லேபில்

Monday, January 18, 2016

கடிதம் 15

அன்பின் நண்பர்களே,
வணக்கம்.

பெரம்பலூர் தெருக்களில் தோழர்களோடு அரட்டை அடித்து பல வருடங்களாயிற்று. நேற்று மனதுக்குப் பிடித்த தோழனோடு இரண்டு மணி நேரம் ஆசைதீர தெருவில் நின்று பேசித் தீர்த்தேன்.

நீண்டநாள் கனவான மாதாந்திரக் கூட்டத்திற்கான இட ஏற்பாடு உள்ளிட்டு ஏற்பாடுகளைத் துவக்கியுள்ளோம். செய்தி அறிந்ததும் நண்பர்கள் அலைபேசியில் வருகிறார்கள். மீண்டும் வாருங்கள், இருக்கிறோம் என்கிறார்கள்.
மீண்டும் என் மண்ணில் இயங்குவதென்பது எவ்வளவு உற்சாகமானது, ஆயுளைக் கூட்டக் கூடியது.

2 comments:

  1. தாங்கள் கூறும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் பலமுறை நான் அனுபவித்துள்ளேன். அனுபவித்து வருகிறேன். ஒவ்வொரு முறையும் நான் பிறந்த மண்ணான கும்பகோணம் செல்லும்போது இவ்வகை உணர்வை நான் அடைகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அது ஒரு வகையான சுக அனுபவம் தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023