Sunday, January 31, 2016

தமிழ் மாணவன்தான்.....



போப் அவர்கள் கல்லறையில் “இங்கொரு தமிழ் மாணவன் உறங்குகிறான்” என்று எழுதி வைக்கப் பட்டிருப்பதாக ஏறத்தாழ எனக்கு விவரம் தெரிந்த 45 ஆண்டுகளாக கேள்விபட்டு வருகிறேன். தமிழின் பெருமையை இதைக் கொண்டு நிறுவவே ஏராளமானோர் முயன்று வருகிறார்கள். நானும்கூட ஒன்றிரண்டு கூட்டங்களில் இதைப் பேசியிருக்கிறேநன்தான்.

போப் அவர்கள் தமிழை வியந்து ஓதியவர்தான். அதில் தமிழின் எதிரிக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.

ஆனால், போப் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவரது கல்லறையில் இப்படியாக எழுதப் பட்டிருக்கிறது என்பது தவறான தகவல் என்று 1961 ஆம் ஆண்டே மீ.ப. சோமசுந்தரம் அவர்கள் நிறுவியுள்ளார். அவரது கல்லறைக்கே சென்று பார்த்து கல்லறைக்கல்லில் எழுதியிருப்பதை எடுத்துப் போட்டு நிறுவியிருக்கிறார்.

"George Uglow Pope DD of south India, sometime lecturer in Tamil and Telungu, in the university and chaplain of Balliol college, Oxford. Born 24 th April 1820, Died 11th February1908.

This stone has been placed here by his family and his Tamil friends in south India.

In loving Admiration of his lifelong labours in the cause of Orient literature and philosophy"

என்றுதான் அந்த கல்லில் இருப்பதாக அங்கு போய் பார்த்து வந்த ஒருவர் சொன்ன பிறகு ஒன்று அப்படி சொல்வதை நாம் தவிர்த்திருக்க வேண்டும். அல்லது அதை சரி பார்த்து வந்திருக்க வேண்டும்.

தன்னை ஒரு தமிழ் மாணவனாகத்தான் போப் கருதினார். இன்னும் சொல்லப் போனால் இதைக்கூட அவர் சொல்லியிருப்பார்தான். ஆனால் சொல்லவில்லை. அதை ஏற்போம்.

இதுமாதிரியான தவறான வரலாறுகளை தவிர்ப்போம்.

தமிழ் மட்டுமல்ல வேறு எந்த மொழியும் இப்படிப் பட்ட காரியங்களால் வாழ்ந்துவிடப் போவதில்லை.

தகவல் தோழர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களது  “கிறிஸ்தவமும் தமிழ் சூழலும்”
என்ற நூலில் இருந்து

8 comments:

  1. தென் இந்தியாவிலிருந்து ஒருவர் போப் ஆக இருந்திருக்கிறார் என்பதே எனக்குச் செய்தி. எனவே அடுத்து நீங்கள் சொல்லியிருப்பது மிகவும் புதிய தகவல். அதுவும் தவறு என்றும் சொல்லியிருக்கிறீர்கள். நல்லது.

    ReplyDelete
  2. வரலாற்றில் இப்படித்தான் பல தகவல்கள் பகிரப்பட்டு, பதியப்பட்டுப் பின்னர் உண்மையான தகவல்கள் வெளியாகும் போது சில சமயங்களில் பல சர்ச்சைகளுக்கு, விவாதங்களுக்கு உள்ளாகின்றது இல்லையா....

    பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete
  3. உண்மைதான் தோழர்
    தவறான தகவல்களால் எந்த மொழியும் வாழ்ந்துவிடப் போவதில்லைதான்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete
  4. தவறான தகவல்கள் தான் பரப்பப்படுகின்றன. ஒரு பொய்யை பலமுறை சொன்னால் அது மெய்யாக உருவாக்கப்படுகின்றது. இதுவே வரலாற்றை எழுதுவதிலுள்ள சிக்கல்

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க அய்யா. மிகவும் கவலைப் பட வேண்டியதும் சரி செய்யப்பட வேண்டியதுமான விஷயம்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...