரகசியமாய் பைபிள் வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்” என்று எழுதுமாறு கெஞ்சிக் கொண்டிருந்தார்.
எரிச்சலடைந்த பைரன் அந்த நண்பரிடம் சொன்னது நமக்கும் ரொம்பப் பொருந்து. பைரன் சொன்னார்,
“ நண்பரே, அருள்கூர்ந்து ஷெல்லியை ஷெல்லியாகப் பாருங்கள்”
ஆமாம் ,
நாமும் கொஞ்சம் பாரதியை பாரதியாகவும், காந்தியை காந்தியாகவும், எந்த ஒருவரானாலும் அவரை அவராகவும் காய்தல் உவத்தல் இன்றி எப்போது பார்க்கத் தொடங்குவோம்?

13 கேள்விகளைக் களவு கொடுத்துவிடாதீர்கள்

தீரத் தெளிதலென்பது கற்றலின் முக்கியமான கூறுகளில் ஒன்று. அரைகுறை அறிவை யாரும் ஒரு போதும் கொண்டாடுவது இல்லை. அப்படியே தவறுதலாக கொண்டாடப் பட்டாலும் அறைகுறை அறிவின் சாயம் வெகு சமீபத்திலேயே வெளுத்தும் போகும். சாயம் வெளுத்து அம்பலப் பட்டுப்போன அறைகுறை அறிவாளி முட்டாள்களைவிடவும் கேவலமாகவே மதிப்பிடப் படுவான். எனவேதான் வள்ளுவன் கசடறக் கற்கக் கேட்கிறான்.

கற்றல் செயல்பாட்டில் அக்கறையுள்ள ஆசிரியர்கள் தமது மாணவர்கள் தெளிவாய்க் கற்றுத் தேருவதையே விரும்புவார்கள். அவர்கள் செயல்பாடுகளும் அதற்கேற்றார் போலவே இருக்கும். தெளிந்த கற்றலுக்கான கருவிகளுள் மிக முக்கியமான ஒன்று மாணவர்களின் கேள்விகள் என்பதை அவர்கள் உணர்ந்தவர்களாகவே இருப்பார்கள்.

‘புரியுதா?’ என்று கேட்பது நல்ல ஆசிரியர்களுக்கான அடையாளங்களுள் ஒன்று. புரிகிற வரைக்கும் போராடும் ஆசிரியர்கள் ஏராளம் இருக்கிறார்கள். சாதித்த மனிதர்களின் பின்னால் நிச்சயமாக அவர்களுக்கு புரியும் வரைக்கும் போராடிய ஆசிரியர்கள் இருப்பார்கள்.

கேள்விகளை விரும்பாத ஆசிரியர்கள் இல்லவே இல்லை என்றும் சொல்லவில்லை. அவர்களது எண்ணிக்கை மற்றவர்களைவிடவும் கூடுதலாகவே இருக்கக் கூடும்.

‘கல்விக் கொள்கை 2016’ குறித்த கலந்துரையாடல் ஒன்றினை ‘லிட்டில்ஸ்’ என்ற அமைப்பு சென்றவாரம் மதுரையில் நடத்தியது. நான்கு விஷயங்களை எனக்கு மிகவும் பிடித்திருந்தது,

வழக்கமாக தொலைக்காட்சிகளில் நடக்கும் விவாதங்களில் கலந்துகொண்டு கத்தி தங்களது சக்தியை செலவழிக்கும் ‘சமூக ஆர்வலர்கள்’ யாரும் கலந்து கொள்ளாதது.
கல்விக் கொள்கை பற்றி விவாதிக்கவும் கருத்து சொல்லவுமான அந்த கலந்துரையாடலில் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் ஆகியோரோடு பெற்றோர்களையும் மாணவர்களையும் கலந்துகொள்ள செய்தது
கலந்து கொண்ட அனைவருமே ஆக்கப்பூர்வமாக விவாதங்களில் பங்கெடுத்தது.
முத்தாய்ப்பாக, ஒன்பதாம் வகுப்பு மாணவியும், பதினொன்றாம் வகுப்பு மாணவனும் வைத்த வகுப்பறை குறித்த கருத்துகள்.

மாணவர்கள் கலந்து கொள்ளாத கல்வி குறித்த எந்த ஒரு விவாதமும் முழுமையடையாது. மாணவர்களையும் விவாதத்தில் பங்கேற்க வைத்த தோழர் வர்தினி பர்வதா அவர்களை இதற்காக நன்றியோடு வணங்கிக் கொள்கிறேன்.

அந்தப் பிள்ளை பதினொன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறான். அவன் தனது ஆசிரியரிடம் ஐந்தாயிரம் மக்களுடன் பௌத்தத்தை தழுவவேண்டிய தேவை அம்பேத்கருக்கு ஏன் வந்தது என்று கேட்டிருக்கிறான்.

அந்தக் கேள்விக்காக ஆசிரியர் அவனை வகுப்பைவிட்டு வெளியே போகச் செய்திருக்கிறார். ஒரு ஆசிரியராக இருப்பதற்காக வெட்கப்படக் கூடிய சூழ்நிலைகள் அவ்வப்போது வரும். அதுபோன்ற ஒரு தருணம் அது.

எவ்வளவு ஆழமான கேள்வி. சாதிய கட்டுமானங்களை அம்பலப் படுத்தக் காத்திருக்கும் ஒரு ஆசிரியரிடம் அந்தக் கேள்வி கேட்கப் பட்டிருக்குமானால் அது எவ்வளவு பெரிய வாய்ப்பாக இருந்திருக்கும். அவராக இதுகுறித்து பேச முடியாது. அதற்கு கட்டமைப்பு இடம் தராது. மீறியும் ஏதாவது பேசுகிற என் போன்றவர்கள் பள்ளிக்கு வெளியிருந்தும் உள்ளிருந்தும் ஏகப்பட்டப் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. இப்படி ஒரு கேள்வி மட்டும் என்னைப் போன்றவர்களிடம் கிடைத்து விடுமானால் ஒருவாரம் வகுப்பெடுத்து விடுவோம்.

மெத்தப் படித்த அம்பேத்கர் அவர்களது திருமணத்திற்கு யாரும் திருமண மண்டபம் தரவில்லை என்பதும். அந்த மாமனிதனது திருமணம் இரவொன்றில் மீன்சந்தையில் நடந்தது என்கிற உண்மையை குழந்தைகளுக்குக் கொண்டு போயிருக்கலாமே. அம்பேத்கர் போன்ற மாமனிதர்களே தங்களது திருமணங்களை இப்படித்தான் நடத்த முடிந்தது என்றால் அந்தக் காலத்து சேரித் திருமணங்கள் எந்த அளவிற்கு மோசமான சூழ்நிலைகளில் நடந்திருக்கும் என்பதை விரித்துச் சொல்வதற்கும் அன்றைய சாதிப் படிநிலைகளை உயர்சாதி ஆணவத்தை, அடாவடித்தனத்தை தோலுரித்துக் காயப் போடுவதற்கான ஒரு அரிய வாய்ப்பை அல்லவா அந்தக் குழந்தை ஆசிரியருக்கு கொடுத்திருக்கிறான்.

அம்பேத்கர் அவர்களிடம் பணிபுரிந்த இடைசாதி ஊழியர் எவ்வளவு சாதித் திமிறோடு அவரோடு நடந்து கொண்டார் என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதற்கு கிடைத்த வாய்ப்பல்லவா அது. அந்த இடைசாதி ஊழியர் தனது அதிகாரியான அம்பேத்கர் கைபட்ட கோப்புகளைக் கூட தொட மாட்டாராம். தொட்டால்  தீட்டுப் பட்டுவிடுமாம். அண்ணல் எங்கேனும் ஒரு கூட்டத்திற்குப் போக வேண்டும் என்றால், கோப்புகளை எடுத்து வர வேண்டிய அவர் அவற்றை எடுத்து வர மாட்டார். ஏவலர் சுமக்க வேண்டிய கோப்புகளைக் கூட அண்ணலே சுமந்து வருவதும் அந்த ஏவலர் தீட்டுப் பட்டுவிடாத தூரத்தில் தனது அண்ணலைத் தொடர்ந்து வருவாராம். இத்தகைய  கேவலத்தை பாட நூல்கள் சொல்லித் தராது. ஆசிரியர்களாலும் தன்னெழுச்சியாய் இவற்றை சொல்லித்தர இயலாது. ஆனால் இந்த மாணவனது கேள்விக்கு பதில் சொல்கிற சாக்கில் முடிகிற அளவு இவற்றை அம்பலப் படுத்தி இருக்க வேண்டாமா?

அண்ணல் ஒரு தாழ்த்தப் பட்டவர் என்பதால் அவரை வணங்குவது தனது சாதிக்கு இழுக்கு என்று ஒருபோதும் அவர் அண்ணலை வணங்கியது இல்லை. ஆனால் அண்ணலோடு எங்கோ சென்றுகொண்டிருந்த ஒரு பொழுதில் அந்த ஏவலருக்கும் கீழான நிலையில் உள்ள ஊழியர் ஒருவர் எதிர்பட்டிருக்கிறார். அப்போது அதே ஏவலர் தனக்கும் கீழ்நிலைப் பொறுப்பில் உள்ள அந்த பிராமணரை விழுந்துப் பணிந்து மரியாதைத் தந்திருக்கிறார்.

படிப்பையும் பணிநிலையையும்விட சாதி எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தது என்பதையும் மிக உயர்வான மனிதர்கள்கூட தன்னைவிட படிப்பில் அந்தஸ்தில் குறைந்தவர்களால் சாதியின்பொருட்டு அவமானப் பட நேர்ந்திருக்கிறது என்பதை புரிகிற மாதிரி விளக்கியிருக்க முடியும்.

அந்தக் காலத்தில் அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் அடிமைத்தனம் வழக்கத்தில் இருந்தது. மனிதனுக்கு மனிதன் அடிமையாய் தொண்டூழியம் செய்து கொண்டிருந்த அவலம் மிகுந்த காலம். ஒருவனிடம் இருக்கும் கல்வியைவிடவும் செல்வத்தை விடவும் அவனிடம் இருக்கும் அடிமைகளின் எண்ணிக்கையே சமூகத்தில் அவனது செல்வாக்கைத் தீர்மானித்தது. ஆனால் அடிமைகளுக்கு இருந்த உரிமைகளும் சலுகைகளும்கூட தாழ்த்தப் பட்டவர்களுக்கு இல்லை. அடிமைக்கு சுகவீனம் வந்தாலோ அல்லது செத்துப் போனாலோ அது தனக்கு இழப்பைத் தரும் என்பதால் எஜமானன் தனது அடிமையின் உடல் நலத்தில் அக்கறை காட்டினான். அவனது மருத்துவ செலவுகளை ஏற்றான். ஆனால் அத்தகையதொரு சூழலும் சாதியச் சமூகத்தில் இல்லை. ஆக ஏதும் படிக்காத, தன் பெயரில் சொத்தெதுவும் இல்லாத அடிமையை விடவும் மெத்தப் படித்த பணக்கார தாழ்த்தப் பட்டவன் அதிகம் ஒடுக்கப் பட்டவனாகவே இருந்தான்.

இத்தகைய சாதியப் படிநிலைகளைக் கொண்ட இந்து மதத்தின் மீது ஏற்பட்ட அவநம்பிக்கையும் புத்தத்தில் இத்தகைய நிலை இல்லை என்பதால் அண்ணல் அங்கு நகர்ந்தார் என்கிற அளவிற்கேனும் அதற்கான காரணங்களை சொல்லி அதற்கான முழுமையான காரணங்களை மாணவர்கள் தேடிக் கண்ட்டையும்படி செய்திருக்கலாம்.

இதைத் தவிர்த்து மாணவனை வெளியே அனுப்ப வேண்டியத் தேவை ஏன் வந்தது?

அவருக்கு அந்தக் குழந்தையின் கேள்விக்கான விடை தெரிந்திருக்காது
பதிலை சொல்லி ஏதேனும் பிரச்சினையில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்ற எச்சரிக்கை உணர்வு
அந்த ஆசிரியரிடம் இருக்கக் கூடிய ஆதிக்கசாதி மனோபாவம்

காரணம் எதுவாயிருப்பினும் மாணாவனை அந்தக் கேள்விக்காக வகுப்பறைக்கு வெளியே அனுப்பிய ஆசிரியர் மிகுதியான கண்டணத்திற்கு உரியவர்.

பதில் தெரியாது என்றால் ஒன்று தனக்கு தெரியாது என்ற உண்மையைச் சொல்லி தெரிந்து கொண்டு வந்து சொல்லியிருக்கலாம். அல்லது குறைந்தபட்சம் அதெல்லாம் பரிட்சைக்கு வராது என்று ஆசிரியத் தனத்தோடாவது சொல்லி அவனை வகுப்பறையில் வைத்திருந்திருக்கலாம்.

பதில் தெரிந்திருந்து ஆதிக்க சாதியோடு ஆசிரியர் அப்படி நடந்து கொண்டிருந்தால் நிச்சயமாக அவர் ஆபத்தானவர்.

மிகவும் உடைந்து போயிருந்த அந்த மாணவனைப் பார்த்ததும் எனக்கு கவலை தொற்றிக் கொண்டது. எங்கே கேள்வி கேட்டால் வகுப்பைவிட்டு வெளியேற்றப் படுவோமோ என்கிற அச்சத்தில் தன்னிடம் இருக்கிற கேள்விகளை எல்லாம் ஏதேனும் ஒரு திருவிழாவில் தொலைத்து விடுவானோ என்று அச்சமாக இருக்கிறது.

யோசித்துப் பாருங்கள், கேள்விகளைத் தொலைத்த மாணவச் சமூகம் ஒருபோதும் தெளிந்துத் தேறாது.

‘உங்களது கேள்விகளில் பல உதாசீனப் படுத்தப் படலாம், சில கேள்விகள் உங்களுக்கு தண்டனைகளைக்கூட கொண்டு வரலாம்.  தளர்ந்து விடாதீர்கள். உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லக் கூடிய மனிதர்களை நிச்சயமாய் நீங்கள் கண்டடைவீர்கள்.

Wednesday, January 27, 2016

தமிழ் மக்கள் பண்பாட்டுக் கழகம் வீர வணக்கநாள்






24.01.2016 அன்று மதுரையில் தோழர் மார்க்ஸ் பாண்டியன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் நிகழ்ச்சியில் ‘கல்வியை அழிக்கும் ஆங்கில மாயை’ என்ற குறுந்தகடை வெளியிட்டு உரையாற்றி வந்தேன்.


ஆங்கில வழிக் கல்வியைப் பற்றியே எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறோம். காட் வருமானால் அமெரிக்க ஆங்கிலமே போதனா மொழியாகும் என்பதையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் பற்றியும்,
காட் அமலுக்கு வந்தால் சுயநிதிக் கல்வி நிலையங்களும் ஆசிரியர்களுக்கான ஊதியத்தை அரசிடம் கோர வாய்ப்பிருக்கிறது என்ன்பது பற்றியும் மிகச் சன்னமாக உரையாற்றிவிட்டு வந்தேன்.
தோழர் செயப்பிரகாசம் என் உரையிலிருந்து தன் உரையைத் துவக்கியது மகிழ்ச்சியாய் இருந்தது

இந்தக் குட்டியின் பறையாட்டம் என்னை என்னவோ செய்துகொண்டே இருக்கிறது. அவளுக்கென் முத்தங்கள்.



Tuesday, January 26, 2016

அழைப்பு 22



மிக மிக விலை உயர்ந்த சந்தைப் பொருளாக கல்வி மாறிப்போய் நீண்ட காலமாகிவிட்டது. காசுள்ளவன் படிக்கக் கடவன் என்கிற புள்ளியை கல்வி சற்றேறக் குறைய தொடுகிற தூரத்திற்கு சென்றாயிற்று.
தேர்ச்சி விழுக்காடு குறித்த பதை பதைப்பும், மதிப்பெண் குறித்த பதை பதைப்பும் கல்வியை ஏழைகளிடமிருந்து களவாடிவிடும் என்ற அச்சம் நியாயமானது. இப்போதே எல்லாரும் படித்துவிட்டால் யார் கூலி வேலை செய்வது என்கிற பொது அங்கலாய்ப்பை கேட்க முடிகிறது. எனில், எல்லோருக்குமான கல்வி என்பதற்கு பொதுவில் எதிர்ப்பிருக்கிறது மேட்டுக் குடிகளிடம். இதை கூர்ந்து ஆய்ந்தால் தேர்ச்சி விழுக்காடு குறித்த தேவையற்ற முக்கியத்துவம்கூட ஏழைகளின் கல்வியில் மண்ணள்ளிப் போடும் என்பது புரியும்.
இருந்த போதிலும் பொதுப் பள்ளிகள் நம்பிக்கைப் பேரொளியாய் உழைக்கும் வர்க்கத்திற்கு வெளிச்சம் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது.
ஆனால் அதுவும் பையப் பைய தேய்ந்து காணாமல் போய்விடும் அபாயம் கண்ணுக்கெதிரே தெரிகிறது.
இந்த நிலையில் தேர்தல் வருவதால், பொதுக் கல்வியின் தேவை குறித்தும் அது சந்திக்கும் ஆபத்துகள் குறித்தும் எடுத்துச் சொல்லி அவற்றிலிருந்து பொதுக் கல்வியை காப்பாற்றும் வகையில் தங்களது தேர்தல் வாக்குறுதிகளை வடிவமைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளை நிர்ப்பந்திக்கத் தோதாக ’கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு’ ஒரு கூடலை வரும் 31.01.2016 அன்று சென்னையில் ஏற்பாடு செதுள்ளது.
நான் கலந்து கொள்கிறேன்.
வாய்ப்புள்ள தோழர்கள் வர முயற்சி செய்யுங்கள்.
சந்திரிகா சேம்பர், அந்தோணி சாலை, (பைலட்
திரையரங்கம் எதிரில்) இராயப்பேட்டை, சென்னை.

இது ஒரு மகனின் நூல்




” அண்ணே கொஞ்சம் ஓய்வா இருக்கீங்களா? உங்களோடு  ஒரு விஷயம் பேசனும்” என்று சொன்னவர் மிகுந்த தயக்கத்தோடு ‘எப்பங்கண்ணே வீட்டுக்கு வருவீங்க” என்றார்.

பள்ளியில் கொஞ்சம் ஓய்வாகத்தான் இருந்தேன். மிகவும் உரிமையோடு எதையும் என்னிடம் கேட்பவர். ‘அண்ணே வர ஞாயிறு ஒரு கூட்டம், எதுவும் சொல்லாமல் வந்துடுங்க’ என்று கேட்பவர்.  முடியாது போனால் அடுத்த தேதியை சொல்லி கேட்பார். அதுவும் இயலாதநிலை என்றால் ‘எனக்குத் தெரியாது, அவசியம் வறீங்க’ என்று குழந்தை போல சொல்லிவிட்டு கிளம்பி விடுவார்.

அப்படிப் பட்டவர் ஏன் இப்படி குரல் நடுங்கி பேச வேண்டும்? கொஞ்சம் பயம் தொற்றிக் கொள்ளவே ’என்ன ஆச்சு தாஹீர், ஏதும் பிரச்சினையா? சொல்லுங்கள்’ என்கிறேன்.

“ இல்லண்ணே, செல்வகுமார் நூல் வெளியீடு, நீங்கள்தான் சிறப்புரை. அதற்குத்தான்”

இப்போது புரிந்தது. சில மாதங்களுக்கு முன்னால் பெரம்பலூரில்  நான் கட்டமைத்த ஒரு அமைப்பின் சார்பாக என்னால் அந்த அமைப்பிற்கு கொண்டு வரப் பட்ட தோழர்கள் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்து அதில் நான் கலந்து கொள்ளாமல் அவமானப் படவேண்டும்  என்று என்னவெல்லாம் செய்ய இயலுமோ அத்தனையும் செய்திருந்தார்கள். அவர்களோடே இருந்து அந்த நிகழ்விற்காக பணியாற்றியவர்களுள் தோழர் செல்வகுமார் அவர்களும் ஒருவர்.

அதுமட்டும் அல்ல அதன் பிறகு அந்தத் தோழர்களில் ஒருவரே ‘எல்லா ஏற்பாடுகளையும் செல்வகுமார்தான் தோழர் செய்தார்’ என்று என்னிடம் ஒரு பெரும் பொய்யை சொல்லியிருந்ததும் செல்வகுமாருக்கும் தெரியும், தாஹீருக்கும் தெரியும்.

அதுதான் அந்தத் தயக்கத்திற்கு காரணம்.

”அடடே, நூல் வந்தாச்சா . அவசியம் வரேன். தேதி சொல்லுங்க “ என்கிறேன்

“வருகிற 24”

நொந்தே போனேன். காரணம் 24 ஆம் தேதியன்று மதுரையில் ஒரு கூட்டத்திற்கு தோழர் மார்க்ஸ் பாண்டியனுக்கு தேதி கொடுத்திருந்தேன். விவரத்தை சொன்னாலும் விடுவதாயில்லை தாஹீர்.

”எப்ப வீடு வருவீங்க?”

“இரவு வகுப்பு முடிந்து வர 11 ஆகும்”

“வரேன்”

இரவு வந்தார்கள். பாண்டியனோடு பேசினேன். 24 மாலைதான் என்றார். இவர்களுக்கு மகிழ்ச்சி. காலையில் வைத்துக் கொள்வதாக சொன்னார்கள்.

நெசத்துக்குமே நல்ல நூல். நேட்டிவிட்டி என்றால் அப்படி ஒரு நேட்டிவிட்டி.




நானும் ஒரு பிரதியைப் பெற்றுக் கொண்டு ஏறத்தாழ ஒரு மணி நேரம் பேசிவிட்டு புறப்பட்டேன். பேசும் போது சொன்னேன்,

”நீங்களோ, ராமரோ என்னை எங்கு அடித்தாலும் வலிக்காது எனக்கு. ஆனால் கொஞ்சம் வருத்தமாய்த்தான் இருக்கும். காரணம் வயதில் சின்னவனாய் இருந்தாலும் இறக்கி வைத்தால் யாராவது தூக்கிக் கொண்டு போய் விடுவார்களோ என்று எங்கும் இறக்கி வைக்காமலே பெரம்பலூர் தெருக்களில் உங்களை சுமந்து திரிந்த தகப்பன் நான். பிள்ளைகள் அடித்து அப்பனுக்கு வலிக்காது.”

ஆமாம்,’ ஒரு மழை வந்து போக வேண்டும் ‘ நூல் ஒரு வகையில் என் மகன் போட்ட நூல். வாசியுங்கள் என்று உங்களை அன்போடு கேட்கிறேன்.


 

செல்வகுமார் காக்கைக்கு ஐந்து ஆண்டு சந்தா கொடுத்தார்.

மகிழ்ச்சி.

Monday, January 25, 2016

12 எல்லோருக்கும் முதல் பரிசு

அன்று காலை பள்ளி அலுவலகத்தில் ஏதோ முக்கியமான வேலையில் இருந்தோம். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திலிருந்து கேட்கப் பட்டிருந்த ஏதோ ஒரு புள்ளி விவரத்தை முடித்து அனுப்ப வேண்டுமென்ற அவசரம் எங்களுக்கு. அதுபோக கூட்டு வழிபாட்டிற்கான நேரமும் நெருங்கிக் கொண்டிருந்தது. தலைமை ஆசிரியர் விடுப்பில் இருந்ததால் அதை நடத்த வேண்டிய பொறுப்பும் என்னிடமிருந்தது. ஆகவே   கொஞ்சம் கூடுதலான நெருக்கடி எனக்கு.

அந்த நேரத்தில் அந்தக் குழந்தை என்னைப் பார்க்க வேண்டுமென்று வந்து நின்றாள். பன்னிரெண்டாம் வகுப்பு குழந்தை அவள். புத்தகப் பை தோளில் தொங்கிக் கொண்டிருந்தது. அப்படி அவள் வந்து நிற்பதும் ஒன்றும் புதிது இல்லைதான். வழக்கமாகவே வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது சில வாரங்களில் ஓரிரு முறைகளோ நான் சந்திக்கக் கூடிய வாடிக்கைதான். வகுப்பிற்கு வந்திருக்க மாட்டாள், அல்லது வகுப்பில் நடந்த டெஸ்ட் எதையேனும் எழுதியிருக்க மாட்டாள். அதுமாதிரி நேரங்களில் சம்பந்தப் பட்ட ஆசிரியர் தலைமை ஆசிரியரையோ அல்லது என்னையோ பார்த்துவிட்டு வருமாறு சொல்லுவதும் பல நேரங்களில் அவர்களே அழைத்துக் கொண்டு வருவதும் வாடிக்கைதான். எனவே எதுவாயிருந்தாலும் கூட்டு வழிப்பாடு முடிந்ததும் வந்தென்னைப் பார்க்குமாறு கூறினேன்.

நான் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளாதவளாக அவள் அங்கேயே நின்று கொண்டிருந்தாள். அதுவும் வாடிக்கைதான். நின்றது நின்றபடி தனது காரியத்தை சாதித்துக் கொள்ளும் அழுத்தக்காரக் குழந்தைதான் அவள். எனவே, ‘எந்த சார் அனுப்பினாங்கநான் சொன்னேன்னு சொல்லிட்டு வகுப்பிற்குப் போ. ப்ரேயர் முடிந்ததும் வாஎன்றும் வழக்கம் போல சொல்கிறேன். இந்த வார்த்தைகள் வழக்கமாக அவளுக்குப் போதுமானதாக இருக்கும். ஒருவிதமான புன்னகையோடு நகர்ந்து விடுவாள்.

அப்போதும் அவள் அசையாது நிற்கவே ஏதோ ஒரு ஆசிரியரிடம் கூடுதலான கோவத்தை சம்பாதித்திருக்கிறாள் என்று தோன்றியது. கொஞ்சம் சலிப்படைந்தவனாகசொன்னா கேட்கமாட்டாயா பாப்பா. வகுப்புக்கு போ, நான் பார்த்துக் கொள்கிறேன்என்கிறேன். தயங்கித் தயங்கி வாயைத் திறக்கிறாள்,

டிசி வேணும் சார்

அவள் பேச ஆரம்பித்ததும் அவளது தந்தை உள்ளே தலையை நீட்டினார். ‘வாங்க உள்ள, என்னப் பிரச்சினை பரிட்சைக்கு ரெண்டு மாசமே இருக்கறப்ப டிசி கேட்கறீங்க.’ ஏற்கனவே அவரது மனைவியும் அவரும் ஏதோ சில காரணங்களால் பிரிந்து வாழ்கிறார்கள் என்பதும் அவள் அவளது அம்மாவிடம் இருந்து பள்ளிக்கு வந்து கொண்டிருப்பதும் தெரியும். ஏதோ குடும்பத்தில் பிரச்சினைபோல என்று பட்டது. எனவே ஆறப் போட நினைத்தவனாக வேலை நிறைய இருப்பதாகவும் போக, தலைமை ஆசிரியரும் இல்லை என்பதாலும் இரண்டு நாள் கழித்து வருமாறு கூறினேன். அப்போதும் இருவரும் அசைய வில்லை. அதற்குள் கூட்டு வழிபாட்டிற்கு மணி அடிக்கவே அதை முடித்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டு நகர்ந்தேன்.

திரும்ப வந்ததும் மாற்றுச் சான்றிதழைக் கேட்கிறார். பெற்றோர் தங்களுக்குள் இருக்கிற பிரச்சினைகளுக்காக குழந்தையை பழி வாங்குகிறார்களே என்று கோவம் வந்தது. நச்சரிப்பு அதிகமாகவே மாற்றுச் சான்றிதழுக்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு போகுமாறும், தலைமை ஆசிரியர் வந்ததும் வந்து வாங்கிக் கொள்ளுமாறும் கூறினேன்.

மாற்றுச் சான்றிதழ் கோறும் விண்ணப்பத்தை எல்லாம் தர முடியாது என்றும் மாற்றுச் சான்றிதழை தந்தால் பெற்றுச் செல்வதாகவும் கூறினார். எழுதிக் கேட்காமல் மாற்றுச் சான்றிதழை எப்படித் தர முடியும் என்று கேட்ட போது, ‘எழுதியெல்லாம் கேட்க முடியாது. முடிஞ்சா கொடு. வாங்கிட்டுப் போறேன்என்று அவர் சொன்னபோதுதான் காரணம் பள்ளியில் இருப்பது புரிந்தது.

என்ன பிரச்சினை என்று விசாரித்தபோதுஅந்த சார்தான் ஒழுங்காப் பள்ளிக் கூடத்திற்கு வரணும், மார்க்கு வாங்கனும். இல்லாட்டி டிசிய வாங்கிட்டுப் போகனும்னாராம். முடிஞ்சாக் கொடு வாங்கிட்டுப் போறேன்என்று சத்தத்தை உயர்த்த ஆரம்பித்து விட்டார்.

குழந்தை ஒழுங்காக பள்ளிக்கு வரவேண்டும், நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகத்தானே அவர் அப்படி சொல்லியிருப்பார். கொஞ்சம் கூடுதலாக மிறட்டினால்தானே குழந்தை படிப்பாள் என்பதை புரிய வைக்க முயன்றோம். அவரோ கோவத்தின் உச்சிக்குப் போனார்.

புள்ள ஒழுங்காப் பள்ளிக் கூடத்துக்கு வராதுதான், நல்லாப் படிக்காதுதான், ஒரு மார்க்குதான் வாங்கும். ஒழுங்கா வராட்டி, மார்க்கு வாங்காட்டி பள்ளிக் கூடத்த விட்டு வெளிய அனுப்பி விடுவீங்களா? முடிஞ்சா டிசியக் கொடுங்க, வாங்கிட்டுப் போறேன்

அழைக்கும் போதெல்லாம் பள்ளிக்கு வரும் தந்தைதான் அவர். ஆசிரியர்கள் பிள்ளையைப் பற்றி அவரிடம் பேசத் தொடங்கும் முன்னமே அவளைப் பற்றிய புகார்களை அவர் ஆரம்பித்து விடுவார். அவரை அழைத்து அவரது குழந்தையை சரி செய்ய சொல்ல நினைத்த ஆசிரியரிடம் அவரது மாணவியைப் பற்றிய குறைகளை சொல்லி அவளை சரி செய்ய சொல்வார்.

பார்த்து பிள்ளை மேல கொஞ்சம் கவனமா இருங்க என்று சொல்ல நினைத்த ஆசிரியரைசரி, சரி, கவனிச்சுக்கறேன். தைரியமா போயிட்டு வாங்கஎன்று சொல்ல வைத்து விடுவார்.

அவர் கோவத்தில் இறைந்து கொண்டிருக்கும் போதே சம்பந்தப் பட்ட ஆசிரியர் வந்துவிட்டார். எங்கே ஏதேனும் பிரச்சினை முற்றி விடுமோ என்று பயந்தவனாக, ‘ஒன்னும் பேசாம போடா தம்பி. நாங்க பார்த்துக்கறோம்என்று மெதுவாக அவரது காதோடு சொல்கிறேன். அவரோ நேரே அவரிடம் சென்று அவரது கன்னத்தை பிடித்தவாறே, ‘என்னங்க ஏழுமலை, எதா இருந்தாலும் நான் பார்த்துக்க மாட்டேனா?, என்ன இங்க வந்து சவுண்டெல்லாம் கொடுத்துட்டுஎன்றதும் மீண்டும் அதே பல்லவியை அவரிடமும் ஆரம்பித்து விட்டார்.

எங்கே இவரும் கோவப் பட்டு பிரச்சினை பெரிதாகிவிடுமோ என்ற பதை பதைப்பு கூடியது. அந்த ஆசிரியரோ ரொம்பவும் சாந்தமாக அவரது தோளில் கை போட்டபடியேபாப்பா ஒழுங்கா வராது, ஒரு மார்க்குதான் எடுக்கும் அவ்வளவுதானே. இதுக்கு ஏன் இவ்வளவு சத்தம்? நான் பாஸ் பண்ண வைக்கிறேன். நல்ல வேளை இன்று தலைமை ஆசிரியர் இல்லை. இல்லாட்டி இந்த சத்தத்துக்கு உங்களையும் திட்டியிருப்பார், என்னையும் திட்டியிருப்பார்.’ என்றவாறே அவரை அழைத்துக் கொண்டு போனார்.

ஆமா சார், நான் சத்தம் போட்டேன்னு பெரிய சாருகிட்ட சொல்லிடாதீங்க. ரொம்ப வைவாறுஎன்றவாறே அந்த ஆசிரியரோடு தேநீர் சாப்பிட சென்று விட்டார். நாங்கள் அந்தக் குழந்தையை வகுப்பிற்கு அனுப்பி விட்டோம்.

மேலோட்டமாக பார்த்தால் ஒரு வழியாக பிரச்சினை முடிந்தது போலத் தோன்றும். ஆனால் இந்தப் பிரச்சினைக்கான வேர்க் காரணம் இன்னும் இன்னமும் கனன்றபடியேதான் இருக்கிறது.

மேலோட்டமாகப் பார்த்தால்பள்ளிக்கு வரமாட்டா, படிக்க மாட்டா, அதற்காக என்ன செய்ய முடியும் உன்னால்?’ என்று கேட்கும் ஒரு அடாவடித் தந்தையாகத்தான் அவர் தோன்றுவார். ஆனால் ஈரம் கசிய பார்த்தால் ஒழுங்கா பள்ளிக்கு வரவில்லை என்பதற்காகவும் ஒழுங்காகப் படிக்கவில்லை என்பதற்காகவும் பிள்ளைக்கு மாற்றுச் சான்றிதழைக் கொடுத்து விட்டீர்கள் என்றால் அவளை வீட்டில் வைத்துக் கொண்டு எனென செய்ய முடியும் எங்களால்? என்ற ஒரு ஏழைத் தந்தையின் இறைஞ்சலைக் கண்டுணர முடியும்.

மாற்றுச் சான்றிதழைக் கொடுத்து விடுவாயா. முடிந்தால் கொடுத்துப் பார்என்பதை அக்கறையோடு அணுகினால் அதன் பொருள் இதற்காகவெல்லாம் பிள்ளையை வெளியே அனுப்பி விடாதீர்கள். தயவு செய்து சரி செய்யுங்கள். உங்களால் முடியா விட்டால் எங்களால் என்ன செய்ய இயலும் என்பது புரியும்.

இன்னொரு புறம் பார்த்தால் எந்த ஆசிரியரும் இதுபோன்ற காரணங்களுக்காக ஒரு குழந்தைக்கு மாற்றுச் சான்றிதழைக் கொடுத்துவிட வேண்டும் என்றெல்லாம் விரும்புவதில்லை. அதுவும் அந்தக் குறிப்பிட்ட ஆசிரியர் யாருக்கும் எதன் பொருட்டும் மாற்றுச் சான்றிதழை தரத் தேவையில்லை என்று கருதுபவர்.

இன்னும் சொல்லப் போனால் ஒரு முறை ஒரு மாணவன் மது அருந்திவிட்டு பள்ளியில் வந்து வாந்தி எடுத்துக் கிடந்த போதுகூடஇதெல்லாம் இந்தக் காலத்தில் பெரிய விஷயமே இல்லை. அவனுக்கு மாற்றுச் சான்றிதழ் எல்லாம் தர வேண்டாம். பார்த்துக் கொள்ளலாம் என்ற நிலை எடுத்த தலைமை ஆசிரியரோடு ஒன்றி நின்றவர்களுள் அவரும் ஒருவர்.

ஒழுங்காகப் பள்ளிக்கு வரவில்லை என்றால், வீட்டிற்கே வந்து உதைத்து இழுத்து வருவேன் என்று அக்கறையும் உரிமையும் கலந்த கோவத்தோடு மிறட்டும் ஆசிரியர் ஒருவரை, ‘ஒழுங்கா பள்ளிக்கு வா. இல்லாவிட்டால் டிசியை வாங்கிக் கொண்டு ஓடுஎன்று எது பேச வைத்தது?.

ஒழுங்கீனமாக நடக்கும் மாணவனையும் பன்னிரெண்டு ஆண்டுகள் பள்ளியில் வைத்திருக்க வேண்டும் என்பது ஏதோ நமது ஆசை மட்டுமல்ல. அது கட்டாயம். படிப்பு வரவில்லை என்பதற்காக ஒரு குழந்தையை பள்ளியை விட்டு வெளியே அனுப்புவது என்பது அயோக்கியத் தனத்தின் உச்சம்.

தெரியாமல்தான் கேட்கிறேன், ‘அவனுக்குப் பிடித்ததையா அவனுக்கு போதிக்கிறோம்?’ அவன் எதைப் படிக்க வேண்டும் என்பதை அவன் தேர்ந்தெடுக்கும் உரிமை அவனுக்கு இருக்கிறதா? யாரோ வடிவமைத்த ஒரு பாடத் திட்டத்தை குழந்தை படித்தே தீர வேண்டும், தேர்ச்சி பெற்றே தீர வேண்டும், யாரோ எதிர்பார்க்கும் மதிப்பெண்ணை அவன் பெற்றே தீர வேண்டும் என்பது வன்முறை அல்லவா?

ஒரு கருத்தரங்கில் பேசும் போது சொன்னேன்,

ஒரு போட்டி வைத்து அதில் யார் முதல் என்று தேர்ந்தெடுத்தால் அது கார்பரேட் கல்வி. ஒவ்வொரு குழந்தையும் முதல் பரிசு பெற வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் போட்டிகளைத் தர முன் வந்தால் அது குழந்தை நேயக் கல்வி

இது ஒன்றும் சாத்தியமே இல்லாதது அல்ல. ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால் பட்டத்தி பாளையம் என்ற கிராமத்து பள்ளி ஆண்டு விழாவிற்கு வேலுசரவணன் நாடகம் வேண்டும் என்று கேட்டார்கள். ஏற்பாடு செய்து அவரோடு அந்த நிகழ்ச்சிக்கு நானும் விஷ்ணுபுரம் சரவணனும் சென்றிருந்தோம்.

பரிசளிப்பு விழாவில் அந்தப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த 23 மாணவர்களும் ஏதோ ஒரு போட்டியில் முதல் பரிசு பெற்றிருந்தார்கள்.

எப்படி இது சாத்தியம் என்று கேட்டபோது அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி கலைச்செல்வி அனைத்து மாணவர்களுக்குமான போட்டிகளைத் தேர்ந்தெடுக்காமலொவ்வொருவருக்குமான போட்டிகளைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறினார். வேறு எதிலும் சோபிக்காத ஒரு மாணவனுக்கு உடுக்கடிப்பதில் நிபுணத்துவம் இருந்ததைக் கண்டறிந்து அவனுக்காகவே உடுக்கடிக்கும் போட்டியை வைக்கவே அந்தக் குழந்தையும் ஒரு முதல் பரிசை பெற்று தானும் ஒரு ஆளுமை என்று உணர்ந்தான்.

இது மாதிரியான ஒரு கல்வித் திட்டத்தை பெற்றோர்களும், ஆசிரியர்களும், கல்வியாளர்களும், சமூக அக்கறை உள்ளவர்களும், மாணவர் அமைப்புகளும் ஒன்றாய் அமர்ந்து பேசி குரல் கொடுக்கவும் போராடவும் முன் வராத வரைக்கும் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழவே செய்யும்.

ஊதிய விஷயங்களைத் தாண்டி ஆசிரியர் இயக்கங்கள் சரியான கல்விக் கட்டமைப்பிற்கான போராட்டத்தைக் கையிலெடுக்க வேண்டும்.

அதுவரைக்கும் அதிகாரிகள் தேர்ச்சி, மதிப்பெண் இரண்டு சுற்றியே இயங்குவார்கள். இது நோக்கியே தலைமை ஆசிரியர்களை அவர்கள் முடுக்குவார்கள். தலைமை ஆசிரியர்கள் இவை நோக்கியே ஆசிரியர்களை முடுக்குவார்கள். இவற்றையே ஆசிரியர்கள் மாணவர்களிடம் இறக்க வேண்டியது தவிர்க்க முடியாதது ஆகும்.

ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான இடைவெளி அதிகரிக்கும்.

               



பரணில் கிடைந்த அழைப்பிதழ்


Sunday, January 24, 2016

வாத்து ராஜா வெளியீட்டு விழா



22.01.2014 அன்று தம்பி சரவணனின் ( Vishnupuram Saravanan ) ”வாத்துராஜா” என்ற குழந்தைகளுக்கான கதை நூலினை தோழர் யூமா வாசுகி வெளியிட நான் பெற்றுக் கொண்ட அந்த இனிய தருணம் தந்த மகிழ்வினை ஒரு நிலைத் தகவலுக்குள் கொண்டு வந்துவிட முடியாது.
இதை சிலர் குறு நாவல் என்கிறார்கள். சிலர் இதை நீண்ட சிறு கதை என்றும் சொல்லக் கூடும் . எனக்கென்னவோ இது அந்த இரண்டு வகையிலும் சேராது என்றே தோன்றுகிறது.
இது ஒரு புது வடிவம். அழகான சோதனை முயற்சி. இந்த வடிவம் எதிர் காலத்தில் ஒரு புதிய பெயரை சூடிக்கொள்ளும்.


ஒரு சின்ன கதை. ஒரு கதையின் முடிவைத் தெரிந்துகொள்ள கீர்த்தனா, அமுதா பிறகு இன்னுமொரு குழந்தை ஆகியா மூவரும் ஒரு வித பரபரப்போடும் அவஸ்தையோடும் மேற்கொள்ளும் நீண்ட பயணமே இந்தக் கதை.
குழந்தைகளோடு நம்மையும் அதே அவஸ்தையோடு பயணிக்க வைக்கிறார் . அதுதான் இந்த நூலின் வெற்றி.
கதையின் முடிவு மிக அழகானது.
பிசிரின்றி நகரும் நடை.
கதை சொல்லியான சரவணன் இந்தக் கதையை நெய்திருக்கிறார். சமீபத்தில் வந்துள்ள ஆக நல்ல குழந்தை நூல்களுள் என்னளவில் முதன்மையானது.
இந்த மாத காக்கையில் விரிவாய் எழுதுகிறேன்.

டைரக்டர் லிங்குசாமியோன்னு...

அடுத்த நாள் சென்னை கூட்டம் பற்றி தோழர் சந்திரசேகரோடு பேசிக் கொண்டிருந்த போது லிங்குசாமியும் அதில் கலந்து கொள்வது பற்றி பேச்சு நகர்ந்தது.
கேட்டுக் கொண்டிருந்த கீர்த்தனா கேட்டாள்,
"அஞ்சான் லிங்குசாமியாப்பா?"
இஸ்திரிக்காரின்
வயிற்றில்
சுருக்கம்
என்று எழுதிய லிங்குசாமி என்றதும்,
" அட ஒங்க கம்பேனியா...
நாங்கூட. டைரக்டர் லிங்குசாமியோன்னு பார்த்தேன்" என்றவாறே ஓடிவிட்டாள்.

Saturday, January 23, 2016

இவனுக்கு அப்போது மனு என்று பேர் வெளியீட்டு விழா

" இவனுக்கு அப்போது மனு என்று பேர்" வெளியீட்டு விழாவின்போது எடுக்கப்பட்ட படங்கள். 



மனதுக்குப் பிடித்த மரியாதைக்குரிய தோழர் மருது அவர்களோடு




நூலை வெளியிட்ட தமிழச்சி, பெற்றுக் கொண்ட மருது, விழாவை ஏற்பாடு செய்த கம்பீரன், வாழ்த்திப் பேசிய பரமேஸ்வரி

அழைப்பு 21



24.01.16 ஞாயிறு அன்று பெரம்பலூர் ரெட்டியார் அரங்கில் தோழர் செல்வகுமார் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்ருகிறேன். வாய்ப்புள்ளவர்கள் வருக

குட்டிப் பதிவு 49



ஒரே ஒரு சொட்டேனும் 
தேவைப்படுகிறது 
தன் இருத்தலை நிறுவ 
வெளிச்சத்திற்கு
இருட்டு 

Friday, January 22, 2016

ஆயுதமாய் ஒரு குறுநூல்




தோழர் நியாஸ் அவர்களின் மிக முக்கியமான கல்வி குறித்த மூன்று கட்டுரைகளின் தொகுப்பாக “களவு போகும் கல்வி” என்ற குறுநூலை ‘இயல்வாகை’ வெளியிட்டுள்ளது.
காட் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து இடும் பட்சத்தில் இந்தியாவில் உயர்கல்வி எப்படி சீரழிந்து இறுதியாய் அழிந்துபோகும் என்பதை இந்த குறுநூல் விவாதிக்கிறது. விவாதிக்கிறது என்பதுகூட சரியாய் பொருந்தாது. யாருக்கும் புரிகிற மொழியில் நம்மோடு உரையாடுகிறது.
ஏற்கனவே சந்தைப் படுத்தப்பட்டு வணிகச் சரக்காகிப் போன இந்தியக் கல்வி ஒருக்கால் காட்டில் நாம் கையெழுத்திட்டால் இன்னும் எந்த நிலைக்குப் போகும் என்பதை நிலாகாட்டி குழந்தைக்கு சோறூட்டும் தாய்போல நமக்கு ஊட்டுகிறது.
காட் ஒப்பந்தம் எப்படிப் பையப் பைய அரசு கல்லூரிகளை காவு வாங்கும் என்பதையும் அதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் முதல் கட்டுரை நம்முள் கடத்துகிறது.
மேல்நாட்டு கல்வி நிறுவனங்கள் வந்தால் தரமான கல்வி கிடைக்கும்தானே என்கிற தவறான பொதுப் பிம்பத்தை இந்தக் கட்டுரை எடுத்துச் சொல்கிறது.
மானியம் பெறக்கூடிய கல்வி ஸ்தாபனங்கள் எப்படித் தோன்றின, அதற்கான தேவை என்ன, அவை எப்படிப் பையப் பைய அரசையே விலைக்கு வாங்கி மக்களை சுரண்ட ஆரம்பித்துள்ளன, இப்படிப்பட்ட சூழலில் அந்நிய கல்வி ஸ்தாபனங்கள் உள்ளே நுழைந்தால் என்னென்ன பாதகங்களை நாம் சந்திக்க நேரிடும் என்பதை இரண்டாவது கட்டுரை தெளிவு படுத்துகிறது.
மூன்றாவது கட்டுரை பாடத்திட்டங்கள் எப்படி நமக்கு எதிராகக் கட்டமைக்கப் படும் என்பதை புரிகிறமாதிரி தெளிவு படுத்துகிறது.
தோழர் கஜேந்திர பாபுவின் சிறப்பான முன்னுரை இந்த நூலின் கூடுதல் பலம்.
கல்வி குறித்து அக்கறையுள்ளோர் அவசியம் வாசிக்க வேண்டிய குறுநூல்.
தொடர்புக்கு
‘இயல்வாகை,
குக்கூ குழந்தைகள் நூலகம்
கயித்தமலை அடிவாரம்
ஊத்துக்குளி
திருப்பூர் மாவட்டம்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...