Thursday, January 21, 2016

எனது நம்பிக்கை சார்ந்து என்னை...

 “ஏன் எட்வின். இப்படி சாமி இல்லேன்னெல்லாம் எழுதற. ரொம்பக் கஷ்டமா இருக்கு” என்பது மாதிரி சில நண்பர்கள் அலைபேசியிலும், தனி மடலிலும் கேட்கிறார்கள்.
ஒரு விஷயத்தை நான் தெளிவு படுத்திவிட வேண்டும். எனக்கிருக்கிற  நண்பர்களில் பெரும்பான்மையோர் நம்பிக்கை உள்ளவர்கள். அவர்களது சுவரில் அவர்களது பூஜை குறித்து, அவர்களது நம்பிக்கை குறித்து சாமி படங்களோடு நிலைத் தகவல்களை போடுகிறார்கள். அது அவர்களது நம்பிக்கை, உரிமை.
அவற்றை வாசித்ததும் அவர்களது நம்பிக்கை குறித்தோ அதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றோ கூட நான் கருத்திடுவதில்லை.
மத அரசியலோ ஜாதி அரசியலோ எனில்தான் கருத்து சொல்கிறேன். அதுவும் மற்றவர்கள் சுவரில் அவர்களது நம்பிக்கையையோ அல்லது மனது புண்படும் விதமாகவோ எழுதுவது இல்லை.
என் கருத்தை என் சுவரில் எழுதுவது என்பது என் உரிமைதானே தோழர்களே. நீங்கள் கடவுளைப் பற்றி நம்பிக்கையோடு பதிவிடும் போது அங்கு வந்து இல்லை கடவுள் இல்லை என்றெல்லாம் கூட நான் எழுதுவதில்லை. விமர்சனம் செய்வதும் இல்லை.
பக்தி இருப்பதால் யாரையும் பகைத்துக் கொள்வதும் இல்லை. பக்தியோடு எனக்கு பிரச்சினை இல்லை. அதுவே மதவெறியாகவோ, ஜாதி வெறியாகவோ வெளிப்படும் எனில் எதிர் கொள்கிறேன்.
அவர்களது சுவரில் தெய்வம் குறித்து நெக்குருகி எழுதும் போது,
என் சுவரில் எனது நம்பிக்கை சார்ந்து நான் எழுதுவதும் என் உரிமை என்பதைப் அருள்கூர்ந்து புரிந்து கொள்ளுங்கள்.
இப்படியெல்லாம் எழுதக் கூடாது என்று சிலர் எதிர் பார்ப்பது என் உரிமையில் குறுக்கிடுவதாகவே அமையும்.

4 comments:

  1. உங்கள் சுவர் உங்கள் உரிமை! விட்டுக்கொடுக்க வேண்டாம்! நம்பிக்கைகள் அவரவர் விருப்பம் மனதை பொறுத்தது!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் தோழர்
      மிக்க நன்றி

      Delete
  2. உண்மைதான் தோழர்
    அது நமது உரிமை

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...