தோழர் நியாஸ் அவர்களின் மிக முக்கியமான கல்வி குறித்த மூன்று கட்டுரைகளின் தொகுப்பாக “களவு போகும் கல்வி” என்ற குறுநூலை ‘இயல்வாகை’ வெளியிட்டுள்ளது.
காட் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து இடும் பட்சத்தில் இந்தியாவில் உயர்கல்வி எப்படி சீரழிந்து இறுதியாய் அழிந்துபோகும் என்பதை இந்த குறுநூல் விவாதிக்கிறது. விவாதிக்கிறது என்பதுகூட சரியாய் பொருந்தாது. யாருக்கும் புரிகிற மொழியில் நம்மோடு உரையாடுகிறது.
ஏற்கனவே சந்தைப் படுத்தப்பட்டு வணிகச் சரக்காகிப் போன இந்தியக் கல்வி ஒருக்கால் காட்டில் நாம் கையெழுத்திட்டால் இன்னும் எந்த நிலைக்குப் போகும் என்பதை நிலாகாட்டி குழந்தைக்கு சோறூட்டும் தாய்போல நமக்கு ஊட்டுகிறது.
காட் ஒப்பந்தம் எப்படிப் பையப் பைய அரசு கல்லூரிகளை காவு வாங்கும் என்பதையும் அதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் முதல் கட்டுரை நம்முள் கடத்துகிறது.
மேல்நாட்டு கல்வி நிறுவனங்கள் வந்தால் தரமான கல்வி கிடைக்கும்தானே என்கிற தவறான பொதுப் பிம்பத்தை இந்தக் கட்டுரை எடுத்துச் சொல்கிறது.
மானியம் பெறக்கூடிய கல்வி ஸ்தாபனங்கள் எப்படித் தோன்றின, அதற்கான தேவை என்ன, அவை எப்படிப் பையப் பைய அரசையே விலைக்கு வாங்கி மக்களை சுரண்ட ஆரம்பித்துள்ளன, இப்படிப்பட்ட சூழலில் அந்நிய கல்வி ஸ்தாபனங்கள் உள்ளே நுழைந்தால் என்னென்ன பாதகங்களை நாம் சந்திக்க நேரிடும் என்பதை இரண்டாவது கட்டுரை தெளிவு படுத்துகிறது.
மூன்றாவது கட்டுரை பாடத்திட்டங்கள் எப்படி நமக்கு எதிராகக் கட்டமைக்கப் படும் என்பதை புரிகிறமாதிரி தெளிவு படுத்துகிறது.
தோழர் கஜேந்திர பாபுவின் சிறப்பான முன்னுரை இந்த நூலின் கூடுதல் பலம்.
கல்வி குறித்து அக்கறையுள்ளோர் அவசியம் வாசிக்க வேண்டிய குறுநூல்.
தொடர்புக்கு
‘இயல்வாகை,
குக்கூ குழந்தைகள் நூலகம்
கயித்தமலை அடிவாரம்
ஊத்துக்குளி
திருப்பூர் மாவட்டம்
‘இயல்வாகை,
குக்கூ குழந்தைகள் நூலகம்
கயித்தமலை அடிவாரம்
ஊத்துக்குளி
திருப்பூர் மாவட்டம்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்